PDA

View Full Version : அந்நியனான நண்பன்



மதுரை மைந்தன்
26-11-2008, 11:01 AM
மும்பையை அடுத்த தாணா நகரத்தில் நாங்கள் அப்போது வசித்து வந்தோம். எனது தந்தையார் பல வருடங்களுக்கு முன்பே தமிழ்நாட்டிலிருந்து தாணாவிற்கு வந்து வேலை பார்த்தார். நானும் எனது இரு தங்கைகளும் தாணா பெடேகர் ஆஸ்பத்திரியில் தான் பிறந்தோம்.

உயர் பள்ளியில் சேரும் நேரம் வந்த போது எனக்கு பக்கத்து மராத்தி பள்ளியில் தான் இடம் கிடைத்தது. வகுப்பில் என்னைத் தவிர மற்ற அனைவரும் மராத்தி பேசுபவர்களாக இருந்தார்கள். அவர்கள் என்னை ஒரு அந்நியனாகவே பார்த்தார்கள் ஒரே ஒரு பையனைத்தவிர அவன் தான் ஷிண்டே. என்னிடம் நட்பாக இருந்தான். எனது பெஞசில் என் பக்கத்தில் உடகார்ந்தான். அடிக்கடி காரணமில்லாமலேயே என்னைப் பார்த்து சிரிப்பான். எனக்கு புரிகிறதா என்று அறிந்து கொள்ளாமலே சரளமாக மராத்தியில் என்னிடம் பேசுவான். மராத்தி கட்டயா பாடமாக இருந்ததால் நாளடைவில் எனக்கு அவன் என்ன சொல்கிறான் என்பது புரியத் தொடங்கியது. பெரும்பாலும் சினிமாக் கதை பேசுவான்.

முதல் நாள் கிரிக்கெட் விளையாடச் சென்ற போது மற்ற மராத்தி பையன்கள் என்னை விநோதமாக பார்க்க ஷிண்டே என்னை மாஜா பாயி (என்னோட சகோதரன்)என்று அறிமுகப் படுத்தினான். எனக்கு ஸ்பின் பௌலிங் போட நன்றாக வருமாதலால் டீமில் என் மதிப்பு உயர்ந்தது.

வகுப்பில் நான் மராத்தி கற்று நன்றாகப் பேசத் தொடங்கினேன். ஷிண்டேயோ என்னிடமிருந்து தமிழ் கற்றுக் கொண்டு சரளமாக தமிழில் பேசலானான். என்னை அவர்களுடய வீட்டிற்கு கூட்டிச் செல்வான். என்னுடன் எங்கள் வீட்டுக்கு அவன் வருவான்.

அவனுடய வீட்டிற்கு சென்ற சமயம் அவனது வயதான பெற்றோர் என்னை அன்புடன் உபசர்த்தனர். ஷிண்டேயின் தந்தை என்னிடம் " நான் மூச்சு விடறதுக்கு முன்னாலே மதுரை ராமேஸ்வரம் சென்று வர ஆசைப் படுகிறேன் கூட்டிச் செல்வாயா? என்று கேட்டார். நானும் சிரித்துக் கொண்டே தலையாட்டினேன்.

அவன் எங்கள் விட்டிற்கு வந்து அம்மாவிடம் " எனக்கு ஒரு கப் காபி கிடைக்குமா என்ற தன்னுடய மழலைத் தமிழில் கேட்ட போது அம்மாவுக்கு ஒரே சிரிப்பு.எங்கள் நட்பு நாளொரு சினிமாவும் பொழுதொரு கிரிக்கெட் மாட்சுமாக வளர்ந்தது.

பள்ளி இறுதி தேர்வில் (மகாராஷ்டிரா போர்ட் எக்ஸாம்) நான் 95 சதவீதம் மார்க்கில் பாஸ் செய்தேன். அவனோ கோட் அடிச்சான். அதன் பின் நாங்கள் பிரிய வேண்டியதாயிற்று. அவர்கள் வீட்டைக் காலி செய்து தாணாவிலேயே வேறொரு பகுதிக்கு சென்றனர். நான் சயானில் உள்ள தென்னிந்தியக் கல்லூரியில் சேர்ந்து முதுகலைப் பட்டம் வாங்கி தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றத் தொடங்கினேன். தென்னிந்தியக் கல்லூரியில் படிக்கும் போது பல தமிழ் நண்பர்கள் கிடைத்ததால் ஷிண்டேயை மறந்தே போனேன்.

