PDA

View Full Version : சூஃபி கவிதைகள் - காதல்



ஆதி
18-11-2008, 06:08 PM
விரிந்த வெட்டவெளியில்
விரவி கலந்திருந்தோம்
எங்கும் நிசப்தமாய்
எதிரொலித்தன நம் குரல்கள்..

ஆதி
18-11-2008, 06:45 PM
நிரம்பி வழிகிறது தனிமை
நிசப்தமாய் இருக்கிறது மனம்
பேசப்படாமல் கிடக்கின்றன வார்த்தைகள்
கேட்கப்படாமல் உள்ளது மௌனம்

ஆதி
19-11-2008, 07:15 AM
நெடிதாகிறது பயணம்
நீ எங்கும் காணவில்லை
துவங்கிய இடத்திற்கே
துவண்டு வந்துவிட்டேன்
எனக்காக நீ அங்கு காத்திருந்தாய்
என்னை கண்டதும் எழுந்து நடக்கிறாய்..

செல்வா
19-11-2008, 07:40 AM
வாழ்த்துக்கள் ஆதி.... கவிதையைப் பத்திச் சொல்றதுக்கு முன்னால சூஃபி கவிதைகள் அப்படின்ன என்ன?

சிவா.ஜி
19-11-2008, 07:44 AM
நெடிதாகிறது பயணம்
நீ எங்கும் காணவில்லை
துவங்கிய இடத்திற்கே
துவண்டு வந்துவிட்டேன்
எனக்காக நீ அங்கு காத்திருந்தாய்
என்னை கண்டதும் எழுந்து நடக்கிறாய்..

என்னைக் கண்டதும் எழுந்து நடக்கிறாய்...??

கவிதைகளை வாசித்து உள்வாங்கிக்கொள்ள சிறிது நேரமாகும். ஆழமான கருத்துக்கள். அசைபோட வைக்கும் கவிதைகள். வாழ்த்துகள் ஆதி.

aren
19-11-2008, 08:07 AM
வார்த்தைகள் உங்கள் கவிதையில் விளையாடுகிறது. ஆனால் அந்த அளவிற்கு எளிதாக புரிந்துகொள்ளும் ஞானம் எனக்கில்லை. இரண்டு முறை படித்தவுடன் கொஞ்சம் புரிகிறது.

பாராட்டுக்கள்.

தொடருங்கள்.

நன்றி வணக்கம்
ஆரென்

வசீகரன்
19-11-2008, 08:12 AM
நிரம்பி வழிகிறது தனிமை
நிசப்தமாய் இருக்கிறது மனம்
பேசப்படாமல் கிடக்கின்றன வார்த்தைகள்
கேட்கப்படாமல் உள்ளது மௌனம்

மனம் அப்படியே அமைதியாகிறது... அற்புதமான கவிதைகள்...
தொடருங்கள்..!

ஆதி
19-11-2008, 09:39 AM
வாழ்த்துக்கள் ஆதி.... கவிதையைப் பத்திச் சொல்றதுக்கு முன்னால சூஃபி கவிதைகள் அப்படின்ன என்ன?

சூஃபி என்றால் என்ன என்று சொல்லும் அளவுக்கு எனக்கு ஞானமில்லை..

பிறகு சூஃபி எந்த தைரியத்தில் எழுத வந்தாய் என்று கேட்குறியா.. ??

இது தான் சூஃபி என்று இதுவரைக்கும் எந்த சூஃபி ஞானியும் கூறியதில்லை..

அந்த தைரியதில்தான் எழுத வந்தேன்..

ஜென் போல தான் சூஃபியும்.. ஜென் என்பது மார்க்கம் அல்ல.. நெறி அல்ல.. அது ஒரு வாழ்க்கை.. வாழ்ந்தால்தான் புரியும்.. இது சூஃபிக்கு பொருந்தும்..

