PDA

View Full Version : கலைவாணரை அவர் பிறந்த இந்நாளில் நினைவு கொள்வோம்!mgandhi
28-11-2008, 05:15 PM
http://i134.photobucket.com/albums/q104/mgandhi05/Untitledpicture.jpg


கலைவாணரை அவர் பிறந்த இந்நாளில் நினைவு கொள்வோம்!


கலைவாணரும், பழைய சோறும்...!


ஒருநாள் காலையில் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன், தன்னுடைய வீட்டில் அமர்ந்து, பழைய சோறு சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அப்போது வீட்டுக்கு வந்த அவரது நண்பரும்... முன்னாள் அமைச்சருமான என்.வி.நடராசன், ``என்னங்க... மதுரம் உங்களுக்கு டிபன் எதுவும் செய்து தரலையா..? பழைய சோறு சாப்பிடுறீங்க..!''

கலைவாணர் எதுவும் பேசாமால், வேலைக்காரரைக் கூப்பிட்டு, ``இந்தா... இந்த ஒரு ரூபாய்க்கு... பழைய சோறு வாங்கிட்டு வா...'' என்றார். ரொம்ப நேரம் கழித்து வந்த வேலைக்காரர், ``ஐயா... நானும் எங்கெங்கோ அலைஞ்சிட்டேன். ஒரு இடத்திலேயும் பழைய சோறு கிடைக்கல..'' என்றார்.

``கேட்டீங்களா நடராசன்... எவ்வளவு பணம் கொடுத்தாலும் கிடைக்காத அற்புதப் பொருள்... அதனால்தான் இதை சாப்பிட்டேன்!'' என்று கலைவாணர்
சொன்னதைக் கேட்டு நடராசன் மட்டுமின்றி... மதுரமும் அசந்துவிட்டார்.
பெரியார் பக்தி

1947 - ஆகஸ்ட் 15 முதல் சுதந் திர நாள் என்பதற்காக கலை வாணரை சென்னை- வானொலி நிலையம் அழைத்திருந்தது.
நிகழ்ச்சி சம்பந்தப்பட்டவற்றை வானொலிக்கு முன்னதாகவே எழுதிக் கொடுத்துவிட்டார் என்.எஸ்.கே. நாட்டு விடுதலைக் காகப் பாடுபட்ட தலைவர்களின் வரிசையில் தந்தை பெரியார் பெயரும் இடம்பெற்றிருந்தது. வானொலி நிலையத்தார் அதனை நீக்கி விட்டனர். (எல்லாம் `அவாள் ஆயிற்றே!).
கலைவாணருக்கோ வந்ததே சினம்! பெரியார் பெயர் இடம் பெறாவிட்டால், என் நிகழ்ச்சியும் இடம்பெறாது என்று கூறிவிட்டு வெளியேறிவிட்டார். இதனைச் சற்றும் எதிர்பாராத வானொலி நிறுவனத்தார் மறுபடியும் பெரியார் பெயரையும் இணைத்து நிகழ்ச் சியை நடத்திட ஏற்பாடு செய்தனர்.
கலைவாணர்சிலையைத் திறந்து வைத்து பேசுகையில் அண்ணா கூறியதாவது:_


