PDA

View Full Version : விவாகரத்து.சிறுபிள்ளை
24-11-2008, 08:31 AM
ஒரு இனிய கருத்தை உங்களிடம் பகிர்வதில் எனக்கு ஆனந்தமே

தந்தை தொலைபேசியில் வெளி நாட்டில் இருக்கும் தன் மகனிடம் தொடர்பு கொண்டு மிகவும் கோபமாக பேசுகிறார்

டேய், நான் உங்கம்மாவை விவாகரத்து செய்யப்போகிறேன்.

ஐயோ, அப்பா என்ன ஆச்சி உங்களுக்கு ஏன் திடீர்னு இந்த முடிவு?

போடா, எனக்கு 50வருசமா அவகூட குடும்பம் நடத்தி வெருத்து போச்சி, அதுவுமில்லாம நீயும் உங்கக்காவும் வெளி நாட்டுக்கு போயிடிங்க... நீங்க போயே 10வருசமாவுது.. இவ்லோ நாளா உங்க அம்மா முகத்தை பாத்து பாத்து வெருத்துட்டேன் அதான் இந்த முடிவு..

வேண்டாம்பா இந்த வயசுல விவாகரத்து பன்றது நல்லா இல்லைப்பா...

போடா நான் விவாகரத்து பன்றது பன்றதுதான்..

ஒரு நிமிசம் இருங்கப்பா நான் அக்காகிட்ட பேசிட்டு சொல்லுறேன்

(அப்பா பட்டென்று தொலைபேசியை துண்டித்துவிடுகிறார்.)

அக்காவிடம் தொலைபேசியில் மிகவும் பதற்றமாக,

அக்கா, அக்கா, அப்பா அம்மாவை விவாகரத்து பன்னபோராராம்.!

டேய் என்னடா சொல்ற?

ஆமாங்கா அவர்தான் சொன்னாரு?

அப்படி எல்லாம் இருக்காது, இரு நான் அப்பாகிட்ட பேசுறேன்.

அக்கா அப்பாவிடம் தொலைபேசியில் பேசுகிறாள்.

அப்பா, தம்பி சொன்னான் நீங்க விவாரத்து பன்னப்போறிங்களாமே?

ஆமாம் அதுக்கென்ன இப்போ?

அதெப்படி பன்னலாம்.. அதெல்லாம் கூடவே கூடாது..

நான் பன்னுவேன் பன்னியே தீருவேன்..

சரி எங்களுக்காக ஒரு நாள் பொருத்துக்கோங்க.. நானும் தம்பியும் நாளைக்கே ஊருக்கு வரோம்..

ம்ம்ம்... பாக்கலாம் பாக்கலாம்

என்று சொல்லி மீண்டும் பட்டென்று தொலைபேசிய கட் செய்து தன் மனைவிடம் சொல்கிறார் இப்படி,

ஏ மங்கலம், நம்ம பையனும் பொண்ணும் நாளைக்கு தீபாவளிக்கு வர்ராங்களாம், அதுவும் அவங்க சொந்த காசுல ஃப்லைட் டிக்கட் வாங்க்கிக்கொண்டு?!இந்த காலத்துல எல்லோரும் 365 நாளும் பிசி கிடையாதுங்க... நம்ம நேசிக்கிறவங்களுக்காக ஒரு நாள் ஒதுக்கு அவங்க கூட செலவு பன்றதுல ஒன்னும் விட்டுப்போகாதிங்க. பணம் மட்டுமே வாழ்க்கை இல்லை

மதி
24-11-2008, 08:47 AM
ஹாஹா... விவாகரத்துன்னு சொல்லித் தான் பையனையும் பொண்ணையும் தீபாவளிக்கு அழைக்க வேண்டியிருக்கு.. எல்லாம் காலக் கொடுமை..

சிறுபிள்ளை
24-11-2008, 08:52 AM
ஹாஹா... விவாகரத்துன்னு சொல்லித் தான் பையனையும் பொண்ணையும் தீபாவளிக்கு அழைக்க வேண்டியிருக்கு.. எல்லாம் காலக் கொடுமை..

உங்களுக்கு சிரிப்பு வருகிறது, ஆழமாக சிந்தித்து பாருங்கள் இதுலுள்ள உண்மையும் இந்த பெற்றோர்களின் வருத்தமும் தெரியும்

என்னாங்க பன்றது, எல்லோரும் அலுவலகம், வெளி நாடு, பணம் பணம் என்று 99 பொற்காசுகள் கதையைப்போல அவர்களின் அனைத்து சுகங்களையும் விட்டுவிட்டு ஓடிக்கொண்டிருகிறார்களேத்தவிர அவர்களின் முகத்தை காண ஏங்கும் இந்த மாதிரியான தாயுள்ளமும் தந்தையுள்ளமும் எத்தனை எத்தனையோ இந்த உலக்த்திலே..அவர்கள் தேவை இதுதானே தவிர வேறென்ன?

