PDA

View Full Version : அச்சு (சிறுகதை)ரங்கராஜன்
05-12-2008, 05:26 PM
அச்சு


ராஜ்மோகனும் (55) ரம்யாவும் (30) அந்த அறையில் அமைதியாக அமர்ந்து இருந்தனர். அறையில் மாட்டி இருக்கும் படங்கள் அனைத்தும் வித்தியாசமாக இருந்தது,

1. ஒருவர் தலையை பிடித்துக் கொண்டு இருட்டில் உக்கார்ந்து இருக்கார், 2. கண்கள் சிவக்க ஒருத்தர் முறைக்கிறார்
3. கண்கள் சொறுகியபடி ஒருவன் போதையில் விழுந்து இருக்கான்.

இருவரும் அந்த படங்களை பார்த்துக் கொண்டு இருந்தார்கள், ரம்யாவுக்கு ஆத்திரம் பொங்கியது.

"அப்பா உனக்கு அறிவு இருக்கா, ஏன் இங்க என்னை அழைத்துக் கொண்டு வந்த எனக்கு என்ன பைத்தியமா?" என்று பொறிந்து கொண்டு இருக்கும் பொழுதே டாக்டர் ராகவன் உள் அறையில் இருந்து வெளியே வந்தவர்.

"சைக்கேட்ரிஸ்டு கிட்ட சில பைத்தியங்களும் வருவாங்க, ஆனா பைத்தியங்கள் மட்டும் வருவதில்லை" என்ற படி வந்து அவருடைய இருக்கையில் அமர்ந்தார்.

"சாரி டாக்டர் நான் அப்படி சொல்ல வரலை........."

"நோ பிராப்ளம், மக்களுக்கு சைக்கேட்ரிஸ்டு-னு சொன்னாலே பைத்தியகார டாக்டர்னு நினச்சிக்குறாங்க, சரி பரவாயில்லை சொல்லுங்க யாரது உங்க அப்பாவா என்ன ஆச்சி அவருக்கு" என்றதும் ரம்யா குபீர்னு சிரித்து விட்டாள், அவரின் அப்பா ராஜ்மோகன் அலறியபடியே

"டாக்டர் எனக்கு ஒன்னும் இல்லை, என் பொண்ணுக்கு தான்...."

"அப்பா தயவு செய்து என்னை இரிடேட் பண்ணாத, நீ கொஞ்சம் வெளியே போய் இரு, நான் அவர் கிட்ட பேசிக்கிறேன்"

"குட், நானே சொல்லனும் நினைத்தேன் மேடம், நீங்களே சொல்லிட்டீங்க, சார் கொஞ்சம் வெளியே வைடு பண்ணுங்க ப்ளிஸ்" என்றார் டாக்டர்.

"சார் அதுவந்து சார்....." என்று தயங்கினார் ராஜ்மோகன்.

"சார் நீங்க போங்க சார் நான் பார்த்துக்குறேன்" என்றார் டாக்டர். ராஜ்மோகன் கதவை திறந்துக் கொண்டு வெளியே போனார். ரம்யா பெருமூச்சு விட்டவளாக

"சாரி டாக்டர் ஹார்ஷா பேசினதுக்கு, என் அப்பா என்னிடம் அவர் நண்பனை பார்க்க போறோம்னு பொய் சொல்லி இங்கே அழைத்து வந்துவிட்டார். ஆக்சுவலா எனக்கு எந்த பிராப்ளமும் இல்லை நான் கல்யாணம் வேண்டாம் என்று சொல்வதால் என்னை அவர் இங்கே அழைத்துக் கொண்டு வந்துவிட்டார், சாரி டூ டிரபிள் யூ" என்று எழுந்தாள்.

டாக்டர் "இட்ஸ் ஓ.கே மிஸ்....."

"ரம்யா"

"ஓ, சரி உங்க அப்பா கிட்ட நான் சொல்லி புரியவைக்கிறேன், நீங்க போய் அவரை அனுப்புங்க, அவரை மட்டும்". என்றார். ரம்யா அவரை பார்த்து சிரித்த படியே வெளியே சென்றாள். ராஜ் உள்ளே வந்தார்.

"பார்த்தியாடா ராகவா, இப்படி தாண்டா அவ எல்லாத்துக்கும் கோவப்படுறா, ஏண்டா இவளை டாக்டிரேட்டு வரை படிக்க வச்சேன்னு இப்ப வருத்தப்படுறேன்" என்று இருக்கையில் அமர்ந்தார் ராஜ்.

