PDA

View Full Version : அடிமாடு....!!



சிவா.ஜி
06-12-2008, 05:41 AM
தேனியிலிருந்து இடுக்கிவரை போகவேண்டிய நிர்ப்பந்தம். பேருந்து எதுவும் வரவில்லை. எல்லாம் நேரம். அலுவலக வேலையாய் இடுக்கிக்கு உடனே போக வேண்டியுள்ளது. சாலையையே பார்த்து பார்த்து அலுத்துவிட்டது. கடிகாரத்தைப் பார்த்தால் டென்ஷன் கூடுமென்று அதையும் பார்க்காமலிருந்தான் பரசுராமன்.

ஒரு லாரி வந்தது. கையைக்காட்டினான். நின்றது. ஓட்டுநருக்கு அருகில் அமர்ந்திருந்தவன்,

“எங்க சார் போகனும்?” என்று கேட்டதும்,

“இடுக்கிப்பா”

“வண்டி அங்கதான் போகுது வாங்க”

வயிற்றில் பாலை வார்த்தான். சந்தோஷமாய் ஏறி அமர்ந்துகொண்டான் பரசுராமன். வண்டி போய்க்கொண்டிருக்கும்போதே “ம்....மா” என்ற சப்தம் கேட்டதும், சின்ன ஜன்னல் திறப்பைத் திறந்து பின்னால் பார்த்தான் பரசுராமன். இருபது மாடுகள் மட்டுமே ஏற்றப்படவேண்டிய வண்டியில் முப்பது மாடுகளை ஏற்றியிருந்தார்கள்.

“என்னப்பா இது அநியாயமா இப்படி வாயில்லாத ஜீவன்களை கொடுமை படுத்துறீங்க? பாவமா இருக்குப்பா...”

“ என்னா சார் நீங்க...நாளைக்கு இது கேரளாவுல துண்டு துண்டா கடையில தொங்கும் சார்....நாளைக்கு சாவப்போற ஜீவனைப் பத்தி இன்னிக்கு எதுக்கு சார் கவலைப் படறீங்க?”

‘அடப்பாவமே...இதெல்லாம் அடிமாடா..?”

“ஆமா சார். அவங்களுக்கு பால் குடுத்து வளத்த பசுமாடுங்கதான் சார். இப்ப பால் வத்திப்போச்சி...அடிமாட்டுக்கு அனுப்பிட்டாங்க...மனுஷங்க சார்...லாப நஷ்ட கணக்கு பாக்குறவங்க...”

எதுவும் பேசமுடியாமல் மௌனமாய் இருந்தான். தரகன் தொடர்ந்து,

“நம்ம மனுஷனுங்கதான் சார், பொம்பளப்பிள்ளை தனக்குப் பிறந்தா நஷ்டம்ன்னு சொல்லி கொண்ணுடறதும், மாட்டுக்கு பிறந்தா லாபம்ன்னு கொண்டாடுறதும்....அதே சமயத்துல...அங்க பாருங்க சார்...பாவம் பிறந்து பத்து நாளே ஆன கிடாரி...அதான் சார் ஆம்பிள கண்ணுக்குட்டி....அதனாலயும் பிரயோஜனமில்லன்னு கறிக்கு வித்துட்டானுங்க.....கேவலமானவங்க....ஆனா அவங்களாலத்தான் சார் எங்க பொழப்பு ஓடுது...”

அவன் மேற்கொண்டு சொன்ன எதுவும் பரசுராமனின் காதுகளில் விழவில்லை.

போனவாரம் முதியோர் இல்லத்தில் சேர்த்த அம்மாவை உடனே வீட்டுக்கு அழைத்துக்கொண்டு வரவேண்டும். உறுதி செய்து கொண்டான்.

