PDA

View Full Version : அசைபடங்கள் காண எந்த மென்பொருள் சிறந்தது?



பாரதி
11-12-2008, 01:05 PM
அன்பு நண்பர்களே,

கணினியில் திரைப்படங்கள் அல்லது அசைப்படங்களைக் காணவும் பாடல்களைக் கேட்கவும் பொதுவாக விண்டோஸ் மீடியா பிளேயர் நிறுவப்பட்டிருக்கிறது. ஆனால் சில வகைகளில் உருவாக்கப்பட்ட படங்களைக் காண அது சில நேரம் உதவுவதில்லை என்ற காரணத்தினாலும், அதனினும் மேம்பட்ட மென்பொருள் என்ற அடிப்படையிலும் நாம் வேறு மென்பொருட்களை நிறுவி பயன்படுத்துகிறோம் அல்லவா..? அப்படி உங்கள் கணினியில் நீங்கள் நிறுவி பயன்படுத்தியதில் உங்களுக்கு திருப்தியளித்த மென்பொருள் எது என்பதை இங்கு குறிப்பிடுங்களேன். (சில மாதங்களுக்கு ஒரு முறை புதுவித முறைகளில் உண்டாக்கப்படும் படங்களைக் காண சிரமப்பட வேண்டியதிருக்கிறது. அதனை தவிர்க்கும் பொருட்டே இப்பதிவு.)
மிக்க நன்றி.

ஆதி
11-12-2008, 01:10 PM
VLC Player-ரை நான் உபயோகிக்கிறேன் அண்ணா..

mp3 mp4 mpeg wmv replayer என்று யாவற்றையும் இது சப்போட் செய்கிறது..

ஏகப்பட்ட optionகளும் உள்ளது..

படத்தை சத்தத்தை நமக்கு பிடித்த வகையில் மாற்றிக்கொள்ளலாம்..

பாரதி
11-12-2008, 01:18 PM
உடன் கருத்துக்கு நன்றி ஆதி. எது சிறந்த மென்பொருள் என்பதைக் கண்டறிய ஓட்டெடுப்பும் இணைக்கப்பட்டுள்ளது. உங்கள் வாக்கை செலுத்தி விடுங்கள்.

praveen
11-12-2008, 01:19 PM
பாரதி நான் ஓட்டளித்து (முதல் ஆளுங்கோ) விட்டேன். உங்கள் திரி தலைப்பு சற்று கூடுதல் வார்த்தையோடு இருத்தல் நலம். அசைபடங்கள் கான என்று ஆரம்பிக்க வேண்டும் :)

பாரதி
11-12-2008, 01:25 PM
பாரதி நான் ஓட்டளித்து (முதல் ஆளுங்கோ) விட்டேன். உங்கள் திரி தலைப்பு சற்று கூடுதல் வார்த்தையோடு இருத்தல் நலம். அசைபடங்கள் கான என்று ஆரம்பிக்க வேண்டும் :)

என்னைக்கவர்ந்த அதே மென்பொருள் உங்களையும் கவர்ந்ததில் எனக்கு வியப்பில்லை பிரவீண். ஆனால் WMV முறையிலான படங்களை காண முயற்சித்த போது பிழைச்செய்தி வந்தது. ஆகவேதான் மற்ற நண்பர்களும் எதை உபயோகிக்கிறார்கள் என தெரிந்துகொள்ள விரும்பினேன். உங்களின் கருத்தை ஏற்கிறேன். திரியின் தலைப்பையும் மாற்றி விடுகிறேன்.

கருத்துக்கும், பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி.

நிரன்
11-12-2008, 02:34 PM
vlc player பாவனைக்கு சிறந்தது ஏனில் மற்றைய பிளேயரில் சில சில போர்மட்டு வேலை செய்யாது அதனால் என் ஓட்டு VLC க்குத்தான்

அன்புரசிகன்
11-12-2008, 02:38 PM
K-Lite Codec Pack Classic Player ல் எந்த வித ஒளி ஒலி கோப்புக்களை கண்டுகளிக்க முடியும்.

ஓவியா
11-12-2008, 09:32 PM
தெரியவில்லை என்று ஒரு வரி வைத்திருந்தால், நிஜத்தின் முன் நான். ஒரு ஓட்டு,

[1] - ஓவியா

'னு வந்திருக்கும்,


நல்ல திரி, அப்பப வாரேன்,

கடைசியில் எது சிறந்ததோ அதை, பாரதியண்ணா எனக்கு தனி மடலில் அனுப்பிவிடுவார். :D:D

பாரதி
11-12-2008, 11:21 PM
கருத்துக்களுக்கு நன்றி நிரஞ்சன், அன்பு, ஓவியா.

