PDA

View Full Version : பழம்பெரும் நடிகர் எம்.என்.நம்பியார் காலமானார்



mgandhi
19-11-2008, 04:12 PM
தமிழ் திரையுலகின் பழம் பெரும் நடிகரான எம்.என். நம்பியார் சென்னையில் இன்று காலமானார். அவருக்கு வயது 89. உடல்நலக்குறைவு காரணமாக கடந்த சில மாதங்களாகவே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டது. இதையடுத்து அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி நம்பியார் இன்று மதியம் 12.30 மணியளவில் மாரடைப்பால் காலமானார்.


எம்.என்.நம்பியார் என்ற மாஞ்சேரி நாராயணன் நம்பியார் 1919ம் ஆண்டு, மார்ச் 17ம் தேதி பிறந்தார். கேரளா மாநிலம் கண்ணூரை சேர்ந்த இவர் தனது 13வது வயதில் கலை பயணத்தை தொடங்கினார். முதன் முதலாக நம்பியார் நவாப் ராஜமாணிக்கத்தின் நாடக குழுவில் சேர்ந்து நடித்தார். அப்போது அவருக்கு 3 ரூபாய் சம்பளம் தரப்பட்டது. அதன் பின்னர் அவர் பக்த ராமதாஸ் என்ற படத்தில் நடித்தார். முதன் முதலாக நடித்த இந்த படம் 1935ம் ஆண்*டு வெளியானது. ஆரம்பத்தில் கதாநாயகனாக கலைப்பயணத்தை தொடங்கிய நம்பியார் பின்னர் வில்லனாக விஸ்வரூபம் எடுத்தார். இவரது வித்தியாசமான வில்லத்தன நடிப்பு பல படங்களின் வெற்றிக்கு உதவியது. வில்லன் நடிப்பில் தனக்கென தனி பாணியை பின்பற்றி முத்திரை பதித்த நம்பியாருக்கு ஏழு தலைமுறை நடிகர்களுடன் நடித்த பெருமையும் உண்டு.


திரையுலகில் சிறந்த வில்லனாக நடித்து வந்த நம்பியார் நிஜ வாழ்க்கையில் உத்தம புருஷராக வாழ்ந்து வந்தார். கையில் சிகரெட், மது பாட்டில்களுடன் நடித்து வந்த நம்பியார் உண்மையில் எந்தவித கெட்டப்பழக்கமும் இல்லாதவர் என்பது குறிப்பிடத்தக்கது. சபரிமலை ஐயப்பனின் பக்தரான நம்பியார், 65 ஆண்டுகளாக தொடர்ந்து சபரிமலைக்கு சென்று வந்துள்ளார். எல்லோரும் மகாகுருசாமி என்று அன்போடும், பக்தியோடும் அழைத்து வந்தனர். திரையுலகில் சிவாஜிகணேசன், முத்துராமன், ரஜினிகாந்த், அமிதாப் பச்சன், கார்த்திக் உள்ளிட்ட பல நடிகர்களை ஐயப்ப பக்தர்களாக ஆக்கிய பெருமையும் நம்பியாருக்கு உண்டு.


இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, ஆங்கிலம் ஆகிய மொழி படங்களிலில் நடித்துள்ளார். தமிழில் மட்டும் 1000 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். இவர் ஜங்கிள் என்ற ஆங்கில மொழி திரைப்படத்தில் நடித்தார். 1952ம் ஆண்டு, இந்த படம் வெளிவந்தது.


மறைந்த நம்பியாருக்கு சுகுமார், மோகன் ஆகிய மகன்களும், ஸ்னேகா என்ற மகளும் உள்ளனர். அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக கோபாலபுரத்தில் உள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ளது. அங்கு ஏராளமான ரசிகர்கள் மற்றும் நடிகர் - நடிகைகள் உள்ளிட்ட திரையுலகிலர் கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.

நன்றி தினமலர்

அன்னாருக்கு என் மனமார்ந்த அஞ்சலிகள்

மதி
19-11-2008, 04:38 PM
திரையுலகம் நல்லதொரு நடிகரை இழந்துவிட்டது. அன்னாரது ஆன்மா சாந்தியடைய என் பிரார்த்தனைகள்.

aren
19-11-2008, 07:09 PM
வில்லன் என்றால் தமிழ்த்திரையுலகில் இருவரு. ஒருவர் வீரப்பா மற்றொருவர் நம்பியார். இவர்கள் இருவரும் பல படங்களின் வெற்றிக்கு எம்ஜியார் அவர்களுக்கு உறுதுணையாக இருந்திருக்கின்றனர். எம்ஜியார் என்ற ஹீரோவிற்கு இணையான வில்லன் காரக்டர்கள் இவருக்காக உருவாக்கப்பட்டது என்றால் அது மிகையாகாது.