இப்படி இருக்கையில் ஒரு நாள் மும்பையில் கலவரம் வெடித்தது. ஒருகட்சி காரர்கள் தென்னிந்தியர் மீது தாக்குதல்களை நடத்தினர். அந்த நாட்களை இப்போது நினைத்தாலும் குலை நடுங்குகிறது. அந்த கட்சித் தொண்டரகள் எலக்ட்ரிக் ட்ரெயினில் எல்லோருடய பாஸ்களை பிடுங்கி அதில் தென்னிந்திய பெயர் உள்ளவர்களின் மீது தாக்குதல்களை நடத்தினார்கள். நான் அதிலிருந்து தப்ப முடிந்ததற்கு காரணம் என்னுடய பெயர் கணேஷ் என்பதாலும் எனக்கு சரளமாக மராத்தி பேச வந்ததாலும் தான்.

ஒரு ஞாயிற்றுக் கிழமை இந்திப் படம் ஒன்றைப் பார்த்து விட்டு இரவில் தனியாக வீடு திரும்பிக் கொண்டிருந்தேன். ஏதோ ஞாபகத்தில் சற்று இருட்டாய் இருந்த அந்த சந்துக்குள் நுழைந்தவுடன் தான் அங்கு அந்த கட்சியின் கிளை ஆபீஸ் இருக்கு என்று நினைவுக்கு வந்தது. தூரத்தில் சிலர் கையில் தடி சைக்கிள் செயின் சகிதமாக நின்று கொண்டு நான் வருவதை பார்த்துக் கொண்டிருந்தார்கள். கை கால் பதற்றத்துடன் திரும்பி ஓடினால் துரத்துவார்களோ என்ற பயத்தில் நான் முன்னேறினேன்.

அவர்களை நெருங்கியவுடன் பார்த்தேன் அந்த கும்பலில் ஷிண்டேயும் இருந்தான். அவனைப் பார்த்தும் சற்று தெம்பு வர " என்ன ஷிண்டே எப்படி இருக்கே?" என்று சத்தமாக கேட்டேன். ஷிண்டே எனக்கு தெரிந்தவன் என்றால் அவர்கள் என்னை ஒன்றும் செய்ய மாட்டார்கள் என நினைத்தேன். ஆனால் முன் யோசனை இல்லாமல் தமிழில் நான் சொன்னது என்னைக் காட்டிக் கொடுத்து விட்டது.

அவர்களில் ஒருவன் ஷிண்டேயிடம் மராத்தியில் "இந்த காலா மதராஸியை உனக்கு முன்பே தெரியுமா?" என்று கேட்டான். ஷிண்டே அதற்கு தலை அசைத்து " தயவு செய்து அவனை ஒன்றும் செய்யாதீர்கள். அவன் ரொம்ப நல்லவன்" என்றான். அவன் இவ்வாறு சொன்னதும் மற்றவர்கள் ஒன்ற கூடி தங்களுக்குள் பேசிக் கொண்டனர். அவர்களில் ஒருவன் " இவன் உன்னோட நண்பனாக இருக்கலாம் ஆனால் மதராஸிகளைத் தாக்கி அவர்களுக்கு பாடம் புகட்ட வேண்டும் என்று மேலிடத்து உத்தரவு. ஆகவே நீயே அவனை தாக்கு இல்லையேல் அவனோடு சேர்த்து உன்னையும் கொன்று குழி தோண்டி புதைத்து விடுவோம்" என்று குரூரமாக கூறினான்.

நான் ஷிண்டேயின் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தேன். திடீரென்று என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கி ஷிண்டே சைக்கிள் செயினால் என்னை அடித்தான். எல்லோருமாக கட்டையாலும் சைக்கிள் செயின்களாலும் என்னைத் தாக்க நான் நினைவிழந்து கீழே விழுந்தேன்.

பலத்த கட்டுக்களுடன் ஆஸ்பத்திரில் கண் விழித்த எனக்கு எத்தனை நாளாக அங்கிருக்கிறேன் யார் என்னை கொண்டு வந்து சேர்த்து என்று புதிராக இருந்தது. வலிகளுக்கு நடுவே ஷிண்டேயின் ஞாபகம் வர மற்றவர்கள் அடித்த அடி உடம்பில் வலிக்க அவன் அடித்தது நெஞ்சில் வலித்தது. பக்கத்தில் இருந்த பெற்றோர சகோதரிகள் இவர்களைப் பார்த்து சற்று வலி குறைந்த மாதிரி இருந்தது.

