PDA

View Full Version : நீ எனக்கு வேண்டும் (சிறுகதை)



ரங்கராஜன்
10-12-2008, 05:09 PM
wrg;ko[wo
kg

Narathar
10-12-2008, 06:03 PM
கதை நன்றாகத்தானிருக்கின்றது மூர்த்தி....
ஆனால் ஒரு சின்ன நெருடல்,
"ஹய் ஹீல்ஸ் செருப்பு போட்டா முதுகு வலிக்கும், அடிவயிரும் வலிக்கும் என்று
சாதாரண செருப்பு வாங்கச் சொன்ன ஒரு காதலனால் அவள் காதலி வண்டியில்
பிரேக்கை பிடிங்கிவிட முடியுமா என்று யோசித்தால், என் மனதிற்கு முடியாது
என்று படுகின்றது!

ஆனால் அதுவும் அவளோடு சேரத்தானே என்று அதை நீங்கள் ஏற்கச்சொன்னால்
கதைக்காக அதை ஏற்றுக்கொண்டாலும்..... ஒரு நாளும் ஒரு உண்மை காதலனால்
தன் காதலியை கனவிலும் குன்புறுத்த முடியாது.

(இது என் கருத்து மட்டுமே... மனதில் பட்டதை சொன்னேன் )

ரங்கராஜன்
10-12-2008, 06:21 PM
கதைக்காக அதை ஏற்றுக்கொண்டாலும்..... ஒரு நாளும் ஒரு உண்மை காதலனால்
தன் காதலியை கனவிலும் குன்புறுத்த முடியாது.

(இது என் கருத்து மட்டுமே... மனதில் பட்டதை சொன்னேன் )

வாங்க நாரதரே
சொன்னீர்களே அதுவே பெரிய விஷயம், நீங்கள் கூறுவது உண்மை தான், ஆனால் இது அப்நார்மலான காதல், தன்னை விட்டு போககூடாது என்பது மாதிரியான காதல், இன்னும் கேட்டால் இது காதலே இல்லை, இது ஒரு ஃபோபியா மாதிரி, அப்நார்மலான மனிதர்களுக்கு வருவது. தனக்கு எப்படியாவது அதை சொந்தம் ஆக்கிக் கொள்ள வேண்டும் என்ற வெறியில் வருவது.

நன்றி

மதுரை மைந்தன்
10-12-2008, 07:43 PM
வழக்கம் போல ஒரு அதிர்ச்சி தரும் முடிவைத் தந்திருக்கீங்க. ஒரு காதலனால் காதலியின் ஸ்கூட்டர் பிரேக்கை பிடுங்க முடியுமா என்று யோசித்த போது பல வருடங்களுக்கு முன்பாக மும்பையில் நடந்த நிகழ்வு நினைவுக்கு வருகிறது. உயிருக்குயிராக காதலித்த பெண் வேறொருவரை மணமுடிக்கப் போகிறார் என்று கேள்விப் பட்டு அவள் படிக்கும் பள்ளியில் நுழைந்து அவள் மீது பெட்ரோலை ஊற்றி கொளுத்தி விட்டான் அந்த காதலன். ஆனால் உடனே அவனும் தன் உயிரை மாய்த்துக் கொண்டான். உங்க கதையில் மகேஷ் பிரேக்கை பிடுங்கி விட்டு அதற்காக பிராயச்சித்தம் பல வருடங்கள் கழித்து செய்வதாக வருவது சிறிது நெருடலாக இருக்கிறது. இருந்தாலும் நல்ல விறு விறுப்பான கதை; மன்றத்தில் நீங்கள் மனம் கவர் எழுத்தாளர்.

