PDA

View Full Version : கதைப் போட்டி - ஆலோசனைகள்.

ஓவியா
23-11-2008, 02:20 PM
நிர்வாகிக்கும், பொறுப்பாளர்களுக்கும், ஆலோசக சான்றோர்களுக்கும் மற்றும் அனைத்து மன்ற உறவுகளுக்கும் அன்பின் இனிய வணக்கங்கள்.

நெடு நாட்களாகவே கதைப் போட்டி நடைப்பெறாமல் இருக்கின்றது, மீண்டும் ஒரு கதைப் போட்டி வைத்தால் என்ன?

மன்றத்தில் கதையாசிரியர்கள் அளவுக்கு அதிகமாகவே இருக்கின்றனர், அதனால் அவசியம் இது ஒரு வெற்றி நிகழ்வாகவே இருக்கும் என்பதில் ஐயமில்லை.

முதல் மூன்று கதைகளையும் பொங்கல் மின்னிதலில் பதிக்கலாம்.

எல்லாரும் கருத்துக்களை சொல்லுங்கள் மக்களே.

போட்டியில் கலந்து சிறப்பிக்க (பரிசு பெற அல்ல) நான் ரெடி. :redface:

அன்புடன்
- ஓவியா. (மன்ற செல்லம்;))

அன்புரசிகன்
23-11-2008, 02:34 PM
புகைப்படப்போட்டி ஒன்றும் தொக்கு நிற்கிறது... அதையும் தொடரவேண்டுகிறேன்...

தவிர கதைப்போட்டிக்கு அறிஞர் $$$ ல் அனுப்புவார் என்றால் :sport-smiley-014:.............

:medium-smiley-002:

ரங்கராஜன்
23-11-2008, 02:35 PM
ஐ ஜாலி நானும் ரெடி, ஆனால் இந்த போட்டி, எக்ஸாம், செமினார், யூனிட் டேஸ்டு-னாலே எனக்கு சின்ன வயசில் இருந்து பயம். இருந்தாலும் இதில் இம்போஸிஸன் இல்லை என்ற காரணத்தால் சந்தோஷத்துடன் கலந்து கொள்வேன்.

தாமரை
23-11-2008, 02:36 PM
நிர்வாகிக்கும், பொறுப்பாளர்களுக்கும், ஆலோசக சான்றோர்களுக்கும் மற்றும் அனைத்து மன்ற உறவுகளுக்கும் அன்பின் இனிய வணக்கங்கள்.

நெடு நாட்களாகவே கதைப் போட்டி நடைப்பெறாமல் இருக்கின்றது, மீண்டும் ஒரு கதைப் போட்டி வைத்தால் என்ன?

முதல் மூன்று கவிதைகளையும் பொங்கல் மின்னிதலில் பதிக்கலாம்.

- ஓவியா. (மன்ற செல்லம்;))

கதைப் போட்டியில எப்படிக் கவிதையை தேர்ந்தெடுப்பது ஓவியா?

கதைப் போட்டி வேணுமா கவிதைப் போட்டி வேணுமா?

இன்றைய நிலையில் கதை அதிகமாக பதியப் படுகிறது..

அதனால் கவிதைப் போட்டி வைப்பது நலம்.

ரங்கராஜன்
23-11-2008, 02:40 PM
கதைப் போட்டியில எப்படிக் கவிதையை தேர்ந்தெடுப்பது ஓவியா?

கதைப் போட்டி வேணுமா கவிதைப் போட்டி வேணுமா?

இன்றைய நிலையில் கதை அதிகமாக பதியப் படுகிறது..

அதனால் கவிதைப் போட்டி வைப்பது நலம்.

திரு.தாமரை அவர்களே
கவிதைப் போட்டியா??????????, ஏற்கனவே ஓவியா தூக்க முடியாத அளவுக்கு மெடல் வச்சி இருக்காங்க, அதில் இன்னும் ஒன்று சேர வேண்டுமா?, அதை வாங்கி வேண்டுமானால் எனக்கு தரட்டும். ஹா ஹா ஹா :aetsch013:

ஓவியா
23-11-2008, 02:41 PM
கதைப் போட்டியில எப்படிக் கவிதையை தேர்ந்தெடுப்பது ஓவியா?

கதைப் போட்டி வேணுமா கவிதைப் போட்டி வேணுமா?

இன்றைய நிலையில் கதை அதிகமாக பதியப் படுகிறது..

அதனால் கவிதைப் போட்டி வைப்பது நலம்.

அண்ணா,
அது எழுத்துப்பிழை, (நான் தமிழ் படிக்காதபெண் என்று உங்களுக்கு தெரியுமே) இதை தனிமடலில் சுட்டிக்காட்டியிருக்கலாமே!! :cool:

கதை அதிகமாக பதிய படுவதால் தான் அவர்களுக்கு ஒரு அங்கிகாரம் (மெடல்) கிடைக்க நான் கதைப்போட்டி நடத்தி அதில் பரிசு பெரும் கதையைதான் பொங்கல் இதழுக்கும் முன்மொழிந்தேன்.

********************************************************************************************************

ஆமாம் அன்பு, படப் போட்டியையும் மீண்டும் துவங்கலாம். :icon_b:

Keelai Naadaan
23-11-2008, 04:22 PM
நல்ல யோசனை சகோதரி.
கதை போட்டியில் கலந்து சிறப்பிக்க எனக்கும் விருப்பம்.