அந்த கருங்காலி வந்திருக்கான்னு அம்மா சொல்ல ஷிண்டே கையில் ஒரு பூங்கொத்துடன் தயங்கி தயங்கி என்னருகே வந்தான். அம்மாவால் பொறுக்க முடியவில்லை " அடப் பாவி உன்னையும் என்னோட ஒரு பிள்ளையா நினைச்சேனே இப்படி பண்ணிட்டயே" என்று அழுதாள். ஷிண்டே அம்மாவின் காலடியில் விழுந்தான் "என்னை மன்னிச்சுடுங்க அம்மா" என்று கதறினான். " அன்னைக்கு நான் கணேஷை அடிக்கலைனா அவங்க இன்னும் மோசமா அவனை அடிச்சு கொன்றிருப்பார்கள். அந்த நேரத்தில் எனக்கு வேற வழியே தெரியலை" னு அவன் கதறவும் மனது சற்று அமைதியாயிற்று. ஷிண்டே மேலும் சொன்னான் "நான் அந்த கட்சியிலிருந்து விலகிட்டேன் கணேஷ். உனக்கு உடம்பு பூரணமா குணமாக வேண்டி சித்தி விநாயகர் கோயிலுக்கு தினம் சென்று பிரார்த்திக்கிறேன்" என்றவுடன் அவன் கொண்டு வந்த பூச் செண்டை எடுத்து நட்பை உறுதிப் படுத்தினேன்.

ரங்கராஜன்
26-11-2008, 12:13 PM
நல்லா இருந்தது நண்பரே, நீங்கள் தப்பாக நினைக்க மாட்டீர்கள் என்ற நம்பிக்கையில் ஒன்னு சொல்கிறேன். உங்களுடைய எழுத்துக்கள் கரு எப்பொழுதும் ஆட்டோபயோகிராபியை சார்ந்து இருக்கு, அதனால் இந்த கதையில் உங்களை தவிர என்னால் வேறு எதுவுமே கவனிக்க முடியலை, இதை சிறுகதையாக எழுதும் பொழுது, நான் என்று போடாமல் கணேஷ்னு உங்க பெயரையே போட்டு இருந்தீங்கனா சிறுகதையாக முழுமை பட்டிருக்கும், மற்றபடி கதை நல்லா இருந்தது, உங்களின் ரா ரைட்டிங்கின் ரசிகன் நான். நன்றி

மதி
26-11-2008, 12:30 PM
அழகாக கோர்வையாக கதை சொல்ல வருகிறது உங்களுக்கு..
ஷிண்டேயின் செயலில் கணேஷ் அதிர்ச்சி அடைந்தாலும் காலத்திற்கேற்ற மாதிரி தானே அவன் நடந்து கொண்டான்...

நல்ல கதைக்கு பாராட்டுகள் மதுரை மைந்தரே.

ஐரேனிபுரம் பால்ராசய்யா
26-11-2008, 12:36 PM
ஒரு முதிர்ந்த அனுபவம் சிறுகதையாக பதியப்பட்டிருப்பது அருமை. தனது பால்ய கால நண்பனின் விலகாத நட்பு, சூழ்நிலையின் தாக்கம், ஆகியவற்றை சித்தரித்த விதம் நன்றாக இருந்தது. பாராட்டுக்கள்.

அமரன்
27-11-2008, 07:20 AM
நட்பை மேன்மைப்படுத்தும் கதைகளை எனக்கு அதிகம் பிடிக்கும்.
தன்னிலை இயல்பாக கதை நகர்வதால் உண்மைச் சம்பவமோ என்ற எண்ணம் அடிக்கடி எட்டிப்பார்க்கிறது.

அம்மா அடிக்கும் போது அப்பாவை துணைக்கழைப்பது தான் அதிகமாக அடித்தால் தடுப்பார் என்பதுக்காக என்று தளபதி சொன்னது ஞாபகத்துக்கு வருது.

கட்சியின் பெயர்களில் மாற்றம் செய்யலாமோ?

