PDA

View Full Version : ஒரு வரி திருக்குறள்!



lenram80
09-12-2008, 07:22 PM
எப்படி சந்த்ராயன் உன்னைச் சுற்றாமல் நிலவைச் சுற்றியது?
எல்லா துறைக்கும் தெரிந்தது
அண்ணாதுரை*க்கு தெரியாமல் போனதா?

படபடக்கும் பட்டாசுகளின் நடுவே
பளபளக்கும் மத்தாப்பே!

சுருக்குப் பை இதழ் வழி
சிதறும் சிரிப்புச் சில்லரையே!

விமான நிலையமே!
விழி வழியே வெடிகுண்டு கொண்டு வந்தால்
விசாரிக்க மாட்டாயா?

ஒரு கண்ணில் யுரேனியம்!
மறு கண்ணில் தோரியம்!
நிழலோடு கூடங்குளமும் கூடவே வருகிறதே!

தீவிரவாதம் கூடாது - என்று
எப்படி உன் விழிகளுக்குச் சொல்வது?

அடி, வள்ளுவன் எழுத நினைத்த ஒரு வரி குறளே!
கண்ணகி அள்ளித் தெறித்த மாணிக்கப் பறலே!

என் ராமநாதபுர இதயத்தில்
தஞ்சையைத் தள்ளிவந்து நனைத்தவளே!

உன் தஞ்சை வயல் வெளிக்கு
நான் திருநெல்'வேலி'யாய் இருக்கவா?

இல்லை,
உன் திருவண்ணாமலை விழிக்கு
நான் நெய்'வேலி'யாய் இருக்கவா?

நான் உன்னைப் பார்த்து
நடை வரும் போது கன்னத்திலும்
விடை பெறும் போது கண்ணிலும்
மருதாணி போடும் முல்லையே!
நான்
உன்னை வர்ணிக்க வரைமுறை இல்லையே!

வைரமுத்து வார்த்தை படாத தண்ணீர் தேசத்தில்
கண்ணதாசன் காணாத காதல் செய்யலாம் வா!
கம்பனே வியக்கும் கவிதை பெய்யலாம் வா!

-------x----------

*அண்ணாதுரை - சந்த்ராயன் குழுத் தலைவர்

நிரன்
10-12-2008, 01:34 PM
எப்படி சந்த்ராயன் உன்னைச் சுற்றாமல் நிலவைச் சுற்றியது?
எல்லா துறைக்கும் தெரிந்தது
அண்ணாதுரை*க்கு தெரியாமல் போனதா?

படபடக்கும் பட்டாசுகளின் நடுவே
பளபளக்கும் மத்தாப்பே!

சுருக்குப் பை இதழ் வழி
சிதறும் சிரிப்புச் சில்லரையே!

விமான நிலையமே!
விழி வழியே வெடிகுண்டு கொண்டு வந்தால்
விசாரிக்க மாட்டாயா?

ஒரு கண்ணில் யுரேனியம்!
மறு கண்ணில் தோரியம்!
நிழலோடு கூடங்குளமும் கூடவே வருகிறதே!

தீவிரவாதம் கூடாது - என்று
எப்படி உன் விழிகளுக்குச் சொல்வது?

அடி, வள்ளுவன் எழுத நினைத்த ஒரு வரி குறளே!
கண்ணகி அள்ளித் தெறித்த மாணிக்கப் பறலே!

என் ராமநாதபுர இதயத்தில்
தஞ்சையைத் தள்ளிவந்து நனைத்தவளே!

உன் தஞ்சை வயல் வெளிக்கு
நான் திருநெல்'வேலி'யாய் இருக்கவா?

இல்லை,
உன் திருவண்ணாமலை விழிக்கு
நான் நெய்'வேலி'யாய் இருக்கவா?

நான் உன்னைப் பார்த்து
நடை வரும் போது கன்னத்திலும்
விடை பெறும் போது கண்ணிலும்
மருதாணி போடும் முல்லையே!
நான்
உன்னை வர்ணிக்க வரைமுறை இல்லையே!

வைரமுத்து வார்த்தை படாத தண்ணீர் தேசத்தில்
கண்ணதாசன் காணாத காதல் செய்யலாம் வா!
கம்பனே வியக்கும் கவிதை பெய்யலாம் வா!



நவீன தொழில் நுட்பம் கவிதையாகக்கூட மாறுகிறது .
நன்றாக உள்ளது மிகவும் பிடித்திருக்கிறது சிலவரிகள்..

இளசு
10-12-2008, 06:02 PM
அறிவார்ந்த காதலிக்கான கவிதையா லெனின்?

அன்பையும் (பொது)அறிவையும் சம அளவில் கலந்து..
இப்படி விருந்து தந்தால்..
எந்தக் காதலியின் மனமும் கனிந்து விடு(ழு)மே உவந்து!

இரசிக்கவைத்த வரிகள் அத்தனையும்..

பாராட்டுகள்!

lenram80
15-12-2008, 06:47 PM
மிக்க நன்றி நிரஞ்சன் மற்றும் இளசு அவர்களே!!

மற்றும் கவிதைப் படித்த அன்புரசிகன், ஆதி, ஓவியா, தமிழ்தாசன், தாமரை, நாட்டாமை, பாரதி, பார்த்திபன், jenitha, Narathar - நன்றி!