நிரன்
10-12-2008, 07:47 PM
ஆமாம் மூா்த்தி அண்ணா நீங்கள் கூறுவது போல் இது காதல் என்று
கூற மடியாது... நினைத்ததை எந்த வழியிலும் சாதிக்க வேண்டும்
என்ற வெறியென்றும் கூறலாம். என்னைப் பொறுத்த வரையில் தான்
காதலிக்கும் பெண்ணை ஒரு தவறான கோணத்தில் பார்க்கும் எண்ணமே
உண்மையான தொரு காதலனுக்கு தோன்றாது..ஏனெனில் இரு மனம்
ஒருமைப் படுவதுதான் உண்மைக் காதலென எண்ணுகிறேன்.
(இரு மனம் ஒன்றினைந்தால் தான் திருமணம்.)

தோபார் மகேஷ் நான் தான் உன்னை துரத்தி துரத்தி லவ் பண்ணேன், இல்லைனு சொல்லல, ஆனா பாரு நமக்குள்ள ஒத்து வரவில்லை என்றால், நாமே பிரிஞ்சிடனும் அதுதான் புத்திசாலிதனம்,

இருவரும் மனம் ஒத்து காதலித்து.. இக்கதையில் அப்பெண்ணே
அவனைத் துரத்தி துரத்தி லவ் பண்ணி கடைசியில்.இருவருக்கும்
ஒத்து வரவில்லை என்று சொல்லி கழுவிவிடுவது. ஆணிண் பக்கத்தில்
மட்டுமல்ல பெண் பக்கமும் ஒரு உண்மைக் காதலை உணா்த்தவில்லை.
பெண்ணிற்கு பொளுது போக்காகவும் ஆணிற்கு ஒரு வித வெறித்
தனத்தையும் உணா்த்துகிறது. ஒருவேளை இவ் வெறித்தனம் உருவாக
அப் பெண்ணும் காரணமாக இருக்கலாம்.
இது இக்கதை பற்றி என்னுடைய ஒரு சிறு கருத்துத்தான். எவரின்
தனிப்பட்ட வாழ்க்கையையும் சுட்டிக் காட்டவில்லை.

உங்கள் கதை நன்றாக உள்ளது... இது போன்று இன்னும் படையுங்கள் அண்ணா.

ரங்கராஜன்
11-12-2008, 02:31 AM
வழக்கம் போல ஒரு அதிர்ச்சி தரும் முடிவைத் தந்திருக்கீங்க. ஒரு காதலனால் காதலியின் ஸ்கூட்டர் பிரேக்கை பிடுங்க முடியுமா என்று யோசித்த போது பல வருடங்களுக்கு முன்பாக மும்பையில் நடந்த நிகழ்வு நினைவுக்கு வருகிறது. உயிருக்குயிராக காதலித்த பெண் வேறொருவரை மணமுடிக்கப் போகிறார் என்று கேள்விப் பட்டு அவள் படிக்கும் பள்ளியில் நுழைந்து அவள் மீது பெட்ரோலை ஊற்றி கொளுத்தி விட்டான் அந்த காதலன். ஆனால் உடனே அவனும் தன் உயிரை மாய்த்துக் கொண்டான். உங்க கதையில் மகேஷ் பிரேக்கை பிடுங்கி விட்டு அதற்காக பிராயச்சித்தம் பல வருடங்கள் கழித்து செய்வதாக வருவது சிறிது நெருடலாக இருக்கிறது. இருந்தாலும் நல்ல விறு விறுப்பான கதை; மன்றத்தில் நீங்கள் மனம் கவர் எழுத்தாளர்.