பாராட்டுகள் மதுரை மைந்தன்.

மதுரை மைந்தன்
27-11-2008, 09:16 AM
நல்லா இருந்தது நண்பரே, நீங்கள் தப்பாக நினைக்க மாட்டீர்கள் என்ற நம்பிக்கையில் ஒன்னு சொல்கிறேன். உங்களுடைய எழுத்துக்கள் கரு எப்பொழுதும் ஆட்டோபயோகிராபியை சார்ந்து இருக்கு, அதனால் இந்த கதையில் உங்களை தவிர என்னால் வேறு எதுவுமே கவனிக்க முடியலை, இதை சிறுகதையாக எழுதும் பொழுது, நான் என்று போடாமல் கணேஷ்னு உங்க பெயரையே போட்டு இருந்தீங்கனா சிறுகதையாக முழுமை பட்டிருக்கும், மற்றபடி கதை நல்லா இருந்தது, உங்களின் ரா ரைட்டிங்கின் ரசிகன் நான். நன்றி

பாராட்டுக்களுக்கு நன்றி murthy அவர்களே. நீங்க சொன்ன மாதிரி ஆட்டோபயாகராபிக்கலா எழுதினாத்தான் இந்த மாதிரி உண்மைச் சமபவங்களை அடிப்படையாகக் கொணடு எழுதும்போது வசதியாக இருக்கிறது. உங்கள் ஆலோசனையை ஏற்றி இனி எழுதப் போகும் கதைகளில் மூன்றாவது மனிதர்களின் வார்ததைகளில் எழுத முயற்சிக்கிறேன்.

மதுரை மைந்தன்
27-11-2008, 09:17 AM
அழகாக கோர்வையாக கதை சொல்ல வருகிறது உங்களுக்கு..
ஷிண்டேயின் செயலில் கணேஷ் அதிர்ச்சி அடைந்தாலும் காலத்திற்கேற்ற மாதிரி தானே அவன் நடந்து கொண்டான்...

நல்ல கதைக்கு பாராட்டுகள் மதுரை மைந்தரே.

உங்கள் பாராட்டுக்கள் எனக்கு கள் குடித்த போதையைத் தருகிறது. நன்றி மதி அவர்களே

மதுரை மைந்தன்
27-11-2008, 09:20 AM
ஒரு முதிர்ந்த அனுபவம் சிறுகதையாக பதியப்பட்டிருப்பது அருமை. தனது பால்ய கால நண்பனின் விலகாத நட்பு, சூழ்நிலையின் தாக்கம், ஆகியவற்றை சித்தரித்த விதம் நன்றாக இருந்தது. பாராட்டுக்கள்.

உங்களைப் போன்ற தேர்ந்த எழுத்தாளரிடமிருந்து வந்த பாராட்டுக்களை பொக்கிஷமாக வைத்திருப்பேன். நன்றி.

மதுரை மைந்தன்
27-11-2008, 09:27 AM
நட்பை மேன்மைப்படுத்தும் கதைகளை எனக்கு அதிகம் பிடிக்கும்.
தன்னிலை இயல்பாக கதை நகர்வதால் உண்மைச் சம்பவமோ என்ற எண்ணம் அடிக்கடி எட்டிப்பார்க்கிறது.

அம்மா அடிக்கும் போது அப்பாவை துணைக்கழைப்பது தான் அதிகமாக அடித்தால் தடுப்பார் என்பதுக்காக என்று தளபதி சொன்னது ஞாபகத்துக்கு வருது.

கட்சியின் பெயர்களில் மாற்றம் செய்யலாமோ?

பாராட்டுகள் மதுரை மைந்தன்.

சரியாக சொன்னீரகள். இது ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டது. மும்பையில் 30 ஆண்டுகளுக்கு முன்பாக சிவ சேனைக் காரர்கள் தென்னிந்தியரைத் தாக்கியது அனைவரும் அறிந்ததே. அதனால் அவரகள் பெயர்களைச் சொல்வதில் பாதகமில்லை என்பது என் கருத்து. மன்றத்து கோட்பாடுகளுக்கு குந்தகம் விளைவிக்கும் என்றால் மாற்று வதில் எனக்கு வருத்தமில்லை. உங்கள் பாராட்டுக்களுக்கு நன்றி.

