PDA

View Full Version : நட்புடன்...



தமிழ்தாசன்
24-11-2008, 08:09 PM
நாளைய,
மகிழ்விற்கான இன்றைய,
பார்வைகள்...
மகிழ்வான,
உண்மை, நேர்மை, உழைப்பு,
கொண்ட பயணங்கள்...
தெளிவு கொண்ட தேடல்கள்...

'ஒரு முறை பிறப்பு
மறுமுறை வருகிலும்,
புரிந்திடாத் தன்மைகள்.

உடல் விட்டுப்போகும்
உயிர், திசை தெரியாது.

இருந்ததில் பிறந்திடும்
பிறந்தபின் இறந்திடும்
முடிவுகள் தெரியா விடுகதைகள்.

எத்தனையில் போகும்,
எதில் போகும்,
விநாடிகள் புரியாத உயிர் நாடிகள்.
பொருள் புரிந்தோமோ?

உனைக்கொன்று நான் வாழ்தலும்,
எனைக்கொன்று நீ வாழ்தலும்,
யாதும் பயனிலை.
எழுவோம்,
செயற்படுவோம்,
பொருள் புரிந்து
புறப்படுவோம்.


('அருவி' சஞ்சிகை சித்திரை 2002 ல் எழுதப்பட்டது.)

சுகந்தப்ரீதன்
25-11-2008, 02:13 AM
"மண்தான் கடைசியில் ஜெயிக்கிறது இதை மனம்தான் உணர மறுக்கிறது"- ன்னு ஒரு பாட்டுல வைரமுத்து சொல்லியிருப்பாரு...!! எல்லோருக்கும் தெரியும் இன்று இல்லாவிட்டால் நாளை, நாளை இல்லாவிட்டால் நாளை மறுநாள் அதுவும் இல்லாவிட்டால் என்றாவது ஒருநாள் எல்லோரும் இறந்துபோவோம் என்று..!! இருந்தும் சிரஞ்சீவியாக ஜீவித்து இருப்போம் என்பதைப்போலத்தான் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது இன்னமும் மனித மனங்கள்..!! தெரிந்ததை உணராமல் இருப்பதுக்கூட ஒருவகையில் உலக இயக்கத்திற்க்கு உதவியாக இருக்கிறதோ என்னவோ..??

நல்லதொரு கவிதை நண்பரே..!! வாழ்த்துக்கள்...!!:icon_b:

தமிழ்தாசன்
25-11-2008, 07:39 AM
வாழ்த்துகளுக்கு மிக்க மகிழ்ச்சி சுகந்தப்ரீதன் அவர்களே!

'ஒருவன் ஒருவன் முதலாளி
உலகில் மற்றவன் தொழிலாளி'

என்ற வரிகளும் எனக்குப் பிடித்தது.



"மண்தான் கடைசியில் ஜெயிக்கிறது இதை மனம்தான் உணர மறுக்கிறது"- ன்னு ஒரு பாட்டுல வைரமுத்து சொல்லியிருப்பாரு...!! எல்லோருக்கும் தெரியும் இன்று இல்லாவிட்டால் நாளை, நாளை இல்லாவிட்டால் நாளை மறுநாள் அதுவும் இல்லாவிட்டால் என்றாவது ஒருநாள் எல்லோரும் இறந்துபோவோம் என்று..!! இருந்தும் சிரஞ்சீவியாக ஜீவித்து இருப்போம் என்பதைப்போலத்தான் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது இன்னமும் மனித மனங்கள்..!! தெரிந்ததை உணராமல் இருப்பதுக்கூட ஒருவகையில் உலக இயக்கத்திற்க்கு உதவியாக இருக்கிறதோ என்னவோ..??

நல்லதொரு கவிதை நண்பரே..!! வாழ்த்துக்கள்...!!:icon_b:

நண்பரே! படியுங்கள் தொடர்ந்தும் இணைவோம்.