PDA

View Full Version : உபதேசம் (குட்டிக்கதை



ஐரேனிபுரம் பால்ராசய்யா
22-11-2008, 12:40 PM
‘’சார் இந்த வாரம் பெண் விடுதலை பற்றி ஒரு கட்டுரை எழுதி தர முடியுமா?’’ பத்திரிகை ஆசிரியர் மதன் பிரபல எழுத்தாளர் ராசா இளமதியனை தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்டார்.

‘’ஆபீசுல நிறைய வேலைஇருக்கு இந்த வார இறுதியுல எழுதி அனுப்பினா பரவாயில்லையா?’’ எனக் கேட்டார் ராசா இளமதியன். சரியென்று தனது தொலைதொடர்பை துண்டித்தார் மதன்.

பெண்களை அடக்கி ஆளும் ஆண்வர்க்கத்தைபற்றியும் பெண்களுக்கு சம உரிமை வேண்டுமென்றும் பெண்களால் எந்த துறையிலும் சிறப்பாக வேலை பார்க்க முடியும் என்றும் அவர் எழுதிய கட்டுரை பத்திரிக்கையில் பிரசுரமாகி பலரது பாராட்டுக்களையும் பெற்றது.

பத்திரிகை ஆசிரியர் மதன் மீண்டும் தொலைபேசியில் அழைத்தார்.

‘’சாதித்த மங்கைகள் தலைப்புல ஒரு கட்டுரை எழுதணும் உங்களுக்கு ஆபீஸ் வேலை அதிகமா இருக்கும் இந்த கட்டுரை கொஞம் சீக்கிரம் வேணும் கிடைக்குமா?’’

‘’ கவலையே படாதீங்க உடனே எழுதியிடுறேன், ரெண்டு நாளைக்கு முன்னால தான் ஆபீஸ் வேலைய ராஜினாமா செஞ்சுட்டேன்’’ என்றார் எழுத்தாளர்.

‘’ ஏன் ’’ என்று கேட்டார் மதன்.

‘’புதுசா மார்கெட்டிங் மேனேஜர் ன்னு ஒரு பொண்ண நியமனம் பண்ணியிருக்காங்க அந்த பொண்ணு கீழ எல்லாம் என்னால வேலை பார்க்க முடியாதுன்னு ராஜினாமா செஞ்சுட்டேன்’’ என்ற போது மதன் ஆசிரியருக்கு தலை சுற்ற ஆரம்பித்தது.

ஆதவா
22-11-2008, 12:52 PM
எழுத்துக்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் தரும் இவர்கள், எழுத்தைப் போன்றே நடக்க இயலாதவர்கள்.

பெண் விடுதலை என்று பேசி வீட்டில் பெண்ணை வதக்க நினைப்பவர்கள்... கரு பழையது. குட்டிக்கதையாக வந்ததில் சந்தோசம்..

வாழ்த்துக்கள் சார்..

Keelai Naadaan
22-11-2008, 02:29 PM
பிரமாதம்!.
உங்கள் கதை எழுதும் பாணியை பெரிதும் ரசிக்கிறேன்.

ரங்கராஜன்
22-11-2008, 02:49 PM
கதை இதுதான் என்று தெரிந்தும், முழுமையாக படிக்க வைத்த உங்களுக்கு சபாஷ்

மதி
22-11-2008, 03:47 PM
உண்மையிலேயே ஊருக்குத் தான் உபதேசம்....

கதை நல்லாயிருந்தது பால்ராசையா...

சுகந்தப்ரீதன்
24-11-2008, 10:26 AM
இன்னும் எத்தனை நாளைக்கு ஊருக்குதான் உபதேசம்ன்னு சொல்லுறது...
இனி அட்வைஸ் அடுத்தவங்களுக்குதான்னு மாத்தி சொல்லலாமே மதி..ஹி..ஹி..!!

குட்டிகுட்டியா எழுதுறீங்க.. வாழ்த்துக்கள் ராசய்யா..!!

ஓவியன்
24-01-2009, 06:10 AM
'உன்னை நீயே திருத்திக் கொள்,
உலகம் தானாகவே திருந்தி விடும்'

என்று சும்மாவா சொன்னார்கள், என்னைப் பொறுத்த வரை ஆலோசனை செய்வது இலகு, ஆனால் அதனைக் கடைப் பிடிப்பதே கடினம்...

ஏனென்றால் ஆலோசனை வழங்குபவருக்கு அந்தப் பிரச்சினை நடக்கும் களத்தினைப் பற்றிய கவலையில்லை, ஆனால் அதனைக் கடைப் பிடிப்பவரே அந்த களத்தின் அத்தனை பிரச்சினைகளையும் சந்திக்க வேண்டியவராகிறார்....

இளசு
01-04-2009, 08:04 PM
எண்ணமும் சொல்லும் இருதுருவங்களாயும்
துளியும் மனம் உறுத்தாமல் உலவுவோர்தான் நாம் எல்லாரும்...

எதாவது ஓரிரு சமயங்களிலாவது இத்தகைய முரண்மூட்டையாய் உருளாதவர் யார்?


பாராட்டுகள் ஐபாரா அவர்களே!