PDA

View Full Version : தீவிரவாதிகள் பிடியில் மும்பை!கண்மணி
27-11-2008, 01:30 AM
மும்பையில் ஹோட்டல் தாஜ், ஓபராய், சத்ரபதி சிவாஜி போன்ற முக்கிய இடங்கள் தீவிரவாதிகளின் தாக்குதல்களுக்கு ஆளாகி உள்ளன. நூற்றுக்கணக்கன மக்கள் பிணைக்கைதிகளாக பிடித்து வைக்கப்பட்டுள்ளனர். ராணுவம், போலீஸ், அதிரடிப் படை போன்றவை தீவிரமாய் போராடி வருகின்றன.

விழிப்புடன் இருங்கள் தோழர்களே!...

நமது பாதுகாப்பு, நாட்டின் பாதுகாப்பு இரண்டும் மிக முக்கியம்.

தாமரை
27-11-2008, 03:16 AM
http://news.yahoo.com/s/ap/as_india_shooting

80 க்கும் மேற்பட்டோர் பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள். 200 க்கும் மேற்பட்ட பிணைக்கைதிகள்.

மும்பையில் உள்ள நமது மன்ற உறவுகள் சர்சரண் மற்றும் சாம்பவி..

அவர்களின் நலத்தை அறிய முயற்சிக்கிறேன். தொலை பேசி இணைப்புகள் வேலை செய்யவில்லை.

மும்பையில் அமைதி திரும்பவேண்டும். பிரார்திப்போம்.

aren
27-11-2008, 03:26 AM
தீவரவாதத்தை எக்காரணம் கொண்டு அனுமதிக்ககூடாது. நம் மக்கள் அனைவரும் ஒருங்கிணைந்து இதை எதிர்க்கவேண்டும். பிணைக்கைதிகளை மீட்கவேண்டும். தீவரவாதத்தை ஒடுக்க அனைவரும் அரசியல் பேதங்களின்றி ஒன்றாக செயல்படுவோம்.

வாழ்க இந்தியா!!!!

கண்மணி
27-11-2008, 03:38 AM
சர்சரண் நலம் - அந்தேரியில் இருக்கிறார்..

சிவா.ஜி
27-11-2008, 03:39 AM
சாலையோரம் நின்றுகொண்டு போகும் பொதுமக்களிடமிருந்து 10 ரூபாயும், 20 ரூபாயும் அடித்துப்பிடுங்கும் மும்பை போலீஸ்....இத்தனை தீவிரவாதிகளை எப்படி சமாளிக்க முடியும். ராணுவம் வரவேண்டும். தீவிரவாதிகள் அனைவரும் தயவுதாட்சனயமின்றி கொல்லப்படவேண்டும். முகம்மது அலி ரோட், Biwandi, சிவாஜி நகர், குர்லா போன்ற இடங்களில் வசிப்பவர்கள் மீது கண்காணிப்பை தீவிரப்படுத்தவேண்டும். சந்தேகப்படும் தாடிகளை சுட்டுக் கொல்லவேண்டும்.

எத்தனைக் காலம்தான் பொறுமைக் காப்பது? இதற்கு ஒரு முடிவு வந்தே ஆக வேண்டும்.

ஆதவா
27-11-2008, 03:59 AM
இந்த வருடம் மட்டும் எத்தனை வெடிப்புகள்!! நல்லா நடக்குதுங்க ராஜாங்கம்..

ரங்கராஜன்
27-11-2008, 04:00 AM
சாலையோரம் நின்றுகொண்டு போகும் பொதுமக்களிடமிருந்து 10 ரூபாயும், 20 ரூபாயும் அடித்துப்பிடுங்கும் மும்பை போலீஸ்....இத்தனை தீவிரவாதிகளை எப்படி சமாளிக்க முடியும். ராணுவம் வரவேண்டும். தீவிரவாதிகள் அனைவரும் தயவுதாட்சனயமின்றி கொல்லப்படவேண்டும். முகம்மது அலி ரோட், Biwandi, சிவாஜி நகர், குர்லா போன்ற இடங்களில் வசிப்பவர்கள் மீது கண்காணிப்பை தீவிரப்படுத்தவேண்டும். சந்தேகப்படும் தாடிகளை சுட்டுக் கொல்லவேண்டும்.