பி;கு: நண்பர்களைப் பற்றிய கதை பிடிக்கும் எனறால் நான் ஏற்கனவே பதிவு செய்துள்ள ஒரு நண்பனை இழந்தேன் கதையை படியுங்கள்.

சிவா.ஜி
27-11-2008, 09:41 AM
நானும் மும்பைவாசியாய் இருந்தவனாதலால், கதையின் தாக்கம் எனக்குள் பெரிதாக.....

ஷிண்டேயின் அந்த நேர செயலிலும் தன் நன்பனை உயிரோடு பார்க்க வேண்டுமென்ற நட்பு தெரிகிறது. சேரக்கூடாத இடத்தில் சேர்ந்தால், நல்ல பண்புகளையும் இழக்கவேண்டி வரும் என்று ஷிண்டே நிரூபிக்கிறான்.

நல்ல எழுத்து நடைக்கு பாராட்டுக்கள் மதுரை மைந்தரே...

பாரதி
27-11-2008, 10:10 AM
மோசமான குழுவில் இணைந்தாலும் நட்பின் ஆழத்தால், எங்கோ ஒளிந்திருந்த மனிதத்தை வெளிக்காட்டியுள்ள ஷிண்டே..யை பாராட்டத்தோன்றுகிறது. அந்நியமான நண்பன் என்பதை விட இன்னும் அன்யோன்யமான நண்பன் என்பது சரியாக இருக்கும் எனத் தோன்றுகிறது. இத்தகைய நிகழ்வுகளை நினைவுக்கு வரும்போது பதிந்து விடுங்கள் மதுரை மைந்தரே. நல்ல நடையில் கதையைத் தந்ததற்கு பாராட்டு.

(இது உண்மை நிகழ்வென்பதால் குறிப்பிட்ட குழுவை உண்மைப்பெயரில் அழைப்பதா அல்லது குறியீட்டில் உணர்த்துவதா என்பதை முடிவு செய்துகொள்ளுங்கள் நண்பரே.)

மதுரை மைந்தன்
27-11-2008, 10:40 AM
நானும் மும்பைவாசியாய் இருந்தவனாதலால், கதையின் தாக்கம் எனக்குள் பெரிதாக.....

ஷிண்டேயின் அந்த நேர செயலிலும் தன் நன்பனை உயிரோடு பார்க்க வேண்டுமென்ற நட்பு தெரிகிறது. சேரக்கூடாத இடத்தில் சேர்ந்தால், நல்ல பண்புகளையும் இழக்கவேண்டி வரும் என்று ஷிண்டே நிரூபிக்கிறான்.

நல்ல எழுத்து நடைக்கு பாராட்டுக்கள் மதுரை மைந்தரே...

உஙகளது பாராட்டுக்களுக்கு மிக்க நன்றி சிவா.ஜி அவர்களே

மதுரை மைந்தன்
27-11-2008, 10:44 AM
மோசமான குழுவில் இணைந்தாலும் நட்பின் ஆழத்தால், எங்கோ ஒளிந்திருந்த மனிதத்தை வெளிக்காட்டியுள்ள ஷிண்டே..யை பாராட்டத்தோன்றுகிறது. அந்நியமான நண்பன் என்பதை விட இன்னும் அன்யோன்யமான நண்பன் என்பது சரியாக இருக்கும் எனத் தோன்றுகிறது. இத்தகைய நிகழ்வுகளை நினைவுக்கு வரும்போது பதிப்பு விடுங்கள் மதுரை மைந்தரே. நல்ல நடையில் கதையைத் தந்ததற்கு பாராட்டு.

(இது உண்மை நிகழ்வென்பதால் குறிப்பிட்ட குழுவை உண்மைப்பெயரில் அழைப்பதா அல்லது குறியீட்டில் உணர்த்துவதா என்பதை முடிவு செய்துகொள்ளுங்கள் நண்பரே.)

கதையைப் பாராட்டியதற்கு மிக்க நன்றி பாரதி அவர்களே. உங்களது ஆலோசனையையும் நண்பர் அமரன் அவர்களின் ஆலோசனையையும் ஏற்று கட்சியின் பெயரை நீக்கி விட்டேன்.

அமரன்
27-11-2008, 10:50 AM
வேண்டுகோளை ஏற்று திருத்தியமைக்கு நன்றிகள் மதுரை மைந்தன்.

