PDA

View Full Version : மன்றத்திரைவானம்!



தமிழ்தாசன்
10-12-2008, 06:49 PM
வெகுவரைவில்......
உங்கள் அன்பான,உற்சாகமான புத்துணர்வுடன்.....
உங்கள் ஆதரவுடன்......
உங்கள் ஒத்துழைப்புடன்...
உங்கள் படைப்புகளுடன்...


http://i419.photobucket.com/albums/pp274/kathravann/thiraivaanam.png

விடயம்
1. பாடற் பிரசவமன்றம்.
இதில் ஆரம்பத்தில் உங்களுடன் சில வெளிவந்த பாடல்கள் உருவாகிய விதம் பற்றி பார்ப்போம்.

26.12.2004 அன்றைய நாள் உலகே அதிர்ந்த நிகழ்வு.
மறக்கவே முடியாத நிகழ்வு.
மீண்டும் நிகழவே வேண்டாம்.

அந்த ஆழிப்பேரலை அந்த வலியின் வரிகள் பல பாடல்களாகின.
அதில் இங்கே.. ஒரு பதிவு.
பாடலின் பல்லவி.....
-----------------
இப்போது ....

http://i381.photobucket.com/albums/oo252/thamizhthaassan/th_nesamudaneswarathaassan-pal1.jpg (http://s381.photobucket.com/albums/oo252/thamizhthaassan/?action=view&current=nesamudaneswarathaassan-pal1.flv)

:mini023:
-----------

சரணம் 1
------
http://i381.photobucket.com/albums/oo252/thamizhthaassan/th_nesamudanEswarathaassan--sar1.jpg (http://s381.photobucket.com/albums/oo252/thamizhthaassan/?action=view&current=nesamudanEswarathaassan--sar1.flv)
------
சரணம் 2
-----------
http://i381.photobucket.com/albums/oo252/thamizhthaassan/th_nesamudanEswarathaassan--sar2.jpg (http://s381.photobucket.com/albums/oo252/thamizhthaassan/?action=view&current=nesamudanEswarathaassan--sar2.flv)
---------
அதற்கான பதிவுக்கு அனுமதித்தவர்களுக்கு வணக்கம்.


பின்னர்......

1.பாடல்கள் உருவாக்கப்பட வேண்டிய காட்சி அல்லது சூழ்நிலை ஒருவரால் வழங்கப்படவேண்டும்.
2.அக்காடசிக்கு ஏற்ப பாடல்கள் எழுதப்படவேண்டும்.
3.மெட்டுக்கட்டுடன் (இசை)பாடல்வரிகள் பிரசவிக்கப்படவேண்டும்.

சிறந்த மெட்டுக்கட்டு, பாடல் வடிவம், கருத்தாழம்,கவிநயம், இன்னும் விடயங்களில் சிறந்தவையை ஏனையோர், தெரிவுசெய்து
முதலாம், இரண்டாம், மூன்றாம் நிலைகள் வழங்கப்படவேண்டும்.

அப்பாடல்கள் பின்னர் இசை வடிவம் பெறும் நிலைக்கு பரிந்துரைக்கப்படும்.

20.12.2008 முதல் ஆரம்பமாக உள்ளது.
எனவே இப்போதே காட்சிகளுக்கு, கற்பனைகளை குதிரையில் ஏற்றி விட்டுவிடுவோம்.

பாடலாசிரியர்கள் கடிவாளங்களை தயார் படுத்தட்டும்.

ஆரம்பம்......

Narathar
10-12-2008, 06:53 PM
ஜமாயுங்கள்...........

நிரன்
10-12-2008, 08:49 PM
காத்திருக்கிறோம்......

தமிழ்தாசன்
13-12-2008, 11:05 PM
மிக்க மகிழ்ச்சி
நாரதர் அவர்களே!
நிரஞ்சன் அவர்களே!

நீங்களும்தான் இதில் அடக்கம்.
ஜமாயுங்கள்...........அல்ல ஜமாய்ப்போம்...........
காத்திருக்கிறோம்...... அல்ல கலக்குவோம்.

நிரன்
13-12-2008, 11:31 PM
20.12.2008 முதல் ஆரம்பமாக உள்ளது.
வெகு நாட்கள் போன்றே தோன்றுகிறது கண்ணுக் கெட்டியவரை கலண்டரிலும்
20ம் திகதியைக் காணோம்

தமிழ்தாசன்
14-12-2008, 07:36 PM
உண்மைதான்.
நிரஞ்சன் அவர்களே!

