PDA

View Full Version : மக்கள்தொகை நமக்குச் சுமை அன்று



geminisenthil
21-11-2008, 08:59 AM
சுதந்திரம் அடையாத காலக்கட்டத்தில் பிரிட்டிஷ் இந்தியாவில் 1901 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட சென்சஸ் 23.84 கோடி மக்கள் தொகை என்று கூறுகிறது. நூற்றுக்கணக்கான சமஸ்தானங்கள், ஜமீன்தார்களின் பிடியில் மக்கள் வாழ்ந்து வந்தார்கள்.

விவசாயத்தைப் பிரதானமாக நம்பி வாழ்ந்த கட்டம் அது. பசி, பட்டினி, பஞ்சம், நோயுற்றுச் சாவு, கொள்ளை நோயால் சாவு பீதி, மூடநம்பிக்கை மிகுந்த சூழலில் மக்கள் தொகை அன்றைய ஆட்சியாளர்களால் சுமையாக கருதப்பட்டது.

சுதந்திரம் அடைந்த பின்பும் அதே அவல நிலை தொடர்ந்தது. முப்பது கோடிகளைத் தாண்டியிருந்த நிலையில் தேசம் அவர்களுக்குச் சோறிட முடியவில்லை.

நேருவின் தலைமையில் அமைந்த அரசு ஐந்தாண்டுத் திட்டங்கள் மூலம் பசுமைப் புரட்சிக்கு வித்திட்டது. வெண்மைப் புரட்சி (பால் உற்பத்தி) நீலப் புரட்சி (மீன் உற்பத்தி) என்று இந்தியா தன்னைத் தானே சுயமாய் உணவு உற்பத்தியில் தன் காலில் நின்று நிலை நிறுத்திக் கொண்டது.

நாட்டின் இறையாண்மை இதனால் காக்கப்பட்டது. இருந்தாலும் மக்கள் தொகை பிரச்சினை என்பது சுமையாகப் பார்க்கப்பட்டது. எமர்ஜென்சி காலத்தில் எழுபதுகளில் கட்டாயக் கருத்தடை போன்ற சம்பவங்கள் மக்கள் இடையே வலியுறுத்தப்பட்டன.
``நாம் இருவர் நமக்கு இருவர்" என்ற வாசகம் முன் வைக்கப்பட்டு மக்கள் தொகை கட்டுபடுத்துதல் தொடர்ந்தது.

எமர்ஜென்சி முடிந்த காலக்கட்டத்தில் இந்தியர்கள் பெரும் அளவில் அரபு நாட்டிற்கு வேலைக்கு செல்ல ஆரம்பித்தார்கள். அன்னியச் செலாவணி அவர்கள் மூலம் குவிய ஆரம்பித்தது.

மக்கள் தொகை 2001ம் ஆண்டு 102.80 கோடி என்ற நிலையைத் தொட்டது. தொண்ணூறுகளில் ராஜீவ் காந்தியைத் தொடர்ந்து நரசிம்ம ராவ் என்று ஆட்சி மாற்றம்; டுஞழு எனும் புதிய பொருளாதாரக் கொள்கை முடிவுகள் இந்தியாவை வேறு திசையில் பயணம் செய்ய வைத்தன.
தாராளமயமாக்கல் (டுநைெசயடளையவடைிே) தனியார் மயமாக்கல், (ஞசைஎயவளையவடைிே) உலகமயமாக்கல் (ழுடடியெடளையவடைிே) எனும் கொள்கை முடிவுகள் நடுத்தர மக்கள் வாழ்க்கைத் தரத்தை உயர வைத்து. மீண்டும் நாட்டின் சக்தி கணிசமாய் உயர ஆரம்பித்தது. வெளிநாட்டு நிறுவனங்கள் மக்கள் தொகை மிகுந்த சீனாவையும், இந்தியா வையும் புதிய கோணத்தில் பார்க்க ஆரம்பித்தன.

240க்கும் மேற்பட்ட நாடுகளில் உலக மக்கள் தொகை சுமார் 640 கோடி என்ற நிலையில் அவர்களின் தேவைகளை நிறைவேறப் புதிய ஆலைகள் அமைக்க மனித வளம் தேவைப்பட்டது. குறைந்த செலவில் மென்பொருள் (சாப்ட்வேர்) தயார் செய்ய இந்தியா போன்ற நாடுகள் முன்னணியில் உள்ளன.

நீண்ட காலம் பிரிட்டிஷ் அரசின் கீழ் வாழ்ந்ததால் பெற்ற சில நன்மைகளில் ஒன்று சரளமான ஆங்கிலம், நல்ல கல்வி, இந்தியா முழுவதும் இரயில் போக்குவரத்து போன்றவையாகும்.

இந்தியாவில் குறிப்பாகத் தமிழகத்தில் தந்தை பெரியாரின் சீர்திருத்தக் கொள்கைத் தொடர் பிரச்சாரம் தொடர் பயனைச் சேர்த்தது. இட ஒதுக்கீடுக்காகப் பெரியாரின் முயற்சியின் அருமையை இன்று தமிழகம் பார்த்துக் கொண்டிருக்கிறது.
"அடுப்பூதும் பெண்களுக்குப் படிப்பெதற்கு" என்ற நிலை மாற்றம்; இரு மொழி கொள்கை; நடுத்தர வர்க்கத்தின் வசதி நிலையில் மாற்றம் போன்றவை இன்று பெருமளவு இந்தியாவில் அதிகமாக உள்ளன.

அது மட்டும் அன்று மற்ற நாடுகளில் வசிக்கும் மக்கள் தொகையை வயது வரம்பு என்று எடுத்தால் நம்மிடையே தான் இளைஞர் பட்டாளம் அதிகம் உள்ளது.
110 கோடியைத் தாண்டியுள்ள இந்தியா இன்று மக்கள் தொகையைச் சுமையாகப் பார்ப்பத்தில்லை. மக்கள் வளமாகப் பார்க்கிறது. 2016-ம் ஆண்டு இந்தியா மட்டும் 80 கோடி ஊழியர்களை உருவாக்கும் என்று ஆய்வறிக்கை நமக்குச் சாதகமாக உள்ளது.
சமீபத்தில் அமெரிக்க அரசு வெளியிட்டுள்ள மக்கள் தொகை வயது விகிதாச்சார அட்டவணை

வயது 0-15 15-59 60+
இந்தியா 34 59 7
அமெரிக்கா 21 62 16
சீனா 25 65 10
தாய்லாந்து 25 66 10
ஹாங்காங் 18 68 14
சிங்கப்பூர் 18 72 10
இதையெல்லாம் வைத்துப் பார்கிற போது இனி உலகம் இந்தியர்களை நம்பிதான் வாழும் என்பது இனிய செய்தியாவே நமக்குத் தோன்றுகிறது.


கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது

அமரன்
21-11-2008, 09:05 AM
விவாத மன்றங்களில் தலைமை தாங்குபவர் தலைமை உரையுடன் சிறு கருத்துரையும் கலந்து வழங்கும் போது
இந்த விவாத மன்றத்தில் உங்கள் கருத்தை வழங்காமல் கருத்துகளை வரவேற்கிறீர்களே இது ஞாயமா.

ஆட்டத்தை நீங்களே ஆரம்பித்து வைங்க செந்தில்.

ஓவியா
21-11-2008, 11:20 AM
வணக்கம் ஜெனிமிசெந்தில் அவர்களே,

நல்ல அருமையான பதிவு ஆனால் இதை முன்பே நான் நினா.கண்ணன் அவர்கள் பதித்து அதை இங்கு http://groups.google.com/group/muththamiz/browse_thread/thread/daca404a31bfbfb4?pli=1 படித்துள்ளேன்.

மன்ற விதியின்படி தன் சொந்த படைப்புகளை மட்டுமே பதிய வேண்டும். அதனால் இது தங்களுடைய சொந்தபடைப்பா?

மீண்டும் படிக்க வாய்பு வழங்கியமைக்கு மிக்க நன்றி.

mukilan
21-11-2008, 11:38 AM
செந்தில் இது உங்கள் சொந்தப் படைப்பா? படித்ததில் பிடித்தது பகுதிக்கு மாற்றி இருக்கிறேன். உங்கள் சொந்தப் படைப்பென்றால் மீண்டும் விவாதப்பகுதிக்கு நகர்த்தலாம்.

geminisenthil
22-11-2008, 06:25 AM
நண்பர்களே!...
இது என் சொந்த படைப்பு அல்ல...
ஆனால் ஒரு பொதுவான விஷயத்தை பற்றி விவாதிப்போம் என நினைத்தேன்