உலக்கில் எத்தனையோ மதங்கள் தோன்றின.. எத்தனையோ ஞானிகள் தோன்றினார்கள்.. எத்தனையோ போதனைகள் அருளினார்கள்.. அவற்றையெல்லாம் கேட்டோம்.. அவர்களை மேன்மைபடுத்தினோம்.. அவர்கள் பெயரால் மதங்களை கூட உருவாக்கினோம்.. அந்த மதத்தில் கிளைகளை கருவாக்கினோம், மதங்களுக்குள் உறழ்வுகள் உண்டாக்கினோம்.. மனிதர்களை கொன்று மதத்துக்கு எருவாக்கினோம்..
இவ்வளவும் செய்த நாம் ஆன்மீக யாத்திரையில் எந்த தூரத்தை அடைந்திருக்கிறோம் என்று யோசித்து பார்த்தால்.. ஒரு அடிதூரமும் நாம் அடையவில்லை.. துறையில் பிணைக்கப்பட்ட படகில் துடுப்பு போடுவது போல்தான் நம் ஆன்மீக பயனம் இருக்கிறது..

பரிநிர்வாணம் என்றான் புத்தன், அவன் போன பிறகு ஹிமாயன் மஹாயன் என்று பிரிந்துவிட்டோம்.. எல்லாமே நிர்வாணம் எல்லாமே பொய்மை எல்லாமே மாயை எல்லாமே சுழி என்று சொன்னவனையே இரு பிரிவில் அடைத்தோம் நாம்.. புத்தன் சித்தாந்தம் தோற்றது.. மஹாவீரன், ஏசு நபி, சங்கரர் என்று ஏறக்குறைய எல்லாருக்கும் இதையே தான் நாம் ஏற்படுதிக் கொடுத்தோம்..

இவையாவையும் உடைத்தெறிந்தது ஜென் சூஃபி..

யார் வேண்டுமானாலும் ஜென் ஞானியாகலாம், ஆனால் ஜென் ஒரு மதமல்ல.. யார் வேண்டுமானாலும் சூஃபி ஞானியாகலாம் ஆனால் சூஃபி ஒரு மதமல்ல.. இப்படி வாழ், இப்படி வழிபடு இப்படி செல் என்று இவர்கள் கூறுவதில்லை.. ஏனெனில் விழிப்புணர்வு என்பது ஒரு எல்லையில்லை, அது ஒரு பயணத்திற்கான துவக்க வாசல் அந்த வாசலை நாம்தான் அறிந்துணர வேண்டும்.. யாராலும் நமக்கு விழிப்புணர்வு கிடைக்காது, நாமே விழிக்காத வரை..

சூஃபி ஞானிகள் யாரையும் சீடர்களாக வைத்து கொள்வதில்லை, தன்னை நாடி வருகிறவர்களுக்கு ஒரு வழியை காட்டிவிட்டு அவர்கள் தன்வழியில் சென்றுவிடுவார்கள்.. காரணம் சீடர்களை வைத்துக் கொண்டால் அவர்கள் பெயரால் அதுவும் மதமாகும்.. சூஃபிகள் இறவனிடம் எதையும் வேண்டுவதில்லை.. காரணம் காலை பொழுதில் அந்தியையும் இரவில் மதியத்தையும் கேட்பது பேராசை என்கிறார்கள், அதுமட்டுமன்றி அது இயற்கைக்கு புறம்பானதும் கூட..

மனிதர்கள் மீதான அன்பு தன்னலம் கொண்டது, அது காதலானாலும் சரி நட்பானாலும், உறவானாலும் சரி.. ஆனால் தன்மேல் உள்ள அன்பு தன்னலமற்றது, அதைதான் விவிலியத்தில் கர்த்தன் சொன்னான், "உன்னை போல் பிறரையும் நேசி"..

