PDA

View Full Version : உன் முடிவு..... என் முடிவிலா........



நிரன்
24-11-2008, 08:38 PM
இதயத்தில் ஒரு சிறு வலி........
பெருகிதே கரு....விழி நீர்.
உருகுமோ உன் கல்லிதயம்
இலை..... உறைவேனோ என் கல்லறையில்

தமிழ்தாசன்
24-11-2008, 08:52 PM
இதயத்தில் ஒரு சிறு வலி........
பெருகிதே கரு....விழி நீர்.
உருகுமோ உன் கல்லிதயம்
இலை..... உறைவேனோ என் கல்லறையில்

உயிரில் கரையும் மூச்சுத் திணறல் உங்கள் வரிகள்.
மொழியில் வழிந்தாலும் வரிகள்
வலியில் அல்லா துடிக்கிறது இதயம்.

வலிகொண்ட இதயமே!
கரைகின்ற விழி நீரே!
உருக்காயோ அக் கல்லிதயத்தை,
கல்லறை வேண்டாம் உள்ளமே!
இதய அறை திறக்கும் சாவி எங்கே என்று அவ்விதயம் கேட்டு விடு.

அருமை தொடருங்கள்...வரிகளையும்தான்
அவ் விதயத்தின் சாவியியையும்தான். சாவினையல்ல அது தீர்வுமல்ல. அது இயற்கைக்கு உரித்தானது.

நிரன்
24-11-2008, 09:42 PM
வலிகொண்ட இதயமே!
கரைகின்ற விழி நீரே!
உருக்காயோ அக் கல்லிதயத்தை,
கல்லறை வேண்டாம் உள்ளமே!
.

உருகிறதே இதயம் .... என்னிடத்தில்
கல்லறைகள் தேவையில்லை .......... உனக்கு
என் விழி நீரில் நீச்சலடிக்கும் உனக்கு
விளங்குமா என் வேதணைகள்

நன்றி தமிழ்தாசன்

சுகந்தப்ரீதன்
25-11-2008, 02:30 AM
இதயத்தின் வலி
வந்ததே வெளி..
கண்களின் வழி..!!

வடிந்த கண்ணீர்
கரைக்குமோ அவள்
கல் அறையை....??

இல்லை ஆக்குமோ
அவனை கல்லறையாய்..?!

-கவிதைக்கு ஏத்த அவதாரை வைத்திருக்கிறீர்கள் நிரஞ்சன்..!! பாராட்டுக்கள்..!!

சாம்பவி
25-11-2008, 02:41 AM
இதயத்தின் வலி
வந்ததே வெளி..
கண்களின் வழி..!!

வடிந்த கண்ணீர்
கரைக்குமோ அவள்
கல் அறையை....??

இல்லை ஆக்குமோ
அவனை கல்லறையாய்..?!


சபாஷ்..... வெல்டன்.... !!!!!

நிரன்
25-11-2008, 03:59 AM
இதயத்தின் வலி
வந்ததே வெளி..
கண்களின் வழி..!!

வடிந்த கண்ணீர்
கரைக்குமோ அவள்
கல் அறையை....??

இல்லை ஆக்குமோ
அவனை கல்லறையாய்..?!
!


காலங்கள் கடக்கின்றன கடந்து.....
வந்த பாதைகளோ காணமல் போயின..
பெண்னே நிற்றம் உன் முற்றம் வந்து செல்கிறேன்.....
என்காதல் மோற்ச்சம் பெற.
முற்றம் நின்ற செடிகள் கூட
தழைத்து விட்டன ....... என் கண்ணீரால்
ஆனால் இன்னும் தழைக்கவும் இல்லை..... என் காதல்
தடுக்கப்படவும் இல்லை.................... என் கண்ணீர்



பாராட்டுதலுக்கும் பதிலுக்கும் நன்றி

வசீகரன்
26-11-2008, 11:05 AM
காதல் நிறைந்த வரி(லி)கள்... பாராட்டுக்கள் நிரஞ்சன்..
பாராட்டுக்கள் சுகந்தா...

தமிழ்தாசன்
26-11-2008, 02:02 PM
காலங்கள் கடக்கின்றன கடந்து.....
வந்த பாதைகளோ காணமல் போயின..
பெண்னே நிற்றம் உன் முற்றம் வந்து செல்கிறேன்.....
என்காதல் மோற்ச்சம் பெற.
முற்றம் நின்ற செடிகள் கூட
தழைத்து விட்டன ....... என் கண்ணீரால்
ஆனால் இன்னும் தழைக்கவும் இல்லை..... என் காதல்
தடுக்கப்படவும் இல்லை.................... என் கண்ணீர்
பாராட்டுதலுக்கும் பதிலுக்கும் நன்றி

பெண்ணே!
என்னே உன் மனம்?
கண்ணீரில் தேனீர் பருகுவதோ உன் எண்ணம்?
காதல் உனக்கென்ன உப்புக்கல்லோ? - அவன்
சாதல் உனக்கென்ன சாமித் திருவிழாவா?

தொடருங்கள் ... நிரஞ்சன். அவர்களே!

நிரன்
28-11-2008, 06:21 PM
பெண்ணே!
என்னே உன் மனம்?
கண்ணீரில் தேனீர் பருகுவதோ உன் எண்ணம்?
காதல் உனக்கென்ன உப்புக்கல்லோ? - அவன்
சாதல் உனக்கென்ன சாமித் திருவிழாவா?

சாதலைக் கொல்லும் காதல் படைக்க நினைக்கிறேன்
பெண்ணே...........
நீ சாதலில் காதல் படைக்க நினைக்கிறாய்.

காதலியே.....!
கருவறையில் உதிர்த்த நாமும்
மனவறையில் உதிர்த்த நம் காதலும்
இறுதியில்...
மணவறையில் கூடுமோ.......
இல்லை ஆறடியில் புதையுமோ.....

நன்றி தமிழ்தாசன் + வசீகரன்:)