PDA

View Full Version : எப்படி ஒழியும் தீவிரவாதம்சிறுபிள்ளை
04-12-2008, 08:28 AM
இதை நான் இன்றைய தினமலர் நாளிதழ் இணையத்தில் படிக்கும்போது ஒரு வாசகர் இந்த மாதிரி கருத்து பதித்திருந்தார். அதை இங்கே உங்களுக்கு தருகிறேன்.

சிரிப்பாக இருந்தாலும் சிந்திக்க கூடிய ஒரு விசயத்தை இதன் மூலம் சொல்லி இருக்கிறார். பாருங்கள்.

இந்த பதிவு யாரையோ கிண்டல் செய்ய வேண்டும், நக்கல் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் நையாண்டி நோக்கில் எழுதப்படவில்லை. நடப்பதை கண்டு வலியிலும், கோபத்திலும் எழுதியது.

தீவிரவாதி 1: நாம பனிரெண்டு பேர அனுப்பி, இருநூறு மக்களை கொன்னுருக்கோம். ஆனா இந்திய அரசு, தீவிரவாதிகளுடனான போரில் வெற்றி, சதி முறியடிப்பு பேசிக்கிறாங்களே?

தீவிரவாதி 2: அதான் எனக்கும் புரியல. டிபன் பாக்ஸ்ல குண்டு வச்சோம். ஒரு மாசத்துல மறந்திட்டாங்க. சைக்கிள்ள குண்டு வச்சோம். ரெண்டு மாசத்துல மறந்திட்டாங்க. என்ன பண்ணினாலும் அதிகபட்சம் மூணு மாசத்துல மறந்திடுறாங்க.

தீவிரவாதி 1: அதனால தான் இந்த தடவை, ஏழை, நடுத்தர மக்களை விட்டுட்டு, இந்திய அரசு அக்கறை எடுத்துக்கிற மேல்தட்டு மக்களை தாக்குனோம்.

தீவிரவாதி 2: அதுக்கும் எந்த விதமான பிரயோஜனம் இருக்குற மாதிரி இல்ல. நாம நடத்தின தாக்குதல வச்சி அரசியல்வாதிங்க இப்பவே அவனுங்களுக்காக ஒட்டு பொறுக்க ஆரம்பிச்சிட்டாங்க.

தீவிரவாதி 1: எனக்கென்னமோ, ஒரு நல்ல விஷயம் நடக்குற மாதிரி இருக்குது.

தீவிரவாதி 2: என்ன?
கே
தீவிரவாதி 1: ஏதோ, தகவல் பரிமாறிக்கணும்'ன்னு நம்ம பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ. தலைவர கூப்பிட்டு இருக்காங்க. போயிட்டு வந்ததும், அவர்கிட்ட என்ன ஏதுன்னு ட்டுட்டு அடுத்த முறை அதுக்கு ஏத்த மாதிரி பிளான் பண்ணனும். மாட்டிக்க கூடாது.

தீவிரவாதி 2: மாட்டினாலும் பிரச்சனை இல்லை. ஏன்னு சொல்லு?

தீவிரவாதி 1 (யோசித்துவிட்டு): கருணை மனு போட்டுட்டு வெளிய வந்திடலாம். அதானே? சரியா?

தீவிரவாதி 2: ஆமாம். ஆமாம். அதே மாதிரி, அடுத்த முறை இந்தியாவுல கொஞ்சம் ஆளுங்கள நமக்காக ஏற்பாடு பண்ணினா போதும்.

தீவிரவாதி 1: ஏன்?

தீவிரவாதி 2: நமக்காக வேல பார்க்க, நிறைய டிவி சானல்கள் இருக்காங்க. நம்மளோட சாட்டிலைட் போன் மூலமா, பேச மட்டும்தான் முடியுது. ஆனா, அவுங்க நமக்காக லைவ் டெலிகாஸ்ட்'யே பண்றாங்க. அது மட்டும் இல்லாம, கமாண்டர்ஸ் கிட்ட பேசி என்ன பிளான்னு கேட்டும் சொல்றாங்க. ரொம்ப யூஸ்புல்லா இருக்கு.

தீவிரவாதி 1: கரெக்ட். அடுத்து எங்க டார்கெட் பண்ணலாம்? சவுத் இந்தியாவுல பண்ணிரலாமா? சென்னை எப்படி?

தீவிரவாதி 2: அங்க வேண்டாம்.

தீவிரவாதி 1: ஏன்?