Narathar
13-12-2008, 03:04 AM
மனதை கனக்க வைக்கும் கதை! அல்ல அல்ல உண்மை.... இப்படியான சம்பவங்கள் பல இலங்கையிலும் நடந்திருக்கின்றன.......

இலங்கையில் 1983 கலவரத்தை நினைவுபடுத்துகின்றது உங்கள் கதை, தாயா பிள்ளையாய் பழகியவர்களெல்லாம் பகையாளிகளான கெட்ட நேரமது! ஆனால் தூய நட்பால் காப்பாற்றப்பட்டவர்கள் பலரும் இருக்கத்தான் செய்கின்றார்கள்!

பாபு
13-12-2008, 04:05 AM
நல்ல இருக்கு. கொஞ்சம் சொல்கிற ஸ்டைலை மாத்தினா இன்னும் நல்லா வந்திருக்கும் என்பது என் அபிப்ராயம்.

மதுரை மைந்தன்
13-12-2008, 06:27 AM
மனதை கனக்க வைக்கும் கதை! அல்ல அல்ல உண்மை.... இப்படியான சம்பவங்கள் பல இலங்கையிலும் நடந்திருக்கின்றன.......

இலங்கையில் 1983 கலவரத்தை நினைவுபடுத்துகின்றது உங்கள் கதை, தாயா பிள்ளையாய் பழகியவர்களெல்லாம் பகையாளிகளான கெட்ட நேரமது! ஆனால் தூய நட்பால் காப்பாற்றப்பட்டவர்கள் பலரும் இருக்கத்தான் செய்கின்றார்கள்!

நன்றி நணபர் நாரதர் அவர்களே. இலங்கையில் நடந்த நடக்கும் கொடுமைகளின் வலியை நான் உணர்கிறேன். லண்டனில் வசித்தபோது ஒரு இலங்கை நணபர் தான் எவ்வாறு உயிர் தப்பி லண்டனுக்கு வந்தார் என்பதை விவரித்த போது கண் கலங்கினேன். சிரித்வர்கள் வாழ்ந்ததில்லை அழுதவர்கள் கெட்டதில்லை என்ற சரித்திரத்தை காலம் சிங்களவருக்கு பாடம் புகட்டும்.

மதுரை மைந்தன்
13-12-2008, 06:33 AM
நல்ல இருக்கு. கொஞ்சம் சொல்கிற ஸ்டைலை மாத்தினா இன்னும் நல்லா வந்திருக்கும் என்பது என் அபிப்ராயம்.

பாராட்டுக்களுக்கு மிக்க நன்றி பாபு சார். நான் இந்தக் கதையை ஒரு உந்ததலில் எழுதி உடனே பதிவு செய்ததால் நீங்கள் கூறுவது போல ஸ்டைலை மாத்த முயற்சிக்க வில்லை. இது ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டது என்பதால் இவ்வாறு எழுதியுள்ளென். இனி எழுதப் போகும் கதைகளில் ஸ்டைலை மாற்ற முயற்சிக்கிறேன்.

அக்னி
13-12-2008, 09:31 AM
சமுதாயத்தின் பொதுவான துன்பியல் நிகழ்வுகள்,
தனிப்பட்ட ஒவ்வொருவரிலும் ஒவ்வோர்விதத்தில் எதிரொலிக்கும்.

அந்தவகையில்,
உங்கள் கதையில், நிகழ்வின் தாக்கம் நன்றாகவே தெரிகின்றது.
கூடவே, கதை உங்களைச் சார்ந்திருப்பதால், இன்னமும் அதிகமாக மனதிற் கனக்கின்றது.

அந்த நிகழ்வை நேரடியாகக் கண்ணுற்ற நிலையில், இப்போது நான்.

”நாய் வேடமிட்டால், குரைத்துத்தான் ஆகவேண்டும்”
என்பார்கள்.
குரைப்பது எம் இயல்பு இல்லை என்றாலும்,
தரித்த வேடம் குரைக்க வைக்கின்றது.

ஆனால்,
ஜாதி, மத விடமேற்றப்பட்ட கலவரங்கள்,
எமக்கு என்றுமே வரம் தரப்போவதுமில்லை.
நம்மைத் தரமுயர்த்தப் போவதுமில்லை.
அவை, நம்மையும், நம் நாட்டையும் குதறித்தான்போகும்.

பாராட்டுக்கள் மதுரை மைந்தரே...