PDA

View Full Version : தமிழ்தாசனின். தமிழோடை...



தமிழ்தாசன்
24-11-2008, 09:48 PM
தமிழ்தாசனின் தமிழோடை...



ஓடை - 1

நீள் இரவு!


மேல் திறந்த பார்வை!
மேனியெங்கும் தீ,
அசையும் ஓசை விழா
நீள் இரவு
நீண்டது காண்!

'வாசமிது நுழைந்ததினால்
வஞ்சி வீழ்ந்தினள்'

நேசமதில்,
நெஞ்சமெங்கும் பூவிதழ்
பாசமதில்,
வீசுகின்ற சந்தன வாசம் -எனச்
சங்கதி சொன்னவன்,

வான ஓடையின்
முகில் மறை நிலவாய்
தோன்றுது காண்!

மெல்லிடை மேனியில்,
நிலந்தொடு கூந்தலில்
அன்றைய அணைப்பின்
மனந்தடுமாறும் நிகழ்வுகள்;

கண்ணிடை
கருவிழிகள் - ஓய்வு
காண மறுத்திட,
ஏக்கம் கொள் நினைவுகள்;
இரவுகள்.

பருவமதில் படர்கின்ற,
கொடியதனில் மலர்கின்ற,
நறுமணத்தில்
நனைகின்ற சுகம்
காணுதல் சுகமன்றோ?

உருவத்தில் உருகி,
உள்ளத்தில் பெருகி
உடலெங்கும் வழிந்திடும்
உணர்வுகள் பருகி
கருவதில் முளைகொண்டு,
இலைகண்டு
செடியாகிப் பூத்துவிட்ட
அழகுக் கொடி
இடைதனில் வீழ்ந்தான்.
படைகொண்டு
போர் கண்டான்.
வென்றவர் யாருமிலர்.

தொட்டகையின்
பட்ட இடமெங்கும்
பரவு தீயின் சூடு கண்டு
தீக்காயம் ஆறிடுமோ? யாரிடமோ?

கடித்தகாய் கனியக் கண்டு
வெடித்திடுமோ
வெண்ணிலவு.

அடித்த காயம் ஆறிவிடும்
அணைத்த காயம் ஆறிடுமோ?

மறு இரவு
வருமுன்னம்
அருகினில் வாராதோ?

தேர்கொண்டு நடைபோட்டு,
நீர்கொண்டு மேகம்
நிலம் காண வாராதோ?
தொட்டகுறை,
விட்டகுறை,
தொடர்ந்திடவே!!

அண்டத்தின்
ஆரம்ப இடம் மீண்டும்
திரும்பிவரும்
தூரம் நீண்டு விடும்

இராக்கழிய விடும் ஏக்கங்கள்
கொடுமை செய்
கொடியவரின்
கொடுமையிலும்
கொடுமை
இதுவன்றோ!

'கொடியார் கொடுமையின் தாம் கொடிய
இந்நாள் நெடிய கழியும் இரா' (குறள் - 1169)



('அருவி' சஞ்சிகை சித்திரை 2002ல் வெளியானது.)


-

சுகந்தப்ரீதன்
25-11-2008, 02:39 AM
தமிழ்தாசரே... பெருமூச்சுதான் வருது எனக்கு உங்க கவிதையை படிச்சதும்...!!

பெயருக்கு ஏத்த மாதிரி இருக்கு உங்களோட எழுத்தும்.. தொடரட்டும் இந்த தமிழோடை...எங்களின் தாகம் தீர்க்க...!! வாழ்த்துகளும் பாராட்டுகளும்...!!

தமிழ்தாசன்
25-11-2008, 07:45 AM
தொடர்ந்து என் படைப்பாக்கத்தை வாசித்து,
வழ்த்தும் வரவேற்பும் தரும் உங்களுக்கு எனது மனதின் மகிழ்ச்சியை தெரிவிக்கிறேன். குறைகளையும் குறிப்பிடுங்கள்.
அதுவே என்னை விழிப்புகளை விரிவாக்கும்.


தமிழ்தாசரே... பெருமூச்சுதான் வருது எனக்கு உங்க கவிதையை படிச்சதும்...!!

பெயருக்கு ஏத்த மாதிரி இருக்கு உங்களோட எழுத்தும்.. தொடரட்டும் இந்த தமிழோடை...எங்களின் தாகம் தீர்க்க...!! வாழ்த்துகளும் பாராட்டுகளும்...!!

நண்பரே! புது எழுத்தார்வம் தோன்றுகிறது.

தமிழ்தாசன்
29-11-2008, 11:54 AM
தமிழ்தாசனின் தமிழோடை...