"டேய் புலம்புறதை முதலில் நிறுத்து, நீ புலம்புறதை கேட்டா எனக்கே எரிச்சலா இருக்கு முதலில் என்ன நடந்ததுனு சொல்லு" என்றார் டாக்டர்.

"என்னத்தடா சொல்லுவேன், இவளுடைய அம்மா இவ சின்ன வயசா இருக்கும் போதே செத்து போய்டா. வீட்டில் நான், இவ அப்புறம் என் மூத்த மகன் கணேஷ் மட்டும் தான், பெண் துணை எதுவும் கிடையாது.
ரம்யாவுக்கு 15 வயசு இருக்கும் போது பக்கத்து வீட்டில் முப்பது வயது மதிக்கதக்க ஒரு பெண் குடி வந்தாள், அவ கூட தான் ரம்யா எப்பவும் இருப்பா. அவளோ புருஷனை விவாகரத்து செய்தவள். எப்போ பார்த்தாலும் ஆண்களை பற்றி இவளிடம் தவறாகவே சொல்லி இருக்காள். விவரம் தெரிய ஆரம்பித்ததில் இருந்து இவளும் அதையே கேட்டு கொண்டு இருந்து இருக்காள். அப்புறம் இந்த விஷயம் தெரிந்து அந்த பொம்பளையை வீட்டை விட்டு காலி செய்துட்டேன், ஆனா இது நடந்து பத்து வருஷத்து மேல ஆவுது இவள் கல்யாணம் வேண்டாம்னு பிடிவாதமா இருக்காடா, இத்தனை நாளா படிக்குறேன்னு பி.எச்.டி வரை ஆஸ்டலிலே காலத்தை கடத்திட்டா, இப்ப தான் எல்லாத்தையும் முடிச்சுட்டு வீட்டுக்கு வந்து இருக்கா, யார்க்கிட்டேயும் சரியா பேசறது இல்லை, குழந்தைக்கிட்ட கூட..........".

டாக்டர் ராஜ்மோகனை பார்த்து பேச ஆரம்பித்தார். வெளியில் ரம்யா அங்கு இருக்கும் பூக்களை பார்த்துக் கொண்டு இருந்தாள், கொஞ்ச நேரம் உக்கார்ந்தவள் பொறுமை இழந்தவளாக டாக்டரின் அறைக்குள் அனுமதி இன்றி சென்றாள். உள்ளே

".........ஆமா ஆமா, என் பையனுக்கு கல்யாணம் ஆகி 4 வயதி ஒரு பையன் இருக்கான்"

"சூப்பர், தட்ஸ் வெரி குட்" என்றார் டாக்டர். ரம்யா உள்ளே புகுந்து

"சாரி டாக்டர், அப்பா வா போலாம்" என்று ராஜ்மோகனை தரதரவென்று வெளியில் இழுத்து வந்தாள்.

"விடு ரம்யா ஏன் நீ இப்படி அறிவில்லாமல் நடந்துக்குற" என்றார் ராஜ் கோபத்துடன். ரம்யா அவரை அமைதியாக பார்த்தபடி

"அப்பா நீனா எனக்கு உயிர் தெரியுமா, என்னை மட்டும் நீ ஏன் அப்படி நினைக்க மாட்டுற, என்னை துரத்துனும்னு ஏன் இப்படி அலையுற". ராஜ் எதுவும் சொல்லாமல் அவளை பார்த்தபடி நடந்தார்.

ஒருவாரம் கழித்து

"ஏய் சாப்பிட்டு தொலை, சனியனே இந்த எமனை வேற என் தலையில் கட்டிட்டு குடும்பமே ஊருக்கு போயிடுச்சு, ஏய் ஒரு எடத்துல நில்லுடா" என்று அச்சுவின் பின்னாடி ஓடிக்கொண்டு இருந்தாள் ரம்யா. அறையில் போன் மணி அடித்தது, அச்சு போனை நோக்கி ஓடினான், ஸ்டூல் மேல் ஏறி போனை ரம்யா வருவற்க்குள் எடுத்து

"அல்லோ ஆரு பேசத்து, நான் அச்சு பேசறேன்"

"..........."