ஒரு பெண்மீதான காதல் அவளிடம் பதிலுக்கு அன்பை எதிர்ப்பார்க்கும், இறைவன் மீதான காதல் அப்படியல்ல, அவன் அன்பு செய்தாலும் செய்யாவிட்டாலும் அவனை நாம் அன்பு செய்வோம்.. இந்த காதலில் தோல்விகள் இல்லை.. ஏமாற்றங்கள் இல்லை, பிறழ்வுகள் இல்லை, உறழ்வுகள் இல்லை, பிரிவுகளும் இல்லை..

இத்திரியில் எழுத முயற்சிக்கிற கவிதைகள் யாவும் இந்த காதலை பின்புலனாக கொண்டதுதான்.. அவனோடான அனுபவங்களை என்னால் எங்கெல்லாம் உணரமுடிகிறதோ அங்கெல்லாம் பெற்றெடுக்கிற அனுபவங்களை கவிதைகளாக்க முயற்சிக்கிறேன்..

ஆதி
19-11-2008, 10:12 AM
என்னைக் கண்டதும் எழுந்து நடக்கிறாய்...??

கவிதைகளை வாசித்து உள்வாங்கிக்கொள்ள சிறிது நேரமாகும். ஆழமான கருத்துக்கள். அசைபோட வைக்கும் கவிதைகள். வாழ்த்துகள் ஆதி.

பிழைகளை திருத்திட்டேன் அண்ணா, வாழ்த்துக்களுக்கும் பிழைச்சுட்டியமைக்கும் நன்றிகள் அண்ணா..

poornima
19-11-2008, 12:44 PM
சூஃபிஸக் கவிதைகள்..?

சூஃபிஸம் என்பது ஞானிகள் - அவர்களை கடவுளராய் கொண்டு வழிபடும்
இயக்கம் அல்லவா..?

இப்போதுதான் இந்த சூஃபி கவிதைகள் பற்றி கேள்விப்படுகிறேன்..
எல்லாம் நீங்கள் சொன்ன மாதிரி ஓரளவே ஜென் கருத்தமைவுகளோடு
ஒத்து போவதாகவே உள்ளது..

தொடர்க ஆதி..

ஆதி
19-11-2008, 04:51 PM
சூஃபிஸக் கவிதைகள்..?


இப்போதுதான் இந்த சூஃபி கவிதைகள் பற்றி கேள்விப்படுகிறேன்..
எல்லாம் நீங்கள் சொன்ன மாதிரி ஓரளவே ஜென் கருத்தமைவுகளோடு
ஒத்து போவதாகவே உள்ளது..



ஜிப்ரான், கயாம் இவர்கள் சூஃபி கவிஞர்கள் தான் பூர்ணிமா.. ஹைகூக்கள் தான் ஜென் வகை கவிதைகள், நாம் என்று எழுதி கொண்டிருக்கும் கவிதைகள் ஹைகூக்களே அல்ல.. ஹைகூவின் முதன்மை விதி, கவிதை ஒரு நிகழ்ந்த சம்பவமாக இருக்க வேண்டும் கவிதையில் கற்பனை இருக்க கூடாது, வர்ணனைகள் இருக்க கூடாது, இவையாவையும் நாம் கடை பிடிப்பதே இல்லை..

முல்லா, கபீர், கமால், ரூமி இவர்கள் எல்லாம் சூஃபி ஞானிகள்..



சூஃபிஸம் என்பது ஞானிகள் - அவர்களை கடவுளராய் கொண்டு வழிபடும்
இயக்கம் அல்லவா..?

முரணாக உள்ளது பூர்ணிமா, தன்னை தனித்து காட்டிக் கொள்ளவே விரும்பாதவர்கள்.. தன்னை தானென்று சொல்லவும் விரும்பாதவர்கள் சூஃபிகள்..

சூஃபி ஞானி நிஸ்டரஸ், எகிப்திய பாலைவனத்தில் வசித்து வந்தார்..

