PDA

View Full Version : சிறுபிள்ளைத்தனமாக கேள்விகள் - பதில்?!!

சிறுபிள்ளை
25-11-2008, 08:10 AM
ஒரு சிறு வாய் பேச முடியாத குழந்தை கடைக்கு சென்று பல் துலக்கும் ஃப்ரஸ் வாங்க நினைக்கிறது. அந்த குழந்தை தன்னுடைய பல்லை தன் விரலால துலக்கி கடைக்காரருக்கு ஃப்ரஸ் வேண்டும் என்று விளக்கி வாங்கியும் சென்றுவிடுகிறது...
இப்போது உங்களிடம் ஒரு கேள்வி..

ஒரு பார்வை இழந்த மனிதன் அதே கடைக்கு செல்கிறான் நிற கூலிங் கிளாஸ் கண்ணாடி வாங்க, அப்படி எப்படி வாங்குவான்?

பதிலை உடனடியாக சொல்ல வேண்டும், ஜஸ்ட் 30 வினாடிகளில்.. பதிலை எழுதிய உடன் எடிட் செய்ய கூடாது சரிங்களா?!!

இந்த பதிலுக்குப்பிறகு இன்னும் சில சிறு பிள்ளைத்தனமாக கேள்விகள் வரும் உங்களைத்தாக்க.

சிறுபிள்ளை

மதி
25-11-2008, 08:18 AM
வாயால கேட்டு தான்...
ஹிஹி... ஹைய்யோ..ஹைய்யோ..

Narathar
25-11-2008, 08:18 AM
ஒரு கருப்பு கண்ணாடி தாங்க.....
இல்லைன்னா ஒரு கூலிங் கிளாஸ் தாங்கன்னு கேட்பார்!

அவரு ஊமையில்லையே................

நாராயணா!!!!!

நீங்க எப்படி கேப்பாருன்னு நினைச்சீங்க?

ராஜா
25-11-2008, 08:18 AM
வாய் நல்லாதானே இருக்கு..?

சிறுபிள்ளை
25-11-2008, 08:27 AM
மன்ற மணிகள் அனைவரும் புத்திசாலிங்கத்தான்னு ஒத்துக்கிறேன்..இதோ அடுத்த கேள்வி.. கால்குலேட்டர் யூஸ் பன்னாம மனக்கணக்கா போடனும்

முதலில் ஒரு 1000 பிளஸ் 40 மறுபடியும் பிளஸ் 1000 மீண்டும் பிளஸ் 30 மீண்டும் ஒரு 1000 பிளஸ் இப்போது 20 பிளஸ் பன்னுங்க கடைசியா ஒரு 1000பிளஸ் பன்னிட்டு கடைசியா ஒரு 10 கூட்டி விடைய சொல்லுங்க.. பாக்கலாம்.

ஒரே மூச்சா கூட்டி விடைய எழுதிடனும்...மறுபடியும் எடிட் பன்ன கூடாது சரிங்களா?

சிறுபிள்ளை

மதி
25-11-2008, 08:32 AM
4100
கணக்குல நான் வீக்.

சிறுபிள்ளை
25-11-2008, 08:37 AM
4100
கணக்குல நான் வீக்.

பராவாயில்லையே கரெக்டா சொல்லிட்டிங்க நான் 5000ன்னு சொல்லுவிங்கன்னு நினைச்சேன்... சரி சரி இந்த கேள்விக்கு பதில சொல்லிட்டிங்கன்னா நீங்க உண்மையிலேயே புத்திசாலிதான்..

ஒருத்தனுக்கு 7 விரல் இருந்திச்சாம் அவனை எல்லோரும் அனுமன் அனுமன்னு கூப்பிட்டாங்களாம் அது ஏன்??

சிறுபிள்ளை

Narathar
25-11-2008, 08:38 AM
5000 சரியா?

சிறுபிள்ளை
25-11-2008, 08:41 AM
5000 சரியா?

என்ன நாரதரே இப்படி கவுந்திட்டிங்க எதுக்கும் மறுபடியும் ஒரு முறை கூட்டிப்பாருங்க... கம்பியுட்டர் உங்கள இந்த அளவுக்கு மாத்தி இருக்கும்னு நினைக்கல..?!!

சிறுபிள்ளை

Narathar
25-11-2008, 08:43 AM
5000 சரியா?

