PDA

View Full Version : சமர்ப்பணம்



lenram80
10-12-2008, 07:19 PM
என் கண்ணில் சிக்காமல் கணநேர உளவு!
கண் இமைக்கும் நேரத்தில் உள்ளத்தில் களவு!
வன்முறை இல்லாமல் இதயத்தில் பிளவு!
என்னை அடக்கிய அராஜக விழியே!

பேசத் திறந்தால் மிருதங்கம்!
சிரிக்க விரிந்தால் நாதஸ்வரம்!
என்னைக் கட்டிப் போட்ட கச்சேரி இதழே!

மின்னல் விழி!
இடி சிரிப்பு!
தூரல் பார்வை!
அடை மழை பேச்சு!
என்னை மயக்கிய மழை காலமே!

வயல் வரப்பு இதழ்கள்!
பசுமை நாற்றுப் பற்கள்!
ஆற்றுப் பாசனப் பேச்சு!
தானியச் சொற்கள்!
நான் மயங்கிய நெற்பயிரே!

பார்த்தால் ஒரு அர்த்தம்!
படித்தால் ஒரு அர்த்தம்!
ரசித்தால் ஒரு அர்த்தம்!
லயித்தால் ஒரு அர்த்தம்!
என்னைக் கவர்ந்திழுத்தப் புதுக் கவிதையே!

சந்தோஷக் கதவுகளாய் மேடு பள்ளங்கள்!
சங்கீத உந்தல்களாய் குண்டுக் குழிகள்!
சன்மானப் புதையல்களாய் புதிய உயிர்கள்!
என்னை பரவசப்படுத்திய பயணமே!

நான் சந்தித்தப் பசுஞ்சாலையே!
என் கை பிடித்த மலர் மாலையே!
உனக்குச் சமர்ப்பணம் இந்தக் கவிச்சோலையே!

நிரன்
10-12-2008, 08:17 PM
என் கண்ணில் சிக்காமல் கணநேர உளவு!
கண் இமைக்கும் நேரத்தில் உள்ளத்தில் களவு!
வன்முறை இல்லாமல் இதயத்தில் பிளவு!
என்னை அடக்கிய அராஜக விழியே!

பேசத் திறந்தால் மிருதங்கம்!
சிரிக்க விரிந்தால் நாதஸ்வரம்!
என்னைக் கட்டிப் போட்ட கச்சேரி இதழே!

மின்னல் விழி!
இடி சிரிப்பு!
தூரல் பார்வை!
அடை மழை பேச்சு!
என்னை மயக்கிய மழை காலமே!

வயல் வரப்பு இதழ்கள்!
பசுமை நாற்றுப் பற்கள்!
ஆற்றுப் பாசனப் பேச்சு!
தானியச் சொற்கள்!
நான் மயங்கிய நெற்பயிரே!


பார்த்தால் ஒரு அர்த்தம்!
படித்தால் ஒரு அர்த்தம்!
ரசித்தால் ஒரு அர்த்தம்!
லயித்தால் ஒரு அர்த்தம்!
என்னைக் கவர்ந்திழுத்தப் புதுக் கவிதையே!

சந்தோஷக் கதவுகளாய் மேடு பள்ளங்கள்!
சங்கீத உந்தல்களாய் குண்டுக் குழிகள்!
சன்மானப் புதையல்களாய் புதிய உயிர்கள்!
என்னை பரவசப்படுத்திய பயணமே!

நான் சந்தித்தப் பசுஞ்சாலையே!
என் கை பிடித்த மலர் மாலையே!
உனக்குச் சமர்ப்பணம் இந்தக் கவிச்சோலையே!

எனக்கும் உங்கள் கவியைப்படிக்க அப்படித்தான் இருக்கிறது.
பார்த்தேன் பல அா்த்தம்
படித்தேன் பல வரிகள்
ரசித்தேன் சில வரிகள்
லயித்தேன் உன் கவியில்....
அருமையாக இருக்கிறது பல வரிகள்......

தமிழ்தாசன்
10-12-2008, 08:28 PM
உளவில் களவு கொண்டு விழியில் பழியைப்போட்டு,
கச்சேரியில் மங்களம் பாடி.
விழிச்சிரிப்பில் பார்வைப்பேச்சில் மழைக்காலம் கூடி,
வயலில் வாய்சிரித்து பேசி ,
பலகோண அர்த்தங்கள் இருத்தி,
பயணத்தைப் பரவசப்படுத்தி,
கவிச்சோலையை சமர்ப்பணம் செய்தமை அழகு.

ரசிக்கும் உவமான உவமேயம்.
ருசிக்கும் உளமான உளமாயம்
பாராட்டுக்கள்.
தொடருங்கள்.:icon_b:

lenram80
15-12-2008, 06:49 PM
மிக்க நன்றி நிரஞ்சன் & தமிழ் தாசன் !!!

arun
15-12-2008, 06:53 PM
தங்களின் சமர்ப்பனம் (காதலிக்கு தான்) அருமை பாராட்டுக்கள்