PDA

View Full Version : தென்றல் விட்டுச் சென்ற தடயங்கள்



அமரன்
27-11-2008, 08:24 AM
என் பக்கம் குவிந்தது
காதல் பிரபஞ்சத்து
ஆதவனின் கண்வீச்சு
சற்றே தீவிரமாய்!!

நெஞ்சத்துள் இறுகி இருந்த
காதல் பனிமலை உருகியது.
குருதிக் கடலில்
காதல் மட்டம் உயர்ந்தது.
சிறுதட்டுகள் உரசிக்கொண்டன.

உணர்வு மண்டலத்துள்
பெருக்குடைத்தது காதல்
விசித்திர சுனாமிபோல்!

நரம்பு நதிகளின் வழி
இளமையுடன் ஓடியது.
இழையக் குளங்களை நிரப்பியது.
தேக வயலெங்கும்
மோகனச் செழுமை படர்த்தியது!

என்னைச் சுற்றி
காதல் சூழ் கொண்ட மேகம்!

தென்றல்கள் வருடியது..
ஒன்று மட்டும் தழுவியது..
பொழிந்த மழையை ஏந்திகொண்டன
என்னில் திறந்த வழிகள் யாவும்!

எங்கும் பசுமை
தென்றல் வந்த தடயங்களாய்
என்னில் பசுமை
தென்றல் விட்டுச் சென்ற தடயங்களாய்!!

தீபா
27-11-2008, 08:38 AM
ஆதவனையும் என்னையும் போட்டு நல்லதா வாழ்த்துப்பா பாடியிருக்கீங்க... :D :D

வாழ்க நும் புலமை :D

மதுரை மைந்தன்
27-11-2008, 09:05 AM
ஆதவனின் கண்வீச்சு
தென்றல் விட்டுச் சென்ற தடயங்களாய்
அமரத்துவம் பெற்றன!

சுகந்தப்ரீதன்
27-11-2008, 09:06 AM
கவிதையில கொஞ்சம் புரிந்தது... நிறைய புரியலை..!!

ஆனால் ஒன்னும் மட்டும் தெளிவா தெரியுது... அமரு கவிஞராகிட்டாருன்னு..!!

வாழ்த்துக்கள் அமரண்ணா...!!:icon_b:

பாரதி
27-11-2008, 09:53 AM
...........ஆதவனின் கண்வீச்சு
.............!

நெஞ்சத்துள் இறுகி இருந்த
காதல் பனிமலை உருகியது.
குருதிக் கடலில்
காதல் மட்டம் உயர்ந்தது.
சிறுதட்டுகள் உரசிக்கொண்டன.

உணர்வு மண்டலத்துள்
பெருக்குடைத்தது காதல்
விசித்திர சுனாமிபோல்!

நரம்பு நதிகளின் வழி
இளமையுடன் ஓடியது.
இழையக் குளங்களை நிரப்பியது.
தேக வயலெங்கும்
மோகனச் செழுமை படர்த்தியது!
.............
...............
எங்கும் பசுமை
தென்றல் வந்த தடயங்களாய்
என்னில் பசுமை
தென்றல் விட்டுச் சென்ற தடயங்களாய்!!

வித்தியாசமான கோணத்தில் பார்வை...!
இந்த சுனாமி மட்டும் என்றென்றும் வேண்டும் என கேட்குமே மனம்..!
உங்கள் மனவயலில் என்றும் பசுமை பூத்துக்கொண்டிருக்கட்டும். தென்றல் வீசிக்கொண்டிருக்கட்டும் - மண நாளை எதிர்நோக்கி.

(இழையக்குளம்...இதயக்குளமா...?)

அமரன்
27-11-2008, 10:39 AM
ஆதவனையும் என்னையும் போட்டு நல்லதா வாழ்த்துப்பா பாடியிருக்கீங்க... :D :D

வாழ்க நும் புலமை :D

தென்றல் வந்தது
தடயங்களாய் இரு தடங்களை
விட்டுச் சென்றது.
தடங்கள் மீது
மீண்டும் வருமோ தென்றல்
காத்திருகிறான் பயணி
தென்றலே நீ பயணி!

அமரன்
27-11-2008, 10:43 AM
ஆதவனின் கண்வீச்சு
தென்றல் விட்டுச் சென்ற தடயங்களாய்
அமரத்துவம் பெற்றன!

அமரத்துவம் பெற்றனவோ இல்லையோ
அமர இடம் பெற்றன...
உங்களைப் போன்ற நல்லுள்ளங்களால்!

நன்றி.

அமரன்
27-11-2008, 10:45 AM
கவிதையில கொஞ்சம் புரிந்தது... நிறைய புரியலை..!!

ஆனால் ஒன்னும் மட்டும் தெளிவா தெரியுது... அமரு கவிஞராகிட்டாருன்னு..!!

வாழ்த்துக்கள் அமரண்ணா...!!:icon_b:


இதைப் படித்ததும் மீண்டும் வேதாளம் முருங்கையிலா எனத் தோன்றியது. என்ன செய்யலாம் என்று நினைத்த போது பாரதி அண்ணா வந்தார். குழப்பம் தீர்ந்தது எனக்கு. உனக்கும் தீர்ந்தால் மகிழ்ச்சி சுகந்தா.
இப்ப்வாவது ஒத்துக்கிட்டியே எனக்கும் கவிதை வரும்னு!
நன்றிப்பா

அமரன்
27-11-2008, 10:48 AM
வித்தியாசமான கோணத்தில் பார்வை...!
இந்த சுனாமி மட்டும் என்றென்றும் வேண்டும் என கேட்குமே மனம்..!
உங்கள் மனவயலில் என்றும் பசுமை பூத்துக்கொண்டிருக்கட்டும். தென்றல் வீசிக்கொண்டிருக்கட்டும் - மண நாளை எதிர்நோக்கி.

