PDA

View Full Version : 26/11/2008 (விடுபட்ட வரிகள்)

ஷீ-நிசி
02-12-2008, 01:25 PM
http://i128.photobucket.com/albums/p163/shenisi/26Nov.jpg

வசீகரன்
02-12-2008, 01:33 PM
இத்தனை உயிர்களையும்
பறித்துவிட்டு,
நீங்கள் வீழ்ந்தது.....
எங்கள் இந்தியத்தாயின் மடியில்தான்!!!

ஆம் எமது பாரததாய்க்கு தெரிவதில்லை இவன் வேற்றோன்
என்று... அவனையும் தாயுள்ளத்தோடு
தாங்கி பிடிக்கிறாள்...
நல்லதொரு நறுக் கவி ஷீ நிஷி அவர்களே...:aktion033:

ஷீ-நிசி
03-12-2008, 02:37 PM
நன்றி வசீகரன்

ஆதி
03-12-2008, 02:49 PM
கடல் கடந்து நீங்கள் வந்தது
உடல் கடந்து உங்கள் உயிரேகத்தானோ ?

நச் கவிதை நிசி வாழ்த்துக்கள்..

பாரதி
03-12-2008, 03:09 PM
நல்ல கவிதை ஷீ.

அமரன்
03-12-2008, 07:58 PM
உங்கள் வீழ்விலும்
எங்கள் அன்னை மடி
நிச்சயமாய் கனத்திருக்கும்.

அருமைக் கவிதை ஷீ. அடிக்கடி காணக் கிடைக்குதில்லையே.

அக்னி
03-12-2008, 08:36 PM
உங்களால்,
உயிர்களைப் பறிக்கத்தான்
முடியும்...
உணர்வையும், ஒற்றுமையையும்
தொடவும் முடியாது...

நான்கு வரிகளில் நிறைவான உணர்வு...
பாராட்டுக்கள் ஷீ-நிசி அவர்களே...

அறிஞர்
03-12-2008, 09:29 PM
விலைமதிக்க முடியாத உயிர்கள்
சில நிமிடங்களில் பறிக்கப்பட்டது...
கோர சம்பவம்..
-----
அருமை ஷீ-நிசி.

சிவா.ஜி
04-12-2008, 03:17 AM
சில வரிகளில் நச்சென்று சொல்லியிருக்கிறீர்கள் ஷீ. கார்கில் யுத்தத்திலும், இறந்த எதிரிநாட்டு வீரர்களின் உடலை அந்த நாடு ஒதுக்கியபோது அவற்றை மரியாதையுடன் இங்கே அடக்கம் செய்தவர்கள் நமது வீரர்கள்.

வீரம் என்றுமே வீழ்வதில்லை. வாழ்த்துகள் ஷீ-நிசி.

ஆதவா
04-12-2008, 03:33 AM
நீண்ட நாட்கள் கழித்து நச் கவிதையோடு வந்த ஷீ-நிசிக்குப் பாராட்டுக்கள். :)

எனக்கு இதைச் சொல்லும்பொழுது இன்னும் சில வரிகளைச் சேர்த்து சொன்னீர்களே, அவையெல்லாம் போடவில்லையா? எனினும் இந்த வரிகள் பிரமாதமானவை.

எந்த ஒரு தீவிரவாதத்திற்கும் எதிராக வாதிடும் படியாகவும், இந்தியா ஒரு அமைதி விரும்பி நாடு என்பதைப் பறைசாற்றும்படியாகவும் அமைந்திருக்கிறது வார்த்தைகள். மெல்லிய முரணாகத் தெரிந்தாலும், இந்தியத்தாயின் மடி, எதையும் ஏற்கும்படியாகத்தான் இருக்கும்... ஒரு பக்கம் கண்ணீருடன் சடலங்கள், மறுபக்கம் கொல்கத்தா காளியைப் போன்று தீவிரவாத பலிகள் என மடியை நிரப்பிக் கொண்டிருக்கிறது.

என்னைக் கேட்டால்... இன்னும் நான்கு வரிகளேனும் இணைத்து குறுங்கவிதையாக அல்லாமல் எழுதியிருக்கலாம் என்பது என் கருத்து.

வாழ்த்துக்கள் ஷீ!!

ஷீ-நிசி
04-12-2008, 11:28 AM
கடல் கடந்து நீங்கள் வந்தது
உடல் கடந்து உங்கள் உயிரேகத்தானோ ?

நச் கவிதை நிசி வாழ்த்துக்கள்..

நன்றி ஆதி!

ஷீ-நிசி
04-12-2008, 11:29 AM
நல்ல கவிதை ஷீ.

நன்றி பாரதி அவர்களே!
(என்ன ஊர்பக்கம் வந்தா ஒன்னும் சொல்லிக்கறது இல்லையா?! :rolleyes:)

ஷீ-நிசி
04-12-2008, 11:32 AM
உங்கள் வீழ்விலும்
எங்கள் அன்னை மடி
நிச்சயமாய் கனத்திருக்கும்.

