PDA

View Full Version : ஓர் ஈழத்தமிழ் சிறுவனின் கடிதம்



சிறுபிள்ளை
10-12-2008, 10:54 AM
ஏதோ ஒரு செப்டம்பர் 11 அன்றைக்கு, உலகின் ஏதோ ஒரு மூலையில் நடந்த சம்பவத்தை இன்னும் மறக்காமல் நாம்

விவாதித்துகொண்டிருக்கிறோம். ஆனால் நம் காலடியில் உள்ள தேசத்தில் நம் சொந்தங்களுக்கு தினம் தினம் செப்டம்பர் 11 நடந்து கொண்டிருப்பதை நாம் இன்று வரை கண்டுகொள்ளவில்லை அல்லது கண்டும் காணாததுபோல் இருந்து கொண்டிருக்கிறோம். ஒரு சீக்கிய மாணவனின் மயிரை அறுத்ததற்காக வெகுண்டெழுந்த சீக்கிய இனம் எங்கே, உன் தொப்புள் கொடி உறவின் உயிரை அறுத்த பின்னும் வாய் மூடி வேடிக்கை பார்க்கும் நம் தமிழ் இனம் எங்கே!!!!!

இப்படிக்கு,


http://www.thamizhkkaaval.net/1008/images/4.bmp



இக்கடிதத்தை படித்த பிறகாவது உங்கள் நெஞ்சில் தமிழினப்பற்று எட்டிப்பார்க்கும் என்ற நம்பிக்கையில் உங்களில் ஒருவன்

(கண்கள் நிறையக் கனவுகளோடும், துள்ளி விளையாடிய கால்களில் ஷெல்அடித்த ரணங்களின் வலியோடும் அகதி முகாமில் வாடும் புலம்பெயர்ந்த ஈழக் குழந்தையின் கிழிந்து போன சட்டைப்பைகளில் இருந்த உடைந்த பென்சிலின் ஒட்டுத்துண்டில் இந்தக்கடிதம் எழுதப்படுகிறது)

நலமுடன் இருக்கிறீர்களா? உலகத் தமிழர்களே?

குண்டு விழாத வீடுகளில், அமெரிக்காவுடனான அணுகுண்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவது பற்றி அளவளாவிக் கொண்டிருப்பீர்கள், இடைஞ்சலான நேரத்தில் கடிதம் எழுதுகிறேனா?

எனக்குத் தெரியும், என் வீட்டுக் கூரையில் விழுந்த சிங்களவிமானத்தின் குண்டுகள் என்னைப் போல பல்லாயிரக்கணக்கான தமிழ்க்குழந்தைகளை அநாதை ஆக்கிய போது, நீங்கள் எதாவது நெடுந்தொடரின் நாயகிக்காகக் கண்ணீர் விட்டுக்
கரைந்திருப்பீர்கள்......


எண் அம்மாவும் அப்பாவும் அரைகுறையாய் வெந்து வீழ்ந்தபோது, உங்கள் வீட்டு வரவேற்ப்பறைகளில் அரைகுறை ஆடைகளுடன் அக்காமாரெல்லாம் ஆடும் " மஸ்தானா, மஸ்தானாவின்" அரையிறுதிச் சுற்று முடிவுக்கு வந்திருக்கும்.

அண்ணனும், தம்பியும் நன்றாகப் படிக்கிறார்களா? அம்மா, அப்பாவின் மறைவுக்குப் பின்னால், எனக்குத் தலை வாரிவிட்டு, பட்டம்மா வீட்டில்
அவித்த இட்டலி கொடுத்துப் பள்ளிக்கு அனுப்பிய அண்ணனும் இப்போது இல்லை, நீண்ட தேடலுக்குப் பின்னர் கிடைத்த அவன் கால்களை மட்டும் மாமாவும், சித்தப்பாவும் வன்னிக் காடுகளில் நல்லடக்கம் செய்தார்கள்......

அப்போதே எழுத வேண்டும் என்று ஆசைதான் எனக்கு, நீங்கள் இலங்கை கிரிக்கெட் அணியின் இந்தியச் சுற்றுப் பயணத்தை, இரவு பகல் ஆட்டமாய்ப்
பார்த்திருந்தீர்கள்....அதனால் தான் எழுதவில்லை.........

