PDA

View Full Version : சனிக்கிரகத்தின் சந்திரனில் நீர் இருப்பதற்கான புதிய சான்றுகள்



நிரன்
09-12-2008, 01:14 PM
சனிக்கிரகத்தின் சந்திரனில் நீர் இருப்பதற்கான புதிய சான்றுகள்
சனிக் கிரகத்தின் சந்திரன்களில் திரவ நீர் இருப்பதற்கான புதிய சான்றுகள் தமக்குக் கிடைத்துள்ளதாக விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். அவர்களது ஆராய்ச்சி முடிவுகள் "நேச்சர்" விஞ்ஞான இணையத்தளத்தில் இன்று வியாழக்கிழமை வெளியிடப்பட்டுள்ளன.

நாசாவின் கஸினி விண்கலத்தின் மூலம் பெறப்பட்ட சனியின் "என்செலாட்ஸ்" சந்திரனின் பிரதிமைகள் மூலம், சந்திரனின் மேற்பரப்பில் நீராவித் தன்மையுடைய வாயுக்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

சந்திரனில் காணப்படும் இந்த நீராவி மூலக்கூறுகள், சனியின் சந்திரனில் திரவ நீரும் பனிப்படிவுகளும் இருப்பதற்கு சான்றாக உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நன்றி Lankasri.

விஞ்ஞானம் வளா்வதற்கு சந்தோசப்படுவதா இல்லையெனின் அதற்காக சங்கடப்படுவதா என்று தெரியவில்லை. ஒன்றை மனிதன் கண்டுபிடித்தால் அதனுடன் ஒரு அழிவையும் காலம் உருவாக்கிறது.

ராஜா
09-12-2008, 01:26 PM
இயற்கையின் எண்ணிலடங்கா இரகசியங்களில் இன்னும் நாம் அறியாதவை எவ்வளவோ இருக்கின்றன..! அவற்றை எல்லாம் நாம் அறிவதற்கு இந்த ஒரு ஆயுள் போதாது.

இருந்தாலும், இயற்கையின் அதிசயங்களுக்கான தேடலில் தம் சேவையைத் தொடரும் அந்த முகம் தெரியா அறிவியலாளர்களுக்கு பிரமிப்பு கலந்த நன்றிகள்..!