PDA

View Full Version : நீ எனக்கு வேண்டும் (சிறுகதை)



ரங்கராஜன்
10-12-2008, 06:09 PM
நீ எனக்கு வேண்டும்

மகேஷ் தூங்கிக் கொண்டு இருந்தான், காலை தூக்கம் அமைதியான சூழ்நிலை, குயில்கள் அழகான குரலில் கூவிக் கொண்டு இருந்தது, அதை அனுபவித்தபடி தூங்கிக் கொண்டு இருந்தான் மகேஷ். அதை கெடுக்கும் விதமாக அவனுடைய செல் போனில் இருந்து ஆங்கில பாடல் அழைப்பு மணியாக அலறியது. இவனும் அலறியவாரே எழுந்தான். எரிச்சலுடன் செல்லை ஆன் செய்து
"ஹலோ யார் பேசறது"

"நா.....நா...நான் சொக்கலிங்கம் பேசுறேன்"

"எந்த சொக்கலிங்கம்"

"அதுவந்து பார்...வதியுட...."

"சீக்கிரம் சொல்லுங்க சார்"

".................."

மகேஷ் எரிச்சலுடன் போனை கட் செய்தான். வந்து படுக்கையில் சரிந்தான், தூக்கம் அவன் கண்களை தழுவியது, மனதிற்க்குள் ஓரமாக "யார் அந்த சொக்கலிங்கம், யாருனு கேட்டா பார் பார்னு
இழுக்குறான்" என்று சிந்தித்துக் கொண்டே தூங்கியவன், தீடீர் என்று மின்னல் அடிக்கும் வேகத்தில் எழுந்து உக்கார்ந்தான்.

"பார்....பார்.....பார்வதியா, ஆமாம் ஆமாம், அவளின் அப்பா பெயர் சொக்கலிங்கம் தான்" என்று தனக்குள் சொல்லிக் கொண்டு அவசரமாக படுக்கையை விட்டு எழுந்தான். செல் போனில் இருக்கும் அந்த நம்பருக்கு திரும்பவும் அழைத்தான்.

"சார் வணக்கம், நான் மகேஷ் பேசறேன்"

"வணக்கம் தம்பி......(குரலில் ஒரு தழுதழுப்பு, சந்தோஷம் எல்லாம் இருந்தது), எப்படி இருக்கீங்க"

"அய்யோ சார் நீங்களா, எப்படி சார் இருக்கீங்க, பார்வதி எப்படி இருக்கா....இருக்காங்க, உங்க எல்லோரையும் நான் தேடாத இடமே இல்லை, எங்க சார் இருக்கீங்க, நான் பார்வதிக்கிட்ட பேசலாமா?, ப்ளீஸ்" என்று கேள்விகளை அடுக்கிக் கொண்டே போனான்.

"பார்வதி பார்....வதி " என்று அவர் உடைந்து அழத் துடங்கினார்.

"சார் பார்வதிக்கு என்ன சார் ஆச்சி, உயிருடன் தானே இருக்கா, ப்ளீஸ் அழாம சொல்லிங்க சார், எனக்கு நெஞ்சே வெடித்து விடும் போல இருக்கு, தயவு செய்து பார்வதி உயிருடன் இருக்காளான்னு மட்டும் சொல்லுங்க"

"உயிருடன் தான் இருக்கா தம்பி ஆனா....."

"அப்பாடா........., அதுபோதும் தெய்வமே, நீங்க எங்க இருக்கீங்க அத முதலில் சொல்லுங்க"

அவர் சொன்னவுடன். "இதோ உடனே வரேன் அரை மணி நேரத்தில் அங்கு இருப்பேன்"

மகேஷ் அவசர அவசரமாக காரை எடுத்துக் கொண்டு புறப்பட்டான், ஐந்து வருடம் பின்னோக்கி இவனின் ஞாபகங்கள் சென்றன.