"ம்மா எப்பமா வருவ, அத்த என்ன அடிக்குறமா, சாப்பாடே போட மாட்றா மா, ஏய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய் விடு என் போனை" என்று கத்தினான் போனை புடுங்கும் ரம்யாவை பார்த்து.

"ஹலோ அண்ணி,................... இல்ல அண்ணி பொய் சொல்றா காலையில் இருந்து இவன் பின்னாடி தான் சாப்பாட்டை வச்சினு சுத்தினு இருக்கேன், ஆஆஆஆஆஆஆஆ" என்று கத்தினாள், போனை பிடுங்கிய ஆத்திரத்தில் அச்சு ரம்யாவின் தொடையை கடித்து விட்டு சிரித்துக் கொண்டே ஓடிவிட்டான்.

"அண்ணி எல்லாரும் சீக்கிரம் வந்து தொலைங்க, என்னால இவனை வச்சினு................. என்னது ஒரு வாரம் ஆகுமா" என்றதும் போனை கோபத்தில் வைத்தாள் ரம்யா. வெளியே வந்தாள்

"எண்டா ஆரம்பிச்சாச்சா, லோடீங் அன்லோடீங் தவிர வேற எதுவுமே உனக்கு தெரியாத, சரி சரி கிட்ட வராத அங்கயே நில்லு, ஏய் ...... ஏய்.......ஏய் சனியனே......அய்யோ எத்தனை வாட்டிடா நான் டிரஸ்சை மாத்த முடியும், குரங்கு......" தூரத்தில் ஓடிச்சென்று ரம்யாவை பார்த்து சிரித்து கொண்டு இருந்தான் அச்சு. இரவில் ரம்யாவுக்கு தூக்கம் வரவில்லை, அச்சு காலை தூக்கி இவளின் வயிற்றின் மீது, இடுப்பின் மீது, முகத்தின் மீது போட்டுக் கொண்டே இருந்தான், இவளும் அதை எடுத்து போடுவதிலே பாதி இரவு கடந்தது விட்டது. இரவு 2 மணி ரம்யாவுக்கு கண் இழுத்துக் கொண்டு சென்றது. சூடாக படுக்கையை நனைக்க ஆரம்பித்தான் அச்சு

"அய்யோ வர கோவத்திற்க்கு உன்ன..." என்று தூங்கினு இருந்த அச்சுவின் தலையில் கொட்டு ஒன்று வைத்தாள் ரம்யா. அவ்வளவு தான் சங்கு பிடிப்பது போல பொறுமையாக ஆரம்பித்து சத்தமாக அலற ஆரம்பித்தான் அச்சு. ரம்யாக்கு பாவமாக இருந்தது, உடனே

"சாரி டா, சாரி டா தெரியாம அடிச்சிட்டேன் டா. கத்தாத டா" என்று சாமாதானம் படுத்தினால். அச்சு அழுதுக் கொண்டே ரம்யாவின் மார்பில் முகம் புதைத்து அப்படியே தூங்கியும் போனான்.

காலையில் தூங்கிக் கொண்டு இருந்த ரம்யாவின் மீது வந்து பொத்துனு விழந்தான். அவள் அலறியபடி எழுந்தாள்

"அத்த குட்-மானிங், சீக்கிரம் ஏந்துரு"

"குட்-மார்னிங் டா செல்லம், சீக்கிரம் எழுந்துட்டீங்களா"

"ஆமா" என்று அவளின் இடுப்பில் வந்து உக்கார்ந்து, குதித்தான்.

"அப்படியாஆஆஆஆ, சரி எங்க உங்க டிராயர் காணும்" என்று கொஞ்சினாள்.

"அதுவா, எங்க அம்மா, டிராயர் போட்டுனு கக்கா பண்ணா திட்டுவாங்க" என்றான் அச்சு. திடுக்கிட்டு எழுந்தவளாக ரம்யா, அவனை அப்படியே அலேக்காக தூக்கி கீழே வைத்து தன்னுடைய போர்வையை பார்த்தாள். வெறி எறியவளாக

"சனியனே காலையிலே எனக்கு வேலை வச்சியா, இரு வரேன்" என்று ரம்யா வருவதற்க்குள் அச்சு சிரித்துக் கொண்டு ஓடி மறைந்தான்.

