PDA

View Full Version : சமாதானம் ஆனது சன் குடும்பமும் கலைஞர் குடும்பமும்ஆதி
02-12-2008, 08:05 AM
சென்னை: முதல்வர் கருணாநிதியை சன் டிவி நிர்வாக இயக்குநர் கலாநிதி மாறன் மற்றும் முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் ஆகியோர் நேற்று சந்தித்தனர். இந்த சந்திப்பின்போது மு.க.அழகிரி மற்றும் உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட முதல்வரின் குடும்பத்தினர் உடன் இருந்தனர்.

முதல்வரின் மகன் மு.க.அழகிரி மற்றும் உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் இந்த சந்திப்புக்கு ஏற்பாடு செய்திருந்தனர். முதல்வரின் கோபாலபுரம் இல்லத்தில் இந்த உணர்ச்சிமிகு சந்திப்பு நிகழ்ந்தது.

பின்னர் அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த முதல்வரிடம், இதுகுறித்து செய்தியாளர்கள் கேட்டபோது, மு.க.அழகிரி மற்றும் மு.க.ஸ்டாலின் ஆகியோரது முயற்சியால் இந்த சந்திப்பு நிகழ்ந்தது.

சந்திப்பின்போது கண்கள் பணித்தது, இதயம் இனித்தது என்றார்.

தொடர்ந்து அவர் பேசுகையில், இலங்கைத் தமிழர் பிரச்சினை தொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங்கை சந்திக்கச் செல்லும் அனைத்துக் கட்சி குழுவில் தயாநிதி மாறனும் இடம் பெறுவார் என்றார்.

சன் டிவியும், கலைஞர் டிவியும் இணையுமா என்ற கேள்விக்கு, கருத்து தெரிவிக்க விரும்பவில்லை என்று முதல்வர் பதிலளித்தார்.


நன்றி: தட்ஸ்தமிழ்.காம்

ரங்கராஜன்
02-12-2008, 08:08 AM
ஒரு குடும்ப பிரச்சனையை எப்படி எல்லாரும் கவனிக்கும் வண்ணம் ஆகிறது பாருங்களேன், கோடிகளால் வரும் தொல்லைகளில் இதுவும் ஒன்று.

ராஜா
02-12-2008, 09:02 AM
இது எதிர்பார்த்த ஒன்றுதான்..

இருதரப்பினருக்கும் இணைந்தே ஆகவேண்டிய நெருக்குதலும் கட்டாயமும் இருந்தது.

எதிர்வரும் பாராளுமன்ற தேர்தல் சமயத்தில் சன் குழுமத்தின் ஆதரவு திமுகவுக்கு தேவை.

இனி ஆ.ராசா முதலியோர் மீதான சன்னின் தாக்குதல் குறையும்..

சன் குழுமத்துக்கோ, எதிர் தரப்பிலிருந்து "பச்சை" சிக்னல் இதுவரை கிடைக்கவே இல்லை.

இனி தமிழ்நாட்டரசின் எதிரிப்பட்டியலில் இருந்து சன் நீக்கப்பட்டுவிடும்..!

மதுரை தினகரனில் இறந்த அப்பாவிகளின் ஆன்மா இவர்களை மன்னிக்கட்டும்..!

சிவா.ஜி
02-12-2008, 09:31 AM
சன் குழுமத்துக்கோ, எதிர் தரப்பிலிருந்து "பச்சை" சிக்னல் இதுவரை கிடைக்கவே இல்லை.

மதுரை தினகரனில் இறந்த அப்பாவிகளின் ஆன்மா இவர்களை மன்னிக்கட்டும்..!

நிச்சயம் மன்னிக்காது.

கடைசியில் தமிழ்நாட்டு மக்களை இ...வாயர்களாக்கிவிட்டது இந்த 'பெரிய' குடும்பங்கள்.

வசீகரன்
02-12-2008, 12:58 PM
மதுரையில் தினகரன் அலுவலகத்தில் நடந்த வன்முறைகளும்... காதலில் விழுந்தேன் படம் திரை இடாமல் ரகளை செய்ததும்... எல்லாம் அவ்ளோதானா...!!!:redface::eek: மறந்தாச்சா... சூப்பபரப்பு...!!!:rolleyes:

அமரன்
02-12-2008, 04:03 PM
மூர்த்தி...
இனி நம்ம அவர் நிலை என்னவோ??????

mgandhi
02-12-2008, 04:13 PM
http://i134.photobucket.com/albums/q104/mgandhi05/Dinakaran_HomePage.gif


''ஒரே குட்டையில் ஊரிய மட்டை''
நாடகம் முடிந்தது

சுபம்.

ஓவியா
02-12-2008, 08:55 PM
அடப்பாவமே!! குடும்பமே அரசியல்தானா!!!

இந்தியாவிலே 23 பணக்கார குடும்பம் சன்டீவி என்று நினைக்கிறேன். (கலாநிதி)

நம்ப (சன்) உதயசூரியன் அண்ணா, இந்தப்ப்பக்கம் வந்து என்ன வெடி வெடிக்கறார் என்று பார்ப்போம்

leomohan
03-12-2008, 03:27 AM
கதம் கதம். All's Well That Ends Well

அன்புரசிகன்
03-12-2008, 03:34 AM
http://www.kumudam.com/images/pictureofday/pic_209.jpg

இப்ப கலைஞர் டி.வி.யையும், ராயல் கேபிள் விஷனையும் என்ன பண்றதுன்னு புரியலையே

நன்றி - குமுதம்...

வசீகரன்
03-12-2008, 04:27 AM
http://i134.photobucket.com/albums/q104/mgandhi05/Dinakaran_HomePage.gif


''ஒரே குட்டையில் ஊரிய மட்டை''
நாடகம் முடிந்தது

சுபம்.

அடக் கொடுமையே.....!!! தினகரன் ஊழியர்கள் என்ன முடிவு செய்கிறார்கள் பார்ப்போம்...!

Narathar
03-12-2008, 07:10 AM
சந்திப்பின்போது கண்கள் பணித்தது, இதயம் இனித்தது என்றார்.

அரசியலில் இது சர்வசாதாரணமப்பா......... :icon_b:
(கௌண்டமணியின் பாணியில் படிக்கவும் !!! :lachen001: )