அப்போ நாந்தான் கணக்குல வீக்கா?
நாராயணா!!!!! :eek: :)

சிறுபிள்ளை
25-11-2008, 08:46 AM
அப்போ நாந்தான் கணக்குல வீக்கா?
நாராயணா!!!!! :eek: :)

சரி சரி நாரதரே கண்ணு பிதுங்கி வாய் கிழிஞ்சிடபோகுது... அது போனா போகுது... இந்த கேள்விக்கு பதில சொல்லி மதியை ஜெயிச்சிடுங்க...

ஒருத்தனுக்கு 7 விரல் இருந்திச்சாம் அவனை எல்லோரும் அனுமன் அனுமன்னு கூப்பிட்டாங்களாம் அது ஏன்??

ரங்கராஜன்
25-11-2008, 08:59 AM
ஒரு பார்வை இழந்த மனிதன் அதே கடைக்கு செல்கிறான் நிற கூலிங் கிளாஸ் கண்ணாடி வாங்க, அப்படி எப்படி வாங்குவான்?

சிறுபிள்ளை

செம காமெடி நான் கேள்வியை படித்ததும், ரொம்ப அறிவாளித்தனமா, குருடன், கடைக்காரர் பேசும் சத்தம் வந்த திசையை நோக்கி கைகளால் கண்ணாடி வேண்டும் என்று சைகை காட்டுவான் என்று சொல்ல நினைத்தேன்.............அப்புறம் தான் மன்ற உறவுகளின் பதில்களை பார்த்து .........:lachen001:

சிறுபிள்ளை
25-11-2008, 09:16 AM

அப்பாடா நீங்க ஒருத்தராவது அந்த கேள்விக்கு மாட்டினிங்களே... ரொம்ப சந்தோசம்.. கேள்வி கேட்டது வீண் போகல :lachen001: :lachen001:

சரி சரி...சீக்கிரம் என்னோட அடுத்த கேள்விக்கு பதில் சொல்லுங்க.. நண்பர் நாரதரையும் காணம் தோழர் மதியையும் காணம் நீங்களாவது சொல்லுங்களேன்...

ரங்கராஜன்
25-11-2008, 09:31 AM
5000 வருது

சிறுபிள்ளை
25-11-2008, 09:34 AM
5000 வருது

அடடே நீங்களும் நாரதர் குருப்ல சேந்திட்டிங்களே... எதுக்கும் மீண்டும் ஒரு முறை கால்குலேட்டர் வெச்சி கூட்டி பாருங்க தோழரே

சிறுபிள்ளை

அகத்தியன்
25-11-2008, 09:56 AM
ஆசையா இருந்திருக்கும் கூப்பிட்டிருப்பாங்க. இதெல்லாம் கேட்டுக்குகிட்டு.. விட்டுப்போட்டு பொழப்ப பாப்பீங்களா??????????

சின்னப்புள்ள! சின்னப்புள்ளதனமாயில்ல...... ஹையோ........ஹையோ.......

சிறுபிள்ளை
25-11-2008, 10:08 AM
ஆசையா இருந்திருக்கும் கூப்பிட்டிருப்பாங்க. இதெல்லாம் கேட்டுக்குகிட்டு.. விட்டுப்போட்டு பொழப்ப பாப்பீங்களா??????????

சின்னப்புள்ள! சின்னப்புள்ளதனமாயில்ல...... ஹையோ........ஹையோ.......

இப்படி பதில சொல்லாமலே எஸ்கேப் ஆகுர உங்க புத்திசாலித்தனம் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு ஹா ஹா

சிறுபிள்ளை

அன்புரசிகன்
25-11-2008, 10:20 AM
சரி. அது எப்படி 5000 வந்தது என்றாவது சொல்லுங்கள்... 4100 மிக இலகுவாக வந்திடுதே..........

அன்புரசிகன்
25-11-2008, 10:23 AM
ஒருத்தனுக்கு 7 விரல் இருந்திச்சாம் அவனை எல்லோரும் அனுமன் அனுமன்னு கூப்பிட்டாங்களாம் அது ஏன்??

அவனோட பெயரே அனுமன்...

இது நான் ஆண்டு 5 படிக்கும் :icon_rollout:போது சுப்பன் என்ற பெயருடன் என்னை கேட்டவன்.... அதாவது இற்றைக்கு பதினாறு வருடத்திற்கு முன்...

ஹையோ ஹையோ..........

தாமரை
25-11-2008, 10:36 AM
சரி சரி நாரதரே கண்ணு பிதுங்கி வாய் கிழிஞ்சிடபோகுது... அது போனா போகுது... இந்த கேள்விக்கு பதில சொல்லி மதியை ஜெயிச்சிடுங்க...

ஒருத்தனுக்கு 7 விரல் இருந்திச்சாம் அவனை எல்லோரும் அனுமன் அனுமன்னு கூப்பிட்டாங்களாம் அது ஏன்??