அனைவரும் நலமாக இருக்கவேண்டும் என்ற நினைத்த வில்லன் இவர். சினிமாவில் மட்டுமே வில்லனாக நடித்தவர். நிஜ வாழ்க்கையில் பல ஹீரோக்களுக்கு குரு இவர்.

நம்பியார் அவர்களின் ஆத்மா சாந்தியடைய பிரார்திக்கிறேன். அவருடைய குடும்பத்தாருக்கு என்னுடைய அஞ்சலிகள்/

செல்வா
19-11-2008, 09:08 PM
தமிழ் திரையுலகில் நான் மிக மிக நேசித்த நல்ல நடிகர். செய்தி கேட்டு மிகவும் அதிர்ச்சியாக இருந்தது. அவரது ஆத்மா சாந்தியடையட்டும்.

Ranjitham
19-11-2008, 10:56 PM
வில்லனாய் நடித்து கதாநாயகனாய் வழ்ந்து மரைந்த மாபெரும் சகாப்ததிற்க்கு கண்ணீர் அஞ்சலிகள்.
இரன்சிதம்

பாரதி
20-11-2008, 12:41 AM
மிகவும் வருத்தம் தரும் செய்தி. மிக நல்ல நடிகர், மனிதரை இழந்து வாடும் இரசிகர்களுக்கும், குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கல்கள்.

சிறுபிள்ளை
20-11-2008, 02:48 AM
மிகவும் அருமையான நடிகர். வாழ்க்கைக்கும் திரைத்துறைக்கும் நேர் மாறான வாழ்க்கையை கொண்டவர். திரையில் வில்லன். நிஜத்தில் நல்லன். இவரின் ஆன்மிக பக்தி என்னை மெய்சிலிர்க்க வைத்திருக்கிறது. கன்டிப்பாக அவருக்கு சபரிமலை ஐயப்பனின் பொற்பாதங்களில் இடம் கிடைத்திருக்கும் என்று ஆணித்தனமாக சொல்வேன். ஐயப்பனின் மரம் பக்தர் தொடர்ந்து 60 ஆண்டுகளுக்கும் மேலாக அக்கோயிலுக்கு சென்று வருபவர். இந்த ஆண்டு கார்த்திகை மாத நடை திற்ந்த ஓறிரு நாட்கள்தான் ஆகிறது.. ஐய்ப்பன் அவரை ஆட்கொண்டு சொர்க்கத்தை காட்டி உள்ளார். அன்னாரது ஆத்மா சாந்தியடைந்து இறைவனை அடைந்தது.

சிறுபிள்ளை

ராஜா
20-11-2008, 02:54 AM
ஐயப்ப பக்தரான நம்பியார் சாமி,

ஐயப்ப பக்தர்கள் மாலை போடும் கார்த்திகை மாதத்திலேயே விண்ணுலகம் சென்றுவிட்டார்..!

இரு துருவங்களாக இருந்த எம்.ஜி.ஆர். மற்றும் சிவாஜி இருவருக்கும் நண்பனாக இருந்து ஒரே காலகட்டத்தில் இருவர் படங்களிலும் நடித்திருக்கிறார் என்பதே அவர் அருங்குணங்களுக்கு சான்று.

வசீகரன்
20-11-2008, 04:02 AM
அவர் நடித்த பழைய திரைப்படங்களை பார்த்திருக்கிறேன்.. வியந்திருக்கிறேன்.. ஐயப்பன் அவரை தன்னிடம் கொண்டுவிட்டார்.. மறக்க முடியாத காவியம் அவர்....

geminisenthil
20-11-2008, 04:52 AM
file:///D:/Senthil's%20Backup/senthil's%20collections/collections_net/collections_november/mnn/180px-AODAIADre23231MK.jpg
வில்லன் என்றால் நம் நினைவுக்கு வரும் முதல் நடிகர் இவர்தான்..
இவரது மறைவுக்கு பின்னும் இவரால் திரைக்காவியஙள் வாழும்.
கண்ணீர் அஞ்சலிகள்!!!

ஓவியன்
20-11-2008, 04:55 AM
காலம் சென்ற பழம்பெரும் நடிகரின் ஆத்ம ஈடேற்றத்திற்காகப் பிரார்த்திக்கின்றேன்...