ஆம் அன்பு. KLite அல்லது KMega codec pack-ல் உள்ளதும் மீடியா பிளேயர் கிளாஸிக்..தான் என எண்ணுகிறேன். சரிதானே..?

Narathar
12-12-2008, 02:39 AM
எனது பரிந்துரையும் VLC க்குத்தான்....

டவுண்லோடு செய்யும் எந்த திருட்டு VCD/DVDயையும் Play பன்னும்

நாராயணா!!!!!

இளசு
12-12-2008, 04:55 AM
பயனுள்ள திரி...
பாரதிக்குப் பாராட்டு!

என் வாக்கு விஎல்சிக்கே!

இதனால் திறக்க முடியா கோப்புகள் மிகச் சிலவே!

வெற்றி
12-12-2008, 05:57 AM
MPC என செல்லமாக அழைக்கப்படும் மீடியா பிளேயர் கிளாஸிக் தான் என் தேர்வு
விஎல்சி யில் இன்னும் கொஞ்சம் தெளிவாக தெரியும் என்றாலும்....மீடியா பிளேயர் கிளாஸிக்க்கு தான் என் ஓட்டு

பாரதி
12-12-2008, 01:24 PM
நன்றி நாரதர், அண்ணா, மொக்கச்சாமி.

மூன்று மென்பொருட்களைத்தவிர மற்றவை வாக்கு எதுவும் பெறாதது வியப்பூட்டுகிறது.

ஓவியா
12-12-2008, 02:59 PM
வி.எல்.சி பிளேயருக்குதான் அதிக ஓட்டு, நானும் மீடியாதான் சிறந்தது என்று நினைத்திருந்தேன்.

பகிர்வுக்கு நன்றி.

poornima
13-12-2008, 01:07 PM
Total Video Player என்று ஒரு மென்பொருள் இருக்கிறது.அசைபடங்கள் அனைத்தும் கூடுமானவரை திறக்கும் எளிய மென்பொருள் இது. அடுத்து என் அனுபவத்தில் நான்
வகைப்படுத்துவது

Classic Player
VLC player
Real Player.

ஓட்டெடுப்பில் என் வாக்கை VLC க்கு வழங்கியிருக்கிறேன்

சூரியன்
13-12-2008, 01:27 PM
எனது பரிந்துரையை ஓட்டளித்து விட்டேன்.

நூர்
29-12-2008, 04:03 PM
''K-Lite Codec Pack Classic Player ல் எந்த வித ஒளி ஒலி கோப்புக்களை கண்டுகளிக்க முடியும்.''. என் ஓட்டும் இதற்கே! vlc இன்னும் நான் பயன்படுத்தவில்லை.அதைபற்றி எனக்கு தெரியாது.

anna
22-01-2009, 05:02 PM
இந்த திரியை பார்த்த பின்பு தான் வி.எல்.சி மீடியா பிளேயர் நிறுவினேன். ஆஹா என்ன அருமை உண்மையிலே சூப்பாராக உள்ளது. இதற்கு முன் மீடியாபிளேயர் கிளாசிக் தான் பயன்படுத்தினேன். வி.எல்.சியோடு கம்பேர் பண்ணும் போது மீடியா பிளேயர் கிளாசிக் பக்கத்தில நிற்க முடியாது. அருமை.

loshan
22-01-2009, 05:31 PM
இன்னமுமே நான் windows media playerபக்கம் தான்.. பழகி விட்டது :)
vlc அவ்வளவு அருமையா? கேள்விப் பட்டுள்ளேன்.. பாவித்துப் பார்ப்போம்

அறிஞர்
22-01-2009, 10:00 PM
VLC, Media player, Real Player எல்லாம் உபயோகிக்கிறேன்.

தெளிவான/சதாரண படங்களை real player காண இயலும்.

திருட்டு விடியோவுக்கு VLC சிறந்தது.

சிவா.ஜி
24-01-2009, 05:11 PM
எனது தேர்வும் வி.எல்.சி தான். அது வாசிக்காத ஃபார்மேட்டே இல்லை. அசத்தல். அதே சமயம் பலவித ஈக்வலைசர்கள் இருப்பதால் ஒலியின் தரமும் பிரமாதம்.