அமரன்
24-11-2008, 07:47 AM
அனைவரும் விரும்பியபடி போட்டிகளை நடத்தலாம்.
எப்படி நடத்தலாம் என்ற ஆலோசனைகளை தாருங்கள்.

சிறுபிள்ளை
24-11-2008, 08:48 AM
கதைபோட்டினா நல்லா இருக்கும். நானும் கலந்துக்கப்பாக்குறேன்.

உங்கள்
சிறுபிள்ளை

வசீகரன்
24-11-2008, 09:17 AM
அதிகம் மன்றம் வராமல்... எப்போதோ வந்து ஏதோ கவிதைகளை எழுதிவிட்டு போகும் எனது கவிதைகள் ஆச்சரியமாக மன்ற மின்னிதழ்களில் வந்துள்ளது..! எனக்கு இது ரொம்பவே ஆச்சரியம்தான் விஷயம்தான்..! எனது பதிவுகளை பரிந்துரைத்தவர்களுக்கு நான் நன்றி சொல்ல கடமை பட்டுள்ளேன்,,!
நானும் கதை போட்டியில் கலந்து கொள்ள முயற்சிக்கிறேன்...

ஓவியா
27-11-2008, 12:02 PM
அன்பு உள்ளங்களே,

புதிய கதை போட்டி இருக்க? இல்லையா?

வைப்போமா? வேண்டாமா?

நிரன்
03-12-2008, 08:05 PM
ஐ ஜாலி.... வையுங்க்கா வையுங்க................... அடேய் நிரஞ்சன் வாசிக்கிறதுக்கு மட்டுந்தான் எட்டிப்பரா்றா..... அடியேன் காத்திருக்கிறேன் வாசிக்க

கண்மணி
04-12-2008, 01:26 AM
தவில் - வாசிக்கணும்னா அடிக்கணும்
தட்டச்சு - அடிச்சு வாசிக்கணும்
இந்தக் கடி - வாசிச்சு அடிக்கணும்

இப்போ சொல்லுங்க

அடியேன்
காத்திருக்கிறேன்
வாசிக்க

அப்படின்னா என்ன அர்த்தம்?

ஆதவா
04-12-2008, 03:38 AM
தவில் - வாசிக்கணும்னா அடிக்கணும்
தட்டச்சு - அடிச்சு வாசிக்கணும்
இந்தக் கடி - வாசிச்சு அடிக்கணும்

இப்போ சொல்லுங்க

அடியேன்
காத்திருக்கிறேன்
வா சிக்க

அப்படின்னா என்ன அர்த்தம்?

:eek::eek:

நானும் ரெடி... எப்போ வைக்கப் போறீங்க???? தலைப்பு என்ன?

தாமரை
04-12-2008, 03:57 AM
ஒரே தலைப்பிலோ ஒரே சூழ்நிலையிலோ கதைப் போட்டி வைத்தால் நன்றாக இருக்காது. படைப்பாளிக்கு சுதந்திரம் இருக்க வேண்டும். இது என்ன பள்ளித் தேர்வா?

கரு எதுவாக வேண்டுமானாலும் இருக்கட்டுமே.. களம் எதுவாக வேண்டுமானால் இருக்கட்டுமே..

அப்படி இருந்தால் தானே மக்கள் மண்டையைப் பிச்சிக்குவாங்க..

ஆதவா
04-12-2008, 07:41 AM

அதுவும் சரிதான்... தலைப்பு ஒண்ணா இருந்தாலும் மக்கள் பல பல விதமாக நின்னைப்பார்கள்னு நினைச்சேன்...:)

மண்டையில எதுவும் இல்லாட்டி எதைப் பிச்சிக்குவாங்க??:confused::D

அமரன்
04-12-2008, 07:43 AM
தலைப்போ களமோ கொடுக்காமல் கதையின் அளவை வரையறுக்கலாமோ?

ஓவியா
04-12-2008, 03:28 PM
மன்னிக்கவும், நான் ரொம்ப பிசியா இருக்கேன் அதான் இந்த திரியை மேலே தூக்க எனக்கு நேரம் கிடைக்கவில்லை.

ஓகே அமரன் கதையை வரையருக்கலாம்.

1. தாமரை அண்ணா சொல்வது போல் கரு சுதந்திரமாகவே இருக்கட்டும்.

2. வார்த்தைகள் சுமார் 1000 என்று வைத்துக்கொள்வோமா? கூட குறைய 1%'க்குள் இருக்க வேண்டும் அதாவது 900லிருந்து 1100 க்குள்தான் வார்த்தைகள் இருக்கவேண்டும். (உ.த. என்னுடைய ஜிஞ்சர் கதை 1400 வார்த்தைகள் அடங்கியவை)

3. எத்தனை (கேரக்டர்) வேண்டுமானாலும் இருக்கலாம்.

4. விரும்பினால் கதைக்கு சம்பந்தமாக ஒரு காட்சி படம் கொடுக்கலாம். (வழிமொழிகிறேன்)

5. கதையை அனுப்ப வேண்டிய ஆரம்ப தேதி மற்றும் முற்றுப்பெரும் தேதி. (7-10 நாட்களுக்கு மேல் போகாமல் இருப்பது நலம்)

6. ஓட்டு ஆரம்பம். முடிவு. (தயவு செய்து ஓட்டை ஒரு வாரத்தில் முடிக்கவும், 2 வாரம் என்பது கொஞ்சம் சலிப்பு தட்டுகிறது.)