அருமைக் கவிதை ஷீ. அடிக்கடி காணக் கிடைக்குதில்லையே.

நன்றி அமரா!

இணைய இணைப்பில் பெரும் சோதனை! கடந்த மாதங்களாக..... விரைவில் முன்புபோல் வருவேன்!

ஷீ-நிசி
04-12-2008, 11:39 AM
உங்களால்,
உயிர்களைப் பறிக்கத்தான்
முடியும்...
உணர்வையும், ஒற்றுமையையும்
தொடவும் முடியாது...

நான்கு வரிகளில் நிறைவான உணர்வு...
பாராட்டுக்கள் ஷீ-நிசி அவர்களே...

நன்றி அக்னி!

ஷீ-நிசி
04-12-2008, 11:43 AM
விலைமதிக்க முடியாத உயிர்கள்
சில நிமிடங்களில் பறிக்கப்பட்டது...
கோர சம்பவம்..
-----
அருமை ஷீ-நிசி.

விலைமதிப்பில்லாத உயிர்களை அனுப்பி
விலைமதிப்புள்ள உயிர்களை கொன்றனர்!

நன்றி அறிஞரே!

ஷீ-நிசி
04-12-2008, 11:49 AM
சில வரிகளில் நச்சென்று சொல்லியிருக்கிறீர்கள் ஷீ. கார்கில் யுத்தத்திலும், இறந்த எதிரிநாட்டு வீரர்களின் உடலை அந்த நாடு ஒதுக்கியபோது அவற்றை மரியாதையுடன் இங்கே அடக்கம் செய்தவர்கள் நமது வீரர்கள்.

வீரம் என்றுமே வீழ்வதில்லை. வாழ்த்துகள் ஷீ-நிசி.

நன்றிகள் சிவா.ஜி!

அக்னி
04-12-2008, 11:50 AM
விலைமதிப்பில்லாத உயிர்களை அனுப்பி
விலைமதிப்புள்ள உயிர்களை கொன்றனர்!

:icon_b::icon_b::icon_b:

பல அர்த்தங்கள் சொல்லுது உங்கள் வரிகள்...

ரங்கராஜன்
04-12-2008, 11:59 AM
கொஞ்சம் வன்மையாக பாராட்டுகிறேன் தப்பாக எடுத்துக்கொள்ளாதீர்கள், உங்கள் வரிகள் செருப்பால் அடித்த மாதிரி இருக்கு

ஷீ-நிசி
04-12-2008, 12:16 PM
நீண்ட நாட்கள் கழித்து நச் கவிதையோடு வந்த ஷீ-நிசிக்குப் பாராட்டுக்கள். :)

எனக்கு இதைச் சொல்லும்பொழுது இன்னும் சில வரிகளைச் சேர்த்து சொன்னீர்களே, அவையெல்லாம் போடவில்லையா? எனினும் இந்த வரிகள் பிரமாதமானவை.

எந்த ஒரு தீவிரவாதத்திற்கும் எதிராக வாதிடும் படியாகவும், இந்தியா ஒரு அமைதி விரும்பி நாடு என்பதைப் பறைசாற்றும்படியாகவும் அமைந்திருக்கிறது வார்த்தைகள். மெல்லிய முரணாகத் தெரிந்தாலும், இந்தியத்தாயின் மடி, எதையும் ஏற்கும்படியாகத்தான் இருக்கும்... ஒரு பக்கம் கண்ணீருடன் சடலங்கள், மறுபக்கம் கொல்கத்தா காளியைப் போன்று தீவிரவாத பலிகள் என மடியை நிரப்பிக் கொண்டிருக்கிறது.

என்னைக் கேட்டால்... இன்னும் நான்கு வரிகளேனும் இணைத்து குறுங்கவிதையாக அல்லாமல் எழுதியிருக்கலாம் என்பது என் கருத்து.

வாழ்த்துக்கள் ஷீ!!

உண்மைதான் ஆதவா...

இன்னும் கூட சிலவரிகளை இணைத்திருக்க விரும்பினேன்... ஆனால் இந்த வரிகளே மொத்த கவிதையையும் சொல்லும் என்பதால் போதும் என்று எண்ணினேன்...

ஆகிலும்,
விடுபட்ட வரிகளை இணைக்கிறேன் ஆதவா!

நன்றி!

ஷீ-நிசி
04-12-2008, 12:20 PM
26/11 - தொடர்ச்சி!

இத்தனை உயிர்களையும் பறித்துவிட்டு,
இறுதியில் நீங்கள் வீழ்ந்தது....
எங்கள் இந்தியத்தாயின் மடியில்தான்!

எங்கள் தேசத்திற்கு
புத்தநெறியை மட்டுமல்ல,
தேவைப்பட்டால் உங்களுக்கு
யுத்தநெறியை போதிக்கவும் தெரியும்!

எங்கள் வீரனின்
தோள்களிலிருக்கும் துப்பாக்கி,
ஒரு தேசத்தை
காத்திட துடிக்கிறது!

