PDA

View Full Version : என் கல்யாணத்துக்கு என்ன அவசரம்?



ரங்கராஜன்
25-11-2008, 12:01 PM
என் கல்யாணத்துக்கு என்ன அவசரம்?


கணேஷ் தன்னுடைய படுக்கையில் சாய்ந்துக் கொண்டு கையில் பேட்டர் போட்டோகிராப்பி (புகைப்பட பத்திரிக்கையை)-ஐ பார்த்துக் கொண்டு இருந்தான். அவனின் அம்மா தட்டில் இட்லியுடன் வந்து

"டேய் எழுந்து குளிடா, ஞாயித்திகிழமை-னா குளிக்கமாட்டியா?" என்றாள்.

"ஞாயித்திகிழமை-னா லீவு தானே, எல்லாத்துக்கும் தான்" என்று திரும்பி படுத்துக் கொண்டான்.

"சரி இந்தா இட்லியை சாப்பிட்டு படி, பல்லு துலக்குனியா இல்லையா"

"சிங்கம் புலி எல்லாம் பல்லு விலக்குதா என்ன?" என்று இட்லி தட்டை வாங்கி சாப்பிட ஆரம்பித்தான். அம்மா தட்டை பிடுங்கி

"எந்த சிங்கம் புலி இட்லி சாப்பிடும்" என்றாள் சிரித்துக் கொண்டு.

"அம்மா எல்லாம் ஆச்சுமா சும்மா சொன்னேன், இந்த காஞ்சி போன இட்லியை கொடுக்க நீ முழு உடம்பையும் ஸ்டேர்லைஸ் பண்ண சொல்லுவ போல இருக்கே" என்று சாப்பிட ஆரம்பித்தான்.

"எப்பா...... இந்த இட்லியை தான் 27 வருஷமா சாப்பிட்டு வளர்ந்தனு நியாபகம் வச்சிக்கோ, அப்படியும் புதுசு வேணும்-னா இன்னைக்கு சாய்ந்திரம் பொண்ணு பார்க்க போறோம் அவகிட்ட கேட்டுக்கோ" என்றாள்.

கணேஷ்க்கு இட்லி தொண்டையை அடைத்தது, கஷ்டத்துடன் முழுங்கி

"என்னமா இது, என்ன கேட்காம எப்படிமா"

"அதெல்லாம் எனக்கு தெரியாது, இன்னைக்கு சாய்ந்தரம் போறோம்"

"என்னமா கடைக்கு போற மாதிரி சொல்ற, அதுக்குள்ள என் கல்யாணத்திற்க்கு என்ன அவசரம்மா"

"எனக்கு தெரியாதுபா உங்க தாத்தா கிட்ட பேசிக்கோ"

தாத்தா வேலுச்சாமி, அப்பாவின் அப்பா. குடும்பமே அவரை கண்டால் நடுங்கும் யாரும் அவரின் முன் நின்று பேசமாட்டார்கள். கணேஷ் நேராக அப்பாவிடம் சென்றான்.

"அப்பா என்ன இது, நான் இன்னும் படிக்கனும் பா" என்றான். அதற்க்குள் அவனின் அம்மா குறுக்கிட்டு

"ஏங்க இவன் வாழ்க்கை பூரா படிச்சினே இருப்பாங்க"

"அம்மா ஷட்-டப் மா, அப்பா இது என்னொட வாழ்க்கை பிரச்சனை" என்றான். அவன் அப்பா பொறுமையாக

"டேய் கணேஷா நானும் 30 வருஷத்துக்கு முன்னாடி இப்படி தான் துடிச்சேன். உனக்காவது பரவாயில்லை விஷயம் இவ்வளவு முன்னாடி தெரிஞ்சது. எனக்கு நான் மணவறையில் உட்காரும் வரை தெரியாது எனக்கு தான் கல்யாணம் என்று, உக்கார்ந்து விட்டு திரும்பி பார்த்தால் உங்க அம்மா இந்த சைடு......... அவ்வளவு தான் என் வாழ்கையே போச்சு" என்று தன் மனைவியை பார்த்தார்.

"ஆமாங்க எங்க வீட்டு ஆளுங்க கூட என்னடீ யாரோ கும்பலா வந்து மணவறையில் உன் பக்கத்துல உக்காராங்கனு சொன்னாங்க" என்றாள் சிரித்துக் கொண்டு.