7. பரிசின் விபரங்கள். இ-பணம் 3000, 2000, 1000, (ஆருதலுக்கு 500)

8. பதக்கம் முறையே தங்கம், வெள்ளி, வென்கலம். (1 ஆருதல்)

9. மன்றம் வெற்றியாளருக்கு இ-சான்றிதழ் அளிக்க வேண்டுக்கிறேன்.

வாருங்கள் மக்களே, உங்களின் கருத்துகளை அள்ளி குவியுங்கள்.

நான் நினைக்கிறேன் ஒரு 10 கதைகளுக்கு மேல் வரும் என்று, பார்ப்போம். :rolleyes:

ரங்கராஜன்
04-12-2008, 03:43 PM
ஒவியா அக்கா
சூப்பர் ரூல்ஸ்

ஓவியா
04-12-2008, 03:47 PM
ஒவியா அக்கா
சூப்பர் ரூல்ஸ்

ஏலே ஃடம்பி,
ஏதாவது வரையை மாற்றியமைக்கவோ இல்லை கூடுதலாக இணைக்கவோ எண்ணத்தில் தோன்றினால் சொல்லுபா.

1000 வார்த்தைகள் ஓகேவா!!!

முதல் முறையாக மன்றத்திடம் வெற்றியாளருக்கு இ-சான்றிதழ் அளிக்க முன்மொழிந்துள்ளேன், யாராவது வழிமொழியுவும்லே. :redface:

ரங்கராஜன்
04-12-2008, 04:05 PM
அந்த இரண்டு ரூல்ஸ்க்கு தான் சூப்பர்னு சொன்னேன்

அமரன்
04-12-2008, 08:29 PM
அனைவரது ஆலோசனைகளையும் அடிப்படையாக வைத்து நிர்வாகக் கூடாலோசனையின் விதிகளை சமைத்து அதன் பின்னர் போட்டி தொடங்கப்படும்.

அக்கா..
என்னால் ஒரு நாளைக்கு ஒரு கதை மட்டுமே ஆழமாகப் படிக்க இயலும். மேலோட்டமாகப் படித்து வாக்களிக்க மனம் ஒப்பாதே.

ஓவியா
04-12-2008, 08:54 PM

ஓ அப்படியா, அப்ப உனக்கு மட்டும் 5 நாள் எxட்ரா தர முன்மொழிகிறேன் ஹெஹேஹ்ஹெ ச்சும்மா சும்மா.

சரி என்ன செய்யலாம் சொல்லுங்க அமரன்,

ஒரு ஐடியா, அதான் ஆலோசனைபா. மொத்தம் எத்தனை கதைகள் வருகிறது என்று கண்டு பின் நாட்களை தேர்வு செய்வோமா!! அப்படி 10 கதைகளுக்குள் வந்தால் 10 நாட்கள் ஓட்டெடுப்பு வைப்போம் அதிகம் வந்தால் 14 நாட்கள்.

அதிக நாட்கள் ஓட்டேடுப்பில் வைத்தால் சலிப்பு தட்டிப்போகும். நான் கதை என்றால் ஒரு நாளில் 200 பக்கம்கூட படிப்பவள். அதான் ஸ்பீடா இருக்கட்டுமே என்று முன் மொழிந்து வைத்து விட்டேன்.

அன்பு வேற படபோட்டிக்கு கேமராவை தினமும் கையில் வைத்துக்கொண்டு உலாவுகிறார். இதை முடித்தால் ஜமீனுக்கு ஒரு வேலைக்கொடுக்கலாம் என்றுதான் ;)

ரங்கராஜன்
05-12-2008, 01:34 AM
அனைவரது ஆலோசனைகளையும் அடிப்படையாக வைத்து நிர்வாகக் கூடாலோசனையின் விதிகளை சமைத்து அதன் பின்னர் போட்டி தொடங்கப்படும்.

அக்கா..
என்னால் ஒரு நாளைக்கு ஒரு கதை மட்டுமே ஆழமாகப் படிக்க இயலும். மேலோட்டமாகப் படித்து வாக்களிக்க மனம் ஒப்பாதே.

இது நல்லா இருக்கே முடிவு கூறும் ஆள் ஒரு நாளைக்கு மேல் ஒரு கதை படிக்க மாட்டார் என்பதற்க்காக, போட்டி நாட்களை ஏற்ற முடியாது, வேண்டுமானல் தேர்ந்து எடுக்கும் குழுவில் இருப்பாவர்கள் வேலையை பிரித்துக் கொள்ளட்டும், என்ன சொல்லிரீங்க அமருருருருரு

அமரன்
05-12-2008, 07:30 AM
ஒரு ஐடியா, அதான் ஆலோசனைபா. மொத்தம் எத்தனை கதைகள் வருகிறது என்று கண்டு பின் நாட்களை தேர்வு செய்வோமா!! அப்படி 10 கதைகளுக்குள் வந்தால் 10 நாட்கள் ஓட்டெடுப்பு வைப்போம் அதிகம் வந்தால் 14 நாட்கள்.
இதுச் சரி. கதைகளின் எண்ணிக்கையை பொறுத்து வாக்களிப்பு நாட்கள் முடிவு.

அன்பு வேற படபோட்டிக்கு கேமராவை தினமும் கையில் வைத்துக்கொண்டு உலாவுகிறார். இதை முடித்தால் ஜமீனுக்கு ஒரு வேலைக்கொடுக்கலாம் என்றுதான் ;)

தொக்கு நிற்பதை முடித்து வைக்க வேணும். புதிதாக தொடங்க வேணும். அதுக்கு முன் சில தெளிவுகள் வேணும். கொஞ்ச நாள் பொறு தலைவா அப்படின்னு சொல்லிடுவோம் ரசிகனுக்கு.