கலைவாணர் அவர்கள் கலையுலகத்திற்கு மட்டுமல்லாமல், சமூகத்திற்குத் தம்முடைய தொண்டுகளைச் செய்யவேண்டும், அதற்கு இந்தக்கலை, ஒரு வழிகாட்டியாக அமைய வேண்டும் என்ற முறையில் கலைத்துறையைத் தேர்ந்தெடுத்தார்கள்.
அவருடைய சிறந்த உழைப்பு, அவருக்கு மட்டுமல்லாமல் கலைத்துறைக்கே நகைச்சுவைப் பாத்திரத்திற்கே ஒரு தனி இடத்தைப் பெற்றுத் தந்திருக்கிறது. நகைச்சுவைப் பாத்திர மென்றால் ஒட்டப்பட்ட மீசை திடீரென்று கீழே விழும். அது நகைச்சுவை பாத்திரம்.
நடக்கின்றபொழுது இடறிக் கீழே விழுவார்கள்; அது நகைச்சுவைப் பாத்திரம். இப்படியிருந்ததை மாற்றி, நகைச்சுவை பாத்திரமென்பது, சிந்தித்துப் பார்த்து சிரித்து நற்பயனைப் பெறத்தக்க ஒரு பாத்திரம் என்று மாற்றி அமைத்துக் காட்டியவர் நகைச்சுவை மன்னர் என்.எஸ்.கிருஷ்ணன் அவர்கள்.

Mano.G.
29-11-2008, 03:05 AM
கலைஞர் கலைவாணர்,
நான் மிகவும் ரசித்த சிந்தித்த நகைச்சுவை பகுதிகள் என்றால் இவருடையதே இவருடையதே, எழிய தமிழ் பாமர மக்கள் புரிந்து கொள்ள கூடிய அளவில் சிந்திக்க வைத்தவர், இந்த கலைவாணரின் பதிவில் பழையச் சோறு சம்பவம் இன்றுதான் நான் கண்டேன் என்ன அருமையான ஒரு நினைவூட்டல், கலைவாணர் ஒரு நகைச்சுவை நடிகர் மட்டுமல்லாது பாடும் திறமையும் கொண்டவர் என்பது ஊருக்கே இல்லை உலகத்துக்கே தெரிந்த விஷயம். அவரின் பாடல்களிலும் கருத்துக்கள் குவிந்து கிடப்படதை கேட்டு புரிந்து கொண்டவர்களுக்கே தெரியும்.

கலைஞர் கலைவாணரை இந்நேரத்தில் நினைவுபடுத்தியதற்கு மிக்க நன்றி மோகன் காந்தி அவர்களே.

http://www.youtube.com/watch?v=JHjLq_h9kUM


http://www.youtube.com/watch?v=UavhQCkuVxA


மனோ.ஜி

Narathar
29-11-2008, 03:38 AM
உயரிய சிந்தணைகளை அடித்தட்டு மக்களும் புரிந்து கொள்ளும் வண்ணம்
மிக அருமையாக தனது நகைச்சுவை ரசம் பூசி தந்த சீர்திருத்தவாதியை
அவரது பிறந்தநாளான இன்று நினைவுகூர்வதில்
மன்ற உறவுகளோடு சேர்ந்து நானும் மகிழ்கின்றேன்

வசீகரன்
29-11-2008, 11:36 AM
அவரது பழைய படங்களை பார்த்திருக்கிறேன்... மிக நகைச்சுவை உணர்வும்
நவீன கால முற்போக்கு சிந்தனைகளும் கொண்டு விளங்கியவர்...
இன்றும் திரை உலகத்தினர் அவரது பாணியை பின் பற்றிதான் நகைச்சுவைகளை அமைக்கிறார்கள்... சின்ன கலைவாணர் விவேக் உட்பட...
நல்ல ஒரு பகிர்தல் நன்றி...!

செல்வா
29-11-2008, 12:51 PM
மிகச்சிறந்த கலைஞர் நல்ல மனிதர். அவரது புகழ் தமிழ்த்திரையுலகம் உள்ளவரை நிலைத்திருக்கும்.

praveen
29-11-2008, 01:47 PM
அவரை இந்த திரி மூலம் நினைவு கூர்ந்தமைக்கு மிக்க நன்றி. நானும் அவர் ரசிகன் தான். நான் பிறக்கும் முன்னே அவர் மறைந்திருந்தாலும். அவர் நடித்த படங்களை பார்க்கும் போது, அவர் மறையவில்லை என்றே நினைக்கிறேன்.