"ஏய் யார பார்த்துடீ குண்டுனு சொல்ற"

"நீங்க மட்டும் என்னை மட்டம் தட்டலாமா?"

"ஐய்யோ கொஞ்சம் உங்க சண்டையை நிறுத்துறீங்களா" என்றான் கணேஷ். தாத்தா இரும்பிக் கொண்டு வரும் சத்தம் கேட்டது. அவ்வளவு தான் அந்த இடத்தில் இருந்த அப்பாவும் அம்மாவும் மறைந்தனர். கணேஷ் மட்டும் அநாதையாக நின்றுக் கொண்டு இருந்தான்.

"என்னய்யா தனியா நின்னு இருக்க, டீபன் சாப்பிட்டியா யா"

"ஆச்சி தாத்தா"

"தாடியை சேவ் பண்ணிக்கோ, நல்ல மஞ்சல் கலர்ல மங்கலகரமா சட்டை போட்டுக்கோ, சாய்ங்காலம் பொண்ணு பார்க்க போறோம்"

"யாருக்கு தாத்.." என்று கணேஷ் தடுமாறியதும். தாத்தாவின் பார்வைகள் கணேஷை துளைத்தது.

"இல்ல தாத்தா யார் யார் வராங்கனு கேட்டேன்"

"என்னயா காதல் கீதல்னு எதாவது ....."

"ச்சீ...ச்சீ... இல்ல தாத்தா எனக்கு பொண்ணுங்கன்னாவே பிடிக்காது. பழத்துல கூட கமலா ஆரஞ்சு, சீத்தா-பழம்னா சுத்தமா பிடிக்காது"

அவர் அவனை ஒரு மாதிரியாக பார்த்துவிட்டு அவர் அறைக்கு சென்றார். கணேசனுக்கு அந்த உணர்வை எப்படி சொல்லுவது என்று தெரியவில்லை. சாய்ங்காலம் அனைவரும் காரில் ஏறி கோயிலுக்கு போய்விட்டு பொண்ணு வீட்டுக்கு சென்றனர். கணேஷ் தன்னுடைய துணைக்கு தன்னுடைய நண்பர்களை அழைத்துக் கொண்டான். அனைவரும் போய் ஹாலில் உக்கார்ந்தனர். பெண்ணின் அப்பா பெரிய மில்லின் ஓனர். காரம் காப்பி எல்லாம் அறைத்தாகி விட்டது.

"அந்த காலத்துல ரொம்ப கஷ்டப்பட்டு பியூனாக இருந்து படிப்படியா தான் மில்லுக்கு ஓனர் ஆனேன்" என்றார் பெருமிதத்துடன் பெண்ணின் அப்பா. கணேஷ் குனிந்த தலை நிமிரவில்லை.

கணேசனின் நண்பன் "இப்போ அப்படி செய்ய முடியாதுங்க, எல்லா மில்லுலையும் பிரைவேட் செக்யூரிட்டி எல்லாம் போட்டாச்சி, ரொம்ப கஷ்டம்" என்றான். இது பெருசுங்களுக்கு புரியவில்லை,
நண்பர்கள் அவர்களுக்குள்ளே சிரித்துக் கொண்டனர்.

"பையனை பொண்ணை நல்லா பாத்துக்க சொல்லுங்க" என்றார் தரகர் பெருசு. பையனின் அப்பா பெண்ணிடம்

"என்னமா எந்த காலேஜ்ல டிகிரி முடிச்ச"

"வேலப்பன் காலேஜ்" என்றாள் தலையை குனிந்துக் கொண்டு.

"அட நம்ம பையனும் அந்த காலேஜ்-ல தான் முடிச்சான், அப்ப ...."

"சரி சரி பையனும் பொண்ணும் எதாவது தனியா பேசணும் னா பேசுங்க" என்றார் தரகர் பெருசு, அவர் அவரின் கமிஷனை குறிவைத்து ஓவ்வொரு காயினாக நகர்த்தினார்.

பையனும் பெண்ணும் ஒரு அறையில் அமைதியாக நின்றுக் கொண்டு இருந்தனர். கணேஷ் பொறுமையாக பெண்ணிடம் நெருங்கி

"லத்து எப்படி என் நடிப்பு" என்றான்.

