PDA

View Full Version : நேரமும் காலமும் அமைந்தது



Mano.G.
25-11-2008, 03:25 AM
2003 இணையத்தில் ஒரு மின்னல், தமிழ்மன்றம் என்ற தளம்,
தமிழில் பேசத்தெரிந்தவர்களை எழுத தூண்டிய தளம்,
தமிழ் படைப்புக்களை வாசித்தவர்களை படைக்க தூண்டிய தளம்,
பதிக்கப்படும் ஒவ்வொரு பதிப்புக்கும் அங்கிகாரமும்
ஊக்கமும் ஆதரவும் அனுபவித்தவர்களுக்குதான் தெரியும்,

இது ஒருபக்கம்,

உலகில் பரந்து கிடந்த தமிழர்களை
தமிழால் உறவுகளாக்கிய தளம்,
முகம் அறிய வில்லை,
குரலும் கேட்டதில்லை,
ஆனால் ஏதோ ஒரு பந்தம் பாசம்
அனைவரையும் கட்டிபோட்டும்,
ஆங்காங்கே உறவுகளின் அறிமுகமும் சந்திப்பும்,
ஓவ்வொரு சந்திப்பிலும் தமிழ்பற்றும் மனித நேயமும் பாசமும்
இழைந்து கலந்ததை சந்திப்பிற்கு பின் விவரிக்கும்பொழுதும்,
உறவுகளின் விமர்சனங்கள் மேலும் பல உறவுகளையும்,
சந்திக்க தூண்டியதால் கடவுளின் கிருபையால்
நேரமும் காலமும் கணிந்து ஒரே நேரத்தில்
பல மன்ற உறவுகளை கண்டு உறவாடிட
டிசம்பர் 20 அமைந்துள்ளதே.

மனோ.ஜி

அன்புரசிகன்
25-11-2008, 05:04 AM
மன்ற சந்திப்பு சம்பந்தமாக திரிகளை படிக்கும் போது சந்திக்க இயலாமை என்ற ஒரு வருத்தம் நெஞ்சில் இடிக்கிறது...

அனைத்தும் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்.

விகடன்
25-11-2008, 06:39 AM
மன்ற உறவுகளை சந்திக்க அருமையான சந்தர்ப்பம் அமைந்திருந்தும் வருகைதர முடியாத நிலமையில் நானும்...

அனைவரையும் காண முடியவில்லை என்ற கவலை ஒரு புறமிருக்க அதை மீண்டும் மீண்டும் புதிப்பிக்கும் வகையில் மனோ அண்ணாவின் பதிவுகள்....

சந்திப்புக்கள் நல்லவகையில் அமைய வாழ்த்துக்கள்.

சுகந்தப்ரீதன்
25-11-2008, 07:02 AM
நல்லா இருக்கு மனோ.ஜி அண்ணா.. உங்களோட கவிதை...!!:icon_ush:

எனக்குதான் இன்னும் நேரம் காலம் அமையல...!!:icon_rollout:

சந்திக்க போகும் சகலருக்கும் என் வாழ்த்துக்கள்...!!:icon_b:

அமரன்
03-12-2008, 10:11 AM
மன்றம் பற்றிப்
பேசிக்கொண்டே இருக்கலாம்.
அது எந்தளவுக்கு நீளுமோ
அந்தளவுக்கு நீளும்
மனோ அண்ணன் மன்றப் பற்று.
இனிதே நடைபெறட்டும்
மன்ற மனங்களின் சங்கமம்.

Keelai Naadaan
03-12-2008, 01:42 PM
வெளிநாட்டில் பணியாற்றியபோது,
அருகில் உறவில்லையே என ஏங்கிய நேரத்தில்
உலகெங்கும் உறவுண்டு என உணர்த்தியது மன்றம்

தனிமையை போக்கியது தமிழ் மன்றம்

எங்கள் சராசரி எழுத்துக்களையும் கூட
தட்டி கொடுத்து தழைக்க செய்தது தமிழ் மன்றம்

மன்றத்து அத்தனை உறவுகளுக்கும் கரம் கூப்பிய நன்றி

மன்ற ஒன்று கூடும் விழாவுக்கு வருகை தரும் அனைவரையும் மகிழ்ச்சியுடன் வரவேற்கிறோம்

அன்புடன்