PDA

View Full Version : மிச்சமிருக்கும் கனவுகள்.



அமரன்
27-11-2008, 08:53 AM
மிச்சமிருக்கும் கனவுகள்.


தானூறியக் கனவுத் திவலைகளை
கருவூரில் பூத்த என்னில்
பூப்பித்து பூத்தது
தொப்புள் கொடி வேர்!

காலக்காற்று எனைக்
கன்னி முத்தமிட்ட வேளை
சட்டென்று கொட்டின
சில 'கன'விதழ்கள்!

தாய்க் காம்பினோடு
ஒட்டிக் கொண்டன
புதிதாய் கனவிதழ்கள்!

அதிசய மலராய்
மணம் வீசத் தொடங்கிய நேரம்..
வந்தமர்ந்த வண்ணப் பூச்சிகள்
தூவிச்சென்றன கனவு மகரந்தங்கள்!!

சிறகின் விரிப்பில்
பறந்தன பழுத்த பூவிழிகள்.
சிதறின சில நிறமணிகள்
அண்ணாந்து பார்த்தோர்
ஏந்தினர் நெஞ்சினில் தேன்துளிகள்!

தேன்துளிகளை எண்ணெயாக்கி
என்னைத் திரியாக்கி
பொலிவாய் சுடர்கின்றன தீபங்கள்!

காலங்கள் கடந்து சென்றாலும்
தேன்கிண்ண நெஞ்சுகளில் தேனீரும்
எனக்குள் கனவுகளும்
மிச்சமிருக்கின்றன பத்திரமாக!

பருவம் தோறும் நிகழும்
மலர்தலுக்கும் உதிர்தலுக்கும் நடுவில்
தொலைந்து போன
எனைக்காணும் கனவொன்றும்
மிச்சமிருக்கும் என் கனவுகளுடன்!

சிவா.ஜி
27-11-2008, 09:35 AM
அமரனின் எழுத்துக்கள் மயக்குகின்றன. வார்த்தைகள் வசியப்படுத்துகின்றன.
தொலந்துபோன சுயத்தை கனவு காணும் கவிஞனின் கவிதை அழகு. வாழ்த்துகள் அமரன்.

(இப்போதைக்கு இவ்ளோதான் புரிஞ்சது....பின்னால் வரும் பின்னூட்டங்களைப் பார்த்து மேலும் விளங்கிக்கொள்கிறேன்)

வசீகரன்
28-11-2008, 11:44 AM
மிச்சமிருக்கும் கனவுகள்.


[
அதிசய மலராய்
மணம் வீசத் தொடங்கிய நேரம்..
வந்தமர்ந்த வண்ணப் பூச்சிகள்
தூவிச்சென்றன கனவு மகரந்தங்கள்!!


காலங்கள் கடந்து சென்றாலும்
தேன்கிண்ண நெஞ்சுகளில் தேனீரும்
எனக்குள் கனவுகளும்
மிச்சமிருக்கின்றன பத்திரமாக!

பருவம் தோறும் நிகழும்
மலர்வுக்கும் உதிர்வுக்கும் நடுவில்
தொலைந்து போன
எனைக்காணும் கனவொன்றும்
மிச்சமிருக்கும் என் கனவுகளுடன்!

கவர்ந்த வரிகள்..! கனவுகளுடன் நடை போட்ட காலங்களும் அழகு கனவுகளுடன் கண்ணயர்ந்த நிமிடங்களும்
சொல்லத்தான் வேண்டுமோ.. எண்ணிலடங்கா...!
அமரரின் வரிகளில் மீண்டுமொருதரம் நினைவுகள் பின் நோக்குகிறது...!


அவை எனக்கான தருணங்கள்..! (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=17326)

Keelai Naadaan
28-11-2008, 02:33 PM
தங்களின் மயக்கும் வரிகளில் மயங்கி ரசித்தேன் அமரன்.

மிச்சமிருக்கும் கனவுகள் வாழ்வோடு கூட வரும்.

நிரன்
23-12-2008, 07:56 PM
தேந்துளிகளை எண்ணெயாக்கி
என்னைத் திரியாக்கி
பொலிவாய் சுடர்கின்றன தீபங்கள்!

காலங்கள் கடந்து சென்றாலும்
தேன்கிண்ண நெஞ்சுகளில் தேனீரும்
எனக்குள் கனவுகளும்
மிச்சமிருக்கின்றன பத்திரமாக!


மிக அருமையாக தமிழ்த்தேனெளுகும் வரிகள் நன்றாக உள்ளது
முதல் தடவை படித்ததும் எனக்கு விளங்கவில்லை மூன்று தடவைகள்
படித்த பின்னரே அவ்வரிகளின் அர்த்தத்தை புரிந்து கொண்டேன்
புரிந்ததும் பிடித்துப்போன வரிளை பிரித்துக்காட்டியுள்ளேன்...

ஐமாயுங்க ஐி.....................அமர்.......அன்.............:icon_b:

poornima
24-12-2008, 07:07 AM
அழகிய தமிழ்கொஞ்சும் கவிதை அமரன்.. படிக்கையில்
உண்மையில் உள்ளம் உவப்படைகிறது...

ஆனால் ஏன் இவ்வளவு சந்திப்பிழைகளும் விகாரங்களும்
என்றுதான் தெரியவில்லை.

தேந்துளிகள் என எங்கும் வராது. தேன் துளிகள் என வருவதே நலம்.
ஈற்று 'ன'கரம் 'ந'கரமாக திரிய வேண்டிய அவசியமேயில்லை.தேந்துளிகள்
என வாய்விட்டுபடித்துப் பாருங்களேன்.. நன்றாகவா இருக்கிறது..

காம்பினூடு - காம்பினோடு என வந்தால் படிக்க சுவை..
மலர்வுக்கும் - உதிர்வுக்கும் --> மலர்தலுக்கும் உதிர்தலுக்கும்

//எனைக்காணும் கனவொன்றும்//

நான் கானும் கனவொன்றும் என வந்திருக்க வேண்டுமோ..

கவிதை பரவசமாக இருக்கிறது அமரன்... ஆனால் எனக்கு இடறியவற்றை கோடிட்டு காண்பித்தேன்.. கவிதையின் அழகியல் என்பது கொஞ்சம் செதுக்கலிலும் சிறப்பாகும்.
அதிகப்பிரசங்கிதது போல் தோன்றினால் மன்னிக்கவும்

அமரன்
24-12-2008, 07:20 AM
படைப்புகளை பாராட்டும் பதிவுகளை விட அதில் காணும் தவறுகளை சுட்டிக்காட்டும் பதிவுகளை அதிகம் விரும்புவேன். அந்த வகையில் உங்கள் விமர்சனம் என்னை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இந்த இடத்தில் நான் சொல்லப்போவது என் தவற்றை நியாயப்படுத்த அல்ல.
எழுதிவிட்டு அப்படியே பதிப்பது என் வழக்கம். அதை சரிபார்ப்பது இல்லை. பிழை எனத் தெரிந்தும் இந்தப்பழக்கத்தை விடவே இல்லை நான். உங்களைப் போலச்சிலர் சுட்டும் போது விடனும் என நினைத்து பின் விடாமல் இருப்பதை மாற்ற வேண்டும்.

நன்றி பூர்ணிமா

சசிதரன்
24-12-2008, 08:33 AM
மிக மிக அருமையான சொக்க வைக்கும் வரிகள் நண்பரே... ரொம்ப பிடிச்சிருக்கு...:)