PDA

View Full Version : அக்பர் - பீர்பால் கதைகள் -(படித்தது)



geminisenthil
22-11-2008, 09:34 AM
அழகான குழந்தை

அக்பர் அரண்மனையில் தனது பேரனோடு கொஞ்சிக்கொண்டிருக்கிறார். பீர்பலிடம் என் பேரன் தான் உலகிலேயே அழகானவன் என்ன சொல்கின்றீர்கள் என்கிறார். பீர்பல் மறுத்து அரசே இல்லை உங்கள் பேரனை விட அழகானவன் இருக்கிறான் என்கிறார். அக்பர் என் பேரனை விடவுமா? சாத்தியமே இல்லை! எனச் சொல்ல , பீர்பல் அரசே என்னோடு வாருங்கள் நான் காட்டுகிறேன் என்கிறார்.

மாறு வேடத்தில் அக்பரை அழைத்துக்கொண்டு நகரின் ஒதுக்குப்புறத்தில் குடிசைகள் நிரம்பிய பகுதிக்கு பீர்பல் செல்கிறார். அங்கே ஒரு குழந்தை வீதியிலே, மண்புழுதியிலே இறங்கி விளையாடியபடி இருக்கிறது. உடலெங்கும் மண் ஒட்டியும், கிழிந்த உடைகளோடும், ஒழுகும் மூக்கோடும் இருக்கும் குழந்தையை அக்பருக்குக் காட்டி இதுதான் உங்கள் பேரனை விட அழகான குழந்தை என்கிறார் பீர்பல்.

அக்பர் திகைத்துப் போய் "இந்தக் குழந்தையா எனது பேரனை விடவும் அழகு?" என பீர்பலிடம் அதிர்ச்சியோடு வினவுகிறார்.

"ஆம் அரசே!" என்று சொல்லி பீர்பல் குழந்தையைக் கிள்ளிவிட்டு மறைவாக மறைந்துகொள்கிறார்.

பீர்பல் கிள்ளியதால் குழந்தை குரல் எடுத்துப் பெரிதாக அழுகிறது.

குழந்தையின் அழுகையொலி கேட்டு குடிசையிலிருந்து குழந்தையின் தாய் குடிசையினின்று வெளிவந்து " என் அழகான சந்திரன் மாதிரியான ஒளி வீசும் குழந்தை ஏன் அழுகிறது... என் செல்லக்குட்டி ஏன் அழுகிறது என்றவாறே குழந்தையைத் தூக்கி முத்தமிட்டு சமாதானம் செய்தவாறே தன் குடிசைக்குள் குழந்தையோடு செல்கிறாள்.

பீர்பல் அக்பரை நோக்கி " பார்த்தீர்களா அரசே! கலைந்த தலைமுடியுடன், மூக்கு ஒழுகிக்கொண்டு, உடலெங்கும் மண்புழுதியோடு இருந்தாலும் அதன் தாய்க்கு அந்தக் குழந்தை பேரழகுதான்" என்ன சொல்கிறீர்கள் என்கிறார்.

அக்பருக்கு அழகு என்பது உள்ளத்தில் அன்போடு பார்க்கும் பார்வையில் இருப்பது என்று தெளிவுபடப் புரியவைக்கிறார் பீர்பல்!

ஆம் என்று ஆமோதித்துப் பரிசுகள் தந்து பீர்பலைச் சிறப்பிக்கிறார் அக்பர்.

MURALINITHISH
22-11-2008, 09:45 AM
காக்கைக்கு தன் குஞ்சு பொன் குஞ்சு என்று சும்மவா சொன்னார்கள்
ஆனால் நண்பா பீர்பால் கதைகள் என்று இருக்க நீங்கள் அதிலேயே சொல்லியிருக்கலாமே

சிறுபிள்ளை
24-11-2008, 03:19 AM
மிகவும் அருமையான கதை செந்தில். பகிர்ந்தமைக்கு என் நன்றிகள்.

உள்ளத்தை தூய்மையாக வைத்துக்கொள்வதும் அசுத்தமாக வைத்துக்கொள்வதும் அவரவர் கையிலே உள்ளது.

arun
07-12-2008, 08:24 PM
அருமையான கதை பகிர்ந்தமைக்கு நன்றி

chilludhosth007
08-12-2008, 05:12 AM
அருமையான கதை இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள்

geminisenthil
09-12-2008, 07:00 AM
நண்பரே!....

எனக்கு மின்னஞ்சலில் வந்த கதையாகும்.