மதி
06-12-2008, 05:48 AM
நல்ல கதை சிவாண்ணா முகத்தில அறையற மாதிரி... வயசானதும் பெற்றவர்களை அடிமாடுகளாக்கினவர்களுக்கு நல்ல சவுக்கடி

சிவா.ஜி
06-12-2008, 06:04 AM
அப்படிப்பட்டவர்களைப் பார்க்கும்போது மனசு வலிக்குது மதி. இதுல அப்படி செய்யறதுக்கு காரணங்களும் சொல்றதைத்தான் என்னால ஏத்துக்க முடியல. பெத்தீங்க, வளர்த்தீங்க உங்க கடமை முடிஞ்சது...ஓரமா ஒதுங்கிக்கங்கன்னு துரத்தறது நியாயமா?

வயசான காலத்துல ஆதரவில்லாம இப்படி எத்தனை தாய்மார்கள் அவதிப்படறாங்க.....இதுக்கெல்லாம் காரணம் மருமகள்கள்தான். 90 சதவீதம் அப்படித்தானிருக்கிறார்கள். பெண்ணுக்கு பெண்ணே எதிரி. என்னத்தை சொல்ல?

பாரதி
06-12-2008, 06:13 AM
ஆம்.. சிவா, முன்பெல்லாம் சாலையில் அடிக்கடி பார்த்திருக்கிறேன். அசையக்கூட இடம் இல்லாமல், தலையை ஆட்ட வழி இல்லாமல் தலைகள் வெளியே தொங்க, கண்ணில் நீர் வழிய, வாயிலிருந்து எச்சில் வழிய அந்த உயிரினங்கள் படும் வேதனையை எடுத்துக்கூற இயலாது.

வயதான பெற்றோர்களின் கஷ்டத்தை அவற்றுடன் ஒப்பிட்டு, சுயநலத்தை பெரிதாக நினைக்கும் இக்காலத்தவருக்கு இனியாவது கொஞ்சமாவது உறைக்கும் வகையில் எழுதியதற்கு நன்றி.

இன்னும் எழுதுங்க சிவா.

சிவா.ஜி
06-12-2008, 06:18 AM
நானும் பார்த்திருக்கிறேன் பாரதி. அந்த அசையக்கூட முடியாத அன்னாந்த நிலையில் அவைகள் படும் கஷ்டம்....பார்க்கவே நெஞ்சு வலிக்கும். அம்மாக்களையும் அப்படியான நிலையில் வைத்திருக்கும் பிள்ளைகளைப் பார்த்தும் இதயம் வலிக்கிறது.

நன்றி பாரதி. எழுதுகிறேன்.

Narathar
06-12-2008, 07:42 AM
அடிமாட்டு கதையை சொல்லி.....
கடைசியில கொடுத்தீங்க பாருங்க ஒரு பன்ச்~!!
அங்க நிக்கிறாரு சிவா.ஜி

சிவா.ஜி
06-12-2008, 08:05 AM
நன்றி நாரதரே...அந்த பன்ச் சேரவேண்டிய இடத்தில் சேர்ந்தால் சந்தோஷம்.

அக்னி
06-12-2008, 06:00 PM
ஒரு யதார்த்தமான கதை.
மிகுந்த பாராட்டுக்கள் சிவா.ஜி...

அடிமாடுகளுக்கு உடன் சாவு...
முதியோரில்லத்தில் வாழ்வோருக்குத் தினம் தினம் சாவு...
உணர்வால், மனதால் அவர்களைச் சாகடிக்கும், கொலைகாரப் பிள்ளைகளுக்கு என்ன தண்டனை..?

Keelai Naadaan
07-12-2008, 03:52 AM
அருமையான கதை. கதையின் முடிவில் முதியோர்களும் அடிமாடுகளாய் நடத்தபடுகிறார்கள் என்பது மனதை நெருடுகிறது. பாராட்டுக்கள்.

ஜெயகாந்தனின் பால்பேதம் என்ற கதை படித்திருக்கிறீர்களா..?
அதுவும் அடிமாடுகளைப் பற்றியதுதான். மனதை தொடுவதாயிருக்கும்.

