PDA

View Full Version : விதி எளியது



எஸ்.எம். சுனைத் ஹஸனீ
12-12-2008, 11:25 AM
இப்பொழுதுதான் விடுபட்டேன்

நொடியில் தோன்றி விர்ரென்று படர்ந்த

மூர்க்கத்தனமான கணங்களில் நின்றும்

அது கழிந்தும் கழியாத வலிச் சுவடுகளில் நின்றும்

வலிக்குப் பின்னாலான சுவடேற்ற தழும்புகளில் நின்றும்

இப்பொழுதான் விடுபட்டேன்



இது இறுதி விடுபடுதலில்லையென்றும்

இன்னும் நீண்டு படரும் அதன் சாணக்கியத்தனமென்றும்

இருவருமே அறிவோம்



இருந்தாலும் தொடரூம் அதன் வழமை

இணங்க மறுக்கும் என் பிடிவாதங்கள்

இறுதியில் சரீரம் அறுத்து வலுத்திணித்தல்களுடன் கூடிய

கொடுமையான கணங்களும் அதன் ரணங்களும்



நானே வென்றதாய் நிமிர்ந்து கொக்கரிக்கும்

ஒவ்வொரு ஆரம்ப கட்டங்களிலும்



ப்பூவென ஊதி வென்றதாய் நகைத்துச் சிரிப்பேன்

கடைசிக் கட்டங்களில் வலியடக்கிக் கொண்டே

இதைத் தாண்டினுமொரு கூரான ஆயுதத் தேடலில்

வெளிப் பறந்து சென்றிருக்கிறது அது

இருந்தாலும் இறுதி வெற்றி எனக்கென்றான

கம்பீர வீற்றிருத்தலில் நான்

இருவருக்குமான ஜெயிப்பு தோப்பாட்டங்களில்

பாவம் உறுப்புகள்தான் தோற்று சோபை குன்றுகின்றன.



எஸ்.எம். ஜுனைத் ஹஸனீ

இளசு
13-12-2008, 05:56 AM
Never give-uo - Giving-up''!

கெட்டவற்றை விட்டுவிடும் முயற்சியை விட்டுவிடாதே!

நிலவுலகில் எத்தனை போர்க்களங்கள் உண்டோ
அத்தனையும் ஒவ்வொரு மனவுலகிலும் உண்டு!

ஆயுதபாணியாய் வரும் மூர்க்கம், பொறாமை, கபடுகளை
அஹிம்சையாய், உறுதியாய்,
தோற்றாலும் , காயம்பட்டாலும்..மீண்டும் மீண்டும் எதிர்கொள்ளும்
உறங்கா ஓர் உள்ளத்தின் குரல்!

இக்குரல் ஓங்கி ஒலித்துக்கொண்டிருக்கும்வரை
மனிதம் மடியாது!

வாழ்த்துகள் ஜூனைத்!

ஆதவா
13-12-2008, 06:32 AM
கலக்கல் ஜுனைத்... என்னமாதிரியான சப்ஜெக்ட் இது!!!! பூ என்று ஊதித் தள்ளியதைப் போன்றேதான் இருக்கிறது உங்கள் எழுத்தும்...........

மூர்க்கம் படருவதற்காகவே தருணங்கள் உதிக்கின்றன. அல்லது உதிக்கப்படுகின்றன. நம்முள் கொழுந்து விட்டு எரியும் அவைகளும், அவை எரித்த தடயங்களும் என்றும் விடுபடுவதில்லை.... நாமாகவே விடுபட்டாலும் கூட.

அவை நீண்டு படர்வதற்காக ஆசுவாசப்படுத்திக் கொள்ளவா உங்கள் விடுதலை இருக்கவேண்டும்?? அப்படியொரு விடுப்பு தேவையில்லை.. இல்லையா ஜுனைத்?

இருவருக்குமான போராட்டம், தன் குணத்தையே மேம்படுத்தும் அவை, அதைக் கட்டுப்படுத்தும் ஒவ்வொரு முயற்சியிலும் அவன்.. இறுதியில் அடிபடும் உறுப்புகள் என்று கவிதை என்ன சொல்லவந்ததோ அதனை அழகாக சொல்லியிருக்கிறீர்கள்...

மூர்க்கத்தனம், வலிச்சுவடுகள், தழும்புகள் என்று முக்குணத்தைப் பற்றி பேசும்பொழுது, பின் வரும் வரிகளில் ஒருமையாக, அது அதன் என்று அழைப்பது நெருடுகிறது..

தோப்பு அல்ல தோற்பு.

மனப்போராட்டம் பேசும் இக்கவிதைக்கு

3 ஸ்டார்கள்
200 காசுகள்

தமிழ்தாசன்
13-12-2008, 08:40 AM
வாழ்த்துக்கள்.
வாழ்வில் ஏதாவுது பொறுப்பெடுக்கும் அதற்கு சில வேளை நாம் பொருப்பில்லை?
அது விதியாகி விடும் என்பது மனித மன ஆறுதல்.
எது நடக்கும் என முன்னே தெரிந்தால்? அது நன்றாக இருக்கும்?
தோற்ற போதும் வெற்றிக்குத்தான்.?
????
எது வெற்றி? எது தோல்வி?

வரிகள் விதிகளை வெல்லட்டும்??

எஸ்.எம். சுனைத் ஹஸனீ
13-12-2008, 01:01 PM
ஆயுதபாணியாய் வரும் மூர்க்கம், பொறாமை, கபடுகளை
அஹிம்சையாய், உறுதியாய்,
தோற்றாலும் , காயம்பட்டாலும்..மீண்டும் மீண்டும் எதிர்கொள்ளும்
உறங்கா ஓர் உள்ளத்தின் குரல்!

!

இந்த வரிகளைத்தான் கவிதையாக முயற்சித்தேன். சரியாக பொருத்தியமைக்கு நன்றி அண்ணா.

எஸ்.எம். சுனைத் ஹஸனீ
13-12-2008, 01:14 PM
மூர்க்கத்தனம், வலிச்சுவடுகள், தழும்புகள் என்று முக்குணத்தைப் பற்றி பேசும்பொழுது, பின் வரும் வரிகளில் ஒருமையாக, அது அதன் என்று அழைப்பது நெருடுகிறது..

அஃ.ரினை பல்பாலை சுட்டும்போது அஃ.ரினை ஒரு பால் வார்த்தையை கவிதையில் பிரயோகிப்பது இலக்கணத்தனமானதென்று எப்பொழுதோ படித்த நியாபகம். தெரிந்தவர்கள் கூறினால் மாற்றிக்கொள்ள தயாராய் இருக்கிறேன்.

தோப்பு அல்ல தோற்பு.

எங்கள் மதுரை ஏரியாவின் வழக்கச்சொல் ஜெயிப்பு தோட்டமென்பது.அப்படியே கூற முயற்சித்தேன். ஆனால் இந்த இடத்தில் நீங்கள் சொல்லியபடிதான் பிரயோகித்து இருக்கவேண்டும்.


மனப்போராட்டம் பேசும் இக்கவிதைக்கு
200 காசுகள்

என்னை காசு மழையில் நனைத்துக் கொண்டிருப்பதற்கு மிக்க நன்றி ஆதவா.

[/LIST]
மற்றும் பின்னுட்டமிட்ட அனைத்து நெஞ்சங்களுக்கும் நன்றி.