(இழையக்குளம்...இதயக்குளமா...?)


இழையக்குளம்தான் அண்ணா!
கலங்கள் சேர்ந்து உருவாவது இழையம்.
இழையங்கள் உருவாக்குவது அங்கம்.
இப்படிப் படித்ததாய் ஞாபகம்.
உங்கள் எடுத்துக் காட்டில் கவிதையின் குறைகளை கண்டு களைந்தேன் அண்ணா.

Narathar
27-11-2008, 11:12 AM
இயற்கை உணர்வின் இரசாயண மாற்றங்களை
இயற்கையோடு இழையோடிச்சொன்னதை
ரசித்தேன்....

அமரரே வாழ்த்துக்கள்

ஆதவா
04-12-2008, 09:11 AM
இயற்கையாக காதலைப் பிணைத்து உருவகப்படுத்தி ஒரு சாம்ராஜியத்தையே படைத்துவிட்ட அமரருக்குப் பாராட்டுக்கள்.

காதல் என்ற நதியில் தான் எத்தனை முறை மூழ்கினாலும், மூச்சடங்கிப் போவதில்லை, காதல் ஒரு மாயநதி. அது உணர்வுக்கேற்ற வகையில் பொங்கிப் பெருக்கெடுக்கும். கவிதையாகவோ, அல்லது வேறெப்படி ஊடகமாகவோ..

இயற்கையின் விளையாட்டை காதலுக்குள் புகுத்தி வெகு அழகாக நேர்த்தியாக பிசிறில்லாமல் வந்திருக்கிறது அழகு கவிதை. பிரபஞ்ச ஆதவனின் வீச்சில் பனிமலை உருகி, கடல் மட்டம் உயர்ந்து, நதிகள் குளங்களை நிரப்பி, செழுமையாக்கி மேகமழை பொழிந்து, என ஒருபக்கம் இயற்கையின் செயல்கள்... யாருடைய கடைக்கண் பார்வை பட்டோ, நெஞ்சம் உருகி காதல் இரத்தத்தோடு கலந்து உணர்வு நரம்புகளைக் கிளப்பி, இளமையை உசுப்பி, தென்றலாக தழுவி....

ஒரே ஒரு பிரச்சனை... இந்தத் தென்றலை எதனோடு உருவகப்படுத்தியிருக்கிறீர்கள். அது மட்டும் தொக்கி நிற்கிறதே! மற்றபடி இறுதி வரிகள் வரையிலும் அப்படியொரு இயற்கை அலை..

இழையக் குளங்கள் என்பது கேள்விக்குறியாக இருக்கிறது. சம்பந்தப்பட்டவரோ, சம்பந்தப்படப்போகிறவரோ அதை விமர்சித்தால் நன்று. (நீங்கள் விளக்கியது, சந்தேகத்திற்குரியதாகவே இருக்கிறது)

கவிதை அருமை.... மின்னிதழுக்குப் பரிந்துரைக்கிறேன்...

வசீகரன்
04-12-2008, 09:57 AM
நெஞ்சத்துள் இறுகி இருந்த
காதல் பனிமலை உருகியது.
குருதிக் கடலில்
காதல் மட்டம் உயர்ந்தது.
சிறுதட்டுகள் உரசிக்கொண்டன.


என்னைச் சுற்றி
காதல் சூழ் கொண்ட மேகம்!

தென்றல்கள் வருடியது..
ஒன்று மட்டும் தழுவியது..
பொழிந்த மழையை ஏந்திகொண்டன
என்னில் திறந்த வழிகள் யாவும்!

எங்கும் பசுமை
தென்றல் வந்த தடயங்களாய்
என்னில் பசுமை
தென்றல் விட்டுச் சென்ற தடயங்களாய்!!


அருமை... அருமை... """வார்த்தை விளையாடல்கள்.."""
விரித்திருக்கும் எண்ண சிறகுகள்..."
ரொம்ப நாள் கழிச்சி தென்றல் பக்கமும் காதல் பக்கமும் வந்திருக்கிற
அமர் அண்ணாவுக்கு ஒரு ஜே...

அக்னி
04-12-2008, 11:31 AM
காதல்!

தேகநிலையில்,
தகிப்பையும் சில்லிப்பையும்
சேரத் தரும்.

அகநிலையில்,
ஏக்கத்தையும் தாக்கத்தையும்
நிறையத் தரும்.

ஆதியும் அந்தமும் ஆகும்,
காதலையும், காதலரையும் சார்ந்து...



என்னைச் சுற்றி
காதல் சூழ் கொண்ட மேகம்!

காதல் சூழ்(ந்து) கொண்ட மேகம்,
பொழியத் தயாராய்...
காதல் சூல் கொண்ட மேகம்,
வளரத் தயாராய்...

சரிதானோ அமரா...

பாராட்டுக்கள்...

அமரன்
05-12-2008, 02:41 PM
இயற்கை உணர்வின் இரசாயண மாற்றங்களை
இயற்கையோடு இழையோடிச்சொன்னதை
ரசித்தேன்....

அமரரே வாழ்த்துக்கள்

நன்றி நாரதரே!
இயற்கை உணர்வு - இயற்கை உலகு
ஒருங்கிணைத்து அருமையான கருத்து.