வாங்க சார், நன்றி
ரொம்ப நாள் கழித்து வரும் உங்களை வரவேற்கிறேன், ஆம் நீங்கள் கூறுவது போல வழக்கமான அதிர்ச்சி முடிவு தான் (ஏன் அந்த பாணி உங்களுக்கு பிடிக்கவில்லையா?). ஒருவேலை என்னுடைய கதைகளை தொடர்ந்து படிப்பதால் உங்களுக்கு அலுப்பு தட்டி இருக்கலாம், :traurig001:, பாணி ஒன்று தான் ஆனால் அதை நான் உபயோகிக்கும் பிளாட்ஃபாரம் தான் வேறு, எப்போ எனக்கே நான் எழுதியதையே எழுதறேன்னு அலுப்பு தட்டுதோ, அப்போ fittest of the surivial என்ற தியரியின் படி என் பாணியை நானே மாற்றி விடுவேன் சார். அதுவரை பொருத்துக் கொள்ளுங்கள். நன்றி

ரங்கராஜன்
11-12-2008, 02:35 AM
ஆமாம் மூா்த்தி அண்ணா நீங்கள் கூறுவது போல் இது காதல் என்று
கூற மடியாது... ,[/COLOR]

உங்கள் கதை நன்றாக உள்ளது... இது போன்று இன்னும் படையுங்கள் அண்ணா.

நன்றி நிரஞ்சன்
நன்றாக அலசி ஆராய்ந்து தந்த உங்களின் விமர்சனத்தை ரசித்தேன், தொடருங்கள்.

சிவா.ஜி
11-12-2008, 05:42 AM
மூர்த்தி சொல்லியிருப்பதைப்போல இது ஒரு காதல் கதை என்பதைவிட மனோரீதியாக பிரச்சனை உள்ளவனின் கதை எனலாம். கதையை வித்தியாசமாக சொல்ல முயன்றதற்கு பாராட்டுக்கள்.

முடிவில் வைத்த சஸ்பென்ஸும் நன்றாகவேயிருந்தது. அதே சமயம் என்னதான் மனோவியாதி உள்ளவனாக இருந்தாலும் அவன் மனதிலும் ஈரமிருப்பதை, காதலியை அந்த நிலையிலும் ஏற்றுக்கொண்ட முடிவு திருப்தியாகவே இருக்கிறது.

காதலி ஒருமுறை எலும்பு தெரிய நானிருந்தால் இப்படி கவலைப் பட்டிருப்பாயா எனக் கேட்டதை, கடைசியில் எலும்புதெரியும் அவள் கைகளை என ஒரு சொற்றொடர் சேர்த்து, அந்த நிலையிலும் நான் உன்னை ஏற்றுக்கொண்டிருப்பேன் என அவள் கேள்விக்கு பதிலளித்த பாங்கு பாராட்டத்தக்கது.

வாழ்த்துகள் மூர்த்தி. இன்னும் படையுங்கள்.

MURALINITHISH
29-12-2008, 09:04 AM
"ஹய் ஹீல்ஸ் செருப்பு போட்டா முதுகு வலிக்கும், அடிவயிரும் வலிக்கும் என்று
சாதாரண செருப்பு வாங்கச் சொன்ன ஒரு காதலனால் அவள் காதலி வண்டியில்
பிரேக்கை பிடிங்கிவிட முடியுமா என்று யோசித்தால், என் மனதிற்கு முடியாது
என்று படுகின்றது!


முடியும் நண்பா சிலரின் குணங்கள் வித்தியசமானது அதிலும் கதையாசிரியரே தெளிவாக சொல்லிவிட்டார் கால்,கை ஒடியும் திருமணம் நிற்கும் என்று நினைத்தேன் என்று இது ஒரு வகை
தனக்கு கிடைக்கும் என்ற நிலை இருக்கும் வரை அதை பத்திரமாக பார்ப்பார்கள்
தனக்கு கிடைக்கவே கிடைக்காது என்ற நிலை வரும் போது இதை மாதிரி கிறுக்குதனம் செய்து விட்டு பின்பு வருந்துவார்கள் இதுதான் உண்மை
நீங்கள் நினைப்பது எல்லாம் சினிமாவில் திணிக்கபட்ட மாயை