ஓடை - 2

உருகுவதோ உள்ளம்!


'விழி அருகில் உதடுகள் வைத்தேன்
மொழிகள் மறந்துபோய் மெளனமானேன்.
ஏன்?என்னில் இத்தனை குழப்பங்கள்.
தேன் இதழின் முத்தங்கள் பரிமாறும்
உன் பார்வைகளில் நான் பாதியானேன்.'

'ம்ம்... இதற்கென்னமோ குறைச்சலில்லை..'

முறைத்துப் பார்த்தவளை இறுக்கிக்கொண்டான்.
அவளின் மனதில் எத்தனை ஆனந்தம்.
அவள் மட்டும் குறைந்தவளா என்ன?
பதிலுக்கு பதில் அதில்தானே பரவசம்
முத்தத்தில் ஒரு மகாயுத்தம்.

' போதும் பொன்மயிலே!
உந்தன் மடிசாய ஆசை'
வருணன் சொன்னதும்,

நிலாமுகம் ஒளிவீசி, புன்னகை பூத்தது.

'சாய்ந்து கொள்ள நீ இருந்தால்
சத்தியமாய் உலகம் மறப்பேன்' வருணன்.

'............'

'விந்தியா ஏன் மெளனம்?
இதற்கு பதில் இல்லையா?
இல்லாவிட்டால், பெண்களே பேசும் மொழி
என்பதால் மெளனமா?'

'என்னது பெண்களெல்லாம்...?
அனுபவமோ? அதுதானே பார்த்தேன்,
பொய்யிலோ புலமை பெற்றவரோ?'

'என்னவளே! மேகங்கள் உரசுவதால்தான்
மின்னல் வருகிறது.
உந்தன் விழிகளில் படும் என் பார்வைகள்
ஏனோ தோற்றுப்போகின்றன.?'

'மழுப்புவதில் மன்னர் போலும்'

கட்டிக்கொண்டான்.
கன்னத்தில் முத்தமிட்டான்

'அடியே! நீ இன்றி
ஒரு அணுவும் அசையாது
காதலில்..... நனைந்தேன்.'
இது என்னுள் ஏதோ சொல்லிற்று....'

பதிலுக்கு அவளும் இறுக்கிக் கொண்டாள்.
இன்னும் இறுகிக் கொண்டாள்.

' இறவாத அன்பு வேண்டும் மீண்டும்
பிறப்புண்டேல்
உனை என்றும் மறவாது வேண்டும்'

மனதுக்குள் பாடிக்கொண்டான்.
உலகம் மறந்து போனது.

காதலின் கட்டில் பாடம் ஆரம்பமாகிறது.



-----
('அருவி' வைகாசி 2002 )

தமிழ்தாசன்
30-11-2008, 12:08 PM
தமிழ்தாசனின் தமிழோடை...



ஓடை - 3

கண்களுக்கு!



முத்தமிட்டன
முதல் சந்திப்பாய்
கடதாசியும், பேனாவும்.

'எத்தனை காலமும்
எண்ணம் சொல்வது
கண்களே காதல் என்று.

முட்டியும்,மோதியும்
விழிகள்
வெட்டியும் - உதிரம் ஓடா
உணர்வான மோதல்.
கட்டியும் போடாது
கெட்டியாய் பிடித்திடும்'

- கவிதை எழுதுகிறோம்,

என்ற நினைப்பில்
எழுதிய கடதாசிகளை கசக்கி
எறிந்தான் மாறன்.

மீண்டும்....

'கசக்கி எறியப்பட்ட கடதாசிகள்'

கண்களின் பார்வைகள்
கசக்கி எறிந்தன.

கண்களில்
மயங்கியவர் யாவருமோ?

மரணமில்லாத மயக்கம்.

கண்கள்

உண்மைதான்,
கண் - அது -'கள்'
கண் அசைவினில்
கவிதை சொல்வதும்
காதலைத் தூதெய்வதும்
கை வந்த கலையாமோ?
பெண்களுக்கு.....

பெண்கள்

உண்மைதான்
பெண்'கள்'
- எழுதிய கடதாசிகளை
கசக்கி எறிந்தான் மாறன்.

கவிதைப் புலம்பலை
தந்தன கண்கள் என்றால்?

காதல் கொண்டது
நெஞ்சம்.

கசக்கி எறியப்பட்டிருக்கும்,
இன்னும் கடதாசிகள்.



('அருவி' ஆடி -ஆவணி 2002).

தமிழ்தாசன்
24-12-2008, 01:04 PM
http://i419.photobucket.com/albums/pp274/kathravann/untitled.jpg