Thirumurugan
09-03-2009, 02:19 PM
நானும் VLC Player மற்றும் நண்பர் Poornima சொன்னது போல் Total Video Player என்று உள்ளதுதான் சிறந்ததாக தெரிகிறது. அனைத்து பார்மட்டிற்கும் உதவி புரிகிறது. (Support) முக்கியமாக rmvb, rm கோப்புகளுக்கு. எனது வாக்கு VLC Player விட Total Video Player-க்கே

ராசராசன்
12-03-2009, 03:51 PM
VLC ப்ளேயர் அசையும் படங்களை காண்பிக்க மிகக் குறைந்த அளவே கணனியின் செயல்திறன் வசதிகளை(Resources) பயன்படுத்துகிறது. ஆகையால் படங்களை சிறிதும் தடங்கலின்றி பார்க்கமுடியும்.

ரவிசங்கர்
05-03-2010, 05:13 PM
வி.எல்.சி பிளேயருக்குதான் என் ஓட்டு.

சரோசா
05-03-2010, 06:05 PM
போட்டாச்சு VLC playerகு இதுதான் சிறந்ததென என் கருத்து.

கூத்தரசன்
03-08-2010, 06:01 AM
வணக்கம்,

அனைத்து வகை ஒளிக்காட்சி அமைப்பையும் காண- Media Player Classic, SM Player
துல்லியமான காட்சிக்கு (விரும்பிய மாற்றங்கள் செய்ய)- KM Player

அன்புடன்
கூத்தன்

வியாசன்
03-08-2010, 08:22 AM
என்னுடைய கருத்தும் VLC PLAYER தான். எல்லாவிதமான கோப்புக்களையும் இயங்க வைக்கின்றது. பலவற்றுக்கு மேலதிகமான மென்பொருள் இணைக்கவேண்டும்

sasipushpa
12-08-2010, 11:34 AM
வி எல் சி பிளேயர் மிக அருமை. எல்லா வகையான ஃபார்மேட்டுகளையும்

திறக்கும் திறன் கொண்டது. என்னுடைய சாய்ஸ் இதுதான்.

அடுத்து மீடியா பிளேயர் கிளாஸிக். இதுவும் ஒரு அருமையான பிளேயர்.

விண்டோஸ் மீடியா பிளேயர்தான் வேண்டும் என்பவர்கள் கோடக் பேக்

இன்ஸ்டால் செய்திருக்க வேண்டும். இல்லையென்றால் ப்ளூ ரே மூவிகளை

(ஹை டெஃபனிஷன் ) பார்க்க முடியாது.

ஜிங்குசாங்கு
01-09-2010, 12:34 AM
பெரும்பாலான அசை படங்களை பார்க்க உதவும் வி.எல்.சி பிளேயர்'ஐயே நான் விரும்புகிறேன். ஆனாலும், அதி துல்லிய (hi-def) படங்களை பார்க்க டிவ்எக்ஸ் பிளேயர் உபயோகிக்கிறேன்.

rajesh2008
27-09-2010, 04:19 PM
நான் வின்டோஸ் மீடியா பிளேயரைத்தான் உபயோகிக்கிறேன்.

நாஞ்சில் த.க.ஜெய்
03-12-2010, 07:27 AM
மீடியா பிளேயர் கிளாசிக் அனைத்து வகையான அசையும் படங்கள் காண மிகவும் அருமையான மென்பொருள் இந்த மென்பொருள் அலைபேசியில் பயன்படுத்தும் போர்மட்களையும் செயல் படுத்த வல்லது .அதுபோல மற்ற பிளேயர் களை காட்டிலும் இதன் வண்ணத்திரை resolution மிகவும் அதிகம் .அதுபோல அனைத்து வகையான போர்மட்டில் உள்ள பாடல்களை கேட்டகவும் இந்த பிளேயர் நன்றாக இருக்கும் .அது போல் divx போர்மட் இதற்க்கு ஒத்துழைக்கும் .என்னுடைய முதல் ஒட்டு இதற்க்கு தான் .பின்னர் வி எல் சி பிளேயர் க்கு தான் .

பின்குறிப்பு : சில வார்த்தைகளுக்கு அதற்குண்டான தொழில்நுட்ப வார்த்தைகள் தெரியாத காரணத்தினால் ஆங்கில வார்த்தைகளை உபயோகபடுத்தயுள்ளேன் மன்னிக்கவும்

என்றும் அன்புடன்
த.க.ஜெய்

M.Jagadeesan
03-12-2010, 07:33 AM
POWER D.V.D PLAYER

sunson
21-12-2010, 06:47 AM
ஜி.ஓ.எம். பிளேயர்(GOM Player) அனைத்து வகையான வீடியோ பார்மட்களையும் ஓடவைக்கின்றது.