ரங்கராஜன்
07-03-2009, 10:58 AM
கதையின் நாடியை புரிந்துக் கொண்டதற்கு நன்றி முரளி

அக்னி
07-03-2009, 11:29 AM
என்னைப் பொறுத்தவரையில்,
மகேஷின் அதீத காதல், அவன் செயலின் பின்விளைவுகளைப் பற்றிச் சிந்திக்கத் தடைபோட்டுவிட்டது.
பழிவாங்க எண்ணியிருப்பின் ஐந்து வருடங்கள் அவன் காத்திருக்கவோ, அல்லது தேடவோ தேவையில்லையே.
அதற்காக அவன் செயலை நியாயப்படுத்த முடியாது.

அதேபோலத்தான் பார்வதியின் செயலையும் நியாயப்படுத்த முடியாது.
காதலித்தவனையே புரிந்து கொள்ளாதவள், புதிய துணையை எப்படி அனுசரித்துக்கொள்வாள்?

ஆக, இவர்களின் காதல் அதி தீவிரமாய் இருந்திருப்பினும்,
அந்தக் காதலில் புரிதலும், விட்டுக்கொடுப்பும் இருவருக்குமே இல்லை.

பார்வதியின் மீது ஏற்படும் கோபம், மகேஷின் செயலின் வெளிப்பாட்டில், அவன் மீதும் பகிரப்படுவதால்,
கதையின் முடிவில் சலனமற்று, ஏதோவொரு சமநிலை அடைகின்றது எம் மனநிலை.


சாரி மகேஷ் எனக்கு வேறு இடத்துல கல்யாணம் ஃப்க்ஸ் ஆயிருச்சி......
யாருப்பா கல்யாணத்த ஃப்க்ஸ் பண்றது...

பாராட்டுக்கள் daks...

ரங்கராஜன்
07-03-2009, 12:09 PM
நன்றி அக்னி
நான் முன்பே சொன்னது போல இந்த கதை சாதாரண பெண்ணுக்கும், அசாதாரண குணம் உடைய பையனுக்கும் இடைய ஏற்பட்ட உறவு. இந்த கதையில் பெண் வாழ்க்கையின் நலனை பார்க்கிறாள், ஆண் அளவுக்கு அதிகமான பாசம் வைத்த பெண்னை அடையவேண்டும் என்று நினைக்கிறான். சைக்கோ தனத்திற்கு கொஞ்சம் கீழே இருக்கிறான்.

அப்புறம் கல்யாணம் ஃப்க்ஸ் பண்றது பற்றி கேட்டு இருந்தீர்கள், இங்கு அது பேச்சு வழக்கில் வருவது, கல்யாணம் ஃப்க்ஸ் ஆயிடுச்சி, எங்கேஜ் அயிடுச்சி, என்பது எல்லாம். நான் கொஞ்சம் கச்சடா கதை சொல்லி அக்னி, நம் மன்றத்தில் ஒருத்தர் என்னுடன் போனில் பேசிவிட்டு கடைசியாக

”உங்களின் பேச்சுக்கும், உங்களின் எழுத்துக்கும் கொஞ்சம் கூட சம்பந்தம் இல்லை” என்று சிரித்தார். என்ன செய்வது என்னுடைய தமிழ் வளம் அவ்வளவு தான், இந்நேரம் நான் இலங்கையில் தமிழனாக பிறந்து இருந்தால், உங்கள் எல்லாரைப் போல தமிழை பிச்சி உதறி இருப்பேன், என்ன சொல்றீங்க அக்னி...........

அக்னி
07-03-2009, 12:16 PM
பிக்ஸ் என்பதுதான் ஃபக்ஸ் (fax) ஆகிவிட்டதோ என எண்ணினேன்.

மற்றும்படிக்கு உங்கள் தமிழ் வளத்தைப் பற்றிக் குறை சொல்லவில்லை.
குறை சொல்லும் அளவுக்கு நான் தமிழில் முழுமையும் இல்லை.