எத்தனைக் காலம்தான் பொறுமைக் காப்பது? இதற்கு ஒரு முடிவு வந்தே ஆக வேண்டும்.

இதே தான் என் கருத்தும், நாம் பொறுமை என்ற பெயரில் நமக்கு பின்னால் வரும் சந்ததியினரையும் கோழைகளாக ஆக்கிக் கொண்டு இருக்கிறோம்.

பாரதி
27-11-2008, 04:09 AM
பயங்கரவாதிகளின் கோழைத்தனம் மீண்டும் வெளிப்பட்டிருக்கிறது. அப்பாவி மக்களை ஏ.கே.47 இரக துப்பாக்கிகளால் கொல்வதுதான் இவர்களின் அகராதியில் வீரம் போலும்.

சில மாதங்களுக்கு ஒரு முறை தலைதூக்கும் இந்த அடாவடிகளுக்கு ஒரு முற்றுப்புள்ளி நிச்சயம் அவசியம்.

எதையும் தாங்கும் மக்களின் பொறுமையால் மீண்டும் மும்பை எழும் ; எந்த சவால்களையும் சந்திக்கும் தீரத்தையும் தரும்.

ஆதி
27-11-2008, 04:31 AM
இன்று நேற்றல்ல மூன்று வருடங்களாகவே இவ்வாறான சம்பவங்கள் அங்கிங்கு நேர்ந்த வண்ணமுள்ளன, புலனாய்வு துறையின் ரகசிகள் கண்களில் பார்வை மங்கிவிட்டதா ? மோப்ப சக்தி குறைந்துவிட்டதா ? மீண்டும் இது போலான சம்பவங்கள் நேராமல் இருக்க புலனாய்வு துறையை புணரமைக்க வேண்டும்..

மதி
27-11-2008, 05:02 AM
பயங்கரவாத செயல்கள் நாட்டில் பெருகிக் கொண்டிருக்கின்றன. எங்கே போய் முடியுமோ தெரியவில்லை...

நடந்ததைப் படித்தால் ஏதோ படம் பார்க்கும் உணர்வு. அந்த அளவுக்கு பாதுகாப்பு இல்லாமல் போய்விட்டதா.. இந்தியாவில் வர்த்தகத் தலைநகரில். இனியாவது அரசாங்கங்கள் விழித்து கொள்ள வேண்டும்.

சாம்பவி
27-11-2008, 05:09 AM
நல்லவர்களின் புண்ணியத்தால்.,
நாங்களும் நலமே... !!!!!

நன்றி... !!!!

:(

சிவா.ஜி
27-11-2008, 06:35 AM
மிக்க மகிழ்ச்சிம்மா. எதற்கும் எச்சரிக்கையாக இருங்கள்.

தாமரை
27-11-2008, 07:29 AM
நம்ம மன்மதன் எங்க இருக்கார்?

மன்மதன்
27-11-2008, 07:56 AM
நம்ம மன்மதன் எங்க இருக்கார்?


இங்கேதான் இருக்கேன்.. பத்திரமா.. :)