அவனுக்கு மதியம் ரம்யா கதை சொல்லி ஊட்டிக் கொண்டு இருந்தாள், அப்போ மணி அடித்தது, அச்சு ஓடிசென்று போனை எடுத்து

"அல்லோ ஆரு பேசறது, நான் அச்சு பேசறேன்"

"........."

"ம்மா நீயா, நான் அத்த கூட பிசியா பேசினு இருக்கேன், நீ அப்புறம் பேசு" என்று போனை வைத்து விட்டு ரம்யாவின் மடிமேல் வந்து உக்கார்ந்து கொண்டான். ரம்யாவுக்கு ரொம்ப பெருமையாக இருந்தது.

"அத்த ஆ " என்று சாப்பாட்டுக்கு வாயை திறந்தான் அச்சு.

அவனை அப்படியே அனைத்து ஒரு முத்தம் வைத்தாள் ரம்யா. ஒரு வாரம் இப்படியே ஓடியது. இரண்டு வாரத்தில் ரம்யாவின் அண்ணனுக்கு டிராஸ்பர் வந்து அவர் குடும்பம் வெளியூருக்கு சென்றது. ரம்யாவாள் அச்சுவின் பிரிவை தாங்க முடியவில்லை, அவனின் சிரிப்பு சத்தம் காதில் கேட்டு கொண்டே இருந்தது, அவன் குறுக்கே ஓடுவதை போலவே உணர்ந்தாள், அவன் கால் போடாமல் இவளுக்கு இரவில் தூக்கம் வரவில்லை. தனியாக அப்பாவுடன் ஒரு வாரம் கழிந்தது, போனை எடுத்தாள், அச்சு வீட்டுக்கு போட்டாள்

"அண்ணி நான் ரம்யா பேசுறேன் அச்சு இருக்கானா, என்ன சாருக் கூட பேசவே முடியலை, என்ன பத்தி கேட்டுனே இருக்கானா?"

"யாரு அவனா, பக்கத்து வீட்டுல ஒரு காலேஜ் படிக்குற பொண்ணு இருக்கு ரம்யா, அவ கூட தான் எப்பவும் இவனுக்கு விளையாட்டு. அவளும் அச்சுனா பாசமா இருக்கா. என்னையே அவன் மறந்துட்டான், இரு அவனிடம் தரேன். ஏய் அச்சு இந்தா அத்த பேசறாங்க பார்...... அத்த டா .... இந்த இந்த பேசு.....பேசுடான்னா" என்றாள்.


"ம்மா நான் அக்காகூட விளையாடினு இருக்கேன்ல, நான் அப்புறம் பேசுறேன்" என்று விளையாட ஆரம்பித்தான்,

எதிர் முனையில் ரம்யாவின் கண்களில் கண்ணீர் பொங்கியது, போனை வைத்துவிட்டு படுக்கையில் போய் சாய்ந்து அழத்துடங்கினாள். இரண்டு மாதம் கடந்தது. ஒரு முகூர்த்த நாளில் கல்யாணத்தில் ராகவனும் ராஜ்மோகனும்

"டேய் ராகவா ரொம்ப நன்றி டா, நீ சொன்னபடி தான் இந்த கல்யாணமே நடந்துனு இருக்குடா"

"நான் என்னடா செஞ்சேன், எல்லாம் உன் பேரன் அச்சு தான்டா"

அமரன்
05-12-2008, 06:22 PM
இன விருத்தி செய்ய வெண்டியது, தூண்டுவது இயற்கை. அதற்காக கல்யாணம் செய்ய வேண்டியது சம்பிரதாயம். அந்தச் சம்பிரதாயம் தமிழர் மரபில் தவிர்க்க இயலாத ஒன்றாகிவிட்டது. எதிர்வாதங்கள் இருந்தாலும் அதனை நான் ஆதரிப்பேன். அந்த இனவிருத்தியின் உணர்வு பூர்வமான வடிவம் குழந்தைப் பாசம். அதை பொருட்படுத்தி வரையப்பட்ட சிறுகதை.

ஒரு வாச(அ)கத்துக்கும் உருகார் சிறு வாச(அ)கத்துக்கு உருகுவார் என்பது கதையின் இருதயத்தின் ஒருபக்கம். எனக்கென ஒன்று இருந்தால் இப்படி எல்லாம் ஆகுமா என்ற மனவியல் இருதயத்தின் மறுபக்கம். அந்த ஓட்டத்தில் உயிருடன் உலவி விட்டு சென்று விட்ட கதை.

