PDA

View Full Version : காதல்!



தமிழ்தாசன்
24-11-2008, 06:19 PM
விழியை எறிந்து
இதயம் தொலைத்து
உறவை வருத்தும்
உறவோ?

மதுரை மைந்தன்
24-11-2008, 06:41 PM
கவிதை நன்றாக இருக்கு நண்பரே. ஒரு சிறு மாற்றம் செய்தால் இன்னும் நன்றாக இருக்கும் எனபது என் தாழ்மையான கருத்து. மாற்றம் இதோ

விழியை எறிந்து
இதயம் தொலைத்து
இரவை வருத்தும்
உறவோ?

தமிழ்தாசன்
24-11-2008, 06:59 PM
பாராட்டுக்கு மிக்க மகிழ்ச்சி நண்பரே!

உங்கள் வரிகள் அசத்தல்.



கவிதை நன்றாக இருக்கு நண்பரே. ஒரு சிறு மாற்றம் செய்தால் இன்னும் நன்றாக இருக்கும் எனபது என் தாழ்மையான கருத்து. மாற்றம் இதோ

விழியை எறிந்து
இதயம் தொலைத்து
இரவை வருத்தும்
உறவோ?

இதுவும் நன்றாகவே இருக்கிறது.
கலக்கலா இருக்கு.

கவிஞர் வைரமுத்து அவர்கள் 'அலைகள் ஓய்வதில்லை' திரைக்காக காதலை சுகமாக இப்படிக் கூறினார்.

'விழியில் விழுந்து
இதயம் நுழைந்து
உயிரில் கலந்த
உறவே!'

என்று

ஆனால் அதை மாற்றியது இவ்வரிகள்.
இளமைக்காலத்து இதயத்தில் காதல் என்று பல மாயை உணர்வுகள் வருமன்றோ! அக்கால வருத்த வடிவமே இது.

"பொத்தனூர்"பிரபு
30-11-2008, 05:19 PM
நல்லய்யிருக்கு

geminisenthil
01-12-2008, 03:22 AM
மிக்க சிறப்பு உங்கள் கவிதை வரிகள்

தமிழ்தாசன்
01-12-2008, 10:03 AM
மிக்க மகிழ்ச்சி அன்புள்ளங்களே!

பொத்தனூர்"பிரபு அவர்களே!

geminisenthil அவர்களே!

தொடர்வோம்.

சிவா.ஜி
01-12-2008, 10:30 AM
நான்கு வரிகளில் காதலைப் பாடியது நன்றாக உள்ளது தமிழ்தாசன். வாழ்த்துகள்.

வசீகரன்
02-12-2008, 01:13 PM
இரவு... உறவு... மொத்தத்துல வருத்தம் தாங்கிறீங்கலாப்பு
ரெண்டு பேரும்...:lachen001:
மன்ற காதல் கவிஞர்களே உடனே வரிந்து கட்டி கொண்டு வாருங்கள்...!:sauer028::sauer028::sauer028:

தமிழ்தாசன்
02-12-2008, 04:06 PM
மிக்க மகிழ்ச்சி அன்புள்ளங்களே!



நான்கு வரிகளில் காதலைப் பாடியது நன்றாக உள்ளது தமிழ்தாசன். வாழ்த்துகள்.

சிவா.ஜி அவர்களே!
வாழ்த்துகளுக்கு மகிழ்ச்சி.


இரவு... உறவு... மொத்தத்துல வருத்தம் தாங்கிறீங்கலாப்பு
ரெண்டு பேரும்...:lachen001:
மன்ற காதல் கவிஞர்களே உடனே வரிந்து கட்டி கொண்டு வாருங்கள்...!:sauer028::sauer028::sauer028:

வசீகரன் அவர்களே!
காதல் கவிஞர்களை அழைத்தமைக்கு மகிழ்ச்சி.

அமரன்
03-12-2008, 10:06 AM
ஹா...
வேடர்கள் காதலை
கண் முன் நிறுத்துகிறது
இந்தக் காதல்!

விழிகளை வீசி
இருதயம் தொலைத்து
ஒருதயம் வென்று
உறவே வருத்தும் உணர்வு
எந்தன் காதல்.


அழகிய தமிழ் நடை இது.
பாராட்டும் நன்றியும் உரித்தாகுக தமிழ்த்தாசரே!

தமிழ்தாசன்
03-12-2008, 02:33 PM
ஆக அருமை

அன்புள்ள அமரன் அவர்களே!



ஹா...
வேடர்கள் காதலை
கண் முன் நிறுத்துகிறது
இந்தக் காதல்!

விழிகளை வீசி
இருதயம் தொலைத்து
ஒருதயம் வென்று
உறவே வருத்தும் உணர்வு
எந்தன் காதல்.


அழகிய தமிழ் நடை இது.
பாராட்டும் நன்றியும் உரித்தாகுக தமிழ்த்தாசரே!


பாராட்டுதலுக்கு மகிழ்ச்சி.


'காதலில் இதயம்
கலந்தபின்
யாதிலும் அறிந்திலார்
இம் மானிடர்.
சாதலும் உதயம்
கண்டபின்
வாழ்தலும் புரிந்திலார்
இக் காதலர்.'

ஆதவா
15-12-2008, 01:17 PM
விழியை எறிந்து
இதயம் தொலைத்து
உறவை வருத்தும்
உறவோ?

நீங்கள் குறிப்பிட்ட அந்தப்பாடலின் நினைவுதான் வந்தது... பாதிக்கும் மேற்பட்ட வார்த்தைகள் அதில் இருப்பதால்..

காதல் அப்படிப்பட்ட உறவுதான்.... சிலருக்கு.

தமிழ்தாசன்
15-12-2008, 08:27 PM
ம் உண்மையில்லாமலில்லை.

ஓவியன்
16-12-2008, 04:26 AM
விழியை எறிந்து
இதயம் தொலைத்து
உறவை வருத்தும்
உறவோ?
விழியையும், இதயத்தையும் எறிந்தும், தொலைத்தும் அல்லாடினால் உறவுகள் வருத்தமடைவதில் என்ன தவறு...??

தமிழ்தாசன்
16-12-2008, 11:20 AM
விழியையும், இதயத்தையும் எறிந்தும், தொலைத்தும் அல்லாடினால் உறவுகள் வருத்தமடைவதில் என்ன தவறு...??


அது தானே!

இளசு
24-01-2009, 06:14 AM
பல ''காதல்''களின் நிலைகண்டு
வைரமுத்துவே ஒப்புவார்..

பாராட்டுகள் தமிழ்தாசன்!

தீபா
24-01-2009, 08:57 AM
விழியும் எரிந்து
இதயம் தொலைந்து
வருந்தும் உறவு
ஏனோ?

கெடுக்கும் நடுங்கும்
ஒருநாள் தெறிக்கும்
காதல் உறவை விட்டுவிடு.

மயங்கும் கிறங்கும்
முழுதாய் அழிக்கும்
காதல் விஷத்தைக் கொட்டிவிடு

------------

தமிழ்தாசன் அவர்களே..... நீங்கள் கேள்வி கேட்டீர்கள்... அதற்குப் பதில் சொல்லிவிட்டேன்... :)