சிறுபிள்ளை

ரங்கராஜன்
24-11-2008, 08:53 AM
நகைச்சுவையாக சொல்லி இருந்தாலும், கருத்து அருமை, யோசிக்க படவேண்டியது இதை சிறுகதை பகுதியில் பதித்து இருக்கலாமே?.

சிறுபிள்ளை
24-11-2008, 08:59 AM
நகைச்சுவையாக சொல்லி இருந்தாலும், கருத்து அருமை, யோசிக்க படவேண்டியது இதை சிறுகதை பகுதியில் பதித்து இருக்கலாமே?.

இல்லை நண்பரே, இது என்னோட சொந்த கதையல்ல, அலுவலக நண்பருக்கு வந்த ஒரு கவிதைய படிக்கும்போது அதிலுள்ள உண்மைக்கருவைக்கொண்டு நான் எழுதியது. என்னதான் இருந்தாலும் கரு என்னுடையது அல்லவே, அதனால்தான் இங்கு பதித்தேன்.

சிறுபிள்ளை

கண்மணி
24-11-2008, 09:03 AM
விவேகரத்துன்னு பேரை வச்சிருக்கலாம். ஆனால், இதே கதையை எங்கே படித்தீர்கள் என்பதையும் கொடுத்து இருக்கலாம்.

படித்ததில் பிடித்தது பகுதிக்கு மாத்திடச் சொல்லி சிபாரிசு செய்கிறேன்..

(நான் ஏற்கனவே படிச்சிட்டேனே)

ரங்கராஜன்
24-11-2008, 09:10 AM
இல்லை நண்பரே, இது என்னோட சொந்த கதையல்ல, அலுவலக நண்பருக்கு வந்த ஒரு கவிதைய படிக்கும்போது அதிலுள்ள உண்மைக்கருவைக்கொண்டு நான் எழுதியது. என்னதான் இருந்தாலும் கரு என்னுடையது அல்லவே, அதனால்தான் இங்கு பதித்தேன்.

சிறுபிள்ளை

நன்றி நண்பரே
உங்க்களின் நேர்மைக்கு ஒரு சபாஷ், கரு என்பது யாருக்கும் அதுவாக தோனாது, எதாவது ஒரு மூல பொருளிள் இருந்து தான் தோனும், எதாவது கவிதை, கதை, காட்சி, அல்லது சிந்தனையில் இருந்து தான் உருவாகும். அதனால் யாரும் அதை சொந்தம் கொண்டாட முடியாது. நன்றாக இருக்கு உங்கள் கதை நம் பொறுப்பாளர்களை தொடர்பு கொள்ளுங்கள் அவர்கள் திரியை மாற்ற உதவுவார்கள்.

மதுரை மைந்தன்
24-11-2008, 10:18 AM
ஏற்கனவே இதைப் படித்திருந்தாலும் மீண்டும் படிக்கும் போது சிரிப்பு வருது. விவாக ரத்து சம்பந்தமாக எனக்கு தெரிந்த ஒரு ஜோக்.

போலந்து நாட்டுக்காரன் ஒருவன் ஜட்ஜிடம் சென்று எனக்கு என் மனைவியிடமிருந்து விவாக ரத்து வேண்டும் என்றான். ஜட்ஜ் ஏன் விவாகரத்து செய்கிறாய் என்று கேட்டதற்கு அவன் என்னோட மனைவி என்னை கொல்லப் பார்க்கிறாள் என்றான். ஜட்ஜ் எப்படி என்று கெட்டதற்கு அவன் சொன்னான் "நேற்று கடைக்கு போய் ஒரு டப்பாவை வாங்கி வந்து அதை கப் பnhர்டில் வைத்தாள். அதில் எழுதி இருந்தது
Polish Remover. :lachen001:

அமரன்
24-11-2008, 11:05 AM
365 நாட்களும் பிசியாக இருக்கனுங்கிறது என் விருப்பம். அந்த பிசில குடுப்பத்துக்கான நேரமும் இருக்க வேண்டும் என்பதில் எனக்கு அதிக தீவிரம். இந்தக்கதை அதைச் சொன்னதால் எனக்கு இது பிடிச்சிருக்கு.

பதிவு இங்கே மாற்றப்பட்டுள்ளது.

சிறுபிள்ளை
24-11-2008, 11:09 AM
365 நாட்களும் பிசியாக இருக்கனுங்கிறது என் விருப்பம். அந்த பிசில குடுப்பத்துக்கான நேரமும் இருக்க வேண்டும் என்பதில் எனக்கு அதிக தீவிரம். இந்தக்கதை அதைச் சொன்னதால் எனக்கு இது பிடிச்சிருக்கு.

பதிவு இங்கே மாற்றப்பட்டுள்ளது.

இதைத்தான் இந்த கதை சொல்கிறது தோழரே.. சரியான இடத்திற்கு மாற்றியமைக்கு என் நன்றிகள்.

உங்கள் சிறுபிள்ளை