சுகந்தப்ரீதன்
27-11-2008, 08:05 AM
என்ன சொல்வதென்றே தெரியவில்லை.. முன்பெல்லாம் இத்தகைய நிகழ்வுகள் எப்போதாவதுதான் நிகழும்.. ஆனால் இப்போது மாதகணக்கில்.. இப்படியே போனால் மணிக்கணக்கில் மாறிவிடுமோ என்று அச்சமாக இருக்கிறது..! நாட்டில் உளவுத்துறை பலவீனமடைந்து விட்டதா.. இல்லை தீவிரவாதத்தின் பலம் கூடிவிட்டதா.. ஒன்றுமே புரியவில்லை..!! வழக்கமாக ஒளிந்துக்கொண்டு குண்டுவெடிப்பை நிகழ்த்தும் இக்கோழைகள்.. இந்தமுறை வெளிப்படையாகவே அப்பாவி மக்களை பலியெடுத்திருப்பது... நாட்டின் பாதுகாப்புக்கு விடப்பட்ட சவாலாகவே தெரிகிறது..!! இதுவரை எப்படியோ இனியாவது விழித்துக்கொண்டு அரசாங்கமும் மக்களும் தீவிரவாதத்திற்க்கு எதிராக தீவிரமாக போராடாவிட்டால் நாளை நாமும் நம் சந்ததியும் தீவிரவாதத்தின் பிடியில் சிக்குண்டு சின்னாபின்னமாவதை தடுக்க முடியாமல் போய்விடும்..!!

ஓவியா
27-11-2008, 11:36 AM
மிகவும் வருத்தமான ஒரு விசயம். செய்தி கேட்டு கண்கலங்கி போனேன். இரவெல்லாம் நித்திரை அன்று மனம் கலங்கி போனேன்.

இதுவரை 101 அப்பாவிகள் கொல்லப்பட்டுள்ளனர். 287 மருத்துவமனையில்... எண்ணில் தெரியாத மக்கள் இன்னமும் துப்பாக்கி முனையில் (ஒரு சிலரை இன்று வெளியனுப்பியுள்ளனர்)

என்ன கொடுமை இது, மக்களின் உயிர், 'விலை என்ன'? என்பது போல் நாட்டின் நிலமை. இந்தியாவை எப்படியாவது நாசப்படுத்தி குட்டிச்சுவராக்கிவிட வேண்டும் என்று எத்தனை சதிகள்!!!

மதம் என்ற போர்வையில் தீவிரவாதத்தை உருவாக்கும், பின்பற்றும், மற்றும் அதை இப்படி முட்டாள்தனமான செயலாக உருவக்கும் யாருக்கும் இந்த புண்ணிய பூமியில் மன்னிப்பு கிடைக்காது. இவர்கள் அனைவரும் வாழ தகுதி இழந்தவர்கள்.

பாதிக்கப்பட்ட அனைத்து மக்களுக்கும் அடியேனின் நெஞ்சார்ந்த வருத்தங்கள்.

anna
27-11-2008, 12:56 PM
ஒரு உயிரை கொல்ல இவர்களுக்கு யார் உரிமை கொடுத்தது.அப்பாவி மக்களை கொல்லும் இவர்கள் செயல் தான் வீரமா? இதனால் இவர்களுக்கு என்ன லாபம்.இந்த மாதிரி இழி செயல்களால் இவர்களுக்கும் இவர்கள் சார்ந்த இயக்கத்துக்கும் பெருமையா? இந்த மாதிரி மனித மிருகங்களை கண்டதும் சுட வேண்டும்.இது வரையில் 101 பேரை சுட்டு கொன்று உள்ளனர்.இதில் ஆறு வெளிநாட்டவரும் அடக்கம்.

ஷீ-நிசி
27-11-2008, 01:06 PM
என்று தீருமோ இந்த பிணவெறி?!

தீபா
27-11-2008, 01:33 PM
கிரிக்கெட் போட்டிகளை ரத்து செய்துவிட்டு இங்கிலாந்து தாயகம் திரும்புகிறதாம்..

இனிமேல் இங்கே வருவதற்கும் வெளிநாட்டவரே யோசிப்பார்கள். அப்படி ஒரு மோசமான நிலைமை.

என்னைக் கேட்டால், ஏனென்று தெரியாமல் அப்பாவி மக்களைக் கொல்பவர்களை, ஏனென்று கேட்காமல் கொல்லவேண்டும்.