"போடா ஓவர் ஆக்ஷன், பத்து ரூபாக்கு நடிக்க சொன்னா, நூறு ரூபாய்க்கு நடிக்குற" என்று சிரித்தாள்.

ராஜா
25-11-2008, 12:11 PM
பலே... பலே..!

மதி
25-11-2008, 01:08 PM
அட.....
எப்படியோ... கல்யாணம் நல்லபடியா நடந்தா சரி தான்.... :)

ரங்கராஜன்
25-11-2008, 01:42 PM
நன்றி ராஜா அண்ணா & மதி.

ரங்கராஜன்
25-11-2008, 01:43 PM
அட.....
எப்படியோ... கல்யாணம் நல்லபடியா நடந்தா சரி தான்.... :)

இதில் எதும் உள்குத்து எதுவும் இல்லையே மதி?

mukilan
25-11-2008, 02:03 PM
அருமை மூர்த்தி....இட்லி கொடுக்கும்பொழுது அம்மா பிள்ளையின் உரையாடல்களை ரசித்தேன். கமலா பழம் சீத்தா பழம் எல்லாம் நீங்க ரூம் போட்டு உட்கார்ந்து யோசித்ததை சொல்கிறது. மற்றுமொரு சிறந்த மெல்லியல் கதை. பாராட்டுகள்.

அறிஞர்
25-11-2008, 02:17 PM
இட்லியில் பாசம் ஆரம்பித்து...

நடிப்புக்கு... கமலா, சீத்தா பழங்கள் பழியாகி.......

அருமையான பெண்பார்க்கும் படலம்....

வாழ்த்துக்கள் மூர்த்தி...

ரங்கராஜன்
25-11-2008, 02:18 PM
நன்றி முகிலன்
உங்களின் விமர்சனத்துக்கு, ரொம்ப நாளா ஆளையே காணும்???????

ரங்கராஜன்
25-11-2008, 02:19 PM
நன்றி நிர்வாகி அவர்களே
முதல் முறையாக என்னுடைய கதையை படித்து பாராட்டிய உங்களுக்கு நன்றி

mukilan
25-11-2008, 03:13 PM
ரொம்ப நாளா ஆளையே காணும்???????

ஒரு மாதம் விடுப்பு கேட்டேன் என்பதற்காக என் இடுப்பு ஒடிய வேலை வேலை வேலை....

arun
25-11-2008, 03:13 PM
எதிர்பார்த்த எதிர்பாராத திருப்பம் சூப்பர் வாழ்த்துக்கள்

அமரன்
25-11-2008, 04:57 PM
அந்த கல்யாணத் தரகரை எப்படிங்க தொடர்புகொள்வது????
தொடக்கம் முதல் வாசகனை வளைத்து கடையில் சடக்கென்று திருப்பிட்டீங்களே மூர்த்தி. பலே.. பலே..

தமிழ்தாசன்
25-11-2008, 07:30 PM
கலக்கிறீர்கள்.
அருமையான திருப்பம்.
பாவம் பெரிசுகள் - புரியாது நல்ல பிள்ளை என்று இருபக்கம்..
தரகர் அறிந்தும் அறியாமலுமா?
நல்ல பையன் கணேஸ்.
இதுபோல ....

சுவையுடன் கூடிய உரையாடல்.
வாழ்த்துக்கள்.

Mathu
25-11-2008, 07:45 PM
நல்ல உரையாடலுடன் ஒரேமூச்சில் படிக்கவச்சு,
சிறப்பாய் முடிதிருக்கிறீர்கள்.
சுவையான கதை.

மதுரை மைந்தன்
25-11-2008, 10:04 PM
வழக்கம் போல சஸ்பென்ஸ்ல முடிச்சிருக்கீங்க. நல்ல நகைச்சுவை இழையோட அருமையான கதை. வாழ்த்துக்கள்.

கண்மணி
26-11-2008, 06:12 AM
ஒரு மாதம் விடுப்பு கேட்டேன் என்பதற்காக என் இடுப்பு ஒடிய வேலை வேலை வேலை....

இதுவே பரவாயில்லைன்னு சொல்ற காலம் ரொம்ப தூரத்தில இல்லியாமே! பட்சி சொல்லுது!