பாராட்டுகள் மூர்த்தி.

அய்யா
05-12-2008, 06:32 PM
பேசும் பொற்சித்திரமான அச்சு, ரம்யாவின் இல்லற வண்டி ஓடத்துவங்கவும் அச்சாக இருந்தது இனிமை. சிறுபிள்ளைகள் செய்யும் குறும்புச்செயல்கள் அனைத்தையும் கனக்கச்சிதமாக வடித்துள்ளீர்கள் மூர்த்தி.

சிவா.ஜி
06-12-2008, 06:09 AM
மன்னிக்கவும் மூர்த்தி...தொடர்ந்து படிக்க முடியல....இத்தனை எழுத்துப்பிழைகள் என்னை மேற்கொண்டு படிக்க விடவில்லை. எத்தனை நல்ல கதையாக இருந்தாலும் இப்படி எக்கச்சக்க எழுத்துப்பிழையோடு இருந்தால்......மன்னிக்கவும் என்னால் படிக்க முடியவில்லை.

Keelai Naadaan
07-12-2008, 06:21 AM
அச்சுவின் குழந்தை தனத்தையும், மழலை பேச்சையும், குழந்தை மனப்போக்கையும் சரியாக வடித்திருக்கிறீர்கள். பாராட்டுக்கள்.:icon_b:

ரங்கராஜன்
07-12-2008, 11:40 AM
மன்னிக்கவும் மூர்த்தி...தொடர்ந்து படிக்க முடியல....இத்தனை எழுத்துப்பிழைகள் என்னை மேற்கொண்டு படிக்க விடவில்லை. எத்தனை நல்ல கதையாக இருந்தாலும் இப்படி எக்கச்சக்க எழுத்துப்பிழையோடு இருந்தால்......மன்னிக்கவும் என்னால் படிக்க முடியவில்லை.

thanks MR.siva
i am extermely sorry, actually at present i am not in my home town and i dont have tamil font in this system also, i wrote this story in an unkown tamil writer. Now only i saw your quote, i am really ashamed of my hurry work. i am not justifying my mistakes but explaining the reasons of my mistake. As soon as i reach home i will clear all the mistakes in the story. And thank you once again for your true quotes. thank you

சிவா.ஜி
07-12-2008, 03:25 PM
நீங்கள் ஒரு நல்ல கதைசொல்லி என்பது சர்வநிச்சயமாய் நிரூபிக்கப்பட்ட ஒன்று மூர்த்தி. அதனால் உங்கள் கதையை விருப்பமுடன் வாசிக்க வந்த எனக்கு ஏற்பட்ட ஏமாற்றம்தான் என் பதிவு. அதையும் ஆரோக்கியமாய் எடுத்துக்கொண்ட உங்களை மனப்பூர்வமாக பாராட்டுகிறேன்.

தொடர்ந்து எங்களை உங்கள் கதைகளால் மகிழ்வியுங்கள் மூர்த்தி. நாங்கள் எப்போதும் உங்களுடன்தான்.

Narathar
14-12-2008, 02:28 PM
மிக அருமையாக கதையை நகர்த்துகின்றீர்கள் மூர்த்தி,
என்னதான் மூளைச்சலவை செய்யப்பட்டாலும், பெண்மைக்குள் இருக்கும் அந்த தாய்மையை ஒரு மழலையை வைத்து தூண்டியது சிறப்பாக கூரப்பட்டுள்ளது.........

வாழ்த்துக்கள்.

MURALINITHISH
29-12-2008, 09:51 AM
என்னதான் பெண்களும் ஆண்களும் சுய சிந்தனையோடும் பெரிய பதவியில் இருந்தாலும் குழந்தையின் மழலைக்கு அதுவும் தன் குழந்தையின் மழலைக்கும் முன்னால் எல்லாமே அற்பம்தான் வாழ்க்கையில் திருமணம் தன் குழந்தை என்ற அற்புதத்தை உணர வைத்த அந்த மழலைக்குதான் நன்றி சொல்ல வேண்டும்

சிவா.ஜி
29-12-2008, 10:06 AM
பிழைகள் திருத்தப்பட்டவுடன் கதை அருமையாக இருக்கிறது. எந்த கல்மனதையும் கரைத்துவிடும் சக்தி மழலைக்கு உண்டு என்பதை அழுத்தமாய் நிரூபிக்கிறது கதை.

