PDA

View Full Version : தாயுள்ளம்!!!



சிறுபிள்ளை
04-12-2008, 05:19 AM
நான் படித்த நாள் முதல் இன்று வரை ஏன் என்றுமே நான் ரசிக்கும் கவிதையாய் இந்த கவிதை இருக்கும்... உங்களுக்கு எப்படியோ அதையும் சொல்லலாமே?!

ஆனந்த விகடனில் வந்த கவிதை..!



மழையில் நனைந்துகொண்டே
வீட்டுக்கு வந்தேன்
'குடை எடுத்துட்டுப்
போக வேண்டியதுதானே'
என்றான் அண்ணன்
'எங்கேயாச்சும்
ஒதுங்கி நிக்க வேண்டியதுதானே'
என்றாள் அக்கா
'சளி பிடிச்சுக்கிட்டு
செலவு வைக்கப்போற பாரு'
என்றார் அப்பா
தன் முந்தானையால்
என் தலையை
துவட்டிக்கொண்டே
திட்டினாள் அம்மா
என்னையல்ல;
மழையை!

ஆக்கம்: பன்னாரி அம்மன் பொறியியல் கல்லூரி மலரில் வந்தது(ஆனந்தவிகடனிலும்
பிரசுரம்)

vinodh
04-12-2008, 09:09 AM
arumai nanbare:icon_b::icon_b:

அமரன்
04-12-2008, 09:10 AM
இப்படிச் சில கவிதைகள்
மனதில்
நிரந்தர இடம் பிடித்திடும்
அம்மாவைப் போல.

பகிர்வுக்கு நன்றி சிறுபிள்ளை!

அமரன்
04-12-2008, 09:12 AM
arumai nanbare:icon_b::icon_b:

வாங்க வினோத்!
இங்கே சென்று உங்களைப் பற்றிச் சொல்லி எல்லாருடனு, கை குலுக்கிக் கொள்ளுங்களேன்
http://www.tamilmantram.com/vb/forumdisplay.php?f=38 (http://www.tamilmantram.com/vb/forumdisplay.php?f=38)
தமிழில் எழுதப் பழக இங்கே உள்ள அறைகள் உங்களுக்கு உதவும்..
http://www.tamilmantram.com/vb/forumdisplay.php?f=2 (http://www.tamilmantram.com/vb/forumdisplay.php?f=2)

வசீகரன்
04-12-2008, 09:24 AM
படுத்துக்கொண்டே சொர்க்கத்தை
காணலாம்...
தலையணையில் அல்ல...
தாயின் மடியில்...

ஒரு குறுந்தகவல் தத்துவம்...!!!

தாயின் அன்பை சொன்ன கவி நன்று பிள்ளை..!

சிறுபிள்ளை
04-12-2008, 10:09 AM
மிக்க நன்றி அன்பர்களே... ஆனால் இது என்னுடைய படைப்பல்ல.. எங்கோ படித்ததை இங்கு பகிர்ந்துகொண்டேன். வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுக்கள் அனைத்தும் அவரை சென்றடையட்டும்.