PDA

View Full Version : தெரிந்து கொள்ளுங்கள்



geminisenthil
22-11-2008, 09:28 AM
தெரிந்து கொள்ளுங்கள்

கணித மேதை ராமானுஜம் 33 ஆண்டு காலமே உயிர் வாழ்ந்தார். அவர் வாழ்ந்த காலம் 1887 முதல் 1920-ம் ஆண்டு வரை.
உலகப் புகழ்பெற்ற கிரேக்க வீரர் அலெக்சாண்டர் 33 ஆண்டுகளே உயிர் வாழ்ந்தார். அவரது காலம் கி.மு. 323 முதல் கி.மு. 356 முடியவாகும்.
சிலுவையில் அறையபட்டு உயிர் நீத்த போது இயேசு கிறிஸ்துவின் வயதும் முப்பத்து மூன்றுதான்.
மூன்று மூல நிறங்கள் என்பன சிவப்பு, மஞ்சள், நீலம்.
மனிதனுக்கு 12 ஜோடி விலா எலும்புகள் உள்ளன.
"வீட்டோ" என்னும் பொருள் நான் தடுக்கிறேன் என்பதாகும்.
கோரம் என்பது ஒரு லத்தின் மொழிச் சொல். "கோரம்' என்றால் சட்டப்படி ஒரு கூட்டத்தை நடத்துவதற்கு போதுமான உறுப்பினர்களின் எண்ணிக்கை இருக்க வேண்டும் என்பதாகும்.
கடல் குதிரையும், ஓணானும் ஒரு கண்ணை அசைக்காமல் மற்ற கண்ணை வேறுபக்கமாக அசைக்கக் கூடியவை.
"குட் பை' என்னும் சொல் " God be with you' என்ற சொற்களின் சுருக்கம் ஆகும்.
இந்தியாவின் இரு பாரம்பரிய இசை முறைகள் கர்நாடகம் மற்றும் இந்துஸ்தானி.
பாம்பாட்டிகள் இசைக்கும் ராகம் "புன்னாக வராளி'.
இந்திய தேசிய கீதம் சங்கராபரணம் ராகத்தில் இசைக்கப்படுகிறது.
அமெரிக்க விமானப்படையில் பெண்கள் அதிகளவில் வேலை செய்கின்றனர். ஏறக்குறைய 67 ஆயிரம் பெண்கள் வேலை செய்கின்றனர்.
மரகதத் தீவு என்று அழைக்கப்படுவது அயர்லாந்து.
மணமாகாதவர்கள் மீது வழக்குப் போடும் நாடு கிரீஸ்.
மணமாகாதவர்கள் மீது அதிக வரி போடும் நாடு இத்தாலி.
மணமாகாதவர்களை சபையில் பேச அனுமதிக்காத நாடு ஆப்பிரிக்கா.