ஒரு முறை பெரும் திரளாய் அவரை காண மக்கள் வந்திருந்தனர். தூரத்தில் திடீரென்று ஒரு பெரிய இடி முழங்கியது, துணுக்குற்றவர்கள் அத்திசை நோக்கினர், அப்போது அங்கே வானத்தில் சிறகுடைய பெரிய முதலை போன்ற உருவம் ஒன்று தோன்றியது, அது அவர்கள் இருக்கும் திசை நோக்கி நகர ஆரம்பித்தது.

இதை கண்டு அந்த கூட்டதில் இருந்த ஒருவன் "ஐயோ பறக்கும் முதலை" என்று அலறி ஓட துவங்கினான், அடுத்தது கூட்டமும் அவனைத் தொடர்ந்து ஓட ஆரம்பித்தது, ஞானி நிஸ்டரஸும் அவர்கள் பின்னே ஓட துவங்கினார்.

இதையெல்லாம் கவனித்திருந்த அவரின் சீடன், பிறகொருநாள் இதைப்பற்றி கேட்டான். நிஸ்டரஸ் சொன்னார், அது உருவம் அல்ல, பாலைவனப் பகுதியில் எழும் மணற்புயலால் உண்டான தூசி படலம், அது மேகம் போலவே வித விதமான வடிவம் தரக்கூடியது, அன்று அது அத்தகைய முதலை வடிவத்தில் இருந்தது.

"இவையாவும் அறிந்து நீங்கள் ஏன் அன்று மக்களோடு ஓடினீர்கள் ?"


அனைவரும் ஓடும் போது, நான் ஒருவன் மட்டும் அஞ்சாமல் நின்றவன் என்ற தற்பெருமையில் இருந்து தப்பிக்கத்தான் மக்களோடு நானும் ஒடினேன் என்றார்.

இதுதான் சூஃபியிஸம், எல்லாம் தெரிந்தவன் என்னும் பெருமையை கூட அவர்கள் விரும்புவதில்லை, அப்படியாரும் எண்ணிவிட கூடாது என்று அஞ்சுவார்கள்.

பின்னூட்டத்திற்கு நன்றிகள் பூர்ணிமா

ஆதி
20-11-2008, 11:51 AM
கவிழ்கிறது இருள்
விழிப்புற்றன விண்மீன்
படியும் அமைதியை யாசித்து
இரவின் வாசற்
படியில் நான்..

தீபா
20-11-2008, 12:46 PM
கவிழ்கிறது இருள்
விழிப்புற்றன விண்மீன்
படியும் அமைதியை யாசித்து
இரவின் வாசற்
படியில் நான்..

நல்லதொரு காட்சி. நல்ல ரசனை. கவிதை வளர்க.

தீபா
20-11-2008, 12:52 PM
நிரம்பி வழிகிறது தனிமை
நிசப்தமாய் இருக்கிறது மனம்
பேசப்படாமல் கிடக்கின்றன வார்த்தைகள்
கேட்கப்படாமல் உள்ளது மௌனம்

நிரம்பி வழிகிறது தனிமை
நிசப்தமாய் இருக்கிறது மனம்
பேசப்படாமல் கிடக்கின்றன வார்த்தைகள்
கேட்கப்படாமல் உள்ளது மௌனம்


உங்க சிட்டிக்கு ஆபோசிட்.... ஆதி சார்.

தனிமையைத் தேடவேண்டியிருக்கிறது, மனம் சப்தம் கடக்க மறுக்கிறது. வார்த்தைகளோ அருவிகளாக பொங்குகின்றன ; மெளனம் காணாமல் போயிருந்தது... ஏன்னு கேட்கிறீங்களா?

காதல் சார். காதல்....

இரு மன மோதலில்
நொறுங்கிக் கிடந்தது
மெளனம்.

அன்புடன்
தென்றல் (எ) ஸ்டெபானி

தீபா
20-11-2008, 12:57 PM
விரிந்த வெட்டவெளியில்
விரவி கலந்திருந்தோம்
எங்கும் நிசப்தமாய்
எதிரொலித்தன நம் குரல்கள்..