இது நல்லா இருக்கே முடிவு கூறும் ஆள் ஒரு நாளைக்கு மேல் ஒரு கதை படிக்க மாட்டார் என்பதற்க்காக, போட்டி நாட்களை ஏற்ற முடியாது, வேண்டுமானல் தேர்ந்து எடுக்கும் குழுவில் இருப்பாவர்கள் வேலையை பிரித்துக் கொள்ளட்டும், என்ன சொல்லிரீங்க அமருருருருரு
என்ன மூர்த்தி இப்படிச் சொல்லிட்டீங்க. தேர்தல் நடத்துனருக்காக நாள் நீட்டிப்பு இல்லை. அமரன் என்ற வாசகன் அப்படிச் சொல்றான். அமரனைப் போல இன்னும் எத்தனை பேர். வாக்களிப்பு 7 நாள். கதைகள் 10. மன்றத்தில் செலவிடும் நேரம் நாளைக்கு 30/40 நிமிடம். போட்டிக்கதைகளைப் படித்து, தான் படைத்து, படையலை சுவைத்து.. எப்படிப்பா.. அதான் கேட்டேன் - வாசகனாக..

ஆதவா
05-12-2008, 07:53 AM
என்ன அமரன்??? கதைப்போட்டியும் புகைப்பட போட்டியும் எப்போ????

அன்புவானாலும் சரி, வம்பானாலும் சரி, புகைப்பட போட்டியிலும் கலந்துகொள்வதென்று முடிவெடுத்துவிட்டேன்,.... ஹி ஹிஹி..........

சிவா.ஜி
06-12-2008, 05:19 AM
இந்த போட்டிகளிலெல்லாம் எனக்கு விருப்பம் இல்லை. சில சமயம் தேர்ந்தெடுக்கப்படும் கதைகளும் கவிதைகளும், வெகு சுமாரானதாய்தானிருக்கின்றன. கஷ்டப்பட்டு எழுதிய நல்ல படைப்புக்கள் காணாமல் போய்விடும் இப்படிப்பட்ட போட்டிகளில் நான் இனி எப்போதும் கலந்துகொள்ளப்போவதில்லை.

ஓவியா
06-12-2008, 05:08 PM

அண்ணா உங்கள் வலி எனக்கு நன்கு புரிகிறது, இருப்பினும் இது நமது மன்றம் :) உலகில் தவறில்லா இடமேது!!! இங்கு எப்பொழுதும் இதுபோலவே நடக்காது.

திறமைசாலிகள் அங்கிகாரமில்லாமல் சுற்றுகிறீர்களே என்று உங்களை போன்ற சிறந்த கதையாசிறியர்களுக்கு 'பதக்கம்' வாங்கி கொடுக்கவே நான் இந்த திரியை மேலே எழுப்பினேன்.

சிறந்த கதையாசிரியாராகிய நீங்களே இந்தபோட்டியிலிருந்து விலகியிருந்தால்.... அது போல் ஒரு சாபம் இந்த திரிக்கு ஏது!!!

மன்றத்தில் உலா வரும் அனைவரும் கலந்து சிறப்பிக்க வேண்டும் என்பதே என் அவா.

பாசத்துடன்
ஓவியா

Keelai Naadaan
06-12-2008, 05:32 PM
சிறந்த கதையாசிரியாராகிய நீங்களே இந்தபோட்டியிலிருந்து விலகியிருந்தால்.... அது போல் ஒரு சாபம் இந்த திரிக்கு ஏது!!!

பாசத்துடன்
ஓவியா
சரியாக சொன்னீர்கள் ஓவியா.
சிவா அவர்கள் அவசியம் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுகிறேன்.

ஓவியா
08-12-2008, 11:10 PM
சரியாக சொன்னீர்கள் ஓவியா.
சிவா அவர்கள் அவசியம் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுகிறேன்.

சிவாஜி அண்ணா கலந்துக்கொள்வார் என்ற நம்பிக்கை எனக்கிருக்கிறது.

ரங்கராஜன்
12-12-2008, 04:18 PM
இந்த போட்டிகளிலெல்லாம் எனக்கு விருப்பம் இல்லை. சில சமயம் தேர்ந்தெடுக்கப்படும் கதைகளும் கவிதைகளும், வெகு சுமாரானதாய்தானிருக்கின்றன. கஷ்டப்பட்டு எழுதிய நல்ல படைப்புக்கள் காணாமல் போய்விடும் இப்படிப்பட்ட போட்டிகளில் நான் இனி எப்போதும் கலந்துகொள்ளப்போவதில்லை.

என்ன விளையாட்டு இது, நீங்கள் இல்லாமல் கதைப்போட்டியா?,
கரும்பு இல்லாத பொங்கலா?,
பட்டாசு இல்லாத தீபாவளியா?,
பிரியாணி இல்லாமல் ரம்ஜானா?,
நிலா இல்லாத வானமா? ............ ரொம்ப வாசிக்கிறனோ:icon_ush:, சும்மா விளையாட்டுக்கு தான், தப்பா எடுத்துக்காதீங்க.