அன்னாரை இழந்து தவிக்கும் குடும்பத்தினருக்கு என் ஆறுதல்கள்..

lolluvathiyar
20-11-2008, 06:28 AM
நம்பியாரை எனக்கு எப்பவும் பிடிக்கும் அவர் நடிப்பு திறமை அப்படி. தனி மனிதனாக நல்ல ஒழுக்கம் நிறந்தவர். அவர் ஆத்மா சாந்தி அடைய பிராத்திகிறேன்

சிவா.ஜி
20-11-2008, 06:29 AM
காலம் சென்ற திரு. எம்.என்.நம்பியார் அவர்களை மிமிக்கிரி செய்யாத மேடைகளே இல்லை. அந்தளவுக்கு தனக்கென ஒரு தனி பாணியை ஏற்படுத்திக்கொண்டவர். தன் சொந்த வாழ்வில் ஒரு உதாரண புருஷனாய் வாழ்ந்து காட்டியவர்.

அவரது இழப்பு தமிழ்த் திரையுலகத்துக்கு மாபெரும் இழப்பு. அவரது ஆன்மா சாந்தியடைய வேண்டுகிறேன்.

anna
20-11-2008, 07:50 AM
மறைந்த பழம்பெரும் நடிகர் எம்.என் நம்பியார் அவர்களின் ஆத்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.தமிழக மக்களிடம் எம்.ஜி.ஆருக்கு மிக நல்ல பெயர் பெற்று கொடுத்த மகா வில்லன். ஆனால் நிஜ வாழ்வில் மகா நல்ல ஆண்மீகவாதி .

ஓவியா
20-11-2008, 04:05 PM
கலையுலகம் இழந்த மாபேரும் சொத்துக்களில் பல நடிகர்களின் இழப்பும் உண்டு.

இதில் காலம் சென்ற திரு. எம்.என்.நம்பியார் அவர்களின் பெயரும் உண்டு.

நடிகசாகசம் மதிப்புமிகு எம்.என் நம்பியார் அவர்களின் ஆன்மா சாந்தியடைய என் கண்ணீர் அஞ்சலியும், பிராத்தனைகளும், குடும்பத்தினருக்கு என் ஆருதல்களும், ரசிக பெருமக்களுக்கு என் வருத்தங்களும் உரித்தாகுக.

நேற்றையை தினத்தில் நம்மை விட்டுப்பிரிந்து என்றும் என் மனதில் நீங்கா இடம்பிடித்து விட்டார்.

Keelai Naadaan
20-11-2008, 04:49 PM
சிறுவயதிலே நம்பியார் அவர்களை திரையில் பார்க்கும் போது கோபமாய் வரும்.
நாளடைவில் விபரம் தெரியும் போதுதான் திரைப்படம் வேறு நிஜவாழ்வு வேறு என புரிந்தது.

அப்படி புரிந்து கொண்டபிறகு மிகவும் நேசித்த நடிகர் நம்பியார் அவர்கள்.
கண்ணீர் அஞ்சலிகள்.

உதயசூரியன்
23-11-2008, 11:25 AM
கீழை நாடன் அவர்கள் சொன்னவை எனக்கும் பொருந்தும்.. அவை நானும் சொல்ல நினைத்தவை...

பல நடிகர்கள் திரையில் நல்லவர்களாக காட்டி நிஜத்தில் அயோக்கியர்களாக இருப்பர்..
நம்பியார் நிஜத்தில் ரொம்பவே நல்லவர்..

கொடுத்த பாத்திரத்தை செய்பவன் நடிகன்.. அதை செவ்வனே செய்தவர்.. நம்பியார்..

எனது அஞ்சலியை செலுத்துகிறேன்..
வாழ்க தமிழ்

poornima
23-11-2008, 12:43 PM
ஆயிரம் ஹீரோக்கள் திரைக்கு கிடைக்க கூடும்.. தினம் நூறு தாரகைகள்
கோடம்பாக்கத்தை சுற்றிக் கொண்டிருக்கின்றன..

ஆனால் பேர் சொல்ல வைக்கும் வில்லனாய் ஒரு சில தாரகைகளே
பரிணமித்திருக்கின்றன.. குறிப்பிட்ட அடையாளத்துக்கு சொந்தக்காரர் நம்பியார்..

உருட்டி மிரட்டும் விழிகளும்,உள்ளங்கைகளை பிசைந்து கொண்டு கொக்கரிக்கும்
வசனங்களும்,வஞ்சகச் சிரிப்போடு மின்னும் குரூரங்களும் இனி நம்பியார் போல
யார் நம்பி செய்ய முடியும்..

திரையுலகம் மிகச்சில பேரிழப்புகளை சமீபகாலமாக சந்தித்து வருகிறது. ஸ்ரீதர்
நம்பியார் என..

நம்பியாரின் ஆன்மா சாந்தியடையட்டும்

ரங்கராஜன்
23-11-2008, 01:04 PM
நம்பியார் சாமி இப்பொழுது உண்மையா சாமியாயிடார்