தீபா
26-11-2008, 09:56 AM
திரு.மூர்த்தி சார். ரொம்ப பின்னுறீங்க... திடீர்னு கடைசி வரியில சஸ்பென்ஸ்சை உடைச்சி, கதையை முடிச்ச விதம் மிகவும் அருமை சார்.

வசனங்கள் எல்லாம் யதார்த்தமா இருந்திச்சி. அதுக்கு வளைஞ்சி கொடுக்கிறமாதிரி புழக்க பாஷை எழுதி அசத்தியிருக்கீங்க.

ஆனா, பாருங்க,, எல்லாருக்கும் இப்படி அமையறதில்லை. :-(

தீபா
26-11-2008, 09:57 AM
நன்றி நிர்வாகி அவர்களே
முதல் முறையாக என்னுடைய கதையை படித்து பாராட்டிய உங்களுக்கு நன்றி

அப்படீன்னா, இதுக்குமுன்னாடி அவங்க வேறெந்த கதையும் படிக்கலீன்னு சொல்றீங்களா? :aetsch013:

minmini
26-11-2008, 10:13 AM
பரவாயில்லயே இதுவும் நல்ல ஐடியாவா இருக்கே ;)

சன்டேஸ்ல எல்லாத்துக்கும் லீவு எடுக்கிரவங்க நம்மல்லேயும் நிரைய பேர் இருக்கங்க :D:D:D:D

ரங்கராஜன்
26-11-2008, 12:56 PM
அப்படீன்னா, இதுக்குமுன்னாடி அவங்க வேறெந்த கதையும் படிக்கலீன்னு சொல்றீங்களா? :aetsch013:

இல்ல தென்றல்
நான் சொல்ல வந்தது என்னுடைய கதைகளில் இதுவரை அவர் எந்த விமர்சனமும் தந்தது இல்லை, நான் இதுவரை 12 சிறுகதை எழுதி இருக்கேன்னு நினைக்கிறேன். அவர் விமர்சனம் தந்த என்னுடைய முதல் கதை இதுதான் அதான் சொல்லவந்தேன், புரிஞ்சிதா:sauer028:

ஐரேனிபுரம் பால்ராசய்யா
26-11-2008, 01:26 PM
சிறப்பான ஆரம்பத்துடன் ஊர்ந்து, ஜெட் வேகத்தில் நகர்ந்து, இறுதியில் சஸ்பென்ஸ் வைத்து முடித்திருப்பது நன்றாக இருந்தது. டையலாக் அத்தனையும் அருமை. ஆங்காங்கே சற்று வருணனைகளையும் கலந்து விடுங்கள் இன்னும் சுவை கூடும்.

mukilan
26-11-2008, 05:01 PM
இதுவே பரவாயில்லைன்னு சொல்ற காலம் ரொம்ப தூரத்தில இல்லியாமே! பட்சி சொல்லுது!

அந்தப் பட்சியை "பஜ்ஜி" போட ஒரு சமையல் குறிப்போட வாங்க கண்மணி.

Narathar
27-11-2008, 01:29 AM
நம்ம மூர்த்திக்கும் கல்யாண ஆசை வந்திருச்சுங்கோவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

நராயணா!!!!!

ரங்கராஜன்
27-11-2008, 04:12 AM
கண்டிப்பாக இல்லை தலைவா
இது வேறும் கதை தான்.

MURALINITHISH
29-12-2008, 10:37 AM
இப்படி எல்லாம் ஆரம்பிச்சிட்டிங்களே உண்மையை சொல்லுங்க இது உங்க கதைதானே

anna
29-12-2008, 11:58 AM
ஆஹா இதைத்தான் ஒண்ணும் தெரியாத பாப்பா ஒரு மணிக்கு போட்டாளாம் தாழ்ப்பாள் என்பதா?

ரங்கராஜன்
20-04-2009, 05:32 PM
விமர்சனம் தந்து ஊக்கம் அளித்த அனைத்து நண்பர்களுக்கு நன்றிகள் கோடி

samuthraselvam
21-04-2009, 04:57 AM
ஆஹா...! இது நல்ல ஐடியாவா இருக்கே.... !

தக்ஸ் அண்ணா, இதுபோல் தான் உங்களுக்குமா?

