PDA

View Full Version : விடை பெற்றார் சவுரவ் கங்குலி ! !



arun
19-11-2008, 05:36 PM
என்னை மட்டுமல்ல நம்மில் பலரை மிகவும் கவர்ந்த சவுரவ் கங்குலி சர்வதேச போட்டிகளில் இருந்து விடை பெற்று விட்டார்

தாதா என்றும் பெங்கால் டைகர் என்றும் அனைவராலும் செல்லமாக அழைக்கப்படும் சவுரவ் கங்குலி இளைய தலைமுறை வீர்களுக்கு கண்டிப்பாக ரோல் மாடலாக இருப்பார் என்பதில் ஆச்சர்யம் இல்லை

உண்மையில் போராடும் குணம் கொண்டவர் சவுரவ் கங்குலி அது தன் அவரை என்னை மிகவும் கவர வைத்தது

சர்வதேச போட்டிகளில் இருந்து நீக்கப்பட்டபோது அவ்வளவு தான் கங்குலியின் சகாப்தம் முடிந்து விட்டது என்றே பலரும் நினைத்தனர் ஆனால் 18 மாதங்கள் கழித்து பீனிக்ஸ் பறவை போல் மீண்டும் விஸ்வரூபம் எடுத்து விளையாட ஆரம்பித்தார்

ஆனால் காலத்தின் கட்டாயம் அவரை ஓய்வு பெற வைத்து விட்டது

சர்வதேச கிரிக்கெட் உலகில் இருந்து அவர் விடை பெற்றாலும் அவர் அடிக்கும் ஆப் சைட் போரும் ஸ்பின்னர்களை வெளுத்து வாங்கும் சிக்சும் மறக்கவே முடியாது

இந்திய கிரிக்கெட் வரலாற்றில் சவுரவ் கங்குலி ஒரு அத்தியாயம் என்பதை மட்டும் யாராலும் மறுக்க முடியாது

ஓய்வு நாட்களை ரிலாக்சாக கழிக்க சவுரவுக்கு வாழ்த்துக்கள்

arun
18-12-2008, 06:26 PM
களத்தில் தாதாவின் ஆக்ரோஷம் என்னை மிகவும் கவர்ந்தவை இது தல விக்கெட் எடுத்த களிப்பில் ....

http://content.msn.co.in/NR/rdonlyres/FB6C3D49-8176-492A-B7AB-E84B05F2C6E7/0/SauravGanguly6.jpg