மனம் குறுகலானது
நுழைய துளையில்லை
நிசப்தங்கள் எதிரொலிக்க
உடைந்து ஒழுகியது
கண்ணீர்

என்ன சார்? இது சூஃபி கவிதையில சேத்துவீங்களா?

ஆதி
20-11-2008, 01:07 PM
மனம் குறுகலானது
நுழைய துளையில்லை
நிசப்தங்கள் எதிரொலிக்க
உடைந்து ஒழுகியது
கண்ணீர்

என்ன சார்? இது சூஃபி கவிதையில சேத்துவீங்களா?

விரிந்த வெட்டவெளியில்
விரவி கலந்திருந்தோம்
எங்கும் நிசப்தமாய்
எதிரொலித்தன நம் குரல்கள்..

ஞானிகள் நான்கு வழிப்பாட்டு முறையை சொல்கிறார்கள்

1) நான் என்பது பேச நீ கேட்டல்

2) நீ என்பது பேச நான் கேட்டல்

3) நான் நீ யாரும் பேசாமல் இருவரும் கேட்டல்

4) இருவரும் பேசுவதுமில்லை கேட்பதுமில்லை

இந்த முறையில் மூன்றாம் வகை கவிதை இது தென்றல்..


பின்னூட்டங்களுக்கு நன்றி தென்றல்..

தீபா
20-11-2008, 01:16 PM
ஓ!!!! அப்ப நான் ஒரு சூஃபி தான்.... ஹி ஹி... ஏன்னா நான் எழுதிறது எல்லாமே இதில அடங்கியிருக்கு,.... (சும்மா சும்மா)

ரொம்ப நல்லாயிருக்கு... இன்னும் எழுதுங்க...

ஆதி
24-11-2008, 07:14 AM
வார்த்தைகள் உங்கள் கவிதையில் விளையாடுகிறது. ஆனால் அந்த அளவிற்கு எளிதாக புரிந்துகொள்ளும் ஞானம் எனக்கில்லை. இரண்டு முறை படித்தவுடன் கொஞ்சம் புரிகிறது.

பாராட்டுக்கள்.

தொடருங்கள்.

நன்றி வணக்கம்
ஆரென்

அண்ணா, உங்களின் பின்னூட்டத்தின் முதல்வரி மிக உற்சாகமளித்தது, அடுத்த வரி என் தவற்றையும் எனக்கு உணர்த்தி சிந்திக்கவும் வைத்தது.. நிச்சமாய் எதிர்வரப் போகிற கவிதைகளில் சொல்ல வருவைதை துல்லியமாய் தெளிவாய் சொல்ல முயற்சிப்பேன்..

பாராட்டுக்கும் பின்னூட்டத்திற்கும் நெஞ்சார்ந்த நன்றிகள் அண்ணா..

தாமதமாய் பதிலிட்டமைக்கு மன்னிக்கவும்..

ஆதி
24-11-2008, 07:17 AM
மனம் அப்படியே அமைதியாகிறது... அற்புதமான கவிதைகள்...
தொடருங்கள்..!

உண்மையில் மகிழ்ச்சியை அளிக்கிறது உங்களின் பின்னூட்டம் வசீகரன்.. எந்த அமைதியில் இருந்து இந்த கவிதைப் பிறந்ததோ அந்த அமைதியை நீங்கள் உணர்ந்திருப்பது கண்டு கவிதையின் பிறப்பு பேறுப்பெற்றதானது..

பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி நண்பா..

ஆதி
30-11-2008, 08:13 AM
வளர் பிறை பருவமோ
துன்ப நிலவுக்கு
உன் வானில்..

தேய்ப்பிறையாய்
வளர் பிறையை மாற்ற
இம்சிக்காதே இறைவனை - அது
இயற்கைக்கு முரணானது..

சத்தியத்தை எதிர்கொள்..
இயலாவிடில்
நிலா சிறையை உடைத்து
நீயே விடுவித்துக்கொள்
உன்னை..

ஆதி
29-07-2009, 12:40 PM
இந்த பாடலை
எனக்குள் இருந்து மீட்டுக்கின்றன..
உன் விரல்கள்

நான் இசைக்கும் இந்த
ராகங்களும் உன்னுடையவை..

உன் ராகங்கள் பல
இன்னும் என் செவிகளில் கேட்பதில்லை..
என் வார்த்தைகளை
நானே கேட்காதது போல..

நாகரா
29-07-2009, 01:30 PM
விரிந்த வெட்டவெளியில்
விரவி கலந்திருந்தோம்
எங்கும் நிசப்தமாய்
எதிரொலித்தன நம் குரல்கள்..
சும்மா இருந்த சுத்த சிவம்
நானாகி நீயாகிப்
புணரும் போதமோ
"யாம்"!

ஒன்றில் உதித்த ஒன்று ஒன்றில்
ஒன்ற குதித்தோம் யாம்

அருமையான கவித் தொடர், வாழ்த்துக்கள் ஆதி, தொடருங்கள், பின் தொடர்வோம்!

மோன நாதம்
இருதயங் கேட்க
விந்து போதம்
மெய்க்குள் உயிர்க்கும்!

அமரன்
30-07-2009, 07:17 AM
ஒவ்வொரு கவிதையும் திக்கில்லாக் காட்டில் நடத்திச் சென்று வெட்ட வெளியில் விட்டு பூச்சாண்டி காட்டி இறுதியில் சோலை இளந்தென்றலும் சலசல சங்கீத நீரோடையும் தந்து விடுகின்றன. மனங்கனிந்து பாராட்டுகிறேன் ஆதி.

சூஃபியை அறிமுகஞ்செய்தமைக்கு சிறப்பு நன்றிகள்.

ஆதி
14-08-2009, 12:44 PM
நன்றி நாகாரா ஐயா, நன்றி அமர்

ஆதி
14-08-2009, 01:21 PM
இரவெங்கும் விரிந்திருக்கும்
இந்த அமைதி
மா கவிஞனின் பாடல்களை விட
பொருள் பொதிந்தவை..

புன்னகை திரைப்போட்டு
தன் கண்ணீரையும் சோகத்தையும்
மறைக்கும் இளம் பெண்ணின்
மனதை காட்டிலும் ஆழமானவை..

பாதம் சிவந்த
மழலையின் உறக்கத்துக்கு
நிகரானவை..

புனித கீதங்கள்
புன்னகை சொர்கங்களும்
இதிலிருந்ததுதான் உயிர்க்கிறது..

மனித ஓடங்கள்
தன் தேடல்களை
இதை நோக்கிதான் தொடர்கின்றன..

ஓ! மா சுடரே
அந்த தீபத்தை என்னிலும் ஏற்று
உன் மயக்க மதுவை நிரம்ப ஊற்று..

ஆதி
17-08-2009, 10:12 AM
காதல்

கோடி தேவதைகள்
கூடி காக்கும்
தெய்வநரகத்தின் கருவில் இருந்து
உயிர்த்த புனித பாவம்..

யுகயுகங்களுக்கு முன்
ஊழிக்காலம் பிறப்பதற்கு
முந்தைய அந்திம பொழுதில்
ஆத்தீக சாத்தான்களின்
தெய்வீககரங்களால்
அருளப்பட்ட தேவசாபம்..

ஆதாமின் விழியிலிருந்து
ஏவாளின் மனதில் உதிர்ந்த
தூய வெறி
வெட்கப்பொறி

இறைவா!
அந்த வெறியை என்னிலும் விதை
உம் பரிசுத்த நாவினால்
தேவசாபத்தை எனக்கும் தருக
புனித பாவத்தில் மூழ்கி
புணர்ந்து உம்முடன் கலக்க
தெய்வநரகத்தின் விந்தை எனிலும்
சிந்துவீராக..

ஆதி
17-08-2009, 01:05 PM
பூக்களின் மகரந்த சேர்க்கை போல்
நிகழ்ந்தது நம் புணர்ச்சி..

