PDA

View Full Version : பிஸ்கெட் பாக்கெட்



ரங்கராஜன்
01-12-2008, 06:43 AM
வணக்கம் நண்பர்களே
நான் படித்து ரசித்த கதை ஒன்றை இங்கு பதிக்க விரும்புகிறேன். எதில் படித்தேன் என்று நினைவில்லை, ஆனால் இதை எழுதியது புகழேந்தி (ஷேர் மார்க்கெட் அட்வைசர்). சிலர் இதை முன்பே படித்து இருக்கலாம்.


ஒரு பெண் அவசரமாக ரயில் நிலைத்திற்க்குள் வந்தாள், ரயில் புறப்படும் நேரம் ஆனதால் அவசரமாக அங்குள்ள கடையில் ஒரு குட்-டே பிஸ்கெட் பாக்கெட்டும், ஒரு ஆங்கில நாவலும் வாங்கிக பையில் போட்டுக் கொண்டு பிளாட்ஃபாரமை நோக்கி ஓடினாள். ஆனால் ரயில் வழக்கம் போல லேட், அதனால் அவள் அங்கு இருக்கும் ஒரு பேன்சில் உக்கார்ந்தாள், அந்த பேஞ்சில் ஏற்கனவே ஒருவன் உக்கார்ந்து இருந்தான், பார்க்க முரடன் மாதிரி இருந்தான். தாடி, மீசை, சிவந்த கண்கள், என இவளையே பார்த்து கொண்டு இருந்தான். இவள் அவனை அலட்சியம்
செய்தவள் போல பையில் இருந்த நாவலை எடுத்து படிக்க ஆரம்பித்தாள். அவன் இவளையே பார்த்துக் கொண்டு இருந்தான், இவள் பையை தன்னுடைய பக்கதில் இழத்து வைத்துக் கொண்டாள். குட்-டே பிஸ்கெட்டை எடுத்து சாப்பிட்டாள், அவனும் அந்த பிஸ்கெட் பாக்கெட்டில் இருந்து ஒரு பிஸ்கெட்டை எடுத்து சாப்பிட்டான். இவளுக்கு கோபமாக வந்தது. பிஸ்கெட் பாக்கெட்டை தன்னுடைய பக்கம் இழத்து வைத்துக் கொண்டாள். அவனும் விடாமல் நெருங்கி வந்து ஒரு பிஸ்கெட்டை எடுத்து சாப்பிட்டான். இவளுக்கு கட்டுக்கு அடங்காத
கோபம் வந்தது. அவனை ஒரு முறை முறைத்தாள், அவன் அதை எல்லாம் சட்டை செய்யவில்லை. இவள் வேகமாக பிஸ்கெட்டை எடுத்து சாப்பிட ஆரம்பித்தாள், அவனும் அதையே செய்தான். கடைசியாக ஒரே ஒரு பிஸ்கெட் இருந்தது, இவள் அவனை பார்த்தாள், அவனும் இவளையே பார்த்துக் கொண்டு இருந்தான். கடைசியாக அவன் அந்த பிஸ்கெட்டை எடுத்து பாதியாக உடைத்து ஒரு பாதியை இவளிடம் நீட்டினான். இவளுக்கு கடும் கோபம் வந்து.

"உங்களுக்கு அறிவு இல்ல, பார்க்க படிச்சவங்க மாதிரி இருக்கீங்க, ஒரு பிஸ்கெட் வாங்கி சாப்பிட வக்கு இல்ல, ஸ்டுப்பிட்" என்று பொறிந்து தள்ளிவிட்டு அடுத்த பேஞ்சை நோக்கி வந்தாள்.

அவன் எதவுமே கூறாமல் இவளை பார்த்து சிரித்துக் கொண்டே இருந்தான். ஆள் இல்லாத இடமாக பார்த்து உக்கார்ந்தாள். தன்னுடைய பையை பிரித்தாள், அவளுக்கு அதிர்ச்சியாக இருந்தது. ஏனென்றால் அவளுடைய பிஸ்கெட் பாக்கெட் பையிலே இருந்தது. இவள் சாப்பிட்டது அவனுடைய பிஸ்கெட்டை, இவளுக்கு மிகவும் தர்மசங்கடமாகி
போனது.

"கடைசியாக சாப்பிட்ட பிஸ்கெட்டில் கூட பாதியை எனக்கு கொடுத்தானே, ச்சே என்ன மனிதாபிமானம்"

"அவ்வளவு திட்டியும் ஒரு வார்த்தை கூட பேசாமல் அமைதியாக இருந்தானே, ச்சே என்ன ஒரு பொறுமை" என்று அவள் மனதிற்க்குள் இவன் உயர ஆரம்பித்தான்.

ஒரு நிமிடம் முன்பு.....

"எண்டா ஜென்மம் இவன் பொறுக்கி மாதிரி, என் பிஸ்கெட்டை திருடி எனக்கே பாதி தரான்"

"என்ன திட்டினாலும் பாரு, பதில் பேசாமல் எருமை மாதிரி இருக்கான், இதில் சிரிப்பு வேறு"


அந்த பெண், ஒரு நிமிடம் முன்பு இப்படி நினைத்தாள், ஆனால் அவளே ஒரு நிமிடம் பின் இப்படி நினைக்கிறாள். இந்த பெண்னை போல தான் நாமும் மற்றவர்களை பார்த்து தப்பு சொல்கிறோம் ஆனால் நம்மிடம் இருக்கு தப்பை நாம் சரி பார்ப்பதில்லை. நல்லவன் கெட்டவன் ஆக ஒரு நிமிடம் போதும், அதே போல கெட்டவன் நல்லவனாக அந்த ஒரு நிமிடம் போதும். நம் பார்வையில் தான் இருக்கு. அந்த பெண்னாவது தன் தவறை ஒத்துக் கொண்டாள், ஆனால் நிறைய பேர் "நான் வாங்கும் போதே இரண்டு பிஸ்கெட் பாக்கெட்-ஆ வாங்கினான்" என்று நியாயப்படுத்து வார்கள்.

சிவா.ஜி
01-12-2008, 10:19 AM
படித்த கதைதானென்றாலும், நிச்சயம் நல்ல கருத்து சொல்லும் கதை. உங்களைக் கவர்ந்ததில் வியப்பில்லை மூர்த்தி. நிறைய வாசிப்பவரால்தான் நன்றாக எழுத முடியும். நீங்கள் அதனால்தான் நன்றாக எழுதுகிறீர்கள்.

பகிர்ந்து கொண்டதற்கு மிக்க நன்றி மூர்த்தி.

arun
07-12-2008, 08:18 PM
சொல்வதெல்லாம் உண்மைதான் பகிர்ந்தமைக்கு நன்றி