மனதை மகிழ்ச்சியில் ஆழ்த்திய அந்த மழலையின் பிரிவு, என்ன இருந்தாலும் தன் சொந்த செல்வத்தைப் போல வருமா என ரம்யாவை சிந்திக்க வைத்து திருமண முடிவை எடுக்க வைத்திருக்கிறது.

கதையை சொன்ன பாணி அருமை. வாழ்த்துகள் மூர்த்தி(அ)தக்ஸ்.

இளசு
08-01-2009, 05:55 AM
கவனம் ஈர்க்கும் கதாசிரியர் நம் தக்ஸ்..
அதை மீண்டும் நிரூபிக்கும் படைப்பு..

பாராட்டுகள் தக்ஸ்!

நான் முன்னமே வாசித்திருந்தால் இப்படித்தான் பின்னூட்டம் தந்திருப்பேன்!
இன விருத்தி செய்ய வெண்டியது, தூண்டுவது இயற்கை. அதற்காக கல்யாணம் செய்ய வேண்டியது சம்பிரதாயம். அந்தச் சம்பிரதாயம் தமிழர் மரபில் தவிர்க்க இயலாத ஒன்றாகிவிட்டது. எதிர்வாதங்கள் இருந்தாலும் அதனை நான் ஆதரிப்பேன். அந்த இனவிருத்தியின் உணர்வு பூர்வமான வடிவம் குழந்தைப் பாசம். அதை பொருட்படுத்தி வரையப்பட்ட சிறுகதை.

ஒரு வாச(அ)கத்துக்கும் உருகார் சிறு வாச(அ)கத்துக்கு உருகுவார் என்பது கதையின் இருதயத்தின் ஒருபக்கம். எனக்கென ஒன்று இருந்தால் இப்படி எல்லாம் ஆகுமா என்ற மனவியல் இருதயத்தின் மறுபக்கம். அந்த ஓட்டத்தில் உயிருடன் உலவி விட்டு சென்று விட்ட கதை.

பாராட்டுகள் மூர்த்தி.

ஆதவா
08-01-2009, 06:00 AM
கவனம் ஈர்க்கும் கதாசிரியர் நம் தக்ஸ்..
அதை மீண்டும் நிரூபிக்கும் படைப்பு..

பாராட்டுகள் தக்ஸ்!

நான் முன்னமே வாசித்திருந்தால் இப்படித்தான் பின்னூட்டம் தந்திருப்பேன்!

ஆசையா நீங்க என்ன எழுத வர்றீங்கன்னு எட்டிப் பார்த்தா, இப்படி அமரனை சாக்கா வெச்சு ஏமாத்திட்டீங்களேண்ணே!!!

ஆதங்கத்துடன்
ஆதவன்

இளசு
08-01-2009, 06:04 AM
ஆதவா,
நாம் செய்ய எண்ணுவதை நம்மைவிட அழகாக நம்மவரில் ஒருவர் செய்துவிட்டபின் - என்ன செய்வது?

நல்லதைச் சிலாகிப்பதைத் தவிர?

Re -inventing the wheel - என்னும் ஆங்கிலச் சொலவடை ஒன்று!
செயத்தகாத செயல் அது!

இனிய பென்ஸ், பாரதி, நீ, அமரன் - இப்படி சிலரின் பின்னூட்டங்கள் கண்டபின்
நான் ஆனந்த அதிர்திருப்தி அடைவது அடிக்கடி நடப்பது!

என்னவன் விஜய்
08-01-2009, 10:41 AM
ஆதவா,
நாம் செய்ய எண்ணுவதை நம்மைவிட அழகாக நம்மவரில் ஒருவர் செய்துவிட்டபின் - என்ன செய்வது?

நல்லதைச் சிலாகிப்பதைத் தவிர?

Re -inventing the wheel - என்னும் ஆங்கிலச் சொலவடை ஒன்று!
செயத்தகாத செயல் அது!

இனிய பென்ஸ், பாரதி, நீ, அமரன் - இப்படி சிலரின் பின்னூட்டங்கள் கண்டபின்
நான் ஆனந்த அதிர்திருப்தி அடைவது அடிக்கடி நடப்பது!


