PDA

View Full Version : ஸ்டார்ட் அப் பிரச்சனைக்கு தீர்வு தாருங்கள்



ஸ்ரீதர்
30-11-2008, 02:17 PM
அன்பு நண்பர்களே !

எனது கணிணியில் ஸ்டார்ட் அப் பிரச்சனை உள்ளது.

அதாவது எனது நெட்வொர்க் கேபிள் கணிணியில் பொருத்தியிருந்தால் கணிணி ஸ்டார்ட் ஆகாமல் hang ஆகி நிற்கிறது.

அதே சமயம் நெட்வொர்க் கேபிள் கணிணியில் இருந்து நீக்கி விட்டு ஸ்டார்ட் செய்தால் எந்த வித குழப்பமும் இன்றி ஸ்டார்ட் ஆகிறது.

நான் உபயோகிப்பது விண்டோஸ் XP.

விண்டோஸ் மீண்டும் நிறுவாமல் , இதற்கு ஒரு நல்ல தீர்வினை தருமாறு நண்பர்களை கேட்டுக்கொள்க்றேன்.

நன்றி,

ஸ்ரீதர்

ரங்கராஜன்
30-11-2008, 02:33 PM
நண்பரே ஒருவேளை உங்கள் ram லோடு தாங்கவில்லையோ?, எதற்க்கு ram செக் செய்யுங்கள்.

அன்புரசிகன்
30-11-2008, 03:47 PM
நண்பரே... உங்கள் network card பொருத்தும் இடத்தில் ஏதாவது கோளாறு உண்டா என்று பாருங்கள். கேபிளை கழற்றிவிட்டு கணினியை செயற்படுத்தும் போது அந்த card ஐ சற்று அசைத்துப்பாருங்கள். அந்த நேரங்களிலிலும் இவ்வாறு வரலாம். ஏதாவது சத்தம் வருகிறதா???

ஸ்ரீதர்
30-11-2008, 04:01 PM
நண்பரே ஒருவேளை உங்கள் ram லோடு தாங்கவில்லையோ?, எதற்க்கு ram செக் செய்யுங்கள்.

ram போதுமானதாக உள்ளது.

ஸ்ரீதர்
30-11-2008, 04:02 PM
நண்பரே ஒருவேளை உங்கள் ram லோடு தாங்கவில்லையோ?, எதற்க்கு ram செக் செய்யுங்கள்.


நண்பரே... உங்கள் network card பொருத்தும் இடத்தில் ஏதாவது கோளாறு உண்டா என்று பாருங்கள். கேபிளை கழற்றிவிட்டு கணினியை செயற்படுத்தும் போது அந்த card ஐ சற்று அசைத்துப்பாருங்கள். அந்த நேரங்களிலிலும் இவ்வாறு வரலாம். ஏதாவது சத்தம் வருகிறதா???

இல்லை. இந்த பிரச்சனையும் இருப்பதாகத் தெரியவில்லை.

சாம்பவி
30-11-2008, 04:15 PM
BIOS boot-up sequence ஐ சரி பாருங்கள்.......
முதலில் நெட்வொர்க்காக இருக்கும் பக்ஷத்தில் இப்படி நிகழக்கூடும்...

விக்ரம்
30-11-2008, 06:55 PM
உங்களுடைய நெட் ஒர்க் கார்டில் Boot rom மூலம் boot செய்யும் முறை Enable செய்யப்பட்டிருக்கிறது. அதை நெட் ஒர்க் கார்டின் Configuration software மூலம் Disable செய்யலாம். அல்லது சாம்பவி அவர்கள் தெரிவித்தது போல, Boot Option-ல் Boot from Network முதல் Option ஆக தேர்வு செய்யப்பட்டிருக்கலாம், அதை மாற்றவும்.

If
என்னுடைய பதிலுக்கு, இந்த பிரச்சனையும் இருப்பதாகத் தெரியவில்லை என்று Quote செய்வதாகின்,
நெட் ஒர்க் கார்டை கழற்றி, தலையை மூன்று முறை சுற்றி தொலை தூரம் வீசவும்.

Else

தங்களுடைய கணிணியின் மதர்போர்டின் Bios மற்றும் நெட் ஒர்க் கார்டு சம்பந்தப்பட்ட விபரங்களையும் கொடுத்தால், மேலதிக விபரங்களை அறியத்தருவோம்.

End If

anna
01-12-2008, 03:31 PM
இந்த பிரச்சனை என்னவென்றால் உங்களது நெட்வோர்க் கேபிளை சொருகினால் கம்யூட்ட கேங் ஆகுவது போல் தோன்றும்(ஆனால் உண்மையில் கேங் ஆகாது) கேபிளை நீக்கினால் ஒ.எஸ் நர்மாலாக வேலை செய்யும்.அது தானே பிரச்சனை.

முதலில் உங்களிடம் எத்தனை சிஸ்டம் உள்ளது..அது அனைத்தும் ஒரே வகை கேபிளினால் இணக்கப்பட்டுள்ளதா என்பதை சரி பார்க்கவும். உதாரணமாக ஒரு இணைப்புக்கு ஆர்.ஜே 42,ஒரு இணைப்புக்கு கேட்-5,ஒரு இணைப்புக்கு கேட்-6 என மாறுபட்டுள்ளதா என பார்க்கவும்.மாறுபட்டுள்ளது என தெரிந்தால் ஒரே வகையாக மாற்றவும்.ஒரே வகையாக இருந்தால் சொருகும் இடத்தில் ஏதேனும் குறை உள்ளதா என பார்க்கவும்.இருந்தால் நெட்வோர்க் கார்டு மாற்றவேண்டும்.அப்படியும் இல்லை சரியாக இருந்தால் கேபிளின் போலாரிட்டி வரிசை சரியாக உள்ளதா என பார்க்கவும்.மாறி இருந்தால் சரியாக வகைப்படுத்தி ஜாக் கீரீமிங் செய்யவும்.
இதிலேயே உங்கள் பிரச்சனை தீர்ந்து விடும்.இதுக்கு மேலும் பிரச்சனை இருக்காது