PDA

View Full Version : இமைகள்



DivyaBharathi
27-11-2008, 04:21 AM
படபடக்கும் பட்டாம் பூச்சியாய்
துடிக்கும் உனது இமைகள்…
அதை கண்டு..
இமைக்க மறந்து போயின எனது இமைகள்….!!!

கண்மணி
27-11-2008, 04:33 AM
துடிக்கும் இமைகளைக் கண்டு
துடிக்காத இமைகள்..
துடிக்கும் இதயம்

முதல் கவிதையா திவ்யா.. நிறைய எழுதுங்கள்..

நினைவுக்கூட்டில் சிறகடிக்கும் அந்தப் பட்டுப் பூச்சிகளை சிறிது வெளியே விடுங்களேன்,

அமரன்
27-11-2008, 09:53 AM
உன்னிமை உதிர்த்த மயிர்கள்
பத்திரமாக என் பாடப்புத்தகத்தில்!

பாராட்டுகள் திவ்யா!

ஷீ-நிசி
27-11-2008, 01:48 PM
அழகாக உள்ளது!

இரண்டு வரிகளை
நான்கு வரிகளாய் வளர்த்துவிடுங்கள்!

வாழ்த்துக்கள்!

தமிழ்தாசன்
27-11-2008, 06:13 PM
படபடக்கும் பட்டாம் பூச்சியாய்
துடிக்கும் உனது இமைகள்…
அதை கண்டு..
இமைக்க மறந்து போயின எனது இமைகள்….!!!

அழகானது உன் இமைகள்,
அதில்தானடி என் உயிர்ப்பூத்தது.
அதனால் தானோ இன்றும்
என் இதயச்சுமைகளைப் பஞ்சாக்கி
உன் இமைப்பட்டாம்பூச்சியானது.

வரிகள் பறக்கின்றன அழகுக் கோலங்களாய் பட்டாம் பூச்சிகள்!
வாழ்த்துக்கள்!
தொடருங்கள் பறக்கட்டும் வண்ணப்பபூச்சிகள்.