அல்லது,

தீவிரவாதிகள், தங்களது தாக்குதல்களை போலிஸிடமும் ராணுவத்திடமும் காட்டவேண்டும்....

ஓவியா
27-11-2008, 02:28 PM
செய்தி வலைப்பதிவு எங்கும் இதுவே முன்னுறிமை செய்திகளாகவே இருக்கின்றன, காட்சிகள் நெஞ்சை படபடக்க வைக்கின்றன.....உலகலாவிய முக்கிய செய்தியாக எங்கும் வலம் வருகின்றது.

பிரித்தானியா மற்றும் அமேரிக்கா கடப்பிதழ் வைத்துள்ள மக்களை உள்ளே பினையில் வைத்துள்ளார்களாம்..... (அய்யோ, நினைக்கும் பொழுதே :eek:)

பிரித்தானியாவின் 'சூப்பர் போலிஸ் குருப்' செய்தி வந்ததுமே அங்கே படையுடன் வந்து இரங்கிவிட்டதாம்.....:icon_b:

யூடியூப்பில் மரண என்னிக்கை 101 என்பது இந்தியாவின் கண்துடைப்பு செய்தி என வர்ணித்துள்ளார்கள்... உண்மையான எண்ணிக்கை கடுமையாக இருக்குமாம் :eek:

மதுரை மைந்தன்
27-11-2008, 06:46 PM
தீவிர வாதிகள் பாகிஸ்தானிலிருந்து வந்தவர்கள் என்பது தெளிவாகிக் கொண்டிருக்கிறது. தீவிர வாதிகளுக்கு பயிற்சி கொடுத்து இந்தியாவுக்குள் அனுப்பும் பாகிஸ்தானின் செயலை உலக நாடுகள் வன்மையாகக் கண்டீத்து பாகிஸ்தானை ஓரம் கட்டினால் தான் இத்தகைய வன்முறைகள் ஒடுங்கும்.

தீவிரவாதிகளின் குண்டுவீச்சுக்கு பயந்து சாலையில் செல்பவர்கள் தங்கள் தலையில் கைகளை வைத்து கீழை படுத்துக் கொண்டிருக்கும் காட்சி குலை நடுங்க வைக்கிறது. எனது உறவினர்களும் நண்பர்களும் பாதுகாப்பாக இருக்கிறார்கள் என்று அறிந்து சற்று நிம்மதி அடைந்தாலும் வீட்டை விட்டு வெளியில கிளம்பினால் உயிருடன் திரும்பு வோமா என்ற மும்பை மக்களின் நிலைமை பரிதாபத்திற்குரியது.

அமரன்
27-11-2008, 09:04 PM
மிக மிக வருத்தம் தரும் செயல்.
இப்பாவிகளுக்கு அப்பாவிகள் உயிர் குடித்தாலும் தாகம் தணிவதில்லை.

விக்ரம்
27-11-2008, 09:06 PM
மிகவும் கொடூரமான, மனிதத் தன்மையற்ற செயல். இதற்கு உள்ளூர் மக்கள் சிலர் உறுதுணையாக இருக்கிறார்கள். யாரை பயமுறுத்த இந்தப் படுகொலைகள்??!!

முட்டாள் ஜென்மங்கள். உயிரின் விலை தெரியாதவர்கள். இவர்கள் எப்படி மனிதனாவார்கள்.

ஓவியா
27-11-2008, 11:10 PM
மிகவும் கொடூரமான, மனிதத் தன்மையற்ற செயல். இதற்கு உள்ளூர் மக்கள் சிலர் உறுதுணையாக இருக்கிறார்கள். யாரை பயமுறுத்த இந்தப் படுகொலைகள்??!!

முட்டாள் ஜென்மங்கள். உயிரின் விலை தெரியாதவர்கள். இவர்கள் எப்படி மனிதனாவார்கள்.

ஆமாம். நானும் யூடியூப்பில் படித்தேன் உள்ளூர் 'ஆர்மி டிப்லொமட்ஸ்' சிலர் இதில் ஈடுபட்டுள்ளார்கள் என்று. உண்மையா பொய்யா என்று தெரியவில்லை.