என்ன அண்ணா,
உங்கள் ஆஸ்தான முகிலனை சுத்தமாக மறந்தநிலையாகிவிட்டது உங்கள் பின்னூட்டம். :)

ரங்கராஜன்
24-03-2009, 01:35 PM
விமர்சனம் அளித்த அனைத்து உறவுகளுக்கும் நன்றிகள் கோடி

அக்னி
24-03-2009, 06:27 PM
ஒரு மழலையோடு பழக நேர்ந்தால்... பழகவே தேவையில்லை, சேர இருந்தாலே போதும்...

ஒவ்வொருவருக்கும் அந்த அனுபவம் கிட்டியிருக்கும்.
எனக்கும் கிட்டியது.

ஐரோப்பா வந்த புதிதில்,
அதுவரை பழகியிராத, கண்டிராத உறவினரோடு ஒரு கிறிஸ்மஸ் விடுமுறையைக் கழிக்க நேர்ந்தது.
இரு மழலைச் செல்வங்கள். மூன்று வயதும் நிரம்பாத சின்னப் பெண்ணும் அவரது குட்டித் தம்பியும்.

முதல்நாள் சேரவே மறுத்தார்கள்.
பின்னர் சேர்ந்தே இருந்தார்கள்.
புறப்படுகையில் பிரியவே மறுத்தார்கள்.

இந்த இரண்டு மறுப்புக்களிலும் இருந்தது அழுகைதான்.
ஆனால் இரண்டுக்குமான வித்தியாசம் பாரியது.

முதலில் அவர்களின் மிரட்சியைச் சொன்ன அழுகை,
பின்னர் எனது வரட்சியைச் சொன்னது.

மழலைப் பாசத்தின் அழுத்தம் அத்தகையது.

*****
இந்தப் பாச அழுத்தத்தை வைத்து, தீவிரவாதியின் மன வக்கிரத்தையே தகர்த்துவிடலாம்.
அதனை வைத்து, ஒரு பெண்ணின் வைராக்கியத்தைத் தகர்த்துவிட்டார் தக்ஸ்...

ரம்யாவின் தாய்மை உணர்வை, நெருடிவிட்டன அச்சுவின் குறும்புகள்...
தொல்லைகள் வெல்லமாகையில், பிரிவென்னும் கசப்பு...
கசப்பு, இனிமைக்கு ஏங்க வைப்பது இயல்பல்லவா...

அழகாகக் கோர்த்துத் தந்த தக்ஸ் அவர்களுக்குப் பாராட்டுக்கள்...

ரங்கராஜன்
24-03-2009, 07:15 PM
என்னுடைய கதை அழகைவிட உங்களின் விமர்சன அழகை படித்து ரசித்தேன், உறவுகளும் அதை ரசிப்பார்கள். நீங்கள் கூறிய அந்த இரண்டு குழந்தைகள் என் கண்முன்னே அழுது, சிரித்து விளையாடுவது போல இருந்தது. உங்களுக்கு ஏற்பட்ட அனுபவம் தான் எனக்கு ஏற்பட்டது, இதில் வரும் ரம்யா பெண் நான் ஆண் அவ்வளவு தான் வித்தியாசம். எனக்கு ஏற்பட்ட அனுபவத்தை தான் சிறுகதையாக மாறுதலுடன் கொடுத்தேன். இதில் ரம்யாவுக்கு பதிலாக ரமேஷ் என்று இருந்து இருந்தால் கதை மனதில் ஒட்டி இருக்காது. பெண்கள் என்றாலே அன்பு இல்லையா, ஆண்களும் தான் இருந்தாலும் நம்முடைய முகத்தில் இருக்கும் மீசை, தாடிக்குள் அன்பு மறைந்து இருக்கிறது ........... ஹா ஹா

நான் எனக்கு ஏற்பட்ட அனுபவத்தை தான் இந்த கதையாக எழுதினேன்னு சொன்னேன் இல்லையா, அதை கதையின் கதை பகுதியில் கொடுத்து இருக்கிறேன். என்னை ஏங்க வைத்த குழந்தையும் நானும் சண்டைப்போடு வீடியோவும் கொடுத்து இருக்கேன்.. முடிந்தால் பாருங்கள்..

http://www.tamilmantram.com/vb/showthread.php?t=19110&page=2

இந்த பக்கத்தில் நடுவில் இருக்கிறது அந்த வீடியோ

மதுரை மைந்தன்
25-03-2009, 10:44 AM
உங்களின் வெற்றி படைப்புக்களில் மற்று மோர் அச்சு. வாழ்த்துக்கள்.