தீவிரவாதி 2: நாம கஷ்டப்பட்டு குண்டு வைப்போம். ஆனா அங்க இருக்குற அரசியல்வாதிகள் குண்டு வச்சது யாருன்னு அவுங்களுக்குள்ள அடிச்சிக்குவாங்க. ஆளுங்கட்சி, எதிர்கட்சியை சொல்லுவாங்க. எதிர்க்கட்சி, ஆளுங்கட்சியை சொல்லுவாங்க. கடைசில நம்மள மறந்திடுவாங்க.

தீவிரவாதி 1: ஒ!

தீவிரவாதி 2: அதுமட்டும் இல்ல. டிவிக்காரங்களும், இந்த அளவுக்கு உதவுவாங்கன்னு சொல்ல முடியாது. அவுங்கவுங்க கட்சிகாரங்களையும், சினிமாகாரங்களையும் பேட்டி கண்டுட்டு இருப்பாங்க.

தீவிரவாதி 1: இப்பதான் ஒரு தாக்குதல் பண்ணிருக்கோம். அதுக்குள்ளே இன்னொன்னு பண்ண முடியுமா? முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பல எடுத்திருப்பாங்களே?

தீவிரவாதி 2: கடல் வழியா வந்தோம்னு எல்லா துறைமுகத்திலையும் பாதுகாப்பு அதிகரிச்சிருக்காங்களாம். ஹோட்டல்'ல தாக்குதல் பண்ணிருக்கோம்னு எல்லா ஹோட்டல்'லையும் பாதுகாப்ப அதிகரிக்க சொல்லி இருக்காங்களாம். இவனுங்க எப்பவும் இப்படித்தான். கோவில அடிச்சா கோவிலுக்கு பாதுகாப்பு. மார்க்கெட்ட அடிச்சா மார்க்கெட்டுக்கு பாதுகாப்பு. தியேட்டர அடிச்சா தியேட்டர்களுக்கு பாதுகாப்பு. நாம என்ன அடிச்ச எடத்தையா இருப்பி அடிப்போம்?


தீவிரவாதி 1: அதானே? ஆனாலும் எனக்கு வர வர வன்முறை மேல நம்பிக்கையே போயிடுச்சி.

தீவிரவாதி 2: ஏன்?

தீவிரவாதி 1: எவ்ளோ அடிச்சாலும் தாங்குறாங்க.இந்தியா ரொம்ம்ம்பபபப நல்ல நாடுப்பா...

அவனுங்களே வெறுத்து சோர்ந்து தீவிரவாதத்தை விட்டாதான் உண்டு.

lolluvathiyar
04-12-2008, 08:58 AM
கன்டிப்பா வெறுத்து போய் விட்டுருவாங்க தீவிரவாதத்தை. ஏன்னா அவனுக வந்து இங்க கெடுதல் பன்ன வேன்டிய அவசியமில்லாம நம்ம அரசியல்வாதிக மக்களுக்கு எல்லாம் தீங்கும் செஞ்சிருவாங்க.

ஆதி
04-12-2008, 10:37 AM
//ஹோட்டல்'ல தாக்குதல் பண்ணிருக்கோம்னு எல்லா ஹோட்டல்'லையும் பாதுகாப்ப அதிகரிக்க சொல்லி இருக்காங்களாம். இவனுங்க எப்பவும் இப்படித்தான். கோவில அடிச்சா கோவிலுக்கு பாதுகாப்பு. மார்க்கெட்ட அடிச்சா மார்க்கெட்டுக்கு பாதுகாப்பு. தியேட்டர அடிச்சா தியேட்டர்களுக்கு பாதுகாப்பு. நாம என்ன அடிச்ச எடத்தையா இருப்பி அடிப்போம்?//

அடிக்கடி இதைப் பற்றி யோசிப்பதுண்டு.. அது சரியும் கூடத்தான்.. ரயிலில் தாக்குதல் நடந்தால் சிரிது நாளைக்கு மக்கள் ரயிலில் போக பயப்படுவார்கள்.. கோவிலில் நடந்தால் அந்த கோவிலுக்கு போக யோசிப்பார்கள்.. இதுதான் மக்களின் மனநிலை.. அதனால்தான் அந்த இடங்களுக்கு அதிகப் பாதுகாப்பு செய்யப் படுகிறது..
எப்படிப்பட்ட பாதுகாப்பு எத்தனை வீரர்கள் ஈடுபடுத்தப் பட்டிருக்கிறார்கள் என்று ஊடகங்களின் வெளியிடுவது என்னை பொருத்த மட்டில் சரியில்லை என்றே சொல்வேன்..

