PDA

View Full Version : இது தான் காதலா



ஐரேனிபுரம் பால்ராசய்யா
01-12-2008, 01:22 PM
விடுமுறைக்கு ஊர் சென்றுவிட்டு திரும்பிய தாரணியிடம் சின்னதொரு மாற்றம், அவளது கையில் மொபைல் போன் இல்லை.
‘’ என்னடி மொபைல் போன ஊருல மறந்து விட்டுட்டு வந்தியா? ஹாஸ்டலில் தங்கியிருக்கும் அவளது தோழி கேட்டாள்.
“ ஊருல நான் ஒருத்தர விரும்பறேன், நாங்க திருமணம் பண்ற வரைக்கும் மொபைல் போன் வெச்சுக்கறதில்லையின்னு முடிவெடுத்துட்டேம்’’ என்றாள் தாரணி.
“ ஒருத்தர காதலிக்கறேன்னு சொல்ற, மொபைல் போன் இல்லாம எப்பிடி? புரியல!” என்று எதிர் கேள்வி கேட்டாள் அவளது தோழி.
‘’ காதல்ங்கறது நினச்சவுடனே நடக்கறமாதிரி இருந்தா அதுல சுவராஸ்யமே இருக்காது. என்ன விரும்புறவர்கிட்ட பேசணுமுன்ணு தோணிகிட்டே இருக்கணும், ஆனா பேசக்கூடாது, அவர பார்க்கணுமுன்ணு தோணிகிட்டே இருக்கணும் ஆனா பார்க்க கூடாது, இப்போ காதலிக்கிறவங்க எல்லாரும் போன்ல தான் பேசிக்கறாங்க, ஆனா நாங்க அப்படி இல்ல வாரத்துக்கு ஒரு கடிதம் எழுதி அனுப்பறதா முடிவு பண்ணியிருக்கோம்’’.

தாரணியின் பதிலைக்கேட்டு `அம்மாடி இதுதான் காதலா’ என்று தோழி பாட்டு ஒன்றை எடுத்து விட தாரணிக்கு வெட்கம் வ்ந்து சேர்ந்துகொண்டது.

ரங்கராஜன்
01-12-2008, 02:50 PM
நல்ல செய்தி நண்பரே
செல்போனால் பல இளசுகளின் வாழ்க்கை கேள்விக்குறியாக இருக்கிறது, காதலர்கள் கேட்கவே வேண்டாம், வண்டியில் போகும் பொழுது, பல் விலக்கும் பொழுது, உணவு சாப்பிடும் பொழுது, கோயிலில், பஸ்ஸில் தொங்கிக் கொண்டு, எங்கு பார்த்தாலும் செல். இப்பொழுது ரோட்டில் செல்போன் பேசாமல் போகும் டீன்களை எண்ணிவிடலாம், அந்த அளவுக்கு செல்போனின் தொல்லை தாங்கமுடியவில்லை. காதலுக்கு தேவை நீங்கள் குறிப்பிட்டுள்ள அந்த தோணல் தான், அந்த நிறைவேறாத ஆசை தான் பலத்தை கொடுக்கும். காதலியின்(லனின்) கடிதத்தை எத்தனை முறை படித்தாலும் அலுக்காது. அந்த சுகம் செல்போனில் வராது. கதையில் இன்னும் கொஞ்சம் வர்ணனைகள் சேர்த்து இருக்கலாம், சொல்லவந்த விஷயம் நல்ல இருக்கு. இந்த செல் போன்களை ஒழித்தால் தான் காதல் உருப்படும்.................ஒரு.....நி..மிஷம் இரு...ங்க என் செல் அடிக்குது, பேசிட்டு வரேன்.

மதி
01-12-2008, 03:42 PM
இது நல்லாயிருக்கே....
அட இப்படி லெட்டர் போடவாச்சும் ஒரு ஆளு வேணுமில்ல... :)

நன்றி பால்ராசய்யா.

Keelai Naadaan
01-12-2008, 04:16 PM
நீங்க சொல்றது உண்மைதான் பால்ராசைய்யா.
கடிதம் எழுதும் அனுபவமே தனி சுகம்.
நினைவூட்டியமைக்கு நன்றி.

மதுரை மைந்தன்
07-12-2008, 10:27 PM
நல்ல சுவையான கதை. செல் போனில் அப்படி என்ன தான் பேசிக் கொள்கிறார்கள் என்று நான வியந்ததுண்டு. ஆங்கிலத்தில் sweet nothing என்று கூறுவார்கள் காதலர் பேச்சை. கண்ணொடு கண் நோக்கின் வாய் சொல்லிற்கு இடமேது என்ற பழைய நாள் காதலில் உள்ள சுவை செல் போன் காதலில் வராது. இக்கருத்தை சுருக்கமாக கதை வடிவில் தந்த உங்களுக்கு எனது பாராட்டுக்கள் பால்ராசய்யா

Narathar
13-12-2008, 02:47 AM
செல்போனில் தொலைந்துபோன காதலின் சுவாரஷ்யத்தை இன்றைய சந்ததிக்கு உணர்த்தும் குட்டிக்கதை. வாழ்த்துக்கள்!!!

இளசு
13-12-2008, 06:01 AM
மீண்டும் கைப்பட கடிதம் எழுதிக்கொள்ளும் காலம் வருமா?

ஏங்க வைத்த கதை..

பாராட்டுகள் பால்ராசய்யா அவர்களே!

ஓவியன்
24-01-2009, 04:34 AM
என்னதான் அலைபேசிகளில் பேசிக் கொண்டாலும்..
கைபட எழுதிய கடிதத்தை மறுபடி, மறுபடி வாசிக்கையில் கிடைக்கும் சுகமே அலாதிதானே...

இந்தக் குட்டிக் கதையைப் போலவே...