PDA

View Full Version : கவிதையின் சுவை நரம்புகளுக்கு...



mathuran
03-12-2008, 03:06 AM
கவிதையின் சுவையினை சுவைத்திட காத்திருக்கும் சுவை நெஞ்சங்களுக்கு வந்தனங்கள். நான் ஒன்றும் பெரிய கவிஞனல்ல. நல்ல ரசிகன் என்று சொல்லலாம். நல்ல பல விடயங்களை ரசிப்பதில் ஆர்வமிருக்கிறது. ரசித்த அந்த விடயங்களை வார்த்தைகளைக் கோர்த்து பகிர்ந்துகொள்வதில் பிரியமிருக்கிறது. இந்தக் கிறுக்கல்களை கவிதைபோல் இருக்கிறது என என் நண்பர்கள் குறிப்பிடுவார்கள். இதுதான் என்னை கவிதை எழுத வைத்தது எனலாம். குறிப்பாக என் அன்புக்குரியவளைச் சொல்வேன். என்னை கவிதையெழுத வைத்தவள் அந்த மதிபோல் மென்மையானவள்தான். சாதாரண கிறுக்கல்களை கவிதைநயத்தோடு படித்துப் பாராட்டி ஊக்கப்படுத்தியவள். என்னுடைய கவிகளுக்கு அவள்தான் சொந்தக்காரி... என்னுடைய சில படைப்புகளை http://apmathan.blogspot.com என்னும் தளத்தில் பதிந்து வைத்திருக்கின்றேன். படித்துப்பாருங்கள், விமர்சனங்களை அன்போடு குட்டிச் சொல்லித்தாருங்கள்...

ஆதவா
03-12-2008, 03:17 AM
மதுரன்.... அந்தக் கவிதைகளையெல்லாம் இங்கே தாருங்கள். பின்னூட்டங்கள் கிடைக்கும்...

இப்பகுதி, இங்கு எழுதப்படும் உங்கள் கவிதைகளின் தொகுப்பாக உபயோகப்படுத்த வேண்டும்.. நீங்கள் உங்கள் தளத்தில் எழுதியதை அல்ல...

இங்கே நிறைய எழுதுங்கள்.. பிறகு நீங்கள் உங்கள் தளத்தையே கூட மறந்துவிடுவீர்கள்....

அன்புடன்
ஆதவன்

அமரன்
03-12-2008, 08:41 AM
கவிஞர் மதுரனுக்கு வந்தனங்கள்!
காதல் பல்களைக் கழகத்தின்
கவிதைப் பீடமாணவர்கள்
கவிதை உலகில் கோலோச்சக் கண்ண்டேன்.
அந்த வரிசையில் நீங்களும் வர வாழ்த்துகள்.

உங்கள் கவிதைகளைத் தாருங்கள்.
உங்களுக்கு கவிதைகளை தருவார்கள்.

வசீகரன்
04-12-2008, 04:22 AM
உங்களது காதல் கவிகளும் இணைத்திருக்கும் படங்களும் இதயம் தழுவி காதல் நினைவுகளை நிந்திக்கிறது... அன்பின் மதுரன் அவர்களே...!
உங்கள் கவிதைகளை மன்றத்திலும் எழுதுங்களேன்...!

தமிழ்தாசன்
14-12-2008, 08:58 PM
கவிதைகள் கண்டால் எனக்குப் பிடிக்கும்.
வாசித்தால் மனம் பறக்கும்.
அங்கங்கே உங்கள் படைப்புக்கள் நினைவுகளை மீட்டுகின்றன.
தாருங்கள் இன்னும் மதுரன்.

நிரன்
16-12-2008, 02:55 PM
கவிதைகள் கண்டால் எனக்குப் பிடிக்கும்.
வாசித்தால் மனம் பறக்கும்.
.


கவி எழுத என் மனம் தடுக்கும்
கவி படிக்க என் மனம் துடிக்கும் :D:D:D:D

ஆதவா மற்றும் அமரன் அண்ணா கூறியது போல உங்கள் கவியை
மன்றத்தில் இடுங்கள் கருத்துக்களும் கிடைக்கும் கூடவே கவியும்
கிடைக்கும்.

தமிழ்தாசன்
22-12-2008, 04:31 PM
கவி எழுத என் மனம் தடுக்கும்
கவி படிக்க என் மனம் துடிக்கும் :D:D:D:D
.

தடுக்கும் மனதின் தடை உடையுங்கள் - தமிழ் கை
கொடுக்கும் என கவி படைக்க விளையுங்கள்.

ஆன்டனி ஜானி
28-10-2010, 03:52 PM
கவிதை என்பது காற்று, நீர் ,வானம்,பெண்,இவைகளை வைத்து எலுதினால் மட்டும் கவிதை அல்ல நம்முடய வாள்கையே ஒரு நடிகன் போன்ற வாள்கைதான் அதை வைத்தும் நாம் சொந்தமாகவே எலுதளாம்,,,,,,,கவிதைகள் எல்லாரும் நெனைதவுடன் வராது அதற்க்கு நாம் கவிபேரரசு ஆகமுடியாது