"சாரி மகேஷ், என்னால உன்னை கல்யாணம் செய்துக் கொள்ள முடியாது, நீ எனக்கு ஒத்துவரமாட்ட"

"என்ன பாரு இப்படி குண்டை தூக்கி போடுற, நீன்னா எனக்கு உயிர், உன் மீது நான் பைத்தியமா இருக்கேன் பாரு"

"அதான் பிரச்சனையே, என்னுடைய செருப்பில் இருந்து, என்னுடைய துப்பட்டா போடுவது வரை நீ என்னை டாமினேட் பண்ற, எனக்கு அது பிடிக்கலை"

"இல்லடா கண்ணா ஹய் ஹீல்ஸ் செருப்பு போட்டா முதுகு வலிக்கும், அடிவயிரும் வலிக்கும் டா அதனால தான் சாதாரண செருப்பு வாங்கச் சொன்னேன், அப்புறம் துப்பட்டா நானும் ஒரு ஆண் என்பதால் ஆண்களின் புத்தி எனக்கு தெரியும் அதனால் தான் துப்பட்டாவை எப்படி போடனும்னு சொன்னேன்"

"தயவு செய்து உன் உபதேசத்தை நிறுத்துறீயா, இந்த........ இந்த.... போஸசீவ்னேஸ் தான் பிடிக்கலை, ஒருவேளை நான் எலும்பு தெரியுற மாதிரி அசிங்கமா இருந்த இந்த அக்கறை உன்னிடத்தில் இருக்குமா?, இது மாதிரி அம்மேச்சூர் அன்பு தான், சீக்கிரமே சந்தேக பார்வையில் கொண்டு விடும், சாரி மகேஷ் எனக்கு வேறு இடத்துல கல்யாணம் ஃப்க்ஸ் ஆயிருச்சி......." என்று பேசிக் கொண்டு இருக்கும் பொழுது பார்வதியின் செல் பாடியது. பார்வதி செல்லை எடுத்து பார்த்தாள், அவளின் அப்பா நம்பர் வந்தது.

"ஒரு நிமிஷம் மகேஷ் இதோ வரேன்" என்று கட்டிடத்துக்கு உள்ளே சென்றாள். வெளியே மகேஷ் பார்வதியின் ஸ்கூட்டி வண்டியில் தலை சாய்த்தபடி அழுதான்.

"இதோ வந்துட்டேன் ப்பா, அவன் அழறான் ப்பா,.......................இல்ல இல்ல ப்பா நான் அதைப் பற்றி கவலைப்படவில்லை" என்று பேசி விட்டு மகேஷை நோக்கி வந்தாள். அவன் கண்ணீருடன் இவளைப் பார்த்தப்படி நின்றான்

"ஆ..... என்ன சொல்லினு இருந்தேன், ...... எனக்கு கல்யாணம் முடிவு ஆயிடுச்சி. தோபார் மகேஷ் நான் தான் உன்னை துரத்தி துரத்தி லவ் பண்ணேன், இல்லைனு சொல்லல, ஆனா பாரு நமக்குள்ள ஒத்து வரவில்லை என்றால், நாமே பிரிஞ்சிடனும் அதுதான் புத்திசாலிதனம், அத....."

"பாரு, நீ எனக்கு வேண்டும் பாரு, நீ இல்லாமல் எனக்கு வாழ்க்கையே இல்லை பாரு, ப்ளீஸ்"

"மகேஷ் ஸ்கூல் பையன் மாதிரி அழாதே, சாரி என்னை மன்னிச்சிடு" என்று தன்னுடைய ஸ்கூட்டியை ஸ்டார்டு செய்துக் கொண்டு வேகமாக சென்றாள். இவன் பின்னாடியே ஓடிச்சென்று

"வேண்டாம் பாரு, போவாதே பாரு".

மகேஷின் கண்களில் தன்னை அறியாமல் கண்ணீர் வந்தது மனது துடித்தது "பாருக்கு என்ன ஆச்சோன்னு". கார் வேகமாக சொக்கலிங்கம் சொன்ன இடத்தில் நின்றது. சொக்கலிங்கம் வாசலிலே காத்துக் கொண்டு இருந்தார்.

"வாங்க மகேஷ், என்னை மன்னிச்சுடுங்க மகேஷ், நான் உங்களை ரொம்ப கேவலமாக நடத்தி இருக்கேன், அதெல்லாம் மனதில் வைத்துக் கொள்ளாமல் வந்து இருக்கீங்கனா, நீங்க ..." என்று கண் கலங்கினார்.