ஒலிம்பிக் தீபத்தின் சுடர்களை உலகம் முழுவதும், என்னைப்போல ஒரு மலை நாட்டு திபெத் சிறுவனும், அவன் இனத்துப்பெரியவரும் சந்து பொந்தெல்லாம் மறித்துத் தடுத்தபோது, எனக்கு உங்கள் நினைவு வந்தது.....அதுமட்டுமல்ல, இந்திய அரசுகளின் உதவியோடு, இலங்கை ராணுவத்திற்கு நன்றி சொல்லும் திரைப்படச் சுருளின் பிரதிகளும் நெஞ்சில் நிழலாடியது.

ஒரு பக்கம், இரங்கற்பா எழுதிக் கொண்டு, மறுபக்கம், நவீன ஆயுதங்களை அனுப்பி வைக்கும் உங்கள் கூட்டணித் தலைவர்கள் எல்லாம் நலமா தமிழர்களே?

இன்னொரு முறை ஆயுதங்கள் அனுப்பும் போது மறக்காமல் ஒரு இரங்கற்பா அனுப்புங்கள், சாவின் மடியில் எங்களுக்கு ஒரு தமிழ்க்கவிதையாவது
கிடைக்கும் அல்லவா?

இன்னொரு தமிழகத்தின் மறைவான இடத்தில் நீங்கள் இலங்கை ராணுவத்திற்கு பயிற்சி அளிக்கும் போது, குழந்தைகளையும், கர்ப்பிணிப் பெண்களையும் வலியின்றிக் கொல்வது பற்றி ஒரு வகுப்பெடுத்து விடுங்கள். கொஞ்சம் பாவமாவது குறையட்டும்.......

மாஞ்சோலையில் ஒரு மாலை நேரத்தின் மங்கலான வெளிச்சத்தில், தம்பியின் பிஞ்சு உடல் நான்கைந்தாய் சிதறடிக்கப்பட்ட அந்த கோர நாளில் நாங்கள் எல்லாம் கூட்டமாய் அழுது கொண்டிருந்தோம்,

குழந்தைகள் இருக்கும் பள்ளிக்கூடங்களை தேடிக் கண்டு பிடித்து கொலை வெறியோடு உங்கள் "நேச நாட்டு" விமானங்கள் குண்டு மாரி பொழிந்த போது நீங்கள் இந்திய விடுதலையின் பொன் விழாக் கொண்டாட்டங்களுக்கான குறுஞ்செய்தி வாழ்த்துக்களில் களித்திருந்தீர்கள், உலகத் தொலைக்காட்சிகளின் நீங்கள் பார்த்து மகிழும் முதன் முறைத் திரைப்படங்கள் தடை படுமே என்று தான் அப்போது எழுதவில்லை,

எங்கள் இனப் போராளிகளை கொன்று குவித்து, நிர்வாணமாக்கி, இறந்த உடலுக்குக் கொடுக்கின்ற இறுதி மரியாதை இல்லாமல், எம் இறப்பை எள்ளி நகையாடிய உங்கள் " சார்க்" கூட்டாளியின் கொடிய முகம் கண்ட போதே எழுதி இருக்க வேண்டும்.

அப்போது நீங்கள் கட்சி மாநாடுகளில் கவனமாய் இருந்தீர்கள், பெண்களின் இடுப்பில் பம்பரம் விட்ட களைப்பில் கட்சி துவக்கிய கேப்டன்களின் பின்னால் அணிவகுத்து நின்றீர்கள், நீங்கள் போட்ட வாழ்க கோஷங்களின் இரைச்சலில் எங்கள் நிஜக் கேப்டன்களின் வீரமரணம் கேள்விக் குறியாய்க் கலைந்து போனது, தமிழர்களே?அப்பாவின் வயிற்றை அணைத்துக் கொண்டு, செப்பயான் குளத்தில் முங்கி எழுந்த நினைவுகளை மனதில் சுமந்து கொண்டு, வாரம் இரண்டு முறை அடிகுழாயில் அடித்து, அடித்து கொஞ்சமாய் ஒழுகும் தண்ணீர் நின்று போவதற்குள் ஓடி வந்து குளித்து விடுகிறேன் அகதி முகாமில்.