என்ன செய்வது? காத்திருப்போம். இப்ப கொஞ்சம் விடயம் விளங்கியிருக்கும் என்பதால் சுலபமாக ஆரம்பிக்கலாம். இல்லையா?

'நாமெல்லாம் படைக்கப் பிறந்தவர்கள்'

தமிழ்தாசன்
15-12-2008, 07:09 PM
அன்புள்ளங்களே!
மன்றத்தில் பயணிக்கும் நீங்கள்,
உங்கள் பாடல்கள் ஏற்கனவே வெளியாகியிருந்தாலோ? அல்லது நீங்கள் அப்படி படத்திருந்தாலோ தயவுடன் இங்கே பகிருங்கள்.
அப்படைப்புகள் நமக்கு இன்னும் உத்வேகம் தரும்.

arun
15-12-2008, 07:49 PM
கலக்குங்கள் நண்பர்களே கை தட்டி பாராட்ட நானும் தயார் ஆகிறேன்

தமிழ்தாசன்
17-12-2008, 08:45 PM
சரி இன்னும் சில தினம்தான்....என காத்திருப்பதுடன் வரிகளைத் தயார் படுத்துவோம்!
முதல் வர இருப்பது? என்ன என்பது இப்பவே புரிந்திருக்கும்?
எனவே அந்த .... நாளை ..... காலை நிகழ்ந்த .....
அந்த... சூழல் வேதனையை..... வலிகளின் வரிகளை தயார் படுத்துவோம்.
20.12.2008 முதல் வலியின் வரிகள் ....யார் வடிப்பார்?

தமிழ்தாசன்
20-12-2008, 09:05 AM
மன்றத்திரைவானம்
பல் ஆதரவுடன்

இன்று முதல் ஆரம்பம்.

ஆழிப்பேரலை நினைவலை சுமந்து உங்கள் பாடல்களை
படைப்போம் வாருங்கள.

Narathar
20-12-2008, 09:42 AM
எங்கே மன்றத்தின் பாடலாசிரியர்களை
மன்றத்திரைவானம் திரி சார்பாக வரவேற்கின்றேன்........

தமிழ்தாசன்
20-12-2008, 02:56 PM
எங்கே மன்றத்தின் பாடலாசிரியர்களை
மன்றத்திரைவானம் திரி சார்பாக வரவேற்கின்றேன்........


:icon_b::icon_b:

தமிழ்தாசன்
21-12-2008, 02:50 PM
வாருங்கள்..!!. மன்றத்திரைவானம்.!! வாருங்கள்..!!.
_______
1.பாடல்கள் உருவாக்கப்பட வேண்டிய காட்சி அல்லது சூழ்நிலை ஒருவரால் வழங்கப்படவேண்டும்.
2.அக்காடசிக்கு ஏற்ப பாடல்கள் எழுதப்படவேண்டும்.
3.மெட்டுக்கட்டுடன் (இசை)பாடல்வரிகளை பிரசவிக்கப்படவேண்டும்.

சிறந்த மெட்டுக்கட்டு, பாடல் வடிவம், கருத்தாழம்,கவிநயம், இன்னும் விடயங்களில் சிறந்தவையை ஏனையோர், தெரிவுசெய்து
முதலாம், இரண்டாம், மூன்றாம் நிலைகள் வழங்கப்படவேண்டும்.

அப்பாடல்கள் பின்னர் இசை வடிவம் பெறும் நிலைக்கு பரிந்துரைக்கப்படும்.

1.'ஆழிப்பேரலை நினைவலை'

சுமந்து பாடல்களை படைப்போம் வாருங்கள்.

நிரன்
21-12-2008, 02:58 PM
மன்றத்தின் பாடலாசிரியா்கள் எங்கே!!!!!!

அமரன்
21-12-2008, 03:28 PM
ஒன்று கூடல் விடுமுறை என பிசியாக இருப்பார்கள் மக்கள். தாமதமாக வந்தாலும் தரமாக தருவார்கள் நம்மன்ற உறவுகள்.

