PDA

View Full Version : முன்னாள் பிரதமர் வி.பி.சிங் மறைவு...



பாரதி
27-11-2008, 12:30 PM
இந்திய நாட்டின் முன்னாள் பிரதமர் விஸ்வநாத் பிரதாப் சிங் அவர்கள் இயற்கை எய்தினார்.

அலகாபாத்தில் ஜூன் 25, 1931-ல் பிறந்த திரு.வி.பி.சிங் உத்திரபிரதேச முதலமைச்சராகவும், மத்திய அமைச்சரவையில் நிதி மற்றும் பாதுகாப்புத்துறை அமைச்சராகவும் பின்னர் இந்திய பிரதமராகவும் பதவி வகித்தவர். எந்தப்பதவியில் இருந்த போதும் அரசியல் வாழ்வில் தூய்மையானவராக விளங்கினார். இவரது பதவிக்காலத்தில்தான் மண்டல் கமிஷன் பரிந்துரை ஏற்கப்பட்டது.

அரசியலில் நேர்மையும் தூய்மையும் கைக்கொண்டு விளங்கிய திரு. சிங் அவர்களின் மறைவு நாட்டிற்கு பேரிழப்பாகும். அவரது பிரிவால் வாடும் உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கல்கள்.

anna
27-11-2008, 12:42 PM
இந்திய நாட்டின் முன்னாள் பிரதமர் வி.பி.சிங் அவர்களின் மறைவுக்கு தமிழ்மன்றம் நண்பர்கள் சார்பாக ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கின்றேன்.

அமரன்
27-11-2008, 12:46 PM
அன்னாரின் ஆத்ம சாந்திக்குப் பிரார்த்தனைகள். சுற்றத்துக்கு ஆறுதல்கள்.

ஓவியா
27-11-2008, 12:53 PM
என்ன கை சுத்தமான அரசியல்வாதியா!! கேட்கவே மகிழ்ச்சியாக இருக்கின்றது.

இருப்பினும் அன்னாரின் மறைவுக்கு என் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.

mukilan
27-11-2008, 02:29 PM
ஆமாம். இந்திய அரசியல் வாதிகளில் அப்பழுக்கற்ற மிகச் சிலரில் அவரும் ஒருவர். அன்னாரின் மறைவிற்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்.

Narathar
27-11-2008, 03:22 PM
அன்னாரை இழந்து தவிக்கும் அவரது குடும்பத்திற்கும்,
நல்ல ஒரு அரசியல்வாதியை இழந்த இந்தியர்களுக்கும்
எனது அனுதாபங்க்ளை தெரிவித்துக்கொள்கின்றேன்

aren
28-11-2008, 03:58 AM
இந்தியாவிற்கு கிடைத்த மிகச்சிறந்த தனனலமிக்க பிரதமர். அன்னாரின் மறைவிற்கு என்னுடைய இறங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

பல நல்ல விஷயங்களை இந்திய மக்களுக்கு கொடுக்க முயன்றார். அதனாலேயே அவரை ஓரங்கட்டினார்கள். இருந்தாலும் எதற்கும் கவலைப்படாமல் தன்னுடைய நிலையை எப்பொழுது மாற்றிக்கொள்ளாத மாபெரும் மனிதர்.

இவருடைய மறைவு இந்தியாவிற்கு ஒரு பெரிய இழப்பு.

ராஜா
28-11-2008, 04:08 AM
அரசியல்வாதிகளில் அபூர்வமானவர்.

அன்னாரது ஆன்மா அமைதியடையட்டும். அவர்தம் குடும்பத்தார்க்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.