முகாமின், தகரத் தடுப்புகளின் இடைவெளியில் தெரியும் பள்ளிக்கூடமும், அதிலிருந்து வரும் மதிய உணவின் வாசமும், அம்மாவின் மடியில் இருந்து,
எப்போதும் கிடைக்கும் அன்பையும் எண் பழைய வாழ்வையும் நினைவு படுத்தும். ஆயினும் பாழும் வயிறு, பசி கலந்த வலி கொடுத்து பாய்ந்து ஓடி வரிசையில் நிறுத்தி விடும், அளந்து கொடுக்கப்படும் அவமானச் சோற்றுக்காய்.......

அப்போதெல்லாம் எழுதத் தோன்றும் எனக்கு, ஆனால் நீங்கள் பீஸாக் கடைகளின், வட்ட மேசைகளில் அமர்ந்து ஆங்கிலம் பேசிக் கொண்டிருந்தீர்கள், எழுதத் தோன்றவில்லை.....எனக்கு....

அமைதியாய் விடியும் பொழுதும்,

அழகாய்க் கூவும் குயிலும்,

தோகை விரிக்கும் மயிலும்,

காதல் பேசும் கண்களும்,

தாத்தா பிடித்த மீன்களில் அம்மா வைத்த குழம்பும்,

தாமரை மலரின் தாள்கள் பறிக்க நாங்கள் குதித்த குளங்களும்,

பக்கத்து வீட்டுப் பாண்டி அண்ணன் வேடு கட்டக் குவித்து வைத்த மணலும்,

அதில் சங்கு பொறுக்கி விளையாடிய என் தம்பியின் கால் தடங்களும்,

கருவேலன் காடுகளில் பொன் வண்டு பிடித்த என் பழைய நினைவுகளும்,

இனிமேல் எனக்குக் கிடைக்கவே கிடைக்காதா உலகத் தமிழர்களே?

எல்லோரும் சேர்ந்து மூட ஞானிக்கு எழுதிய நீண்ட கடிதமெல்லாம் வேண்டாம் அண்ணா, என் கேள்விகளில் எதாவது ஒன்றுக்கு, உங்கள் வீட்டில் கிழித்து எறியப்படும் நாட்காட்டித் தாள்களின் பின்புறமாவது பதில் எழுதுங்கள், உலகத் தமிழர்களே........

ஏனெனில் நீங்கள் எழுதப் போகும் பதிலில் தான் ஒரு இருண்டு போன இனத்தின் விடுதலையும், துவண்டு போன அகதிகளின் வாழ்க்கையின் மறுபிறப்பும் இருக்கிறது.

வலி கலந்த நம்பிக்கைகளுடன்,
உங்கள் தொப்புள்கொடி உறவு, தமிழீழத்திலிருந்து
நன்றி: norwaykiriba.com

தமிழ்தாசன்
10-12-2008, 11:38 AM
தம்பி!
உன் வரிகளில் வலிகளைக் கண்டு வருந்துதல்தான் என்னுள்ளத்தின் இப்போதைய விதி!
வெட்கப்பட்டு வேதனைப்படுதலாகியதே என் வாழ்வு!
என் அகதிவாழ்வுக்கு நான் விளக்கம் தருவதில் விளக்கமே இருக்க நியாயமில்லை.

உன் வாழ்வோடு என் வாழ்வு ஒப்புடுதலுக்கு எக்காலத்திலும் உரியதில்லை.
அதை நான் உணராமலுமில்லை.
நான் என்னை சிலகாலக் கட்டளைக்குள் இட்டுவிட்டேன்.
தமிழின எதிர்காலக் காத்திருப்புக்கு, வாழ்வுக்கு என் ஊடான உறவியல் ஒன்றை வளர்க்கிறேன். அதையாவது செய்வேன். உன் காலம் தாண்டிய ஒரு காலாமாவது பூக்கும்.
நம்பி நடக்கிறேன்.
நீயும் உன்னைத்திடப்படுத்திக்கொள். நீ தான் தம்பி உணர்வுத் தமிழன்.
நானோ உணர்வுகளில் மட்டும் தமிழன்.
உன் கேள்விகள் அதற்கான பதில்களை உலகத்தமிழினம் நிச்சயம் கூறவேண்டும். நான் அதில் ஒரு சின்னத்துளியே!
எனக்குள்ளும் உன்போன்ற கனவுகள், ஏக்கம் உண்டு தம்பி.
என்னில் கோபிக்காதே!
காலத்தில் பழிபோட்டு நான் தப்ப நினைத்தாலும் சில சிறு நியாயங்கள் என்னிடம் இருப்பது போல உணர்கிறேன். ஆனாலும் என் அகதிவாழ்வுக்கு நான் விளக்கம் தருவதில் விளக்கமே இருக்க நியாயமில்லை.