கோழையுன்
தோள்கலிருக்கும் துப்பாக்கியோ,
ஒரு தேசத்தையே
அழித்திட துடிக்கிறது!

தன்னை மாய்த்துகொள்பவன்
தைரியமான கோழை! -தன்
இனத்தை காக்க மாய்பவன்
தைரியமான வீரன்...

நீ,
தைரியமான கோழையுமல்ல... -ஒரு
தைரியமான வீரனுமல்ல..

அப்பாவிகளை கொன்றவனே,
உன் கைகளில் துப்பாக்கிகள் எதற்கு?!
ஐந்தாறு வளையல்களும்,
ஐந்துமுழ பூவும் போதுமுனக்கு!!

அமரன்
04-12-2008, 12:24 PM
ஷீ..
வரிகள் பற்றவைத்த நெருப்பு பின்பு.

தலைப்பில் ஆண்டையும் சேர்த்தால்
கவிதை காலக்கண்ணாடியாகவும் மின்னுமோ.

ஷீ-நிசி
04-12-2008, 12:37 PM
கொஞ்சம் வன்மையாக பாராட்டுகிறேன் தப்பாக எடுத்துக்கொள்ளாதீர்கள், உங்கள் வரிகள் செருப்பால் அடித்த மாதிரி இருக்கு

நன்றி மூர்த்தி!

செருப்பால் அடித்த மாதிரி இருக்கு
இதைவிட வன்மையாக கூட சொல்லலாம்...அதற்கு அவர்கள் தகுதியானவர்களே!

ஆதவா
04-12-2008, 12:40 PM
யுத்தமும் புத்தமும் ஒருங்கே போதிக்கத் தெரிந்த நம்நாடு, அதை அவ்வப்போது போதித்துவிட்டு மட்டும் மறந்துவிடுவதுதான் வேதனையே!!!

அவனுக்கும் நமக்கும் உள்ள வித்தியாசம் பலவுண்டு. அதைப் பட்டியலிட்டதில் இக்கவிதைக்கு பலமுண்டு.

தற்கொலை செய்பவன் தைரியமான கோழை என்று அழகாக சொல்லிவிட்டீர்கள்.

அப்பாவிகள் அழிபடுவது அவர்கள் நோக்கமல்ல. அதன்காரணமாக ஒரு அச்சத்தை விளைவிக்க வைப்பதே அவர்கள் நோக்கம்... மும்பையில் இறந்த தீவிரவாதிகளின் நோக்கம் கிட்டத்தட்ட நிறைவேறிவிட்டது. ஆனால் ஒட்டுமொத்த இந்தியாவும் தலைகுனிவிலிருந்து மீளமுடியவில்லை... (இதில் உள்நாட்டு பிரச்சனைவேறு.. கேரள முதல்வரின் வார்த்தைகளும் மன்னிப்புகளும் அலங்கோலம். )

முதல் வரிகளே ஒட்டுமொத்த கவிதையையும் தூக்கி நிற்கிறது...

வாழ்த்துக்கள் ஷீ!

ஷீ-நிசி
04-12-2008, 12:46 PM
ஷீ..
வரிகள் பற்றவைத்த நெருப்பு பின்பு.

தலைப்பில் ஆண்டையும் சேர்த்தால்
கவிதை காலக்கண்ணாடியாகவும் மின்னுமோ.

நன்றி அமரா!

மனமுண்டு! மாற்றிவிடலாம்...

ஷீ-நிசி
04-12-2008, 12:49 PM
யுத்தமும் புத்தமும் ஒருங்கே போதிக்கத் தெரிந்த நம்நாடு, அதை அவ்வப்போது போதித்துவிட்டு மட்டும் மறந்துவிடுவதுதான் வேதனையே!!!

அவனுக்கும் நமக்கும் உள்ள வித்தியாசம் பலவுண்டு. அதைப் பட்டியலிட்டதில் இக்கவிதைக்கு பலமுண்டு.

தற்கொலை செய்பவன் தைரியமான கோழை என்று அழகாக சொல்லிவிட்டீர்கள்.

அப்பாவிகள் அழிபடுவது அவர்கள் நோக்கமல்ல. அதன்காரணமாக ஒரு அச்சத்தை விளைவிக்க வைப்பதே அவர்கள் நோக்கம்... மும்பையில் இறந்த தீவிரவாதிகளின் நோக்கம் கிட்டத்தட்ட நிறைவேறிவிட்டது. ஆனால் ஒட்டுமொத்த இந்தியாவும் தலைகுனிவிலிருந்து மீளமுடியவில்லை... (இதில் உள்நாட்டு பிரச்சனைவேறு.. கேரள முதல்வரின் வார்த்தைகளும் மன்னிப்புகளும் அலங்கோலம். )

முதல் வரிகளே ஒட்டுமொத்த கவிதையையும் தூக்கி நிற்கிறது...

வாழ்த்துக்கள் ஷீ!

100% நிஜமே!

நன்றி ஆதவா!