PDA

View Full Version : ஜலாலுதீன் ரூமி கவிதைகள்



ஆதி
24-11-2008, 01:20 PM
மன்னிக்க வேண்டும் உறவுகளே தற்போது ஆங்கிலத்தில் பதிகிறேன்.. பிறகு ஒவ்வொரு கவிதையையும் தமிழாக்கம் செய்ய முயற்சிக்கிறேன்.. நீங்கள் விருப்பட்டாலும் தமிழ் படுத்தலாம்..




The Lovers

The Lovers
will drink wine night and day.
They will drink until they can
tear away the veils of intellect and
melt away the layers of shame and modesty.
When in Love,
body, mind, heart and soul don't even exist.
Become this,
fall in Love, and you will not be separated again.

ஆதி
24-11-2008, 07:32 PM
-------------
காதலர்..

இரவு பகல் கருதாமல்
இன்பப்பால் பருகுவர்

ஆடைத்திரண்ட மயக்கம்
அகன்று கிழியும் வரைய
மானம் மனிதம்
மருகி உருகும் வரை
இன்ப கோப்பையை அவர்களின்
இதழ்கள் பிரிவதில்லை..

உடல், மனம், இதயம், ஆன்மமென
அனைத்தும்
காதலில் திளைத்திருக்கும் கணங்களில்
வேறுப்பட்டிருப்பதில்லை..

மீண்டுமந்த மெய்யன்பில்
மூழ்கிவிடுங்கள்
முறிந்துவிட மாட்டீர்கள் எஞ்ஞான்றும்..

குறிப்பு : என் மதிக்கெட்டிய தமிழாக்கத்தை தந்திருக்கிறேன், தவறிருந்தால் பொறுத்தருளி சுட்டிக்காட்டுங்கள்.. நன்றியுடன் கற்றுக் கொள்வேன்..

சாம்பவி
25-11-2008, 03:55 AM
-------------
காதலர்..

குறிப்பு : தவறிருந்தால் பொறுத்தருளி சுட்டிக்காட்டுங்கள்..

தப்பித்தீர்கள்.... !!! ;)

எழுத்துக்கு எழுத்து
வார்த்தைக்கு வார்த்தை
மொழி மாற்ற
பொருள் பேதலிக்கும்.....
பொருளை
மொழி மாற்ற*
கவிதை
பேரொளி பெருக்கும்... !!!!

பேதலிப்பதை
களைவீராக...... .. !!!!

ஆதி
25-11-2008, 04:34 AM
தப்பித்தீர்கள்.... !!!

எழுத்துக்கு எழுத்து
வார்த்தைக்கு வார்த்தை
மொழி மாற்ற
பொருள் பேதலிக்கும்.....
பொருளை
மொழி மாற்ற*
பொருள் பேரொளி பெருக்கும்... !!!!

பேதலிப்பதை
களைவீராக...... .. !!!!


நீங்கள் சொல்வதை ஏற்கிறேன் சாம்பவி.. வார்த்தைக்கு வார்த்தை மொழிமாற்ற நானும் முதலில் எண்ணவில்லை.. ரூமி ஒரு சூஃபி ஞானி கடவுளுக்கும் மனிதனுக்குமூடேவான சங்கமத்தையே அவர் பாடியிருக்கிறார்..

காதலே விழிப்புணர்வின் முதல் படி என்பார் ஓஷோ..

இரு கோணங்களில் எதை எடுப்பதென்ற தெளிவில்லாமல் இருந்ததால்தால், நேரடியான மொழிமாற்றத்தை கையெடுத்தேன்..

இது என் நண்பர் ஒருவரின் மொழியாக்கம்.. இது சரியாக உள்ளதாக் என்று பாருங்கள்..

இரவு பகலாய்
இன்ப ரசம் பருகுவர்...

மயக்கத்தின் மாயத்
திரை கிழியும் வரை
நாணமும் ஒழுக்கமும் உருகி சிதையும் வரை
பருகித் திளைப்பர்...

உடல் மூளை இதயம் ஆன்மா
யாதுமற்றது காதல்..

இவ்வாறான காதல் செய்யுங்கள்,
என்றும் இல்லை சாதல்.

ஆதவா
25-11-2008, 04:40 AM
அதெல்லாம் சரிதாங்க.... யார் அந்த ரூமி???

சிறுபிள்ளை
25-11-2008, 05:54 AM
அதெல்லாம் சரிதாங்க.... யார் அந்த ரூமி???

ரூமி பேர்லதான் நெரைய பிரான்டுக வருதே அதுவா? ரூமி ஹெர்பல்ஸ்.. ஹா ஹா

சிறுபிள்ளை