ஆறுதல் சொல்வது மட்டுமே! என் நிலையானதெண்ணி வருந்துவதுவே மிச்சமாகியது எண்ணி தலை குணிகிறேன்.
தம்பி எதிர்காலம் மலரும் நம் தேசம் உருவாகும் என்ற நம்பிக்கைக்கு என் பங்கும் இருக்கும் அது மட்டும் உறுதி.

அகதியாகி வாழும்
அன்னைத்தேசமே மனதில் வாழும் அண்ணன்.





தமிழ் மூச்செழுந்து எரிகிறது!

வானம் கிழிந்தது!
பூமிப்பந்தின் தமிழ் மூச்செழுந்து எரிகிறது!
வெட்டிப்பேச்சும்,வெறும்பேச்சும்
வெறுத்துப்போச்சு.
குட்டிபோட்ட பூனையின் நிலையா நம் வாழ்வு?
தட்டிக் கேட்கும் தன்மானக் குணம் எங்கே போச்சு?

கிட்டிபொல்லும், கிளித்தட்டும்
கெந்திபிடித்த மணல் விளையாட்டும்,
குந்தியிருந்து வானத்து நிலாவுக்கு கூடிக்கொடுத்த
முற்றத்து முத்தமும்,
தென்னோலைக் கீற்று விரித்து
பாக்குரலில் இடித்துக்கொண்டே
பொக்கைவாய் பொன்னம்மாப்பாட்டி வாய் சிரித்து
பாடிய காலங்கள் மறந்துபோச்சா?

வெள்ளுடை உடுத்தி
மெல்லநடை நடந்து
பள்ளிபோனதும்,
பக்கத்து வாங்கு பகீரதனை பார்த்து நெளித்துபோனதும் நினைவிழந்தாச்சா?

தமிழ் வாத்தியார் பண்டிதர் ஈஸ்வரநாதபிள்ளை சொல்லிதந்த இலக்கியப்பாடம் இலக்கிழந்து போச்சா?

எகிறி எகிறி எத்தணித்தாலும்,
எல்லாம் மாறினாலும்,
என்னவோவெல்லாம் மறந்து போனாலும்,
தமிழ்க் குணமும்,வடிவமும்
மாறிடாது.

பார் முகத்தை கண்ணாடியில் வடிவாய்ப்பார்.
அப்போதாவது தெரியாவிட்டாலும்
என்ன செய்ய?
பார்த்தால்.
வெட்கித் தலை குனியும்பார்.

தமிழைநேசித்தால் போதாது
தமிழ்வாழ தேசமன்றோ வேண்டும்.

--------------------------

பொங்கு தமிழ் எங்கும் பொங்கும் !


விழி கொண்டெழுகிறோம் - விடுதலை
மொழி கொண்டெழுகிறோம்,


பனியும், காற்றும்
படர்ந்து வரும் எதிரி
நரியின் கூட்டும்
நம்மை என் செய்யும் இங்கே!


விண்வெளியில் பறக்கும்
விழிதிறந்த நீலப் .... வானேறும்,
விடுதலையின் விடைவரும் காலம்
உலகின் மூலை முடுக்கெங்கும் தீ மூட்டும்.


ஒரு வழி
ஒரு தலைக் குடைக்கீழ்
எழுகிறது தமிழ்.


பிஞ்சும் கூனும் கிழமும்
நெஞ்சு நிமிர்த்தி
கூடுடைத்து
விழுது கொண்டு
வீதியிறங்கி வேர் தேடி வரும்.

விடுதலை கீதம் கேட்கிறது காதில்
தலைமகன் விடுதலை வரிமுகங்கள்
வரவேற்கும் மொழிகேட்கிறது.
பொங்குதமிழ்எங்கும் தங்கும் பொங்கும்!
அதிலிருந்து எழுகிறது தமிழுயிர்.
வருகிறோம்! வருகிறோம்!
வரலாற்றில் தமிழீழம்
வருகிறோம்! வருகிறோம்!