மதி
04-12-2008, 10:59 AM
எனக்கும் மின்னஞ்சலில் வந்தது. சிந்திக்கக்கூடிய பல விஷயங்கள் இருக்குது. அவங்களா நினைச்சு தீவிரவாதத்தை விட்டா தான் உண்டுங்கற நிலைமை இப்போ..ஹ்ம்ம்.

இந்தத் திரியை படித்ததில் பிடித்தது பகுதிக்கு மாற்றுகிறேன்.

ஷீ-நிசி
04-12-2008, 02:03 PM
கன்டிப்பா வெறுத்து போய் விட்டுருவாங்க தீவிரவாதத்தை. ஏன்னா அவனுக வந்து இங்க கெடுதல் பன்ன வேன்டிய அவசியமில்லாம நம்ம அரசியல்வாதிக மக்களுக்கு எல்லாம் தீங்கும் செஞ்சிருவாங்க.

இதை நினைச்சி சிரிக்கறதா? இல்ல அழுவறதா....

NGO - டெல்லியில் இருக்கும் இந்த படை முழுக்க முழுக்க அரசியல்வாதிகளின் பாதுகாப்பிற்கு மட்டுமே பயன்பட்டு வந்ததாம், மும்பை தாக்குதலுக்கு முன்புவரை....

அருள்
05-12-2008, 03:58 AM
நகைசுவையாக சொன்னாலும் இது தான் உண்மை.

Narathar
05-12-2008, 04:26 AM
சரியாத்தான் எழுதியிருக்காங்க.........

balaa
06-12-2008, 05:31 PM
இப்படி எலுதற அலவுக்கு நாடு கேவலமா போச்சு.

ஓவியா
06-12-2008, 05:45 PM
சிந்திக்க வைக்கும் திரி. பகிர்வுக்கு மிக்க நன்றி. :icon_b:

ஆனாலும் என் பூர்வீக நாட்டை இப்படி எழுதுவது, எனக்கு கண்ணீரை வரவைக்கிறது. உண்மையாவே 'சோரி ஃபோர் இந்தியா'கன்டிப்பா வெறுத்து போய் விட்டுருவாங்க தீவிரவாதத்தை. ஏன்னா அவனுக வந்து இங்க கெடுதல் பன்ன வேன்டிய அவசியமில்லாம நம்ம அரசியல்வாதிக மக்களுக்கு எல்லாம் தீங்கும் செஞ்சிருவாங்க.

இந்த திரியிலே எனக்கு படித்ததிலே பிடித்தது இதுதான். செம்ம உண்மை.

சபாஷ் வாத்தியாரெ. :icon_b:

Keelai Naadaan
06-12-2008, 06:19 PM
எனக்கும் மின்னஞ்சல் வந்தது.
வெள்ளையர் ஆட்சியைப் பற்றி சொல்லும் போது சொல்வார்கள் ம்ம்..என்றால் வனவாசம்.., ஏனென்றால்.. சிறைவாசம் என்று...
இப்போது, மக்கள் ம்…என்றால் ஊர்வலம் ஏன் என்றால் ஆர்ப்பாட்டம், மறியல் என ஆரம்பித்துவிட்டார்கள்.
அரசியல்வாதிகள் ஓட்டுக்காக ஒடுங்கி நிற்கிறார்கள்
தீவிரவாதத்தை எதிர்க்க அமெரிக்கா எடுத்துள்ள நடவடிக்கைகளை பார்த்து இந்திய பாதுகாப்பு ஆலோசகர்,
அந்த மாதிரி கடுமையான நடவடிக்கைகள் நம் நாட்டுக்கு சரிப்பட்டு வராது என்கிறார்

தற்போது கடுமையான நடவடிக்கை அவசியம் தேவை என அரசியல்வாதிகள் உணராவிட்டால்..
அவர்கள் தீவிரவாதிகளை விட மோசமான அரசியல்வியாதிகள்

ஷண்முகம்
07-12-2008, 09:48 AM
சரியாகச்சொன்னீர்கள்

arun
07-12-2008, 09:15 PM
உண்மை சுடுகிறது இந்தியனாய் இருப்பதில் மனம் ஏனோ இப்படி எல்லாம் இல்லை என்று மறுக்கிறது .... :frown: