PDA

View Full Version : குட்டி கதைரங்கராஜன்
27-11-2008, 04:33 AM
ராமலிங்கம் சந்தோஷமாக இருந்தார், ஆபிஸ்சில் அனைவருக்கும் ஸ்வீட் கொடுத்துக் கொண்டு இருந்தார். அனைவரும் அவரைப் பார்த்து சார் இது கொஞ்சம் ஓவர் தான் சார் என்று சிரித்துக் கொண்டு இருந்தனர். அப்பொழுது அங்கு ஒரு கஸ்டமர் வந்தார். ராமலிங்கம் அவருக்கும் ஸ்வீட்
கொடுத்தார். அவர் அதை சந்தோஷமாக எடுத்துக் கொண்டு

"தாங்கஸ் சார், என்ன சார் விஷசம்"

"என் பையன் ஃப்ஸ்டு கிளாஸ்-ல பாஸ் பண்ணிட்டான்"

"ரொம்ப சந்தோஷம் சார்,...இதை விட பெத்தவங்களுக்கு என் சார் சந்தோஷம் இருக்க முடியும்"

"ஆமாபா எவ்வளவு செலவு செஞ்சேன் தெரியுமா, ஃப்யீஸ், டோனேஷன்னு, அது இதுன்னு 1 லட்சம் ஆச்சிபா. பரவாயில்லை என் மகன் மானத்தை காப்பாத்திடான்"

"ஆமா சார்,..... எனக்கு ஒருத்தன் பொறந்து இருக்கானே தண்டம், கஷ்டப்பட்டு இஞ்சினரிங்க் சீட்டு வாங்கி கொடுத்தால். கடைசி எக்ஸாம்ல கொட்டு அடிச்சிட்டான்"

"சாரிங்க"

"பரவாயில்லை சார் அது அவன் கொழுப்பு, சரி பையன் அடுத்து என்ன மேல் படிப்பு செய்ய போறான்"

"என்ன ஃப்ஸ்டு கிளாஸ் முடிச்சா, செக்கேண்டு கிளாஸ் தானே போகமுடியும்" என்று சிரித்தார் ராமலிங்கம்.

":fragend005::sauer028::fragend005::sauer028::fragend005::sauer028:"

மதி
27-11-2008, 05:45 AM
ஹாஹா.....
நச்சுன்னு சொல்லிட்டீங்க....

கேட்டவர்.. முகத்தில் ஈயாடிட்டு இருக்குமே.. :)

தாமரை
27-11-2008, 06:16 AM
இது கதையல்ல மூர்த்தி.. இன்றைய தேதியில் பங்களூரில் இது நிஜம்..

அனிருத்தைச் சேர்க்க 20000 டொனேஷன்.. ஸ்வேதாவைச் சேர்க்க 30000 டொனேஷன். இன்று அதே பள்ளியில் ப்ரீகேஜி சேர்க்க 70000 டொனேஷன். சொல்லப்போனால் இது ரொம்பக் குறைவு..

கதைன்னா கொஞ்சமாவது கற்பனை கலக்கணும்.. சரியா? :D :D :D

மதி
27-11-2008, 06:22 AM
இது கதையல்ல மூர்த்தி.. இன்றையட் தேதியில் பங்களூரில் இது நிஜம்..

அனிருத்தைச் சேர்க்க 20000 டொனேஷன்.. ஸ்வேதாவைச் ஸெர்க்க 30000 டொனேஷன். இன்று அதே பள்ளியில் ப்ரீகேஜி சேர்க்க 70000 டொனேஷன். சொல்லப்போனால் இது ரொம்பக் குறைவு..

கதைன்னா கொஞ்சமாவது கற்பனை கலக்கணும்.. சரியா? :D :D :D
யம்மாடி.... இம்புட்டா.....??
:rolleyes::rolleyes::rolleyes:
:icon_rollout::icon_rollout::icon_rollout:

தாமரை
27-11-2008, 06:34 AM
யம்மாடி.... இம்புட்டா.....??
:rolleyes::rolleyes::rolleyes:
:icon_rollout::icon_rollout::icon_rollout:

ஒண்ணுமே தெரியாத மாதிரி நடிக்காதீங்க மட்தி. சர்சரண் கல்யாணம் முடிவானப்போ லிஸ்ட் போட்டப்பவே சொன்னனே!!

இன்றைய நிலவரப்படி பெங்களூரில் இருவர் மட்டுமே உள்ள குடும்பத்தின் செலவுப் பட்டியல் இது..

ஒவ்வொரு குழந்தைக்கும் மாதம் 5000 சேர்த்துக் கொள்ளவும்.

வீட்டு வாடகை 10,000
வாகனக் கடன் 3000
உணவுச் செலவு 5000
சினிமா 500
அலைபேசி 2000
பெட்ரோல் 1000
வீட்டுச் செலவுகள் 2500
கேபிள் 250
இணையம் 250
மருத்துவச் செலவு 500
மின்கட்டணம் 250
பயணச் செலவு 1500
ஆயுள் காப்பீடு 3000
ச்மையல் எரிவாயு 400
தண்டச் செலவுகள் 1000

குழந்தை 1 5000
குழந்தை 2 5000

கல்யாணத்தைப் பத்தி யோசிப்பீங்களா இனி?

மதி
27-11-2008, 06:39 AM
மாசம் 40000த்துக்கும் மேல தேவைப்படும் போலருக்கே..

ஆமா... கல்யாணமா அப்படின்னா....??? :( :( :(

ஐரேனிபுரம் பால்ராசய்யா
27-11-2008, 07:11 AM
கதை தான் குட்டி ஆனா விஷயம் பெரிது. தும்ப சென்னாகிதே, வாழ்த்துக்கள்

minmini
27-11-2008, 07:38 AM
ராமலிங்கம் பரவாயில்ல,
ஒரு லச்சம் தானே செலவு செய்திருக்கிரார்
அதை விட செலவு செய்பவர்கள் ஆயிரம் பேர்:icon_ush::icon_ush:

கதை குட்டி என்றாலும் நச் :icon_b::icon_b:

ரங்கராஜன்
27-11-2008, 08:13 AM
ஒண்ணுமே தெரியாத மாதிரி நடிக்காதீங்க மட்தி. சர்சரண் கல்யாணம் முடிவானப்போ லிஸ்ட் போட்டப்பவே சொன்னனே!!

இன்றைய நிலவரப்படி பெங்களூரில் இருவர் மட்டுமே உள்ள குடும்பத்தின் செலவுப் பட்டியல் இது..

ஒவ்வொரு குழந்தைக்கும் மாதம் 5000 சேர்த்துக் கொள்ளவும்.

வீட்டு வாடகை 10,000
வாகனக் கடன் 3000
உணவுச் செலவு 5000
சினிமா 500
அலைபேசி 2000
பெட்ரோல் 1000
வீட்டுச் செலவுகள் 2500
கேபிள் 250
இணையம் 250
மருத்துவச் செலவு 500
மின்கட்டணம் 250
பயணச் செலவு 1500
ஆயுள் காப்பீடு 3000
ச்மையல் எரிவாயு 400
தண்டச் செலவுகள் 1000

குழந்தை 1 5000
குழந்தை 2 5000

கல்யாணத்தைப் பத்தி யோசிப்பீங்களா இனி?

கிழிச்சிது கிருஷ்னகிரி

என்ன சார் இது, போற போக்க பார்த்தா visual synthesiser வழியா தான் நம்ம ஆசை யெல்லாம் நிறைவேத்திக்கனும் போல இருக்கே. பேசாம கற்காலத்துக்கே போலாம் போல இருக்கு.

சிவா.ஜி
27-11-2008, 08:16 AM
எல்லாரும் சொன்ன மாதிரி உண்மையான ‘கதை' நல்லாருக்கு மூர்த்தி.

(ஆமா எதுக்கு எங்க ஊரை கிழிக்கிறீங்க....?)

Narathar
27-11-2008, 08:26 AM
மூர்த்தி கதை அருமை...........

இன்னும் கல்யாணம் ஆகாததால் குழந்தைகளை பள்ளியில் சேர்க்க இவ்வளவுதான் ஆகும் என்ற கற்பனை கணக்கில் எழுதியிருக்கின்றார்......

இங்கு இலங்கையில் அதைவிட கொடுமை நடக்கிறது.. தனியார் பாடசாலைகள் பரவாயில்லை இதுதான் அட்மிஷன் தொகை என்று முடிவு செய்து வைத்துள்ளார்கள். அரச பள்ளிகள் இருக்கிறதே அதுவும் மத்திய கல்லூரிகள்....... லட்சங்களில்தான் வாங்குகின்றார்கள்! அதுவும் டொணேஷன், என்ட்ரன்ஸ், லஞ்சம் என்று தனித்தனியாக லிஸ்ட் கொடுப்பார்கள்!

இந்த கொடுமையை எங்கு சொல்ல..........

தாமரை
27-11-2008, 08:31 AM

பெங்களூரில் அதிக பட்சமாக 5 இலட்சம் வரை டொனேஷன் மட்டும் வாங்குகிறார்கள் நாரதரே!...

பள்ளிக்கட்டணம் வருடத்திற்கு 30000 முதல் 5 இலட்சம் வரை இருக்கு..

ஸ்கூல் ஆரம்பிசிருவோமா?

அன்புரசிகன்
27-11-2008, 08:54 AM
ஒண்ணுமே தெரியாத மாதிரி நடிக்காதீங்க மட்தி. சர்சரண் கல்யாணம் முடிவானப்போ லிஸ்ட் போட்டப்பவே சொன்னனே!!

இன்றைய நிலவரப்படி பெங்களூரில் இருவர் மட்டுமே உள்ள குடும்பத்தின் செலவுப் பட்டியல் இது..

ஒவ்வொரு குழந்தைக்கும் மாதம் 5000 சேர்த்துக் கொள்ளவும்.

வீட்டு வாடகை 10,000
வாகனக் கடன் 3000
உணவுச் செலவு 5000
சினிமா 500
அலைபேசி 2000
பெட்ரோல் 1000
வீட்டுச் செலவுகள் 2500
கேபிள் 250
இணையம் 250
மருத்துவச் செலவு 500
மின்கட்டணம் 250
பயணச் செலவு 1500
ஆயுள் காப்பீடு 3000
ச்மையல் எரிவாயு 400
தண்டச் செலவுகள் 1000

குழந்தை 1 5000
குழந்தை 2 5000

கல்யாணத்தைப் பத்தி யோசிப்பீங்களா இனி?

கதையிலும் இந்த Breakdown ரொம்பவே நல்லாயிருக்கு.... :D

ஆனா துபாயிலும் உங்கள் எரிபொருள் செலவு மிக மிக குறைவாக இருக்கு... இங்கு மாதம் AED: 500 குறைந்தது செலவாகும். உங்களுடையது 100 இலும் குறைவாகவே உள்ளதே.... :eek:

அன்புரசிகன்
27-11-2008, 08:54 AM
பெங்களூரில் அதிக பட்சமாக 5 இலட்சம் வரை டொனேஷன் மட்டும் வாங்குகிறார்கள் நாரதரே!...

பள்ளிக்கட்டணம் வருடத்திற்கு 30000 முதல் 5 இலட்சம் வரை இருக்கு..

ஸ்கூல் ஆரம்பிசிருவோமா?
நான் தான் பீயூன்... சரியா???? :icon_b:

அமரன்
27-11-2008, 09:01 AM
கதையிலும் இந்த Breakdown ரொம்பவே நல்லாயிருக்கு.... :D

ஆனா துபாயிலும் உங்கள் எரிபொருள் செலவு மிக மிக குறைவாக இருக்கு... இங்கு மாதம் AED: 500 குறைந்தது செலவாகும். உங்களுடையது 100 இலும் குறைவாகவே உள்ளதே.... :eek:

ஊதியத்துடன் ஒப்பிட்டுப் பாருங்கள். வீக்கம் சரியாக இருக்கும்..

பள்ளியில் எனக்கென்ன வேலை.

