PDA

View Full Version : அயல் நாட்டு அகதிகள்



மதுரை மைந்தன்
19-11-2008, 01:32 AM
மெயிலில் வந்த இந்த கவிதையை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்

http://img508.imageshack.us/img508/7762/30643619fe3.jpg (http://imageshack.us)
http://img140.imageshack.us/img140/9387/71282559sn2.jpg (http://imageshack.us)

aren
19-11-2008, 02:04 AM
உண்மை நெஞ்சைத் தொடுகிறது.

Narathar
19-11-2008, 03:37 AM
இளமையே முதலீடாய் அமைந்திருப்பதை அருமையாக உணர்த்தி நிற்கின்றது நீங்கள் பகிர்ந்த கவிதை......

வாழ்த்துக்கள் பகிர்ந்த உங்களுக்கும்
எழுதிய அருள் குமாருக்கும்

Syed
19-11-2008, 09:51 AM
Good one

மதுரை மைந்தன்
19-11-2008, 10:06 AM
பின்னூட்டம் போட்டு பாராட்டிய Aren, Narathar, Syed அவர்களுக்கு திரு அருள் குமார் சார்பில் நன்றிகள்.

ஓவியன்
19-11-2008, 03:20 PM
ஏறத்தாழ இதே சாயலில் ஒரு கவிதையைப் படித்த ஞாபகம்...

பகிர்வுக்கு நன்றி மதுரை மைந்தரே..!! :)

Keelai Naadaan
19-11-2008, 04:29 PM
முன்பு படித்த ஞாபகம்..
பகிர்வுக்கு நன்றி
கவிதையில் உள்ளவை அத்தனையும் உண்மை.

arun
19-11-2008, 05:57 PM
இதே போல இன்னொரு கவிதையை படித்த மாதிரி நினைவு

இது கவிதை அல்ல அயல்நாடுகளில் வாழும் அன்பர்களின் சோக கதை பகிர்வுக்கு நன்றி

lolluvathiyar
20-11-2008, 06:55 AM
இதுபோன்ற லட்சம் கவிதைகள் வந்தாலும் படித்து ரசித்து மீன்டும் இளமையை அடமான வைக்க போய் விடுவார்கள் அடுத்த ஜனரேசன். விட்டில் பூச்சிகளை திருத்த முடியுமா? வேடிக்கை பார்த்து ரசிக்கதானே முடியும்

geminisenthil
20-11-2008, 08:26 AM
மிக அருமையான கவிதை......மனமார்ந்த பாராட்டுக்கள்.....ஆனால்

லொள்ளுவாத்தியார் கூறியதுதான் உண்மை....

மதுரை மைந்தன்
20-11-2008, 10:46 AM
இதே போன்று முன்பு வந்த கவிதையையும் இதற்கு நேர் மாறான கருத்து பொண்ட ஒரு கவிதையையும் இங்கு உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். பின்னூட்டம் போட்ட நணபர்களுக்கு என் நன்றி.

http://img391.imageshack.us/img391/4998/34814532675gd5.jpg (http://imageshack.us)
http://img407.imageshack.us/img407/9303/poemmptamillifekq2.gif (http://imageshack.us)

மதுரை மைந்தன்
20-11-2008, 10:53 AM
இதற்கு தானா நீ ஆசைப்பட்டாய்? என்ற கவிதைக்கு எனது பதில் கவிதை இதோ:

வெய்யிலில் வாடி
வேர்வையில் குளித்து
தாகத்தால் நா வரண்டு
ராத்தூக்கம் கெட்டு
வாழ விரும்புகிறாயா

எப்போதும் குளிராக
என்றும் ஊட்டி கொடைக்கானல் போல
புழுதி இல்லாத நாட்டில்
வாழ விரும்புகிறாயா

வீடு வாங்க வேண்டுமா?
கார் வாங்க வேண்டுமா?
கத்து வட்டிக்கு கடன் வாங்க வேண்டாம்
கடனை அடைக்கும் கவலை வேண்டாம்

செட் தோசை கெட்டி சட்னி இங்கும் கிடைக்கும்
தமிழ் நண்பர்கள் இங்கும் இருக்கிறார்கள்
தமிழ் சினிமா இங்கும் உண்டு
கோயில் மசூதி சர்ச் கள் இங்கும் உண்டு

பிறந்த நாட்டில் தகுதிக்கேற்ற வேலை இல்லை
இங்கோ தகுதிக்கேற்ற வேலை
வேலைக்கேற்ற ஊதியம்
நம்மவர்களே நம்மை கொத்தடிமைகளாக
நடத்தும் கொடுமை இல்லை

இன்னும் பிற நண்மைகள் இங்கு உண்டு
ஆகவே யோசி எதை நீ விரும்புகிறாய்?

அருள்
20-11-2008, 11:55 AM
நானும் இதை மெயிலில் படித்துவிட்டேன். இருப்பினும் நன்றி...


அன்பே சிவம்
பானு.அருள்குமரன்,
மெய் சொல்லிக் கெட்டவனும் இல்லை,
பொய் சொல்லி வாழ்ந்தவனும் இல்லை.