நிரன்
10-12-2008, 08:00 PM
இக்கடிதத்தை படித்த பிறகாவது உங்கள் நெஞ்சில் தமிழினப்பற்று எட்டிப்பார்க்கும் என்ற நம்பிக்கையில் உங்களில் ஒருவன்

(கண்கள் நிறையக் கனவுகளோடும், துள்ளி விளையாடிய கால்களில் ஷெல்அடித்த ரணங்களின் வலியோடும் அகதி முகாமில் வாடும் புலம்பெயர்ந்த ஈழக் குழந்தையின் கிழிந்து போன சட்டைப்பைகளில் இருந்த உடைந்த பென்சிலின் ஒட்டுத்துண்டில் இந்தக்கடிதம் எழுதப்படுகிறது)

வலி கலந்த நம்பிக்கைகளுடன்,
உங்கள் தொப்புள்கொடி உறவு, தமிழீழத்திலிருந்து
நன்றி: norwaykiriba.com

தழிழே எங்கள் மூச்சு.... அதுதான் எங்கள் பேச்சு.....
தமிழினப்பற்றும் தமிழ்ப்பற்றும் குறைந்தால் தான் அது பெருக வேண்டும்.
தமிழினப்பற்று எங்கள் உதிரத்தில் உறைந்து விட்டது. இறக்கும் வரை
எம்முள் சுழலும்....

நாட்டாமை
11-12-2008, 03:03 AM
தமிழினப்பற்றும் தமிழ்ப்பற்றும் குறைந்தால் தான் அது பெருக வேண்டும்.
தமிழினப்பற்று எங்கள் உதிரத்தில் உறைந்து விட்டது. இறக்கும் வரை
எம்முள் சுழலும்....
நிரஞ்சனிடம் ஒரு சிறிய விண்ணப்பம்...
மொத்தமாக ஒரு பதிவை கோட் செய்வதை தவிர்க்கலாமே.... :)

அன்புரசிகன்
11-12-2008, 03:17 AM
விடுதலைப்பாதைகள் என்றும் வலி நிறைந்த பாதை தான். அது மென்மையாக ஒரு போதும் இருக்கப்போவதில்லை. வலி உணரும் போது வியட்னாமை நினைவில் கொள்ளுங்கள் என்று தேசியத்தலைவரின் சிந்தனையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அது தான் இந்த நேரத்தில் நான் சொல்லலாம். வியட்னாம் பட்ட அல்லல்களை நாம் இன்னும் படவில்லை என்பது தான் நமக்கு ஆறுதல்.... துன்பத்தில் துவள்வது மறவன் அல்லவே..................

செழியன்
11-12-2008, 08:45 AM
வலியான வலிய உண்மைகள்.இக்கடிதத்தில் உள்ளது போல் புலம்பெயர்ந்த ஈழமக்களே உள்ளதுதான் வேதனை. எதனால் இடம்பெயர்ந்தோம் என்பதை மறந்து இங்கு சில அல்ல பல மக்கள் வாழ்வதுதான் வேதனை.

நன்றி சிறுபிள்ளை

அருள்
13-12-2008, 10:51 AM
வரிகளில் உள்ள வலியால் மனம் வருந்துவதால் பதில் எழுத கைகள் நடுங்குகின்றன

நிரன்
13-12-2008, 04:55 PM
நிரஞ்சனிடம் ஒரு சிறிய விண்ணப்பம்...
மொத்தமாக ஒரு பதிவை கோட் செய்வதை தவிர்க்கலாமே.... :)


வாங்க நாட்டாமை சரியான நாமத்தைத்தான் சுட்டியுள்ளீர்..:icon_ush:
ஆனால் நீங்கள் சொன்ன கோட் எனும் வார்த்தைதான்
எனக்குப் புரியவில்லை. ஒருவேளை quote என்பதனைக் கூறுகிறீா்களா?
இத்திரியில் நான் முழுதையும் quote கொடுக்கவில்லை
இத் திரியில் எனக்கு பதிலளிக்க தோன்றியதனைத்தான்
quote செய்துள்ளேன் அதனை சிவப்பு நிறத்தாலும் சுட்டிக்
காட்டியுள்ளேன். இதனை செய்வதால் நான் எந்தப் பகுதிக்கு
கருத்தளிக்கிறேன் என்று தெளிவாக தெரியும்.
நீங்கள் கூறிய கோட் இது என்றால் உங்களுக்கு எனது
தாழ்மையான பதில்கள்
பஞ்சாயத்துக்கு கட்டுப்பா்றேங்கையா இனி quote செய்வதை குறைக்கிறேன்.......