"அய்யோ அதெல்லாம் இருக்கட்டும் சார், பாரு எங்கே சார், ஐந்து வருஷமா நான் உங்க குடும்பத்தை தேடாத தெரு இல்லை"

"பாரு மேலே இருக்கா, பேட்டுல கோமால இருக்கா, உங்களுக்கு செஞ்ச பாவத்திற்க்கு அவ அனுபவிக்கிறா, உங்களை அவ பார்த்துட்டு வரும் பொழுது ஒரு ஆக்ஸிடேண்டுல அடிப்பட்டு, ஐந்து வருஷமா கோமாவில் இருக்குறா, ஐந்து வருஷமா கேரளாவில் வைத்தியம் பார்த்தோம் பயனில்லை, இப்பதான் இங்க வந்தோம், நீங்க அவளையே நினைச்சினு இருக்குறதா கேள்விப்பட்டு, உங்க நண்பனிடம் இருந்து தான் உங்க நம்பர் கிடைச்சது, இனிமேல் அவள நீங்....." என்று மேலும் அழுதார்.

"சார் நான் பாருவை பார்க்கனும்".

மகேஷை பாருவின் அறையில் தனியாக விட்டு விட்டு சொக்கலிங்கம் சென்றார். இருட்டான அறை, மெலிதான வெளிச்சத்தில், பாரு மெலிந்து போய் படுத்து இருந்தாள், மகேஷ் பாருவின் எலுப்புகள் தெரியும் கையை எடுத்து தன்னுடைய நெஞ்சில் வைத்துக் கொண்டு

"அய்யோ பாரு என்னை மன்னிச்சுடு பாரு, இந்த மாதிரி ஆகும்னு முன்னாடியே தெரிஞ்சி இருந்தா, நான் பிரேக் கம்பியை கட் பண்ணி இருக்கமாட்டனே. அய்யோ.................... சும்மா கை, கால் உடையும், உடைந்தால் உன்னுடைய கல்யாணம் நின்று விடும்னு தானே
அப்படி செஞ்சேன், இப்படி ஆவும்னு கனவுலக் கூட நான் நினைக்கலையே ................. (கண்களை துடைத்துக் கொண்டு), சரி இப்ப மட்டும் என்ன ஆச்சு நான் உன்னை கல்யாணம் பண்ணிக்கிறேன், அதுக்காக தானே நான் இவ்வளவும் செய்தேன், உங்க அப்பாவே என்னிடம் வந்து கெஞ்சுறார், நான் உன்னை பார்த்துக்குறேன், குழந்தை மாதிரி பார்த்துக்குறேன், நீ எப்பவுமே எனக்கு செல்லம் தான், (அவளின் காதோரமாய் போய்) "நீ எனக்கு வேண்டும் எப்பவும், எப்படியும், எல்லாத்திற்கும்" என்றான் மகேஷ் சந்தோஷத்தோடு.

Narathar
10-12-2008, 07:03 PM
கதை நன்றாகத்தானிருக்கின்றது மூர்த்தி....
ஆனால் ஒரு சின்ன நெருடல்,
"ஹய் ஹீல்ஸ் செருப்பு போட்டா முதுகு வலிக்கும், அடிவயிரும் வலிக்கும் என்று
சாதாரண செருப்பு வாங்கச் சொன்ன ஒரு காதலனால் அவள் காதலி வண்டியில்
பிரேக்கை பிடிங்கிவிட முடியுமா என்று யோசித்தால், என் மனதிற்கு முடியாது
என்று படுகின்றது!

ஆனால் அதுவும் அவளோடு சேரத்தானே என்று அதை நீங்கள் ஏற்கச்சொன்னால்
கதைக்காக அதை ஏற்றுக்கொண்டாலும்..... ஒரு நாளும் ஒரு உண்மை காதலனால்
தன் காதலியை கனவிலும் குன்புறுத்த முடியாது.

(இது என் கருத்து மட்டுமே... மனதில் பட்டதை சொன்னேன் )

ரங்கராஜன்
10-12-2008, 07:21 PM
கதைக்காக அதை ஏற்றுக்கொண்டாலும்..... ஒரு நாளும் ஒரு உண்மை காதலனால்
தன் காதலியை கனவிலும் குன்புறுத்த முடியாது.

(இது என் கருத்து மட்டுமே... மனதில் பட்டதை சொன்னேன் )

வாங்க நாரதரே
சொன்னீர்களே அதுவே பெரிய விஷயம், நீங்கள் கூறுவது உண்மை தான், ஆனால் இது அப்நார்மலான காதல், தன்னை விட்டு போககூடாது என்பது மாதிரியான காதல், இன்னும் கேட்டால் இது காதலே இல்லை, இது ஒரு ஃபோபியா மாதிரி, அப்நார்மலான மனிதர்களுக்கு வருவது. தனக்கு எப்படியாவது அதை சொந்தம் ஆக்கிக் கொள்ள வேண்டும் என்ற வெறியில் வருவது.

