PDA

View Full Version : நிலா?



"பொத்தனூர்"பிரபு
30-11-2008, 01:58 PM
http://3.bp.blogspot.com/_1ii0oYjwrWs/SPVIHHkj2TI/AAAAAAAAAJI/baL1CEpQGQw/s400/nila300107_1.jpg



பேத்திக்கு உணவூட்டும்
பக்கத்து வீட்டு பாட்டி
நிலா நிலா ஓடிவா......- என்றுபாட
எதிர்வீட்டு கதவுதிறந்து
என்னவள் நீ வெளியேவர
லேசாய் புன்னகைத்தேன்
ஏனோ என்று
எல்லோரும் பார்த்தனர்
அவர்கட்கு எப்படி தெரியும்
என்வானின் நிலா நீதானென்று..


..................................................................................
எஸ்.ஜே சூர்யாவுக்கும் இதுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை
...................................................................................

Narathar
30-11-2008, 02:10 PM
கவிதை நன்றாகத்தான் இருக்கின்றது!
அதைவிட அந்த கடைசி ஸ்டேட்மன்ட் நன்றாக இருக்கின்றது!!!
நிலாவின் படம் அதைவிட நன்றாக இருக்கின்றது!!! :D

"பொத்தனூர்"பிரபு
30-11-2008, 02:24 PM
என்னே வேகம்
பதிவிட்டு சில நிமிடங்களில் மறுமொழியிட்டதுக்கு நன்றி

தமிழ்தாசன்
30-11-2008, 04:48 PM
என்ன சொல்ல? எப்படிச் சொல்ல?
எதைச்சொல்ல?
படமா? அதன் அழகா? பின் வந்த கவியா?
அதன்பின் வந்த அறிக்கையா?
எல்லாமே கலக்கல்.
எதையும் பிழையா விளங்க மாட்டீர்கள் என நம்புகிறேன்.

நிலாவை இனி எப்படி ரசிப்பது.?

"பொத்தனூர்"பிரபு
30-11-2008, 04:56 PM
நன்றி தமிழ்தாசன்
இதில் பிழையா விளங்க ஒன்றும் இல்லை