இருளின் அடி பாதாளத்தில்
சரிந்த வெளிச்ச துகளாய்
தூவினாய் உன் அன்பை என்னில்..

மயக்க ரகசியங்களை
மறைக்கும் திரைச்சீலையை கிழித்து
உனை நோக்கிய
பயண திசையின்
பாதையை தெளிவித்தாய்..

ஓ!
ஐப்பொருள் கடந்த
மெய்ப்பொருளே
நீ ஈந்த அன்பையும் தெளிவையும்
யார்க்கும் கொடுக்க
அருள்க எனக்கு..

தீபா
17-08-2009, 01:25 PM
ஆதி சார், ரொம்ப நாளைக்கு அப்பறம் வந்தாலும் நிறைவான கவிதை படித்த திருப்தி.

தெய்வநரகம்,
தெய்வமா நரகமா?
செல்வதா, யோசிப்பதா?

புனிதபாவம்,
செய்வதா? வேண்டாமா?

இப்படி முரணாகக் கொடுத்து காதலை பேலன்ஸ் செய்ய வைத்துவிட்டீர்களே?

ஆதாமின் விழியிருந்தும்
ஏவாளின் மனதிருந்தும்
துவங்கிய காதல்
சர்ப்பத்தின் ஆப்பிள் வழியே
காணாமல் போய்விட்டது??!!!

நல்ல கவிதை.. ஆதி சார்.
சூஃபி தத்துவப்படி,

நீயும் ஊமை
நானும் ஊமை
காதல் பேசுகிறது.

போல.... கவிதையும்!!

இளசு
17-08-2009, 09:30 PM
இறையுடன் இப்படி உறவாட ஒரு மனப்பக்குவம் வேண்டும்..
உறவு நிகழ்வுகளை இப்படி வடிக்க கவித்துவம் வேண்டும்..

இரண்டும் அமைந்த ஆதிக்கு வாழ்த்துகள்..

இது வயதால் மட்டும் வருவதன்று - நானே அத்தாட்சி!
வியந்து போற்றுகிறேன்!

கா.ரமேஷ்
18-08-2009, 08:48 AM
மிக* அழகாக,ரசனைக்குறிய வரிகளுடன் இருக்கிறது அனைத்து கவிதைகளும்... பெயரே வித்தியாசமாகத்தான் இருக்கிறது "சூ.'.பி".

தொடருங்கள்....

ஆதி
19-08-2009, 10:53 AM
பின்னூட்ட ஊக்கம் கொடுத்த தீபா அக்கா, இளசண்ணா, கா.ரமேஷ் அனைவருக்கும் நன்றிகள் பல..

ஆதி
22-08-2009, 03:22 AM
வெயில் வெளியில்
கால் சுட நடக்கிறேன்..

தாகப்பொழுதிலும்
வெப்ப வேளையிலும்
சில நிழல்களில்
இளைப்பாறுகிறேன்..

தேவா!
உலக உரவுகளில் அன்பு
வெறும் தற்காலிக நிழல்கள்
உன் அன்போ
வாழும் வீடு
எனக்கு
உம் நிலையான அன்பை அருள்க..

நாகரா
24-08-2009, 12:08 PM
பொய்யுறவுப் பாசத் தளைகள் வெட்டி
மெய்யுறவாம் நேச மெட்டு

பராபர அன்பின் வெட்டவெளி வீட்டில்
தராதல முழுமை யடக்கம்

தகிக்கும் இகவெயில் வாட்டந் தவிர்க்கச்
சுகிக்கும் பரநிழல் தலைமேல்

தாகந் தணிக்குங் கபால ஊற்றை
நேச மொன்றே திறக்கும்

தன்பாதச் சூட்டை நாதன் சூட்ட
என்னுச்சி குளிரும் போதம்

சிந்தனையைத் தூண்டிய உம் சூஃபிக் கவிதை அருமை ஆதி, வாழ்த்துக்கள்