நன்றி

மதுரை மைந்தன்
10-12-2008, 08:43 PM
வழக்கம் போல ஒரு அதிர்ச்சி தரும் முடிவைத் தந்திருக்கீங்க. ஒரு காதலனால் காதலியின் ஸ்கூட்டர் பிரேக்கை பிடுங்க முடியுமா என்று யோசித்த போது பல வருடங்களுக்கு முன்பாக மும்பையில் நடந்த நிகழ்வு நினைவுக்கு வருகிறது. உயிருக்குயிராக காதலித்த பெண் வேறொருவரை மணமுடிக்கப் போகிறார் என்று கேள்விப் பட்டு அவள் படிக்கும் பள்ளியில் நுழைந்து அவள் மீது பெட்ரோலை ஊற்றி கொளுத்தி விட்டான் அந்த காதலன். ஆனால் உடனே அவனும் தன் உயிரை மாய்த்துக் கொண்டான். உங்க கதையில் மகேஷ் பிரேக்கை பிடுங்கி விட்டு அதற்காக பிராயச்சித்தம் பல வருடங்கள் கழித்து செய்வதாக வருவது சிறிது நெருடலாக இருக்கிறது. இருந்தாலும் நல்ல விறு விறுப்பான கதை; மன்றத்தில் நீங்கள் மனம் கவர் எழுத்தாளர்.

நிரன்
10-12-2008, 08:47 PM
ஆமாம் மூா்த்தி அண்ணா நீங்கள் கூறுவது போல் இது காதல் என்று
கூற மடியாது... நினைத்ததை எந்த வழியிலும் சாதிக்க வேண்டும்
என்ற வெறியென்றும் கூறலாம். என்னைப் பொறுத்த வரையில் தான்
காதலிக்கும் பெண்ணை ஒரு தவறான கோணத்தில் பார்க்கும் எண்ணமே
உண்மையான தொரு காதலனுக்கு தோன்றாது..ஏனெனில் இரு மனம்
ஒருமைப் படுவதுதான் உண்மைக் காதலென எண்ணுகிறேன்.
(இரு மனம் ஒன்றினைந்தால் தான் திருமணம்.)

தோபார் மகேஷ் நான் தான் உன்னை துரத்தி துரத்தி லவ் பண்ணேன், இல்லைனு சொல்லல, ஆனா பாரு நமக்குள்ள ஒத்து வரவில்லை என்றால், நாமே பிரிஞ்சிடனும் அதுதான் புத்திசாலிதனம்,

இருவரும் மனம் ஒத்து காதலித்து.. இக்கதையில் அப்பெண்ணே
அவனைத் துரத்தி துரத்தி லவ் பண்ணி கடைசியில்.இருவருக்கும்
ஒத்து வரவில்லை என்று சொல்லி கழுவிவிடுவது. ஆணிண் பக்கத்தில்
மட்டுமல்ல பெண் பக்கமும் ஒரு உண்மைக் காதலை உணா்த்தவில்லை.
பெண்ணிற்கு பொளுது போக்காகவும் ஆணிற்கு ஒரு வித வெறித்
தனத்தையும் உணா்த்துகிறது. ஒருவேளை இவ் வெறித்தனம் உருவாக
அப் பெண்ணும் காரணமாக இருக்கலாம்.
இது இக்கதை பற்றி என்னுடைய ஒரு சிறு கருத்துத்தான். எவரின்
தனிப்பட்ட வாழ்க்கையையும் சுட்டிக் காட்டவில்லை.

உங்கள் கதை நன்றாக உள்ளது... இது போன்று இன்னும் படையுங்கள் அண்ணா.