சிவா.ஜி
07-12-2008, 02:18 PM
அடிமாடுகளுக்கு உடன் சாவு...
முதியோரில்லத்தில் வாழ்வோருக்குத் தினம் தினம் சாவு...
உணர்வால், மனதால் அவர்களைச் சாகடிக்கும், கொலைகாரப் பிள்ளைகளுக்கு என்ன தண்டனை..?

இதுதான் அக்னி என் மனதை உறுத்தும் விஷயம். தினம் தினம் செத்துப்பிழைக்கும், பிள்ளையிருந்தும் அனாதையாகிவிட்ட அந்த ஜீவன்களுக்கு என்ன எதிர்காலம்? குற்றம் செய்த பிள்ளைகளுக்கு என்ன தண்டனை? அவர்கள் பிள்ளைகள் அவர்களுக்கு அளிக்கும் தண்டனையாகத்தானிருக்கும்.

நன்றி அக்னி. மீண்டும் உங்களை இங்கே காண்பதில் மிக்க மகிழ்ச்சி.

சிவா.ஜி
07-12-2008, 02:19 PM
உங்கள் பின்னூட்ட ஊக்கத்துக்கு மிக்க நன்றி கீழைநாடான். நிச்சயம் அந்த கதையை தேடிப் படிக்கவேண்டும்.

aren
07-12-2008, 03:49 PM
நல்ல கதை. நல்ல பாடம்.

ஆனால் இந்த மாடுகளையும் கோழிகளையும் நினைத்தால் பாவமாகத்தான் இருக்கிறது. ஒரு பாவமும் செய்யாத அவைகள் படும் பாடு இருக்கிறதே.

எல்லாம் இறைச்சிக்கே!!!

மதுரை மைந்தன்
07-12-2008, 10:21 PM
அடி மாடாய் குடும்பத்திற்காக உழைத்து ஓய்ந்த நாளில் பெற்ற பிள்ளைகள் பராமரிக்காமல் முதியோர் இல்லங்களில் விடும் கொடுமையை உங்கள் கதை உணர்த்துகிறது. எனது உறவில் ஒரு தாய் முதியோர் இல்லம் செல்ல மறுத்து அதை விட எனக்கு உணவில் விஷம் வைத்து கொடுத்து விடுங்கள் என்று சொல்லும் பரிதாப நிலையைக் கேட்டு கண்ணீர் விட்டேன். நல்ல கதை பாராட்டுக்கள்.

அக்னி
07-12-2008, 11:33 PM
அவர்கள் பிள்ளைகள் அவர்களுக்கு அளிக்கும் தண்டனையாகத்தானிருக்கும்.

ஆனால், அவர்களின் பிள்ளைகள், தமது பெற்றோருக்கு அடிமாடு என்ற நிலையை அளிக்கும் தண்டனையாக இராமல்,
”இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்
நாண நன்னயம் செய்துவிடல்”
என்பதற்கேற்ப,
அவர்கள் இறுதிக்காலம் வரைக்கும் தம்முடனேயே வைத்துப் பராமரிப்பதே,
பெரிய தண்டனையாகவும்,
இந்நிலை வாழையடி வாழையாகத் தொடராமல் இருக்கவும் ஏதுவாக அமையும்.

chilludhosth007
08-12-2008, 06:34 AM
மாடுகளும் ஒருநாள் மனுசன சாப்ட்டா எப்படி இருக்கும் கதை அருமை வாழ்த்துக்கள்

சிவா.ஜி
08-12-2008, 06:58 AM
பின்னூடமிட்டு ஊக்கப்படுத்திய ஆரென், மதுரைமைந்தன் மற்றும் புது வரவு சில்லுதோஸ்த்007 அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்.

சிவா.ஜி
08-12-2008, 06:59 AM
அக்னி சொல்வதைப்போல நடக்க வேண்டும். நல் வழக்கங்கள் தொடர வேண்டும்.வேண்டுகிறது மனது.