Narathar
28-11-2008, 01:41 AM
வருத்தம் தரும் செய்தி.............
தீவிர வாதம் எதை சாதிக்க துடிக்கிறது?
அப்பாவி மக்களை கொன்றுகுவிப்பதால் இவர்களுக்கு விடுதலையோ விமோசனமோ கிடைத்துவிடப்போகின்றதா?

ராஜா
28-11-2008, 04:05 AM
உண்மையைச் சொல்லப்போனால்..

ஓட்டுப் பொறுக்கி அரசியல்வாதிகளால் எவ்விதத் திட்டவட்ட முடிவும் எடுத்து தீவிரவாதத்தை ஒழிக்க இயலாது.

இன்னும் சொல்லப்போனால், தீவிரவாதிகளுடன் சமரசம் செய்துகொள்ளும் போக்குதான் நீடிக்கிறது.

பெரிய பரப்பளவும், மக்கள்தொகையும், கவனக்குறைவும் கொண்ட நம் நாடு தீவிரவாதிகளின் வேட்டைக்காடாக எளிதில் மாறுவதையும் மறுப்பதற்கில்லை.

வசீகரன்
28-11-2008, 11:10 AM
நாட்டின் பாதுகாப்பே கவலை அளிக்கும் விதமாக இருக்கிறது... சில காலங்களுக்கு முன் தீவிரவாதிகள் பாராளுமன்றத்தை தகர்க்க ஊடுரூவியது நினைவிருக்கலாம்...! சர்வ பாதுகாப்பு இருக்கும் இடங்களிலே தீவிரவாதிகள் நுழைந்து விடுகிறார்கள்... தீவிரவாதிகள் மக்களோடு மக்களாக கலந்திருக்கிறார்கள்.. சாதாரண மனிதர்கள் போல் நடமாடுகிறார்கள்.. மிக பெரிய வணிக தலைநகரான மும்பை இல் நடந்திருக்கும் சம்பவமே இதற்கு நல்ல உதாரணம்...! நாட்டின் உளவுதுறை எல்லை பாதுகாப்பு எல்லாம் விழிப்புடன் இருக்கிறார்களா...!!!

தீபன்
30-11-2008, 05:12 AM
பாதிக்கப்பட்ட மக்களுக்கு என் அஞ்சலிகள் + அனுதாபங்கள்.

Narathar
30-11-2008, 06:59 AM
பயங்கரவாத ஊடுறுவல்களை தவிர்க்க தவறியதை ஏற்றுக்கொண்டு
தனது உள்நாட்டலுவல்கள் பதவியை ராஜினாமா செய்துள்ளாராம்
இந்திய உள்நாட்டலுவல்கள் அமைச்சர் சிவராஜ் பட்டீல்

முழுமையான செய்தி இங்கே.............

http://thatstamil.oneindia.in/news/2008/11/30/india-home-minister-shivraj-patil-finally-resigns.html

Mano.G.
30-11-2008, 08:57 AM
மலேசிய பிரஜையான ஹேமா எனும் பெண்மணி இந்த
சம்பவத்தில் பலியானார் என செய்திகள் வந்துள்ளது,
அதன் சுட்டி இதோ :

http://www.thestar.com.my/news/story.asp?file=/2008/11/30/nation/2684733&sec=nation


இந்த தீவிரவாதத்தை எப்படி ஒடுக்குவது, தீவிரவாதிகளின் கோரிக்கை தான் என்ன? ஏன் இந்த வெறி , தெரியவில்லையே????????
மனோ.ஜி,

சூரியன்
30-11-2008, 10:02 AM
இந்த நிகழ்வினால் இந்தியாவுக்கு வரும் ஆர்டர்கள் தடைபடும் வாய்ப்புள்ளது.