நீங்கள் கண்டிப்பா கலந்துக்கனும், அப்புறம் எழுத்து பிழையுடன் எழுதும் என்னை யார் கண்டிப்பா???????:icon_b:, நீங்க கண்டிப்பா கலந்துக்கணும் சொல்லிட்டேன், இல்ல அழுதுடுவன் அழுது:traurig001:

சிவா.ஜி
13-12-2008, 01:47 PM
அன்புத்தங்கை ஓவியா, அன்புத்தம்பி மூர்த்தி....உங்கள் அழைப்புக்கு மனம் நெகிழ்கிறது. உங்களையெல்லாம் களத்தில் பார்த்து சந்தோஷிக்கவே விரும்புகிறேன். போட்டிக் களத்திலிருந்து வெளிநின்று உங்கள் படைப்புகளை ரசித்து மகிழ்கிறேன். என் உறவுகள் என குதூகலிக்கிறேன்.

கலந்துகொண்டு பட்டையைக் கிளப்புங்கள். பார்த்து....படித்து ரசிக்க நாங்கள் இருக்கிறோம்.

(மூர்த்தி....எழுத்துப்பிழை வந்தால்.......சும்மா விடமாட்டேன்....ஆமா)

ஓவியா
14-12-2008, 01:17 PM

அன்பு அண்ணன் சிவாஜி,....உங்கள் பதிலுக்கு மனம் நெகிழ்கிறது. உங்களையெல்லாம் களத்தில் பார்த்து சந்தோஷிக்கவே விரும்புகிறேன். போட்டிக் களத்தில் உங்களுடன் இணைந்து உங்கள் படைப்புகளை ரசித்து மகிழ்கிறேன். என் உறவுகள் என குதூகலிக்கிறேன்.

கலந்துகொண்டு பட்டையைக் கிளப்புங்கள். பார்த்து....படித்து ரசிக்க நானும் இருக்கிறேன்.

(எனக்கு....எழுத்துப்பிழை வந்தால்.......சும்மா விட்டு விடுங்கள்.....ஆமா)

தோசையை திருப்பி போட்டு சுட்டால் நல்லா மொருகலா ருசியா இருக்கும். :lachen001:

சிவா.ஜி
15-12-2008, 02:55 AM
நிஜமாவே ரொம்ப முறுகலாகத்தான் இருக்கு. சூப்பர்ம்மா...:icon_b:

சூரியன்
15-12-2008, 05:01 AM
அதிக நாட்கள் ஓட்டேடுப்பில் வைத்தால் சலிப்பு தட்டிப்போகும். நான் கதை என்றால் ஒரு நாளில் 200 பக்கம்கூட படிப்பவள். அதான் ஸ்பீடா இருக்கட்டுமே என்று முன் மொழிந்து வைத்து விட்டேன்.

அன்பு வேற படபோட்டிக்கு கேமராவை தினமும் கையில் வைத்துக்கொண்டு உலாவுகிறார். இதை முடித்தால் ஜமீனுக்கு ஒரு வேலைக்கொடுக்கலாம் என்றுதான் ;)

அக்கா அனைவரும் இது போல் படிக்க வாய்ப்பும் நேரமும் இருக்காது அதனால் வாக்கெடுப்பை 10 நாட்கள் என்று வைத்துக்கொள்ளலாம்.

(போட்டியை சீக்கிரம் ஆரம்பீங்க படிக்கறதுக்கு நான் ரெடி) :icon_rollout:

அமரன்
15-12-2008, 08:09 AM
இங்கே கூறப்பட்ட சில ஆலோசனைகளை நடைமுறைப்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதனாலும் கவிதைப்போட்டி தொடங்கியதாலும், இன்று தொடங்கி இருக்கும் கவிதைப்போட்டி நிறைவடையும் தேதியில் கதைப்போட்டி தொடங்கப்படும்.

ஓவியா
15-12-2008, 08:10 AM
நிஜமாவே ரொம்ப முறுகலாகத்தான் இருக்கு. சூப்பர்ம்மா...:icon_b:

:lachen001::lachen001::lachen001:

அக்கா அனைவரும் இது போல் படிக்க வாய்ப்பும் நேரமும் இருக்காது அதனால் வாக்கெடுப்பை 10 நாட்கள் என்று வைத்துக்கொள்ளலாம்.

(போட்டியை சீக்கிரம் ஆரம்பீங்க படிக்கறதுக்கு நான் ரெடி) :icon_rollout:

500 பக்கம் கொண்ட கதை புத்தகத்தை ஒரே நாளில் படித்து முடிப்பீர்கள் ஆனால் 10 கதை 7 நாளில் முடியாது!!!! கேட்டா முத்தே சிறந்தது இதில் எந்த முத்து மிகச்சிறந்தது என்று காண அதிக நேரம் வேண்டும், அதானே!!! :D

சரி ஓட்டெடுப்பு 10 நாட்களுக்கு வைக்க சிலர் கேட்பதால், பர்மிஷன் கிராண்டேட். :cool:

ஓவியா
15-12-2008, 08:11 AM
இங்கே கூறப்பட்ட சில ஆலோசனைகளை நடைமுறைப்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதனாலும் கவிதைப்போட்டி தொடங்கியதாலும், இன்று தொடங்கி இருக்கும் கவிதைப்போட்டி நிறைவடையும் தேதியில் கதைப்போட்டி தொடங்கப்படும்.

கவிதை போட்டி தொடங்கியாச்சா!!!! நல்லவேலை நீங்க இங்க வந்து சொன்னீங்க, இல்லனா எனக்கு தெரிந்திருக்க வாய்ப்பே இல்லை. :redface:

நன்றி அமரன்.