அசத்தல்.... வாழ்த்துக்கள் அண்ணா....

Mano.G.
21-04-2009, 06:01 AM
அலுவலக லஞ்டைம்ல வாசிச்சேன்,
மனச உற்சாக படுத்திய நகைச்சுவை,
பணி பழுவை சற்று இலகுவாக்கியது

நன்றி தம்பி

மனோ.ஜி

பூமகள்
21-04-2009, 10:57 AM
தக்ஸ்..

என் வேண்டுகோளை ஏற்று இளங்காற்று போல சில்லென்ற ஒரு கதை படைத்திருப்பது படித்து அகம் மகிழ்ந்தேன்..

அம்மா மகன் உரையாடலாகட்டும்... காட்சிகளின் விவரிப்பாகட்டும்.... வெகு இயல்பு...

ஒரு சின்ன வேண்டுகோள்.. உங்களின் எல்லாக் கதைகளிலும் பெரும்பாலும் பேச்சு வழக்கு சென்னைத் தமிழையே கொண்டிருக்கிறது...

கொஞ்சம் மற்ற ஊர் தமிழையும் பயன்படுத்துவீர்களா தக்ஸ்... உங்களால் முடியுமென்று நானறிவேன்..

இறுதியில் ஒரு அழகான டிவிஸ்ட்.. ஆனால் ஏனோ எதிர்பார்த்த டிவிஸ் போலவே இருந்தது.. ஆனாலும்.. சிறப்பான மென்மையான கதைக்காக பாராட்டுகள்..

தொடருங்கள் தக்ஸ். :)

xavier_raja
21-04-2009, 02:05 PM
ரெண்டு பெரும் ஒரே கல்லூரி என்று சொன்னபோதே எனக்கு மைல்டா ஒரு டவுட் வந்துச்சு.. அது இப்போ சரியா போச்சு..

அமரன்
22-04-2009, 09:58 AM
இந்தக் கதையை இப்ப படிக்கும் போது நினைவுக்கு வருவது..

ஒரு பொண்ணு அம்மாவிடம் " என்னோட படிச்ச அவளுக்கு கல்யாணமாயிடுச்சு.. இவளுக்கும் மாப்பிளை பார்த்தாச்சு" என்று சொல்றாள்னா "எனக்கு எப்ப கல்யாணம்?" என்று கேட்பதாக அர்த்தம்.

ஒரு பையன் "என் கல்யாணத்துக்கு என்ன அவசரம்" என்று சொல்றான்னா "எனக்கு விரைவில் கல்யாணம் செய்து வையுங்கள்" என்று அர்த்தம்.

மதி
22-04-2009, 10:04 AM
ஒரு பையன் "என் கல்யாணத்துக்கு என்ன அவசரம்" என்று சொல்றான்னா "எனக்கு விரைவில் கல்யாணம் செய்து வையுங்கள்" என்று அர்த்தம்.
ஓ.. இது இத்தனை நாள் தெரியாம போச்சே...???:D:D:D:D
இனி முயற்சிக்கறேன்....:icon_b:

அமரன்
22-04-2009, 10:07 AM
ஓ.. இது இத்தனை நாள் தெரியாம போச்சே...???:D:D:D:D
இனி முயற்சிக்கறேன்....:icon_b:

மண பந்தத்தில் இணையுறதுக்கான அடிப்படைத் தகுதி உங்களுக்கு இருக்கு மதி. இந்தளவுக்கு வாயில்லாப் பூச்சியாக இருக்கீயளே. :D:D:D

மதி
22-04-2009, 11:00 AM
மண பந்தத்தில் இணையுறதுக்கான அடிப்படைத் தகுதி உங்களுக்கு இருக்கு மதி. இந்தளவுக்கு வாயில்லாப் பூச்சியாக இருக்கீயளே. :D:D:D
ஓஓஓஓஓஓஓ.... அப்படி... அப்போ சரி..
இது அப்பா அம்மாக்கு தெரிஞ்சா சரி....:D:D:D:icon_ush::icon_ush::icon_ush:

Tamilmagal
22-04-2009, 11:41 AM
மிகவும் அருமையான உரையாடல்கதை.
கதைஎழுதிய நண்பருக்கு வாழ்த்துக்கள்.