ரங்கராஜன்
11-12-2008, 03:31 AM
வழக்கம் போல ஒரு அதிர்ச்சி தரும் முடிவைத் தந்திருக்கீங்க. ஒரு காதலனால் காதலியின் ஸ்கூட்டர் பிரேக்கை பிடுங்க முடியுமா என்று யோசித்த போது பல வருடங்களுக்கு முன்பாக மும்பையில் நடந்த நிகழ்வு நினைவுக்கு வருகிறது. உயிருக்குயிராக காதலித்த பெண் வேறொருவரை மணமுடிக்கப் போகிறார் என்று கேள்விப் பட்டு அவள் படிக்கும் பள்ளியில் நுழைந்து அவள் மீது பெட்ரோலை ஊற்றி கொளுத்தி விட்டான் அந்த காதலன். ஆனால் உடனே அவனும் தன் உயிரை மாய்த்துக் கொண்டான். உங்க கதையில் மகேஷ் பிரேக்கை பிடுங்கி விட்டு அதற்காக பிராயச்சித்தம் பல வருடங்கள் கழித்து செய்வதாக வருவது சிறிது நெருடலாக இருக்கிறது. இருந்தாலும் நல்ல விறு விறுப்பான கதை; மன்றத்தில் நீங்கள் மனம் கவர் எழுத்தாளர்.


வாங்க சார், நன்றி
ரொம்ப நாள் கழித்து வரும் உங்களை வரவேற்கிறேன், ஆம் நீங்கள் கூறுவது போல வழக்கமான அதிர்ச்சி முடிவு தான் (ஏன் அந்த பாணி உங்களுக்கு பிடிக்கவில்லையா?). ஒருவேலை என்னுடைய கதைகளை தொடர்ந்து படிப்பதால் உங்களுக்கு அலுப்பு தட்டி இருக்கலாம், :traurig001:, பாணி ஒன்று தான் ஆனால் அதை நான் உபயோகிக்கும் பிளாட்ஃபாரம் தான் வேறு, எப்போ எனக்கே நான் எழுதியதையே எழுதறேன்னு அலுப்பு தட்டுதோ, அப்போ fittest of the surivial என்ற தியரியின் படி என் பாணியை நானே மாற்றி விடுவேன் சார். அதுவரை பொருத்துக் கொள்ளுங்கள். நன்றி

ரங்கராஜன்
11-12-2008, 03:35 AM
ஆமாம் மூா்த்தி அண்ணா நீங்கள் கூறுவது போல் இது காதல் என்று
கூற மடியாது... ,[/COLOR]

உங்கள் கதை நன்றாக உள்ளது... இது போன்று இன்னும் படையுங்கள் அண்ணா.

நன்றி நிரஞ்சன்
நன்றாக அலசி ஆராய்ந்து தந்த உங்களின் விமர்சனத்தை ரசித்தேன், தொடருங்கள்.

சிவா.ஜி
11-12-2008, 06:42 AM
மூர்த்தி சொல்லியிருப்பதைப்போல இது ஒரு காதல் கதை என்பதைவிட மனோரீதியாக பிரச்சனை உள்ளவனின் கதை எனலாம். கதையை வித்தியாசமாக சொல்ல முயன்றதற்கு பாராட்டுக்கள்.

முடிவில் வைத்த சஸ்பென்ஸும் நன்றாகவேயிருந்தது. அதே சமயம் என்னதான் மனோவியாதி உள்ளவனாக இருந்தாலும் அவன் மனதிலும் ஈரமிருப்பதை, காதலியை அந்த நிலையிலும் ஏற்றுக்கொண்ட முடிவு திருப்தியாகவே இருக்கிறது.

காதலி ஒருமுறை எலும்பு தெரிய நானிருந்தால் இப்படி கவலைப் பட்டிருப்பாயா எனக் கேட்டதை, கடைசியில் எலும்புதெரியும் அவள் கைகளை என ஒரு சொற்றொடர் சேர்த்து, அந்த நிலையிலும் நான் உன்னை ஏற்றுக்கொண்டிருப்பேன் என அவள் கேள்விக்கு பதிலளித்த பாங்கு பாராட்டத்தக்கது.

வாழ்த்துகள் மூர்த்தி. இன்னும் படையுங்கள்.

MURALINITHISH
29-12-2008, 10:04 AM
"ஹய் ஹீல்ஸ் செருப்பு போட்டா முதுகு வலிக்கும், அடிவயிரும் வலிக்கும் என்று
சாதாரண செருப்பு வாங்கச் சொன்ன ஒரு காதலனால் அவள் காதலி வண்டியில்
பிரேக்கை பிடிங்கிவிட முடியுமா என்று யோசித்தால், என் மனதிற்கு முடியாது
என்று படுகின்றது!