அமரன்
15-12-2008, 08:14 AM
கவிதை போட்டி தொடங்கியாச்சா!!!! நல்லவேலை நீங்க இங்க வந்து சொன்னீங்க, இல்லனா எனக்கு தெரிந்திருக்க வாய்ப்பே இல்லை. :redface:

நன்றி அமரன்.

இப்பத்தான் தொடங்கினேன். அனைத்து மன்றப்பகுதியிலும் தெரியும்படியாகவும் இப்போதான் செய்தேன். இனி எல்லாருக்கும் மின்னஞ்சலில்/தனிமடலில் அறிவிக்க வேண்டும்.

ஓவியா
15-12-2008, 08:22 AM
சரி அமரன், கதை எழுத ஆர்வமாக இருக்கும் எங்களுக்கு உங்கள் திடீர் கவிதை போட்டி திரி அதிர்ச்சியை தந்து விட்டது.

கொஞ்ச நாட்களுக்கு இந்த திரியை மூடி வைப்போம்.

மீண்டும் வரும் பொழுது பார்ப்போம்.

நிரன்
01-01-2009, 10:45 AM
மன்றத்தில் நான் ஒருபோதும் கதை எழுதியதில்லை ஆனால்
எனக்கும் கதை எழுத வேண்டும் போல் மிக மிக ஆர்வமாக
உள்ளது :confused::confused::confused:

நானும் இதில் ஏதோ முயற்சி செய்யலாமா:smilie_abcfra::confused:

(வராததை எல்லாம் ஏன்டா முயற்சிக்கிறா என்று திட்டுவது எனக்கு புரிகிறது):rolleyes:

அமரன்
01-01-2009, 11:59 AM
புதியவர்கள் பழையவர்கள் என எல்லாரும் பங்கெடுக்கலாம் நிரஞ்சன்.

நிரன்
01-01-2009, 01:45 PM
நன்றி அண்ணா நானும் முயற்சிக்கிறேன் :)

ரங்கராஜன்
02-01-2009, 05:30 AM
நன்றி அமரன்
கதை போட்டியின் அறிவிப்பை இப்பொழுது தான் கவனித்தேன். சரி எந்த கருவையும் வைத்து எழுதலாம் என்னும் விதி தான் கொஞ்சம் இடிக்குது. உதாரணமாக

அறிவியல் கதை என்றால் மதுரை மைந்தன்
திகில் கதை என்றால் சிவாஜி
மற்றும் மதி, பால்ராசய்யா, நான், இன்னும் நம் மன்ற உறவுகள் அனைவரும் அவர் அவர்கள் பாணியில் (பிரிவில்) திறம்ப பட எழுதுவதால், வேறு வேறு களம் என்பதால் முடிவை எந்த அடிப்படையில் தேர்ந்து எடுப்பீர்கள். நிறைய குழப்பம் வரும். அதனால் நிர்வாகமே ஒரு தலைப்பை தந்தால் சிறந்த படைப்பை தேர்ந்து எடுப்பது சுலபம் ஆகிவிடும் என்பது என் தாழ்மையான கருத்து.

ஆதவா
02-01-2009, 09:08 AM
ஒரே தலைப்பிலோ ஒரே சூழ்நிலையிலோ கதைப் போட்டி வைத்தால் நன்றாக இருக்காது. படைப்பாளிக்கு சுதந்திரம் இருக்க வேண்டும். இது என்ன பள்ளித் தேர்வா?

கரு எதுவாக வேண்டுமானாலும் இருக்கட்டுமே.. களம் எதுவாக வேண்டுமானால் இருக்கட்டுமே..

அப்படி இருந்தால் தானே மக்கள் மண்டையைப் பிச்சிக்குவாங்க..

நன்றி அமரன்
கதை போட்டியின் அறிவிப்பை இப்பொழுது தான் கவனித்தேன். சரி எந்த கருவையும் வைத்து எழுதலாம் என்னும் விதி தான் கொஞ்சம் இடிக்குது. உதாரணமாக

அறிவியல் கதை என்றால் மதுரை மைந்தன்
திகில் கதை என்றால் சிவாஜி
மற்றும் மதி, பால்ராசய்யா, நான், இன்னும் நம் மன்ற உறவுகள் அனைவரும் அவர் அவர்கள் பாணியில் (பிரிவில்) திறம்ப பட எழுதுவதால், வேறு வேறு களம் என்பதால் முடிவை எந்த அடிப்படையில் தேர்ந்து எடுப்பீர்கள். நிறைய குழப்பம் வரும். அதனால் நிர்வாகமே ஒரு தலைப்பை தந்தால் சிறந்த படைப்பை தேர்ந்து எடுப்பது சுலபம் ஆகிவிடும் என்பது என் தாழ்மையான கருத்து.

கவனிக்க.... தம்மூ!! :mini023:

சீக்கிரம் ஆரம்பிங்கய்யா!!! :sauer028:

பூமகள்
26-03-2009, 08:40 AM
முக்கியமான ஒன்றை மறந்துட்டீங்களே..

ஒருவர் எத்தனைக் கதைகள் அனுப்பலாம்???

நல்ல செய்தி.. நன்றி அமர் அண்ணா...

ரங்கராஜன்
26-03-2009, 09:31 AM
சிவா அண்ணா இந்த முறை போட்டியில் உங்களை சமாளிப்பதே பெரிய விஷயம், அது இல்லாமல் இன்னும் நிறைய அருமையான எழுத்தாளர்கள் கலந்துக்குவாங்க போல இருக்கே, நம்ம இரண்டு பேருக்கும் பயங்கர இக்கட்டான சூழ்நிலை, எனக்கு வேற போட்டினாலே ஆவாது, மூளை கிணத்துல போட்ட கல்லு மாதிரி அப்படியே இருக்கும்...................... அமரனுக்கு எதாவது கில்மா கொடுத்து கரைட்டு பண்ணிடுவோமா, விஷயம் நமக்குள்ள இருக்கட்டும், யார்கிட்டயும் சொல்லிடாதீங்க:icon_ush::icon_ush::icon_ush: சரியா

சிவா.ஜி
26-03-2009, 10:03 AM
நிறைய பேர் கலந்துக்கனுங்கறதுதான் என் விருப்பம். போட்டி அதிகமாகும்போதுதான் சுவாரசியமே வரும். தக்ஸ் சும்மா காமெடி பண்ணாத....இன்னைக்கு நிலையில...உன் கூட போட்டி போடறதுதான் கஷ்டமான விஷயம்.:fragend005:

அமரன்
26-03-2009, 10:05 AM
எப்படியோ போட்டி களை கட்டினால் சரி.

சிவா.ஜி
26-03-2009, 10:07 AM
நிச்சயமா போனமுறை போல ஆகக்கூடாது.

பூமகள்
26-03-2009, 10:15 AM
நிறைய பேர் கலந்துக்கனுங்கறதுதான் என் விருப்பம். போட்டி அதிகமாகும்போதுதான் சுவாரசியமே வரும். தக்ஸ் சும்மா காமெடி பண்ணாத....இன்னைக்கு நிலையில...உன் கூட போட்டி போடறதுதான் கஷ்டமான விஷயம்.:fragend005:
ரெண்டு பேரும் சேர்ந்து எங்களை எல்லாம் தலையைப் பிச்சிக்க வைக்க போறீங்க..... :eek::eek:

பரிசு கிடைக்காமல் ஏங்குவோர் சங்கம் சார்பாக,

சூரியன்
27-03-2009, 06:28 AM
கதை எதை சார்ந்து வேண்டுமானாலும் இருக்காம் அல்ல*வா?
குறைந்த பட்சம் எவ்வளவு வரிகள் வேண்டும்.
(ஏன்னா இப்பதான் நான் முதன் முதலில் கதை எழுத போகின்றேன் பாத்து கொஞ்சம் சாதகமா சொல்லுங்க*.)

அமரன்
27-03-2009, 07:56 AM
கதை எதை சார்ந்தும் இருக்கலாம் சூரியன். கட்டாயமாக விதிகளைச் சார்ந்து இருத்தல் வேண்டும்.
வரிகளுக்குக் கட்டுப்பாடில்லை.

balamohana
27-03-2009, 11:02 PM
அனைவருக்கும் வணக்கம்,
உங்கள் போட்டியைக் கண்ணுற்றேன். யானும் பங்கேற்க விழைகின்றேன். தயைகூர்ந்து விதிமுறைகளைக் கூறவும்.

அமரன்
28-03-2009, 08:18 AM
வாங்கோ பாலமோகனா!

கதைப்போட்டியில் பங்கெடுக்கும் உங்கள் ஆர்வத்துக்கு மனமார்ந்த வாழ்த்தும் நன்றியும்.

கதைபோட்டிக்கான விதிகளைக் கீழே உள்ள லிங்கில் சென்று அறிந்து கொள்ளுங்கள்.

http://www.tamilmantram.com/vb/showthread.php?t=19718

நாங்கள் உங்களைப் பற்றி அறிந்து தோழமை கொள்ள உங்களைப் பற்றி அறிமுகத்தை கீழே உள்ள லிங்கில் கொடுங்களேன்.

http://www.tamilmantram.com/vb/forumdisplay.php?f=38

jk12
29-03-2009, 02:19 PM
ஆரம்பிக்கட்டும் போட்டிகள்...
வந்து குவியட்டும் கதைகள்...
படிக்க ஆவலுடன் காத்திருக்கிறேன்
வாக்களிக்கவும் தவற மாட்டேன்

அமரன்
30-03-2009, 07:50 AM
ஜேகே அவர்களே!
உங்கள் பங்குக்கு நீங்களும் உங்கள் கற்பனைக் குதிரையைத் தட்டி விடுங்கள். நிச்சயம் நல்லதொரு கதாசிரியர் எமக்குக் கிடைப்பார்.

kasthuri_subrama
01-04-2009, 04:45 AM
வணக்கம், இப்போட்டியில் கலந்து கொள்ள ஆர்வமாக உள்ளேன். இதை எங்கு கொடுப்பது, எப்படி என்ற விவரங்கள் தந்து உதவுங்கள்.

அமரன்
01-04-2009, 07:16 AM
வணக்கம், இப்போட்டியில் கலந்து கொள்ள ஆர்வமாக உள்ளேன். இதை எங்கு கொடுப்பது, எப்படி என்ற விவரங்கள் தந்து உதவுங்கள்.

வணக்கம்.

முதலில் உங்களை மன்றத்துக்கு அறிமுகம் செய்து கொள்ளுங்கள்.
http://www.tamilmantram.com/vb/forumdisplay.php?f=38

பின்னர் உங்கள் கதையை என் மின்னஞ்சல் முகவரிக்கு அல்லது தனிமடலுக்கு அனுப்பி வையுங்கள்.

amaran.tamilmantram@gmail.com

தொடர்ந்து மன்றத்தில் பங்களிப்பை நல்குங்கள்.

ரங்கராஜன்
01-04-2009, 07:18 AM
அமரன் இந்த முறை சிறந்த கதைக்கு இ-சான்றிதழ் உண்டா?????????

அமரன்
01-04-2009, 07:22 AM
அமரன் இந்த முறை சிறந்த கதைக்கு இ-சான்றிதழ் உண்டா?????????

வழங்குவதில் நடைமுறைச்சிக்கல் உள்ளது மூர்த்தி. ஆனாலும் முயற்சி தொடர்கிறது.

பூமகள்
01-04-2009, 07:37 AM
அமரன் இந்த முறை சிறந்த கதைக்கு இ-சான்றிதழ் உண்டா?????????
எல்லாம் பெரிய ப்ளேனோடு தான் இருக்காங்கப்பா..... :sprachlos020::sprachlos020: :eek::eek:

இ-சான்றிதழா?? :traurig001::traurig001:

அப்படின்னா எனக்கும் ஒன்னு வேண்டும் அமர் அண்ணே..... :p:rolleyes:
முன்ன வாங்கிய மெடலுக்காவது ஏதாவது தேறுமா பாக்கறேன்... :icon_rollout::icon_rollout:

ரங்கராஜன்
01-04-2009, 07:56 AM
நன்றி அமரன்

பூமகள்

இந்த இ-சான்றிதழ் பற்றி மன்ற கூட்டத்தில் பேசினோம், போன போட்டி ஆலோசனையில் இதை செயல் முறை படுத்த ஓவியா அக்கா சொன்னாங்க, அதனால் இந்த முறை இருக்கானு கேட்டேன் அவ்வளவு தான்..........இதில் வேறு எதுவும் உள் குத்து இல்லை

மதி
01-04-2009, 08:03 AM
எல்லாம் பெரிய ப்ளேனோடு தான் இருக்காங்கப்பா..... :sprachlos020::sprachlos020: :eek::eek:

ப்ளேனுன்னா... வானத்தில பறக்குமே அதா....

எப்போதும் போல் புரியாமல் விழிக்கும்

சிவா.ஜி
01-04-2009, 06:32 PM
ஆஹா...இந்தமுறை போட்டியாளர்கள் அதிகரிப்பதைப் பார்க்கும்போது ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கு.....கூடவே புளியைக் கரைக்குது....கலக்குங்க மக்களே.

சிவா.ஜி
01-04-2009, 06:34 PM
ப்ளேனுன்னா... வானத்தில பறக்குமே அதா....

எப்போதும் போல் புரியாமல் விழிக்கும்

மதி ரொம்பத்தான் குசும்பு. அதுவும் கோயமுத்தூர்காரவிங்க கிட்டயவே....

பூம்மா....வந்து சீக்கிரம் உன்னோட ப்ளான் என்னன்னு சொல்லு இந்த மதிக்கு.

அன்புரசிகன்
01-04-2009, 06:51 PM
ப்ளேனுன்னா... வானத்தில பறக்குமே அதா....

எப்போதும் போல் புரியாமல் விழிக்கும்
இப்ப தான் ஒருவிடையம் புரியுது... ஏன் தாமதம் என்று............. :D

மதி
02-04-2009, 02:35 AM
இப்ப தான் ஒருவிடையம் புரியுது... ஏன் தாமதம் என்று............. :D
அட அத புரிஞ்சுக்க இவ்ளோ தாமதமா என்ன...???
இப்ப தான் எனக்கும் புரியுது... :D:D:D

சேம்.. ப்ளட்..

பூமகள்
02-04-2009, 02:38 AM
ப்ளேனுன்னா... வானத்தில பறக்குமே அதா....

எப்போதும் போல் புரியாமல் விழிக்கும்
அதே ப்ளேனைத் தான் சொன்னேன்.. :D

எல்லாரும் பரிசு கிடைச்சிடும்னு இத்தனை தன்னம்பிக்கையா பறந்துட்டு தானே இருக்கீங்க.. அதைத் தான் சொன்னேன்...:rolleyes: :aetsch013: :wuerg019::wuerg019:

மதி... ஆனாலும் நீங்க லேட் பிக்கப் தான் போங்க.... :rolleyes::p :lachen001::lachen001:

Honeytamil
11-04-2009, 01:00 PM
http://www.tamilmantram.com/vb/showthread.php?t=19945
இதை ஏன் பூட்டினீங்க? காலையில் தமாஷாக பதிவை போட்டிட்டு மாலையில் கருத்துரையில் சொல்லாம் என்று நினைத்தேன்.
இது இந்த தளத்தில் செய்ய*ப்பட்டது.:):):)
http://www.fodey.com/generators/newspaper/snippet.asp
மன்னிக்க வேண்டும் மன்றத்தோழர்களே
இதுபோலச் செய்திகள் அனைத்து ஊடகங்களிலும் வரவேண்டும் என எனக்கும் ஆசைதான்.
என் ஆசையை இங்கே சென்று ஆற்றியுள்ளேன்.:icon_b:

அமரன்
11-04-2009, 10:19 PM
நிர்வாக ஆலோசனைக்காகப் பூட்டப்பட்டது தேந்தமிழே!

இந்தளவுக்கு மன்றம் வளரவேண்டும் என்ற உங்கள் ஆசைக்கு மதிப்புக் கொடுத்து திரி திறக்கப்பட்டுள்ளது.

அந்தப் பொற்காலத்தை நோக்கி மன்றம் பயணிக்க உங்களை அறிமுகப்படுத்தி விட்டு எங்களுடன் இணைந்து உழைக்கத் தொடங்குங்கள்.

நன்றி