நிரன்
21-12-2008, 04:17 PM
ஒன்று கூடல் விடுமுறை என பிசியாக இருப்பார்கள் மக்கள். தாமதமாக வந்தாலும் தரமாக தருவார்கள் நம்மன்ற உறவுகள்.

ஆமாம் அமரன் அண்ணா கூறுவது சரிதான்.... மற்றும் நேற்று நடந்த
மன்ற ஒன்று கூடல் படங்கள் என் கண்ணில் இன்னும் தென்படவில்லை:confused:

தமிழ்தாசன்
22-12-2008, 11:34 AM
ஆமாம்!
அமரன் அவர்களே!.
காத்திருப்போம்.
தரமான பாடல்கள் இசைத்தட்டு ஏறி உலகெங்கும்
ஒலிக்க வேண்டும் அதுவே என் ஆசை.
நடக்கும்.

ஆதவா
22-12-2008, 12:52 PM
தமிழ் ஐயாவுக்கு....

ஒன்று கூடல் பிரமிப்பு, திருப்பாவைக் காதல், புத்தக வேலை, புத் தக வேலை, இடையிடையே பணிப்பளு, ஆகியவை காரணமாக, பொங்கல் வரை பிஸி.... நோ, கவிதைஸ், நோ கதைஸ், அண்ட் நோ படைப்பூஸ்

ஆகவே இத்திரியை உள்வாங்கும் அளவுக்குக் கூட எனக்கு நேரமில்லை.... மன்னிக்கவும். விரைவில் சந்திப்போம்...

தமிழ்தாசன்
22-12-2008, 05:28 PM
ஆதவா! அவர்களே! கவலைகொண்டேன்.
பரவாயில்லை என்று சொல்ல மனம்கொள்ளேன்.
இருந்தும் என் செய்வேன்?

எல்லோரும் காரணம் சொல்ல விளையாதீர்கள்.
என் மன்றச் தமிழ்சொந்தங்களே! கர்த்தாக்ளே!
உங்கள் கைகளில் மன்றத்திரைவானம்வாருங்கள்.

தமிழ்தாசன்
22-12-2008, 08:51 PM
26.12.2004 அன்றைய நாள் உலகே அதிர்ந்த நிகழ்வு.
மறக்கவே முடியாத நிகழ்வு.
மீண்டும் நிகழவே வேண்டாம்.

அந்த ஆழிப்பேரலை அந்த வலியின் வரிகள் பல பாடல்களாகின.
உங்கள் வலிகளை பாடல்வரிகளாக்குங்கள்.

இப்பகுதிக்குள் இசையமைப்பு ஆர்வமுள்ளவர்களே!

வாருங்கள்! உங்கள் புதியமெட்டுக்களைத் தாருங்கள்.

Narathar
23-12-2008, 07:42 PM
இங்கு யாரும் பாடல் தரலைன்னா........


நான் எழுதிடுவேன்.....
அப்புரம் யாரும் என்னை அடிக்கவரக்கூடாது!

நாராயணா!!!!

தமிழ்தாசன்
23-12-2008, 07:48 PM
ஆகா அன்பர் நாரதரே! வருக! வருக! தருக பாடல் வரிகள் தருக!
ஆரம்பியுங்கள்.
நீங்கள் ஆரம்பித்தால் எதுவும் நன்றாகவே இருக்கம்.
காத்திருப்போம்.

1.பாடல்கள் உருவாக்கப்பட வேண்டிய காட்சி அல்லது சூழ்நிலை ஒருவரால் வழங்கப்படவேண்டும்.
2.அக்காடசிக்கு ஏற்ப பாடல்கள் எழுதப்படவேண்டும்.
3.மெட்டுக்கட்டுடன் (இசை)பாடல்வரிகளை பிரசவிக்கப்படவேண்டும்.

சிறந்த மெட்டுக்கட்டு, பாடல் வடிவம், கருத்தாழம்,கவிநயம், இன்னும் விடயங்களில் சிறந்தவையை ஏனையோர், தெரிவுசெய்து
முதலாம், இரண்டாம், மூன்றாம் நிலைகள் வழங்கப்படவேண்டும்.

அப்பாடல்கள் பின்னர் இசை வடிவம் பெறும் நிலைக்கு பரிந்துரைக்கப்படும்.