MURALINITHISH
29-12-2008, 08:13 AM
சில இடங்களில் இப்படி அடமாடுகளாய் பெற்றோர்கள்
சில இடங்களில் அடிமைகளாய் அடக்கி ஆளும் பெற்றோர்கள் என்ன சொல்ல

சிவா.ஜி
29-12-2008, 08:45 AM
ஆம் முரளி. சில இடங்களில் அப்படித்தானிருக்கிறது. ஆனால் பல இடங்களிலும் அடிமாடுகளாய்த்தானே இருக்கிறார்கள். அந்த நிலையும் மாற வேண்டும், இந்த நிலையும் மாற வேண்டும்.

கருத்துக்கு நன்றி முரளி.

அன்புரசிகன்
29-12-2008, 10:03 AM
உணர்ச்சியை ஆழமாக கிள்ளிவிடும் நிஜம் இந்த கதை... பெற்றோரை அடிமாடுகளாக நினைப்பவர்களுக்கு இந்த கதை போதும். சாட்டை தேவைப்படாது. நன்றாய் உள்ளதண்ணா...

anna
29-12-2008, 10:40 AM
நல்ல அருமையான கதை தான். ஆனால் இது தான் இயற்கையின் நிர்பந்தம் போலும். தனக்கு உபயோகம் இல்லாத பொருள் எதுவாக இருந்தாலும் அது உயிரே ஆனாலும் தனக்கு உபயோகம் இல்லை என்றால் மனிதன் மட்டுமல்ல மற்ற ஜீவன்கள் கூட மதிப்பதில்லை. ஊத்த உடலில் உயிர் இருந்தால் தான் நீ ராஜா மந்திரி. உயிர் போய்விட்டால் அதாவது உபயோகம் இல்லாவிட்டால் நீ பிணம் தான்.

நிரன்
29-12-2008, 10:55 AM
அருமையான சிறு கதையொன்று
அடிமாடு களுக்கு மட்டும் விளக்கம் கொடுக்கவில்லை இங்கே
அவ் விளக்கம் அவன் அம்மாவையும் திருப்பி வீட்டுக்கு
கொண்டு வர உதவியது மிகஅருமை

சிறு கதையில் இது போன்ற சிலருக்கு நல்லதொரு படிப்பினையும்
புகட்டியுள்ளீர்கள்

வாழ்த்துக்கள் சிவா அண்ணா!

இளசு
07-01-2009, 08:40 PM
சபாஷ் சிவா!

சுருக்கென சாட்டை சுழட்டியமைக்குப் பாராட்டுகள்!


முன்பெல்லாம் சாலையில் அடிக்கடி பார்த்திருக்கிறேன். அசையக்கூட இடம் இல்லாமல், தலையை ஆட்ட வழி இல்லாமல் தலைகள் வெளியே தொங்க, கண்ணில் நீர் வழிய, வாயிலிருந்து எச்சில் வழிய அந்த உயிரினங்கள் படும் வேதனையை எடுத்துக்கூற இயலாது.

வயதான பெற்றோர்களின் கஷ்டத்தை அவற்றுடன் ஒப்பிட்டு, சுயநலத்தை பெரிதாக நினைக்கும் இக்காலத்தவருக்கு இனியாவது கொஞ்சமாவது உறைக்கும் வகையில் எழுதியதற்கு நன்றி.



பாரதியின் விமர்சனம் அச்சாய் என் எண்ணத்தின் பிம்பம்!

samuthraselvam
03-03-2009, 11:09 AM
பெற்றோர்களின் பாசம் அடிமட்டிற்கு சமமாய் நினைக்கும் பிள்ளைகளுக்கான சவுக்கடி அண்ணா....
சவுக்கடி அல்ல சம்மட்டி அடி..

சிவா.ஜி
03-03-2009, 04:09 PM
கதையை வாசித்து பாராட்டிய பிரஜாஅண்ணாமலை, நிரன், இளசு மற்றும் லீலுமாவுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

அறிஞர்
03-03-2009, 04:24 PM
நல்ல சாட்டையடி...
குறுங்கதை.. மிகுந்த அர்த்தங்கள்..
வாழ்த்துக்கள் சிவா.ஜி.