அவன் பேர் அனுமன்

ரங்கராஜன்
25-11-2008, 11:07 AM
சரி. அது எப்படி 5000 வந்தது என்றாவது சொல்லுங்கள்... 4100 மிக இலகுவாக வந்திடுதே..........

பாவம் நம்ம சிறுபிள்ளை கஷ்டப்பட்டு யோசித்து கேள்வி கேக்குறார், பாவம் அவரை ஏன் சரியாக சொல்லி ஏமாற்ற வேண்டும்.

சிறுபிள்ளை
26-11-2008, 02:51 AM
கலக்கலான பதில் அன்புரசிகன் தாமரை... உண்மையிலேயே புத்திசாலிதான்..

என்ன மூர்த்தியாரே... இப்படியும் சமாளிப்பிங்கன்னு நான் நினைக்கல.. :*

ரங்கராஜன்
26-11-2008, 02:53 AM
பரவாயில்லையே கண்டுபிடிச்சீட்டீங்களே, இது நமக்குள்ளே இருக்கட்டும். public public .......

Narathar
26-11-2008, 02:06 PM
http://img37.picoodle.com/img/img37/3/11/26/narathar/f_Testpaper1m_94e12a3.jpg

இந்த பரீட்ச்சை தாளை 1 நிமிடத்தில் செய்து விடை தாருங்கள்

minmini
26-11-2008, 02:50 PM
1. M T W T F S S

2. 545 + 5 = 550

3. anything

4.ஒரு செவ்வகம் வரைந்து அதன் உள்ளே3 கோடுகள் போடவும்

அக்னி
26-11-2008, 02:56 PM
இந்த பரீட்ச்சை தாளை 1 நிமிடத்தில் செய்து விடை தாருங்கள்
M T W
= க்கு மேலே /
anything
ஒரு கோடு வரையவும்.
அதன் ஒரு முனையிலிருந்து இன்னுமொரு கோட்டை கோணம் வைத்து வரையவும்.
இரு கோடுகளினதும் இணையாத மற்றைய முனைகளை இணைத்து ஒரு கோடு வரையவும்.

lolluvathiyar
28-11-2008, 11:19 AM
இந்த பரீட்ச்சை தாளை 1 நிமிடத்தில் செய்து விடை தாருங்கள்

1. M T W T F S S

இது எந்த லாஜில் வருகிறது என்று தெரியவில்லையே. விளக்க முடியுமா?

2. 545 + 5 = 550

அங்கு மூன்று 5 இருக்கு 2 + இருக்கு உக்களுது பொருந்தாது. இது சரியாக இருக்கும் என்று நினைகிறேன்.
5+5+5=550
500+35+15=550
சரியா

minmini
28-11-2008, 02:02 PM
இது எந்த லாஜில் வருகிறது என்று தெரியவில்லையே. விளக்க முடியுமா?

அங்கு மூன்று 5 இருக்கு 2 + இருக்கு உக்களுது பொருந்தாது. இது சரியாக இருக்கும் என்று நினைகிறேன்.
5+5+5=550
500+35+15=550
சரியா

M= Monday T=Tuesday W = Wednesday T= Thursday F= Friday S= Saturday S=Sunday இதுதான் என் லொஜிக் :icon_b: :icon_b: :icon_b:

ஏன் அவ்வளவுதூரம் மூளையை கசக்குறீங்க?
அங்குள்ள ஏதாவது கூட்டல் அடையாளத்தை ஒரு கோடு சேர்த்து 4 ஆக மாற்றிக்கொள்ளவும். இப்போ கூட்டிப்பாருங்கோ :D :D :D

பாரதி
28-11-2008, 02:33 PM
2. சமம் என்று இருக்கும் குறியீட்டில் குறுக்காக ஒரு கோடிட்டு சமம் இல்லை என ஆக்கவும்.

Narathar
28-11-2008, 03:25 PM
http://img37.picoodle.com/img/img37/3/11/28/f_Testpaper2m_724711c.jpg

இதோ விடைகளை தந்துவிட்டேன்.........

மின்மினி எல்லா கேள்விகளுக்கும் சரியான பதிலை தந்துள்ளார். நான் இந்த வினாத்தாளை சுட்ட இடத்திற்கு அவரும் சென்றிருப்பார் போல! நாராயணா!!!!

மற்றும் முயற்சித்த அனைவருக்கும் நன்றிகளும் வாழ்த்துக்களும்!

சிறுபிள்ளை
01-12-2008, 10:54 AM
நாரதரோட கேள்வி நன்றாக இருந்தது.
இத கன்டுபிடிக்கிறவங்களுக்கு 50காசுகள் பரிசு..

