PDA

View Full Version : என் விடியல் நிலவால்....!!!



சிவா.ஜி
07-12-2008, 02:47 PM
எப்போது நினைத்தாலும்...ஒரு
தலை நிமிர்த்தலில்
தரிசிக்க முடியுமென்பதாலேயே
தவமிருந்து பெற்ற இடமிது....

எல்லோருக்கும் விடியல்
சூரியனாலென்றால்....
என் விடியல் எப்போதும்
முழுநிலவால்...

கருமேக பின்புலத்தில்
உருவாகும் வெண்ணிலவாய்
ஒருநாளும் மாறாது
வரும் எனது பெண்ணிலவே...

மாடங்களை இணைத்திடும்
மானசீக பாலத்தை உருவாக்கி
மனமதனை அதன் வழிக் கடத்தி
உனதருகாமை உணர்ந்தேன்....

உன்னுள் கலந்து திரும்பிய மனது
என்னிடம் சொன்ன கதைகள் ஆயிரம்
மனதுக்குக் கிடைத்த வரம்
என் விரல்களுக்கெப்போது வரும்...?

எப்போதோ ஒருமுறை
எனைத்தடவிச் செல்லும் உன் பார்வை
அப்போதே அடைத்துவிட்டேன்
அதற்கான தீர்வை....அது என் பார்வை...

ஒரே ஒருமுறை என்னை
நிதானித்து நிறுத்திப் பார்...
உணர்வாய் எனக்குள் நான் நடத்தும் போர்
அன்று துளிர்க்கும் உனக்கும் எனக்குமான
காதலின் வேர்...

இதையும் ஒரு சரித்திரமாய்
தன் குறிப்பில் எழுதும் பார்!
பாருக்கொரு வரலாறு
பார்த்துக்கொள் அது வருமாறு!

balaa
08-12-2008, 01:51 PM
நல்ல கவிதை சிவா.ஜி

பாரதி
08-12-2008, 03:09 PM
நிலவால் விடியலை காணும் விந்தை..!

காத்திருத்தலின் போது, காணுவதையெல்லாம் தூது விடத்தோன்றும் போலும்!

இனிய பாராட்டு சிவா.