அமரன்
27-11-2008, 09:06 AM
வீட்டுக்கு வீடு XXXX (LKG), xxxxxx(UKG).... என்று பெயர்ப்பலகைகளுக்கு பஞ்சம் இருக்காத நிலையும் எதிர்காலத்தில் வரலாம்.

பல குடும்பங்களில் டொனேஷன் கூட ஒருவகை முதலீடுதாங்கோ.

உண்மையைச் சொன்ன மூர்த்திக்கு ஷொட்டு.

தாமரை
27-11-2008, 09:09 AM
கதையிலும் இந்த Breakdown ரொம்பவே நல்லாயிருக்கு.... :D

ஆனா துபாயிலும் உங்கள் எரிபொருள் செலவு மிக மிக குறைவாக இருக்கு... இங்கு மாதம் AED: 500 குறைந்தது செலவாகும். உங்களுடையது 100 இலும் குறைவாகவே உள்ளதே.... :eek:

1000 ரூபாய்க்கு 20 லிட்டர் பெட்ரோல்
1 லிட்டருக்கு 50 கி.மீ

ஆக 1000 கிலோமீட்டர்கள்.

ஒர் நாளைக்கு 33 கிலோமீட்டர்கள். இது இரு சக்கர வாகனம். அதுவும் இன்றி வெளியூர்களுக்குச் சென்று வர என தனியாக 1500 ரூபாய் ஒதுக்கப்பட்டிருப்பதை கவனிக்க. இது பேருந்துக் கட்டணம். மூவுருளி கட்டணம், பயணத்தின் போது ஏற்படும் செலவுகளுக்கு.

மகிழ்வுந்து வைத்துக் கொண்டால் இதே செலவை 4 ஆல் பெருக்கிக் கொள்ளவும். அதாவது மாதம் 10000.

Narathar
27-11-2008, 09:21 AM
ஸ்கூல் ஆரம்பிசிருவோமா?

இன்றைய தேதியில் உலகில் மிக இலாபகரமான ஒரு தொழில்!

ஆரம்பிச்சுடுவோம்..........

சசிதரன்
22-12-2008, 02:12 PM
ஹா ஹா... சிரிப்பு கதையா மூர்த்தி...

Keelai Naadaan
22-12-2008, 02:50 PM
ஒன்று பெற்றால் ஒளிமயம் என அரசாங்கம் இனிமேல் விளம்பரம் செய்யவே வேண்டாம்.

நடைமுறை வாழ்வில் உள்ள சுமையில் மக்கள் தானாகவே அந்த முடிவுக்கு வந்து கொண்டுதானிருக்கிறார்கள்

vijima
22-12-2008, 05:07 PM
உங்கள் கதையில் நிகழ்கால உண்மை உள்ளது.

நிரன்
28-12-2008, 09:07 PM
நாரதா் சொன்னது போல தனியார் பாடசாலைக்கு ஒரு ரேட் இருக்கும்
அதுக்கு வாங்கிற புத்தகம் அந்த ரேட்டுக்கு மேலால எகிறீடும்:lachen001::lachen001:

தாமரை அண்ணா தந்த கணக்கைப்பார்க்க சற்று பயமாகத்தான் இருக்கிறது
ஆனால் இங்க பரவாயில்லைங்கோவ் அதால பயப்படாம கல்யாணத்தைப்பற்றி யோசிக்கலாம்:lachen001::D:D

நன்றாக உள்ளது சிறுகதை மூா்த்தி அண்ணா!

MURALINITHISH
29-12-2008, 09:30 AM
பர்ஸ்ட்கிளாசுக்கே 1 லட்சம்ன்னு என்ன ஸ்கூலுங்க அது +2விற்க்கு என்ன ஆகும்

இளசு
07-01-2009, 10:28 PM
நகைச்சுவைத் துணுக்காகக் கேட்ட நினைவு..

இங்கே அழகிய குறுங்கதையாக்கிய தக்ஸூக்கும்
உடன் நிதர்சன அலசல் வழங்கிய தாமரைக்கும் பாராட்டுகள்!