சிறந்த சிந்திக்க வைக்கும்படியான நகைச்சுவை நடிகர். நிஜவாழ்வில் பலருக்கு உதவிய உத்தமர்.

ஓவியா
29-11-2008, 06:23 PM
அடடா எப்படி இந்த திரியை நேற்று காணாமல் விட்டேன், வருத்தங்கள்.

நகைச்சுவை சிம்மம் கலைவாணர். ஆபாசமே இல்லாமல் அறிவுபொக்கிஷமான நகைச்சுவைகளை அள்ளி வழங்கி நம்மை மகிழ்வித்த உத்தமர் இவர்.

இந்த நாளில் நானும் அவரை நினைவுகூர்ந்து வணங்கி மகிழ்கிறேன்.

திரிக்கு நன்றி மோகன் அண்ணா.

சுட்டிக்கு நன்றி மனோ அண்ணா.

Keelai Naadaan
30-11-2008, 02:05 AM
நகைச்சுவை நடிகராக மட்டுமில்லாமல் சில அறியாமை நம்பிக்கைகளையும் நகைச்சுவையோடு சுட்டிகாட்டியவர்.

அவருக்கேற்ற துணைவியாராய் விளங்கியவர் மதுரம் அவர்கள். அவர்கள் இணைந்து நடித்த

சிந்திக்க தெரிந்த மனித குலத்துக்கு சொந்தமானது சிரிப்பு.....

விஞானத்த வளர்க்க போறேன்டி.....

கண்ணே உன்னால் நானடையும் கவலை கொஞ்சமா....

.....போன்ற பாடல்கள் இன்றைக்கும் ரசிக்க கூடியவை

என்.எஸ்.கே. அவரது துணைவியாரிடம், ஐம்பது வயதுக்கு மேல் உயிரோடு இருக்கக்கூடாது. இருந்தால் சிரிப்பு சேவையில் கிழடு தட்டி விடும், எனவே நான் ஐம்பது வயதுக்குள் இறந்துவிடப் போகிறேன். இப்போது எனக்கிருக்கும் மதிப்போடு இறந்து விடுவது மேலானது அல்லவா'' என்று கேட்டுக் கொள்வாராம்.
அவர் கேட்டுக் கொண்டது போல் நாற்பத்தி ஒன்பதாவது வயதிலேயே இயற்கை எய்தினாராம்.

மதுரை மைந்தன்
30-11-2008, 11:09 AM
கலைவாணரின் நகைச்சுவை சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்தது என்பது அனைவரும் அறிந்ததே. அவரின் நகைச்சுவைகளில் நான் மிகவும் ரசித்தவை:

கலைவாணரிடம் உங்களுக்கு டீ பிடிக்குமா இல்லை காப்பி பிடிக்குமா என்று கேட்டதற்கு அவர் அளித்த பதில் " எனக்கு டீயே மதுரம்".

அவரின் 'கிந்தனார் சரித்திரம' பல முறை கேட்டு மகிழ்ந்திருக்கிறேன். கிந்தன் புகை வண்டியை முதல் தடவையாக பாரக்கும்போது "ரயிலே ரயிலே கட கட வென்று தண்ட வாளத்தில் ஓடும் ரயிலே" என்று பாடினார். பட்டணத்திற்கு வந்து ரயிலை விட்டு இறங்கியவுடன் ரிகஷாக் காரர்கள் என் வண்டியில் ஏறு என்று போட்டி போட அவர்களில் புதிதாக இருந்த வண்டியில் சவாரி செய்த பின் இறங்குமிடத்தில் காசு கேட்டவுடன் அப்பாவி கிந்தன் பட்ட பாட்டை அவர் சொன்ன விதம் மிக நன்றாக இருந்தது.

ராஜா ராணி படத்தில் வரும் நாடக காட்சியின் துவக்கத்தில் கலைவாணரின் பேச்சு அருமை.

கலைவாணரின் நகைச்சுவை காலத்தால் அழிக்க முடியாதது.