1.'ஆழிப்பேரலை நினைவலை'

சுமந்து பாடல்களை படைப்போம் வாருங்கள்.
__________________

தமிழ்தாசன்
24-12-2008, 01:40 PM
இங்கு யாரும் பாடல் தரலைன்னா........


நான் எழுதிடுவேன்.....
அப்புரம் யாரும் என்னை அடிக்கவரக்கூடாது!

நாராயணா!!!!


எங்கே! நாரதரே!
வாருங்கள்!

தமிழ்தாசன்
25-12-2008, 12:21 PM
படைப்புகளுக்காக காத்து தவமிருக்கிறது
மன்றத்திரைவானம்

தமிழ்தாசன்
28-12-2008, 01:38 PM
படைப்புக்களை வழங்கத் தயாராகிறார்கள்!
அது மட்டும் புரிகிறது.

தமிழ்தாசன்
28-12-2008, 05:11 PM
2. புத்தாண்டுப்பாடல்.

படைப்புக்கள் பாடல்கள் ஆகட்டும்.

மதுரை மைந்தன்
28-12-2008, 10:37 PM
அன்பு நண்பர் தமிழ்தாசன் அவர்களே

ஆழிப்பேரலை நினைவலை என்ற தலைப்பில் எனது பாடல் இதோ

வங்க கடலே வங்க கடலே
இது என்ன நியாயம்?
ஏன் இத்தனை கோபம்?

காற்று வாங்க உன்னிடம் வந்தோம்
எங்களது மூச்சுக் காற்றை எடுத்துக் கொண்டாய்
மணல் வீடு கட்டி விளையாடிய குழந்தைகளுக்கு
உன் மணலிலேயே சமாதி கட்டினாய்

வங்க கடலே வங்க கடலே
இது என்ன நியாயம்?
ஏன் இத்தனை கோபம்?

இந்திர விழா எடுத்த பூம்புகார்
வளம் காணும் எங்கள் தமிழ் உலகம்
இவைகளைக் காண ஆழிப்பேரலையாய் எழுந்தாயோ
உன் வளம் தந்து எங்களை வளமாக்கும் நீ
எங்களுக்கு உன்னை சாவுக்களமாக்கியது ஏன்?

வங்க கடலே வங்க கடலே
இது என்ன நியாயம்?
ஏன் இத்தனை கோபம்?

நிரன்
29-12-2008, 10:41 AM
தமிழண்ணா எடுத்த முயற்சியின் முதற்படி..........:icon_b:

தமிழ்தாசன்
29-12-2008, 11:53 AM
வானம்தொட எழுகிறது மனம்!
மதுரைமைந்தன் தந்த முதல் பாடல் வரி சாயும் மனம்!
நீண்டநாட் தவம் ஒரு பாடலாசிரியரையேனும் தந்ததே தமிழ்மன்றம்.
வாழ்த்துக்கள் அன்புள்ளம் மதுரை மைந்தன் அவர்களே!

முதற்படி அமைத்தவரே!
முதற்படைப்பே அருமை!
அதுபற்றிய எந்த கருத்தாடலும் இப்போ தேவையில்லை!
உங்கள் வரிகளை இசையிடம் அனுப்பிவைக்கிறேன்.
இசையும் வரிகள் இசையட்டும் அதில்
அசையும் வரிகள் இசைக்கட்டும்.


நல்லது மன்றத்துறவுகளே!
எங்கே! புத்தாண்டுப்பாடல்!

தமிழ்தாசன்
29-12-2008, 05:04 PM
மன்றச்சொந்தங்களே!

வாருங்கள்! வாருங்கள்!
தாருங்கள்!! தாருங்கள்!!



2. புத்தாண்டுப்பாடல்.

படைப்புக்கள் பாடல்கள் ஆகட்டும்.

மதுரை மைந்தன்
29-12-2008, 10:30 PM
இதோ எனது புத்தாண்டு பாடல்

புத்தாண்டு மலரட்டும்
புது விடியல் பிறக்கட்டும்
புது வாழ்வு அமையட்டும்

ஈழத்து தமிழரின் கண்ணீர்
துடைக்கப்படட்டும்
பொருளாதார சரிவுகள்
சீர் செய்யப்படட்டும்

புத்தாண்டு மலரட்டும்
புது விடியல் பிறக்கட்டும்
புது வாழ்வு அமையட்டும்

வன்முறைகள் நீங்கட்டும்
தீவிர வாதம் அடங்கட்டும்
சாதி மத பேதங்கள் மறையட்டும்
மனித நேயம் ஓங்கட்டும்

புத்தாண்டு மலரட்டும்
புது விடியல் பிறக்கட்டும்
புது வாழ்வு அமையட்டும்

நிரன்
29-12-2008, 10:39 PM
நன்றாக உள்ளது மதுரை மைந்தன் அவர்களே

மன்னிக்க வேண்டும் தமிழண்ணா!
என்னால் பாடல் போன்று வடிவமைக்க முடியவில்லை
கவிதை வடிவிலேயே வடிவமைக்க இயல்பாக இருக்கிறது
என்னால் முடியுமானால் நானும் தருகி்றேன்
பாடல் வடிவில் தரமுடியாததையடுத்து வெட்கிப்போகிறேன்:redface:
முயற்சிக்கிறேன் என் மதிக்கும் ஏதாவது எட்டுமா என்று

தமிழ்தாசன்
30-12-2008, 01:35 PM
புத்தாண்டுப்பாடல் தந்த மதுரை மைந்தன் அவர்களுக்கு பாராட்டுக்கள்.

நிரஞ்சன் படையுங்கள் அதைப் பாடல் அழகுக்கு மாற்றுவோம்.

ஆதி
30-12-2008, 06:34 PM
புத்தாண்டு பாடல்

பல்லவி :

வரம் கேட்டு வந்தேன் - ஒரு
அறம் யார்க்கும் செய்வாய்
தரமான செயல்கள் தழைக்கட்டும்
தரம்கெட்ட யாவும் தகரட்டும்

சரணம் : 1

கட்டில் ஆள வேண்டாம் - தங்க
தட்டில் வாழ்வு வேண்டாம்
விட்டில் போல துன்பம் விழட்டும் இன்ப சுடரில்
தொட்டில் தூக்கம் போல தொடரட்டும் சொர்க்க அமைதி
மொட்டில் இருக்கும் தேனாய் முகிழட்டும் தூய சிந்தனை
கொட்ட திறக்கும் முகிலாய் பொழியட்டும் நேய நன்மழை

சரணம் : 2

மனிதர் மூளையை எல்லாம் Format செய்துவிடு
மறுநாள் யாரையும் புதிதாய் பார்க்க வைத்துவிடு
தூங்கும் போதும் இதழில் சிரிப்பை விரிக்க வை
தேங்கும் போதும் பிறர்காய் சுணையாய் ஊற வை
இனிதென இன்னலை எண்ணும் பக்குவம் கொடு
பனியென வாழ்வு நெஞ்சில் தத்துவம் நடு


குற்றமும் குறையும் கண்பட்டால் சுட்டுவீர் சொந்தங்களே..

தமிழ்தாசன்
30-12-2008, 06:38 PM
பாராட்டுக்கள்!
ஆதி அவர்களே!

மனம் பறக்கிறது வானில்!
மன்றத்திரை வானம் கலக்குது மனக் கூட்டில்.

நிரன்
30-12-2008, 07:13 PM
நன்றி ஆதி அண்ணா !

கேட்டதற்கிணங்கி மன்றத்திரைவானம் வந்து தங்கள்
பதிப்புக்களிட்டமைக்கு:)

தமிழ்தாசன்
30-12-2008, 09:48 PM
ஆகா அப்படியா?
நல்லவிடயம் மிக்க மகிழ்ச்சி நிரஞ்சன் அவர்களே!:mini023:
ஆதி அவர்களே!:icon_b:

நிரன்
30-12-2008, 10:05 PM
அமரன் அண்ணாவுக்கு முதல் நன்றி சொல்ல வேண்டும்

தமிழ்தாசன்
30-12-2008, 10:17 PM
இன்னும் என்னெனன் உள்ளகமோ?:smilie_abcfra::mini023::icon_rollout:
மன்றத்திரைவானம் மிளிர மன்றத்திரைமறைவு ஆதரவுகளுக்கு மிக்க மகிழ்ச்சி!
அமரன் அவர்களுக்கு முதல் மகிழ்ச்சி மற்றைய அன்பர்களுக்கும்.

தமிழ்தாசன்
31-12-2008, 04:43 PM
இங்கு யாரும் பாடல் தரலைன்னா........


நான் எழுதிடுவேன்.....
அப்புரம் யாரும் என்னை அடிக்கவரக்கூடாது!

நாராயணா!!!!

எங்கயுங்க பாடல்?:sprachlos020::icon_rollout:

தமிழ்தாசன்
20-01-2009, 07:45 PM
மன்றத்திரைவானம்.
பாடல் ஒன்று.

பாடல் வரிகள் - மதுரைமைந்தன்.
மெட்டு, குரல் - ரவி.
கேட்டு விட்டு கருத்துகளோடு உங்கள் படைப்புகளையும்
மன்றம்வையுங்கள்.

http://i419.photobucket.com/albums/pp274/kathravann/th_manrathiraivanam.jpg (http://s419.photobucket.com/albums/pp274/kathravann/?action=view&current=manrathiraivanam.flv)

படைப்பைத் தந்த திரு.மதுரைமைந்தன் அவர்களுக்கும்,
படைப்பை தனக்கே உரிய வடிவில் இசைய வைத்த குரல் தந்த திரு.ரவி அவர்களுக்கும். மன்றத்தின் மகிழ்ச்சி.
ஊக்கம் தரும் மன்ற உறவுகளுக்கும் மகிழ்ச்சி.

ஆதி
21-01-2009, 12:56 PM
அட்டகாசமாக உள்ளது தமிழ்தாசன் ஐயா.. குரலும் மெட்டும் பாட்டும்..

வரிகொடுத்த மதுரைமைந்தன் ஐயாவுக்கும் பாராட்டு..

நிரன்
21-01-2009, 02:08 PM
மிகவும் அருமையாக உள்ளது பாடலும் பாடியவிதமும்

தமிழ் மன்றத்திலிருந்து தங்கள் திரியின் முதல் வெற்றி.... வாழ்த்துக்கள்
அண்ணா! இதைப் போல் இன்னும் பல மன்றத்திரைவானம் படைக்க
வேண்டும்

நண்பர் மதுரை மைந்தன் அவர்களுக்கு என் வாழ்த்துக்கள்.
பாடலைப் பாடிய ரவி அவர்களுக்கும் என் நன்றிகள்

தொடரருங்கள் உங்கள் பணியை

தமிழ்தாசன்
21-01-2009, 08:01 PM
மிக்க மகிழ்ச்சி!

ஆதி அவர்களே!
நிரன் அவர்களே!

வரிகளை எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன்.
அத்தோடு இசை ஆர்வமிக்கவர்கள் இணையவேண்டும்.

வெற்றிகள் எல்லோராலும்தான் நிகழும் என்பதை தொடர்ந்து நிறுபிப்போம்.

வாருங்கள்.

ஆதி அவர்களின் பாடல் வரிகள் அனுப்பியுள்ளேன்.

மதுரை மைந்தன்
21-01-2009, 10:18 PM
மிகவும் அருமையாக இருக்கிறது. பாடலின் மெட்டு. அதற்கு தன் உணர்ச்சி பொங்கும் குரலைத் தந்த நண்பர் ரவிக்கு எனது பாராட்டுக்கள். உங்களது இந்த சீரிய முயற்சியில் எனது சிறிய பங்கும் இருந்ததை நினைத்து மிகவும் பெருமை படுகிறேன். இந்த பாடலை எனது நண்பர்கள் அனைவருக்கும் அறிமுகப் படுத்த உள்ளேன்.

மன்றத் திரைவானத்தை துவக்கி வெற்றி கண்டிருக்கும் தமிழ்தாசன் ஐயாவிற்கு எனது பாராட்டுக்கள்.

தமிழ்தாசன்
22-01-2009, 10:18 AM
மிக்க மகிழ்ச்சி
அன்பரே!

தமிழ்தாசன்
26-01-2009, 11:33 AM
http://i381.photobucket.com/albums/oo252/thamizhthaassan/th_kadalaakae.jpg (http://s381.photobucket.com/albums/oo252/thamizhthaassan/?action=view&current=kadalaakae.flv)

இந்த மெட்டுக்கு பாடல்வரிகள் தரலாம்.

தமிழ்தாசன்
09-05-2009, 11:12 PM
வந்தா மூழ்கி எடுக்கத்தானே வேணும்.
அதான் எடுத்திட்டேன்

வாங்க! வாங்க!
எழுதுங்க மெட்டுக்கு!