1+1 = ?

1கழித்தல் 1 =?

1/0 = ?

அன்புரசிகன்
01-12-2008, 01:32 PM
நாரதரோட கேள்வி நன்றாக இருந்தது.
இத கன்டுபிடிக்கிறவங்களுக்கு 50காசுகள் பரிசு..

1+1 = ?

1கழித்தல் 1 =?

1/0 = ?

2
0
முடிவிலி
இது நேரடி விடைகள். எக்குத்தப்பான விடைகள் எதுவோ????????????:rolleyes:

சிறுபிள்ளை
02-12-2008, 04:05 AM
விடைகள் சரிதான் நண்பரே,..

1+1 = 11 ஹா ஹா... இப்படித்தான் கலாய்க்க நினைத்தேன்.. உங்களுக்கு பரிசு இதோ 50காசுகள்.

praveen
02-12-2008, 04:05 AM
ஆரம்பத்திலே ஒரு மாதிரி இருந்தாலும், திரி போகப்போக ஸ்பீடா தான் இருக்கு. வாத்தியாரை வெளிச்சம் போட்டு காட்டிருச்சே :)

சிறுபிள்ளை
03-12-2008, 04:57 AM
இதுல மொத்தம் எத்தனை நரிங்க இருக்குன்னு சரியா சொல்லனும். நீங்க கன்டுபிடிக்குர ஒவ்வொரு நரிக்கும் 10பொற்காசுகள் பரிசா தருவேன். ஆனா விடை சரியா இருக்கனும் முதல்ல சரியா சொல்லுறவங்கலுக்கு மட்டும்தான் பரிசு சரிங்களா?

http://www.upload2world.com/pic105/upload2world_2b54b.jpg (http://www.upload2world.com)

கண்மணி
03-12-2008, 05:14 AM
ஒரே நரிதான் தெரியுது அதுக்கு பேரு சிறுபிள்ளை. மத்ததெல்லாம் ஓநாய்கள்.

சிறுபிள்ளை
03-12-2008, 05:27 AM
ஒரே நரிதான் தெரியுது அதுக்கு பேரு சிறுபிள்ளை. மத்ததெல்லாம் ஓநாய்கள்.

ஏனுங்க அம்மணி கண்மணி... தப்புதான் ஓனாயை நரின்னு சொன்னது தப்புதான்.. அதுக்காக என்னை இப்படி நரின்னு சொல்லிட்டிங்களேன்னு சொன்னா கோபப்பட மாட்டேன்.. நரி முகத்துல முழிச்சா அதிர்ஷ்டமுன்னு சொல்லுவாங்க... அதுபோல என்னோட திரிய படிச்சாலே அதிர்ஷ்டம் வருதுல்ல... பதில் சொன்னா காசு... எப்படி சமாளிச்சேன் பாத்திங்களா

சரிங்கோ அந்த படத்துல மொத்தம் எத்தனை ஓநாய்கள் இருக்குன்னு சொல்லுங்கோ

lolluvathiyar
03-12-2008, 11:45 AM
என் கன்னுக்கு 6 ஓநாய் தெரியுதுங்கோ 60 காசு கிடைக்குமுங்களா?

சிறுபிள்ளை
04-12-2008, 03:23 AM
என் கன்னுக்கு 6 ஓநாய் தெரியுதுங்கோ 60 காசு கிடைக்குமுங்களா?

கொஞ்சம் பொருங்க வாத்தியாரே.. அதுல இருக்குறது 6 ஓ நாயா இல்ல 10 ஓனாயான்னு இன்னும் கொஞ்சம் நண்பர்களும் சொல்லட்டும்.. கடைசியா நானே வந்து சரியான விடையை சொல்லி பரிசையும் தந்துடுறேன். சரிங்களா

சிறுபிள்ளை
05-12-2008, 02:44 AM
என்ன இது ஒருத்தரும் பதில் சொல்லல...அப்படின்னா நானே பதில சொல்லி பரிசை எடுத்துக்கவா??

சிறுபிள்ளை
08-12-2008, 07:23 AM
என் கன்னுக்கு 6 ஓநாய் தெரியுதுங்கோ 60 காசு கிடைக்குமுங்களா?

வாத்தியார் அவர்கள் சரியாக கன்டுபிடிக்காவிட்டாலும் கொஞ்சம் சரியாக சொன்னதால் பரிசு தருகிறேன். சரியாம விடை 4 ஓநாய்கள். வாத்தியாருக்கு 20காசுகள் பரிசு.