PDA

View Full Version : பங்குவணிகத்தொழில் இலவச மென்பொருள்



பாரதி
07-12-2008, 06:38 AM
அன்பு நண்பர்களே,

சமீபத்தில் "பங்குச்சந்தையில் பணம் பண்ணலாம் வாங்க" வலைப்பூவை காண நேர்ந்தது. அதில் திரு. சாய்கணேஷ் என்பவர் பங்கு வணிகத்தில் ஈடுபடுபவர்களுக்கு உபயோகப்படும் சார்ட்நெக்சஸ் சார்ட்டிங் சாஃப்ட்வேர் (ChartNexus charting software)எனும் பங்கு வணிகத்தில் உபயோகிக்கப்படும் இலவச மென்பொருள் குறித்தும் அதை எப்படி நிறுவி, உபயோகிப்பது என்பதைக்குறித்தும் விரிவாக விளக்கி இருக்கிறார். எனக்கு பங்கு வணிகம் குறித்து அதிகம் தெரியாது. ஆனால் பங்கு வணிகத்தில் ஈடுபடுவோருக்கு இந்த மென்பொருள் நிச்சயம் பயன்படும் என நம்புகிறேன்.

இலவச மென்பொருளை பதிவிறக்க செல்ல வேண்டிய சுட்டி : http://www.chartnexus.com/products/index.php

மென்பொருளை நிறுவுதல் குறித்து வலைப்பூவில் வந்த தகவல்கள் : http://top10shares.wordpress.com/2008/11/06/tech-software/

நன்றி: பங்குச்சந்தையில் பணம் பண்ணலாம் வாங்க - வலைப்பூ.

leomohan
07-12-2008, 09:20 AM
நன்றி பாரதி அண்ணா.

zha
07-12-2008, 03:06 PM
உண்மையிலேயே மிகவும் பயனுள்ள தகவல்.
தமிழில் வருகின்ற இது போன்ற ஒரு சில வலைகள் எல்லோரின் கன்களிலும் படுவதில்லை.
தனக்கு தெரிந்ததை அடுத்தவர்களுக்கு சொல்வதற்க்கே மனம் வேண்டும்.
அந்த சாப்ட்வேரில் share trading செய்ய முடியாது.
வெறும் technical chart ஐ மட்டுமே பார்த்துகொள்ள முடியும் என்பதை மிகவும் தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.
நன்றி.

aren
07-12-2008, 03:43 PM
இது நல்ல விஷயம். நானும் இறக்கி தெரிந்துகொள்ளலாம்தான், ஆனால் பங்குசந்தைக்குச் செல்ல பணம் வேண்டுமே. அதற்கு என்ன செய்வது.

ஒரு நாள் என்னிடமும் பணம் இருக்கும், அன்றைக்கு களத்தில் இறங்குகிறேன்.

நன்றி வணக்கம்
ஆரென்

selvanntamil
07-12-2008, 04:10 PM
மிகவும் பயனுள்ளதாக இருந்தது

பாரதி
08-12-2008, 12:09 AM
கருத்துக்களுக்கு நன்றி மோகன், ஜா, ஆரென், செல்வன்.

கூடுதல் தகவலுக்கு நன்றி ஜா. அவர் கூறியது போல் இதில் பங்குகள் குறித்த விபரங்களை அறியமுடியுமே தவிர வணிகம் செய்ய இயலாது.

ஆரென்... நீங்க கதை எழுதலாமே..!