Narathar
30-11-2008, 10:20 AM
தாக்குதலுக்கு தார்மீக பொறுப்பேற்று பதவியை ராஜினாமச்செய்த
உள்துறை அமச்சர் சிவராஜ் பட்டீலுக்கு பதிலாக தமிழரான ப.சிதம்பரம் அவர்கள்
உள்நாட்டலுவல்கள் அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்

Keelai Naadaan
30-11-2008, 11:14 AM
தொடர்ந்து பல சம்பவங்கள்.
சிவராஜ் பாட்டீல் ராஜினாமா தகுந்தது தான்.
ஆனால் அது மட்டும் போதாது. கடுமையான சட்டங்கள் வேண்டும்.
அவை சரியான முறையில் பயண்படுத்தவும் வேண்டும்

சிவா.ஜி
30-11-2008, 11:38 AM
பாதுகாப்புத்துறை செயலர் நாராயணனும் ராஜினாமா செய்திருக்கிறார்.( அப்பாடா இனி தவறான தகவல்களை இந்திய அரசுக்கு கொடுத்து இலங்கைத் தமிழருக்கு துரோகம் செய்துவந்த நாராயணனின் தொல்லை இருக்காது)

இன்பா
03-12-2008, 03:46 AM
செப் - 11, 2001 அன்று வர்த்தக கட்டிடங்கள் மீது விமானங்களை மோத விட்ட கல் நெஞ்சர்களை அதிரடி அட்டாக் செய்தது அமெரிக்கா. தாக்கப்பட்டதற்கு காரணமான அல்கொய்தா தீவிரவாத அமைப்பில் பின்லேடனுடன் சேர்ந்து சிலர் மட்டுமே தப்பித்தனர். மீண்டுமொரு தாக்குதல் நடத்த அவர்களிடத்தில் ஆள்பலமோ பணபலமோ ஆயுத பலமோ இல்லாமல் பய்ந்து ஒளிந்துக்கொண்டது.

ஆனால் நாம் மட்டும் தான் அடிவாங்கிக்கொண்டு இன்னும் பேசிக்கொண்டிருக்கின்றோம். அவன் அடுத்த அடி எங்கே வைக்கலாம் என்று திட்டம் செய்துக்கொண்டிருக்கின்றான்.

ஓவியா
03-12-2008, 10:28 AM
செப் - 11, 2001 அன்று வர்த்தக கட்டிடங்கள் மீது விமானங்களை மோத விட்ட கல் நெஞ்சர்களை அதிரடி அட்டாக் செய்தது அமெரிக்கா. தாக்கப்பட்டதற்கு காரணமான அல்கொய்தா தீவிரவாத அமைப்பில் பின்லேடனுடன் சேர்ந்து சிலர் மட்டுமே தப்பித்தனர். மீண்டுமொரு தாக்குதல் நடத்த அவர்களிடத்தில் ஆள்பலமோ பணபலமோ ஆயுத பலமோ இல்லாமல் பய்ந்து ஒளிந்துக்கொண்டது.

ஆனால் நாம் மட்டும் தான் அடிவாங்கிக்கொண்டு இன்னும் பேசிக்கொண்டிருக்கின்றோம். அவன் அடுத்த அடி எங்கே வைக்கலாம் என்று திட்டம் செய்துக்கொண்டிருக்கின்றான்.

சில தீவிரவாத அமைப்புகளுக்கும் அல்ஃகைடாவிற்ற்க்கும் அவர்களை சார்ந்தவர்களிடமும் ஆள்பலம், பணபலம், ஆயுதபலம் என எல்லாமே இருக்கிறது.

பின் விளைவுகளுக்கு பயந்துதான் அவர்கள் கொஞ்சம் அடக்கி வாசிக்கின்றனர் என்று நான் நினைக்கிறேன்........

அய்யா
03-12-2008, 10:45 AM
சிதம்பரம் வருகைக்குப்பிறகாவது முன்னேற்றம் இருக்கிறதாவென்று பார்க்கலாம்.