PDA

View Full Version : காதலியே!



தமிழ்தாசன்
23-11-2008, 09:17 PM
விம்மி வெடிக்கிறது மனம்.
உனை நினைக்கையிலே!

காதலியே!
கன்னிக் கனவில் கலந்த காட்சிகள்
பின்னிப்பிணைந்ததுபார்.
எண்ணித்துடிக்குதே! ஏக்கம்தொடருதே!

கல்லிலும் காதல் தெரியுதடி!
நெல்லு வயல்வெளியின் உயரே
வானப் படுக்கையில்
வண்ண ஓவியம் வரைந்த அந்த மாலை
நெஞ்சுள் விரியுதடி!

உன் கண்ணில் எனைக்கரைத்தாய்
உயிரில் உருகவைத்தாய்
உனையே பருகவைத்தாய்.

'காதலியே!
உனை நினைப்பதையே நினைக்கிறேன்
உனை மறப்பதையே மறக்கிறேன்.'

"பொத்தனூர்"பிரபு
30-11-2008, 05:09 PM
/
'காதலியே!
உனை நினைப்பதையே நினைக்கிறேன்
உனை மறப்பதையே மறக்கிறேன்.'
__________________
நல்லாயிருக்கூ

தமிழ்தாசன்
01-12-2008, 10:04 AM
மிக்க மகிழ்ச்சி அன்புள்ளமே!

பொத்தனூர்"பிரபு அவர்களே!

நல்லாயிருக்கூ
பிடித்திருக்கிறது.

வசீகரன்
02-12-2008, 01:26 PM
கல்லிலும் காதல் தெரியுதடி!
நெல்லு வயல்வெளியின் உயரே
வானப் படுக்கையில்
வண்ண ஓவியம் வரைந்த அந்த மாலை
நெஞ்சுள் விரியுதடி!
மனதை கொள்ளை கொண்ட வரிகள்.........!!!


'காதலியே!
உனை நினைப்பதையே நினைக்கிறேன்
உனை மறப்பதையே மறக்கிறேன்.'
புதுமையான வரிகள்..........!!!

மன்றத்தில் காதலை ஆராட்டி இப்போதெல்லாம் கவிகள் வருவதில்லை... உங்களின் இந்த கவிதை
அந்த குறையை போக்கி விட்டது...!

தமிழ்தாசன்
09-12-2008, 12:48 PM
புதுமையான வரிகள்..........!!!

மன்றத்தில் காதலை ஆராட்டி இப்போதெல்லாம் கவிகள் வருவதில்லை... உங்களின் இந்த கவிதை
அந்த குறையை போக்கி விட்டது...!

பாரட்டுக்களுக்கு மகிழ்ச்சி
வசீகரன் அவர்களே!

குறைபோக்கியது என்று குறிப்பிட்டுள்ளீரகள்.
உங்கள் குறிப்புக்கு தலைசாய்க்கிறேன்.
ஆனாலும் இங்கே பல மன்றக்கவிதைகள் காதலையே காதலிக்கின்ற கருத்தாக்கள் பலர் நிறையவே என்னை விட கலக்கின்றனர்.

jenitha
09-12-2008, 10:16 PM
(உன் கண்ணில் எனைக்கரைத்தாய்
உயிரில் உருகவவைத்தாய்
உனையே பருகவைத்தாய்)

உள்ளத்தை அள்ளி கொண்ட வரி.

ஜெனித்தா

தமிழ்தாசன்
09-12-2008, 10:37 PM
(உன் கண்ணில் எனைக்கரைத்தாய்
உயிரில் உருகவைத்தாய்
உனையே பருகவைத்தாய்)

உள்ளத்தை அள்ளி கொண்ட வரி.

ஜெனித்தா

மிக்க மகிழ்ச்சி ஜெனித்தா அவர்களே!