குறையொன்றும் இல்லை மறைமூர்த்திக் கண்ணா... குறையொன்றும் (நான் சொல்ல) இல்லையே...

ரங்கராஜன்
07-03-2009, 12:38 PM
ஓ நீங்க அதை சொன்னீர்களா? தலைவா

ஃபேக்ஸ் (fax) என்ற வார்த்தைக்கும் ஃப்க்ஸ் (fix) என்ற வார்த்தைக்கும் வித்தியாசம் இருக்கு இல்ல.

அக்னிக்கு தமிழில் building strong, ஆனால் ஆங்கில basement weakக்கு நினைக்கிறேன்

அக்னி
07-03-2009, 12:47 PM
அக்னிக்கு தமிழில் building strong, ஆனால் ஆங்கில basement weakக்கு நினைக்கிறேன்
இதையெல்லாம் இப்பிடிப் பப்ளிக்கில போட்டுடைக்கப்படாது.
இது நல்லதில்ல...

என்ன மொறைக்கிறீங்க...

எனக்கு நல்லதில்லன்னு சொன்னேன்...

vetriviji
11-03-2009, 08:07 AM
நல்ல கதை நண்பறே.:aktion033:



"அய்யோ பாரு என்னை மன்னிச்சுடு பாரு, இந்த மாதிரி ஆகும்னு முன்னாடியே தெரிஞ்சி இருந்தா, நான் பிரேக் கம்பியை கட் பண்ணி இருக்கமாட்டனே. அய்யோ.................... சும்மா கை, கால் உடையும், உடைந்தால் உன்னுடைய கல்யாணம் நின்று விடும்னு தானே
அப்படி செஞ்சேன், இப்படி ஆவும்னு கனவுலக் கூட நான் நினைக்கலையே .................

பிரேக் கம்பியை கட் பண்ணி விட்ட மகேஷ், பார்வதி கெளம்பி போன பின் என்ன ஆனது என்று கண்டுகொள்ளாமல் விட்டது எப்படி?:fragend005: இந்த இடம் கொஞ்சம் நெருடலாக உள்ளது.

contactvenkat
11-03-2009, 08:14 AM
Super kathai.

samuthraselvam
12-03-2009, 05:34 AM
பிரேக் கம்பியை கட் பண்ணி விட்ட மகேஷ், பார்வதி கெளம்பி போன பின் என்ன ஆனது என்று கண்டுகொள்ளாமல் விட்டது எப்படி?:fragend005: இந்த இடம் கொஞ்சம் நெருடலாக உள்ளது.

அதுதான் 5 வருடமாக தேடி இருக்கிறாரே...


கதையின் நாயகன் தனக்கு சொந்தமான ஒன்று தன்னுடையது இல்லை என்று ஆகும்போது, தனக்கே கிடைக்க வேண்டும் என்பதற்காக பின்பற்றிய வழி கொஞ்சம் வெறித்தனமான வழிதான். இது காதலிமேல் உள்ள வெறி. அவள் தனக்கே கிடைக்க வேண்டும் என்ற வெறி. இதுபோல் நிறைய பேர் இருந்தாலும், தன் காதலி நன்றாக வாழவேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்களும் இருக்கிறார்கள்.


நம் மன்றத்தில் ஒருத்தர் என்னுடன் போனில் பேசிவிட்டு கடைசியாக

”உங்களின் பேச்சுக்கும், உங்களின் எழுத்துக்கும் கொஞ்சம் கூட சம்பந்தம் இல்லை” என்று சிரித்தார். என்ன செய்வது என்னுடைய தமிழ் வளம் அவ்வளவு தான்

வழக்கத்திற்கும் வாழ்க்கைக்கும் நிறைய வேறுபாடு இருப்பது என்பது பொதுவான ஒன்று. அதனால் உங்களின் தமிழ் வளத்திற்கு குறைவு இல்லை அண்ணா..!:cool::cool: