PDA

View Full Version : குறுந்தகவல் - (சுட்டது!!!)



geminisenthil
21-11-2008, 08:55 AM
"மச்சான்..டேய்..நீ சிரிச்சா ரஜினி!...பேசினா வைரமுத்து!!...ஆடுனா பிரபுதேவா!!!...பாடுனா ஜேசுதாஸ்!!!!..படுத்தா உசிலைமணி வெயிட்டைக் குறைடா மாப்ளே "

******

"மச்சான்!நீ அகநானூறைக் கரைச்சுக் குடிச்சவன்தான்..ஒப்புக்கறேன்..நீ புறநானூறைப் படிச்சு கிழிச்சவன்தான்...ஒப்புக்கறேன்!ஆனா என்னோட பணம் முழுசா நானூறை முழுங்கி ஏப்பம் விடுட்டியேடா...நீ நல்லா இருப்பியா?"

******

"நான் துண்டை கையில் எடுத்தா குளிக்கப் போறேன்னு அர்த்தம்...துண்டைக் கழுத்தில் போட்டால் ஊருக்குப் போறேன்னு அர்த்தம்...துண்டை இடுப்பில் கட்டினால் கோயிலுக்குப் போகிறேன்னு அர்த்தம்...துண்டை தலையில் போட்டால் கடன் கேக்கிறேன்னு அர்த்தம்!"

******

"நேத்து உன்னையும் உன் தம்பியையும் பார்த்தேன்.நிச்சயமா எனக்கு ஏதோ அதிர்ஷ்டம் அடிக்கப் போகுது!...பின்னே?ரெண்டு கழுதைகளைச் சேர்ந்து பார்த்தால் அதிர்ஷ்டம் அடிக்குமாமே?!"

******

"நேத்து உன்னைப் பாக்க உன் ரூமுக்கு வந்தேன்.நல்ல வெயில்நேரம்...ஃபேன்கூட இல்லாத ரூமில் குப்புறப்படுத்து தூங்கிட்டிருந்தே..சரி சரி...புரியுது!எருமையால மல்லாக்கப் படுக்கமுடியாதே!!"

******

"அன்புக் காதலா...என்னைவிட்டு நீ ரொம்ப தூரம் போயிட்டாலும்,..என்னைச் சந்திக்கவே வரலைன்னாலும்,..போன்கூட பன்னலைன்னாலும்,..எத்தனை வருசமானாலும் சரி...மறக்கமுடியுமா உன்னை???நான் முதன்முதலில் பார்த்த குரங்கு நீதானே?!"

******

"அன்பே...நான் சூரியன்...நீ நிலா! நிலா சூரியன்கிட்டேயிருந்து வெளிச்சத்தை வாங்கும்.நீ என்கிட்டயிருந்து பணம் வாங்குவே!...ஆனா ரெண்டு பேருமே திருப்பித் தரமாட்டீங்க!"

சிறுபிள்ளை
21-11-2008, 11:06 AM
நல்லா இருக்குது செந்தில்... ஆனா பாருங்க... இது மாதிரி நெரைய சுட்டு சுட்டு போடாதிங்க.... அப்புரம் நான் வந்து உங்கள சுட்டுபுடுவேன் சுட்டு...ஹா ஹா... விளையாட்டுக்கு சொன்னேங்க வினையா எடுத்துக்காதிங்க...


உங்கள்
சிறுபிள்ளை

arun
17-12-2008, 06:15 PM
சூப்பர் செந்தில் ரசித்து படித்தேன் பகிர்வுக்கு நன்றி

தென்னாட்டு சிங்கம்
27-01-2009, 02:40 PM
சுட்ட பழமா போட்டுடிங்க.. ப்பூ.. ப்பூ.. ன்னு ஊதி ஊதிதான் சாப்பிட்டேன்.. அதாங்க ரசித்தேன்.. :lachen001::icon_b:

samuthraselvam
09-03-2009, 06:26 AM
சரியான மொக்கை ஜெமினி.:lachen001::lachen001: உங்களை இல்ல உங்க குறுந்தகவலை சொன்னேன்:D:D:D