முடியும் நண்பா சிலரின் குணங்கள் வித்தியசமானது அதிலும் கதையாசிரியரே தெளிவாக சொல்லிவிட்டார் கால்,கை ஒடியும் திருமணம் நிற்கும் என்று நினைத்தேன் என்று இது ஒரு வகை
தனக்கு கிடைக்கும் என்ற நிலை இருக்கும் வரை அதை பத்திரமாக பார்ப்பார்கள்
தனக்கு கிடைக்கவே கிடைக்காது என்ற நிலை வரும் போது இதை மாதிரி கிறுக்குதனம் செய்து விட்டு பின்பு வருந்துவார்கள் இதுதான் உண்மை
நீங்கள் நினைப்பது எல்லாம் சினிமாவில் திணிக்கபட்ட மாயை

ரங்கராஜன்
07-03-2009, 11:58 AM
கதையின் நாடியை புரிந்துக் கொண்டதற்கு நன்றி முரளி

அக்னி
07-03-2009, 12:29 PM
என்னைப் பொறுத்தவரையில்,
மகேஷின் அதீத காதல், அவன் செயலின் பின்விளைவுகளைப் பற்றிச் சிந்திக்கத் தடைபோட்டுவிட்டது.
பழிவாங்க எண்ணியிருப்பின் ஐந்து வருடங்கள் அவன் காத்திருக்கவோ, அல்லது தேடவோ தேவையில்லையே.
அதற்காக அவன் செயலை நியாயப்படுத்த முடியாது.

அதேபோலத்தான் பார்வதியின் செயலையும் நியாயப்படுத்த முடியாது.
காதலித்தவனையே புரிந்து கொள்ளாதவள், புதிய துணையை எப்படி அனுசரித்துக்கொள்வாள்?

ஆக, இவர்களின் காதல் அதி தீவிரமாய் இருந்திருப்பினும்,
அந்தக் காதலில் புரிதலும், விட்டுக்கொடுப்பும் இருவருக்குமே இல்லை.

பார்வதியின் மீது ஏற்படும் கோபம், மகேஷின் செயலின் வெளிப்பாட்டில், அவன் மீதும் பகிரப்படுவதால்,
கதையின் முடிவில் சலனமற்று, ஏதோவொரு சமநிலை அடைகின்றது எம் மனநிலை.


சாரி மகேஷ் எனக்கு வேறு இடத்துல கல்யாணம் ஃப்க்ஸ் ஆயிருச்சி......
யாருப்பா கல்யாணத்த ஃப்க்ஸ் பண்றது...

பாராட்டுக்கள் daks...

ரங்கராஜன்
07-03-2009, 01:09 PM
நன்றி அக்னி
நான் முன்பே சொன்னது போல இந்த கதை சாதாரண பெண்ணுக்கும், அசாதாரண குணம் உடைய பையனுக்கும் இடைய ஏற்பட்ட உறவு. இந்த கதையில் பெண் வாழ்க்கையின் நலனை பார்க்கிறாள், ஆண் அளவுக்கு அதிகமான பாசம் வைத்த பெண்னை அடையவேண்டும் என்று நினைக்கிறான். சைக்கோ தனத்திற்கு கொஞ்சம் கீழே இருக்கிறான்.

அப்புறம் கல்யாணம் ஃப்க்ஸ் பண்றது பற்றி கேட்டு இருந்தீர்கள், இங்கு அது பேச்சு வழக்கில் வருவது, கல்யாணம் ஃப்க்ஸ் ஆயிடுச்சி, எங்கேஜ் அயிடுச்சி, என்பது எல்லாம். நான் கொஞ்சம் கச்சடா கதை சொல்லி அக்னி, நம் மன்றத்தில் ஒருத்தர் என்னுடன் போனில் பேசிவிட்டு கடைசியாக

”உங்களின் பேச்சுக்கும், உங்களின் எழுத்துக்கும் கொஞ்சம் கூட சம்பந்தம் இல்லை” என்று சிரித்தார். என்ன செய்வது என்னுடைய தமிழ் வளம் அவ்வளவு தான், இந்நேரம் நான் இலங்கையில் தமிழனாக பிறந்து இருந்தால், உங்கள் எல்லாரைப் போல தமிழை பிச்சி உதறி இருப்பேன், என்ன சொல்றீங்க அக்னி...........

அக்னி
07-03-2009, 01:16 PM
பிக்ஸ் என்பதுதான் ஃபக்ஸ் (fax) ஆகிவிட்டதோ என எண்ணினேன்.

மற்றும்படிக்கு உங்கள் தமிழ் வளத்தைப் பற்றிக் குறை சொல்லவில்லை.
குறை சொல்லும் அளவுக்கு நான் தமிழில் முழுமையும் இல்லை.

குறையொன்றும் இல்லை மறைமூர்த்திக் கண்ணா... குறையொன்றும் (நான் சொல்ல) இல்லையே...

ரங்கராஜன்
07-03-2009, 01:38 PM
ஓ நீங்க அதை சொன்னீர்களா? தலைவா

ஃபேக்ஸ் (fax) என்ற வார்த்தைக்கும் ஃப்க்ஸ் (fix) என்ற வார்த்தைக்கும் வித்தியாசம் இருக்கு இல்ல.

அக்னிக்கு தமிழில் building strong, ஆனால் ஆங்கில basement weakக்கு நினைக்கிறேன்

அக்னி
07-03-2009, 01:47 PM
அக்னிக்கு தமிழில் building strong, ஆனால் ஆங்கில basement weakக்கு நினைக்கிறேன்
இதையெல்லாம் இப்பிடிப் பப்ளிக்கில போட்டுடைக்கப்படாது.
இது நல்லதில்ல...

என்ன மொறைக்கிறீங்க...

எனக்கு நல்லதில்லன்னு சொன்னேன்...

vetriviji
11-03-2009, 09:07 AM
நல்ல கதை நண்பறே.:aktion033:



"அய்யோ பாரு என்னை மன்னிச்சுடு பாரு, இந்த மாதிரி ஆகும்னு முன்னாடியே தெரிஞ்சி இருந்தா, நான் பிரேக் கம்பியை கட் பண்ணி இருக்கமாட்டனே. அய்யோ.................... சும்மா கை, கால் உடையும், உடைந்தால் உன்னுடைய கல்யாணம் நின்று விடும்னு தானே
அப்படி செஞ்சேன், இப்படி ஆவும்னு கனவுலக் கூட நான் நினைக்கலையே .................

பிரேக் கம்பியை கட் பண்ணி விட்ட மகேஷ், பார்வதி கெளம்பி போன பின் என்ன ஆனது என்று கண்டுகொள்ளாமல் விட்டது எப்படி?:fragend005: இந்த இடம் கொஞ்சம் நெருடலாக உள்ளது.

contactvenkat
11-03-2009, 09:14 AM
Super kathai.

samuthraselvam
12-03-2009, 06:34 AM
பிரேக் கம்பியை கட் பண்ணி விட்ட மகேஷ், பார்வதி கெளம்பி போன பின் என்ன ஆனது என்று கண்டுகொள்ளாமல் விட்டது எப்படி?:fragend005: இந்த இடம் கொஞ்சம் நெருடலாக உள்ளது.

அதுதான் 5 வருடமாக தேடி இருக்கிறாரே...


கதையின் நாயகன் தனக்கு சொந்தமான ஒன்று தன்னுடையது இல்லை என்று ஆகும்போது, தனக்கே கிடைக்க வேண்டும் என்பதற்காக பின்பற்றிய வழி கொஞ்சம் வெறித்தனமான வழிதான். இது காதலிமேல் உள்ள வெறி. அவள் தனக்கே கிடைக்க வேண்டும் என்ற வெறி. இதுபோல் நிறைய பேர் இருந்தாலும், தன் காதலி நன்றாக வாழவேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்களும் இருக்கிறார்கள்.


நம் மன்றத்தில் ஒருத்தர் என்னுடன் போனில் பேசிவிட்டு கடைசியாக

”உங்களின் பேச்சுக்கும், உங்களின் எழுத்துக்கும் கொஞ்சம் கூட சம்பந்தம் இல்லை” என்று சிரித்தார். என்ன செய்வது என்னுடைய தமிழ் வளம் அவ்வளவு தான்

வழக்கத்திற்கும் வாழ்க்கைக்கும் நிறைய வேறுபாடு இருப்பது என்பது பொதுவான ஒன்று. அதனால் உங்களின் தமிழ் வளத்திற்கு குறைவு இல்லை அண்ணா..!:cool::cool: